உங்க ஊருக்கே வரேன்.

Posted on

அண்ணே வணக்கம்ணே !

2009 மே மாசத்துலருந்து ஜோதிட பதிவுகள் மூலமா பிரபலமாகி ( ஹி ஹி ..அறிமுகமாகி ) லட்சக்கணக்கான பேருக்கு இல்லின்னாலும் ஒரு 2000+ ஜாதகர்களுக்கு ஆன்லைன் கன்சல்டன்சியும் தந்திருக்கேன். இதுல நிறைய பேரு உங்க ஊருக்கு வந்துரவா? எங்க ஊருக்கு வரமாட்டிங்களான்னு ஆரம்பிச்சவுகதான். அப்படி இப்படி கன்வின்ஸ் பண்ணி ஆன்லைன்லயே கதையை முடிச்சுக்கிட்டு வந்துட்டன்.

இப்பம் ஒரு நீண்ட நெடும்பயணத்தை துவங்க உத்தேசம். அதுக்கு மின்னே உங்க ஊருக்கு நான் மாசத்துல – எந்த மாசமானாலும் எந்த தேதியில / எந்த கிழமையில வந்தா உங்களுக்கு வசதின்னு மெயில் பண்ணுங்க. எல்லா மெயில்லயும் பார்த்து குட்டைய குழப்பி ஒரு பயண திட்டம் தீட்டிக்கனும்.

ஏன் இந்த திடீர் முடிவுன்னு கேப்பிக.சொல்றேன்.

நம்ம லைஃப்ல எல்லாமே தப்பா போயிட்டிருக்கோங்கற சந்தேகம் வந்துருச்சு. பாடிக்கு இந்த ரேஞ்சுல கம்ஃபர்ட் எல்லாம் தேவையில்லைன்னு தோனிருச்சு. கொஞ்சம் போல அல்லல் அலைச்சல் இல்லின்னா பாடி இன்னம் பத்துவருசம் கூட தாங்காது போல.

கடந்த அஞ்சுவருச க்ளாக்வைஸ் லைஃப் பெரிய குற்ற உணர்ச்சியை தருது. நாலு காசு கூடுதலா புரள ஆரம்பிச்ச பிறவும் 2002 முதல் 2007 வரையிலான வாழ்க்கையையே 2007 முதல் 2012 வரை தொடர்ந்திருந்தா எத்தனையோ சாதிச்சிருக்கலாம். ஆனால் சரி இத்தனை காலம் எசன்ஷியல்ஸ் கூட இல்லாம கஷ்டப்பட்டோம் நாமும் நாலு பேரை போல வாழ வேண்டாமான்னு லேசா காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டதுல அஞ்சுவருசம் வீணாப்போச்சோன்னு பயம்மா இருக்கு.

வலையுலகத்தை பொருத்தவரை நம்ம ஜோதிட பதிவுகள் பெற்ற அளவுக்கு மத்த பதிவுகள் வரவேற்பு ரெஸ்பான்ஸ் பெறலை. உணர்ச்சிவசப்பட்டு நாட்டு நடப்பு – இந்தியாவின் இழி நிலை பத்தியெல்லாம் பதிவு போட்டா – ஹிட்ஸ் அதல பாதாளத்துக்கு சரிய அதை தூக்கி நிறுத்த ஜோதிட பதிவுகள் போட வேண்டியதா இருக்கு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 மீதான வேலையையும் 2004 பாதயாத்திரை அறிவிப்போட நிப்பாட்டியாச்சு. அங்கிருந்து ஜோதிடம் 360 புஸ்தவத்துல ஒரு அத்யாயத்தை சேர்த்ததை தவிர ஒரு ஆணியும் புடுங்கலை.

நாட்டு நிலைமைய பார்த்தா ரிப்பேரே பண்ண முடியாத அளவுக்கு ஸ்க்ராப் பண்ணிட்டானுவளோன்னு பயம் வருது. ஆ.இ 2000 –ஐ சகல ரோக நிவாரணியா நினைச்சு எதையோ செய்ய ஆரம்பிச்சம்.ஆனால் இந்த இடைப்பட்ட காலத்துல எதையுமே செய்யலை.

இதுக்கு காரணம் இல்லாம இல்லை. ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவுல கோடி ஏக்கர் நிலத்துக்கு பாசனம்னுட்டு காரியத்துல இறங்கவே மோரல் சப்போர்ட்டுன்னு இறங்கி ஆ.இண்டியாவை திராட்டுல விட்டாச்சு. திடீர்னு ஒரு நாள் ஒய்.எஸ்.ஆர் காலி.

ஜகன்மோகன் ரெட்டியை காங்கிரஸ் காரவுக சீண்டி சீண்டி அந்தாளு பக்காவா வெளிய வர பல காலம் பிடிச்சது. இது ஒரு இடைவெளி.

ஒரு வழியா அப்பா பாதியில விட்டதையெல்லாம் பைசல் பண்றேன்னு வேட்டி மடிச்சு கட்டி இறங்கினாரு. படக்குன்னு அவரை தூக்கி உள்ள வச்சாச்சு. என்.டி.ஆர் மரணம் -ஒய்.எஸ்.ஆர் எழுச்சிக்கு இடையில ஏற்பட்ட இடைவெளி மாதிரி மறுபடி ஒரு இடைவெளி இப்ப ஏற்பட்டிருக்கு.

இதுக்குத்தான் புத்தர் ” நீயே உனக்கு ஒளியாய் இரு”ன்னாரு போல. ஆப்பரேஷன் இந்தியா 2000 முயற்சிகளை ஆரம்பிக்கிறப்ப உலக ஞானம் ரெம்ப குறைச்சல். பைத்தியக்காரத்தனமா வேலை செய்தாலும் தெய்வாதீனமா அதுக்குண்டான ரிசல்ட் கிடைச்சுக்கிட்டே இருந்தது.

இப்பம்.. லோக ஞானம் சாஸ்தியாயிருச்சு. மிராக்கிள்ஸ் மேல நம்பிக்கை இல்லை. எண்ணம் போல் வாழ்வுங்கறாப்ல அதன் மீதான வேலைய மறுபடி ஆரம்பிச்சாலும் எந்த அற்புதமும் நடக்கப்போறதில்லை.ஆனால் குற்ற உணர்ச்சி சாஸ்தியாயிட்டே போகுது.

அஞ்சுவருசம் போனா போகுது இனியாவது உடைச்சு திருப்பிரலாம் ஜோதிட பதிவுகளை குறைச்சுக்கிட்டு பொறுப்பா எளுதலாம்னா ஏறக்குறைய முடியாது போல. .

என்னதான் கில்மா – ஜோதிடம்னு தாளிச்சாலும் வாசகர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கு முன்னே பின்னே கண்ணடிக்குதே தவிர எகிர்ர மாதிரியெல்லாம் இல்லை. இதுல ஜோதிட பதிவுகளை குறைச்சா அசலுக்கு மோசம் வந்துரும்.

கடந்த ஐந்து வருட வாழ்க்கையை போலவே இன்னொரு ஐந்துவருடம் தொடர்ந்தா க்ளீன் போல்ட். நமக்குள்ள இருக்கிற ஸ்பார்க் சுத்தமா அணைஞ்சே போயிரும். அதுக்குள்ள ஏதாவது அற்புதம் நடந்தாகனும். ஆன்லைன் ஜோதிட ஆலோசனைல்லாம் நெருப்போட விளையாடற மாதிரி .அஞ்சுவருசத்துக்கே ஸ்கின் ப்ராப்ளம்.வீக்லி நூறு ரூபா மாத்திரை மருந்து -ஆயின்ட்மென்ட்.

எங்கே தப்பு நடந்துருச்சு புரியலை. இந்த தப்பை எப்படி திருத்திக்கிறது புரியலை.பார்ப்போம் ..

ஒரு லாப் டாப் -ஒரு டேட்டா கார்ட் -ஒரு ட்ராவலர்ஸ் பேக் ஒரு நீண்ட நெடும்பயணத்தை துவக்கிரனும். ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தி சின்னதா பாக்கெட் புக் போட்டு வச்சுக்கிட்டு அறிமுகமாறவுகளுக்கெல்லாம் கொடுத்துக்கிட்டே போறது.

“மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கிறது”ன்ன ஏசுவே திரும்பி வந்தாலும் ப்ரஸ் மீட் வச்சாகனும் – டிவியில ஸ்பான்சர்ட் ப்ரோக்ராம் கொடுத்தாகனும். செலவழிச்சாகனும் . நமக்கா இதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது.

சொந்தமா டிவி வச்சிருந்த கலைஞர் ,ஜெயலலிதாவே தோத்திருக்காய்ங்க. இதுல நாம எதுல கணக்கு? இந்த ப்ளாகர் வலைப்பூவெல்லாம் பேர் சொல்லபோறதில்லை. ப்ளாகர் காரன் டாட் இன் பண்ணினதுலருந்து ஏதும் விளங்கலை.

பேசாம அனுபவஜோதிடம் டாட்காம் மேல கான்சன்ட்ரேட் பண்ணுவம். எப்படியும் ராசிக்கு 3 ல சனி . பயணத்தை ஆரம்பிச்சுருவம். காலை 10 முதல் 5 வரை நேர்முகம் வாய்ப்பு கிடைச்சா மாலை 6 இரவு 9 வரை ஆ.இ – ஜோதிடம் – பணம் பற்றிய மர்மங்கள் இத்யாதி மீது ஸ்பீச். என்.டி.ஆர் கணக்கா விடியல் 3 முதல் ஆன்லைன் க்ளையன்ட்ஸுக்கு ஒலிப்பதிவு.

மொதல்ல ஒரு டீமை தயார் பண்ணிக்கனும். ரீரைட்டிங் – ட்ரான்ஸ்லேஷன் எட்செட்ரா. இங்கிலிபீஸுல ஒரு ப்ளாக் ரெடி பண்ணி ஆட் சென்ஸ். எழுத்துக்களுக்கு அச்சு வடிவம் – டிவிடி வடிவம் .

கொய்யால என்ன செய்தாலும் என்ன செய்யலின்னாலும் உயிர் போயிர்ரது ஒன்னுமில்லை. உயிர் போயிட்டா ஒன்னுமே கிடையாது.

ஆனால் இந்த குற்ற உணர்ச்சி மட்டும் ஹெச் ஐ வி கணக்கா நம்ம சக்தியை உறிஞ்சிரும் போல இருக்கு. அதனால தேன் இந்த நீண்ட நெடும்பயண அறிவிப்பு ..

Advertisements

7 thoughts on “உங்க ஊருக்கே வரேன்.

  s balasubramanian said:
  January 17, 2013 at 5:11 am

  Boss, you should a have a long life.it either way use it useful way

   S Murugesan said:
   January 17, 2013 at 6:00 am

   வாங்க ..பால சுப்ரமணியன் !
   மனித உடல் விசித்திரமான இயந்திரம். இதை எந்தளவுக்கு “பெண்டு கழட்டினா” அந்த அளவுக்கு லாஞ்சிவிட்டி சாஸ்தியாகும்.

   அதிக நாள் வாழ்வதற்காக இல்லின்னாலும் இந்த பாடியை “ப்ரிஸ்கா” வச்சுக்க ரிஸ்க் எடுத்தே ஆகனும்னுதேன் இந்த சுற்றுப்பயண திட்டம்.

   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  Thirumalaibaabu said:
  January 17, 2013 at 9:44 am

  Brother ..Mail Sent with details…If u have a plan to visit CBE, Please don’t forget me!. Thanks for the decision and My best Wishes for your Long trip.

   S Murugesan said:
   January 17, 2013 at 9:47 am

   Brother !
   Sure. I will announce my tour . In addition to it I will inform you by mail also.

  Thirumalaibaabu said:
  January 17, 2013 at 10:33 am

  Thank You So much brother

  அ.சீ.மகேசுவரன் said:
  January 17, 2013 at 1:26 pm

  தங்கள் நல்வரவை விரும்பும் அ.சீ.மகேசுவரன்

   S Murugesan said:
   January 17, 2013 at 8:48 pm

   நன்றி திருமலை பாபு மற்றும் அ.சீ.மகேசுவரன் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s