செவ்வாய் தரும் பலான பிரச்சினைகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே ! நவகிரகங்களுடன் பேட்டி வரிசையில செவ்வாயுடனான பேட்டி – அந்த சீரிஸ்லயே செவ் தோஷம் ஆண் பெண் வித்யாசம் பதிவுகள் வந்துக்கிட்டிருக்கு.

இந்த வரிசையில செவ்வாய் ஐந்தாமிடத்தில் நின்று தோஷத்தை தரும் போது அந்த பலன்ல ஆண் – பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலான வித்யாசங்களை பற்றி செவ்வாயுடன் டிஸ்கஷன் தொடருது.. பதிவுக்கு போயிரலாமா?

நான்:
அண்ணா .. நீங்க அஞ்சாமிடத்துல நின்று கர்ப நாசம் புத்ர நஷ்டம் போன்ற பலனை தரும்போது அது பெண்ணை மட்டுமே பாதிக்குதுன்னு சொன்னிங்க. நான் அதை அப்ஜெக்சன் பண்ணேன். ஒடனே கடுப்பாயி கழண்டுகிட்டிங்க. தொடர்ந்து பேசுவமா?

செவ்:
நான் கடுப்பானதும் கழண்டுக்கிட்டதுக்கும் காரணம் ஒன்னோட இந்த கேள்வியில்லே. நீ என் மண்டைக்குள்ள திணிக்கப்பார்த்த உதவாக்கரை தியரிகள் தான்.

நான்:
இட்ஸ் ஓகே ப்ரதர்.. இன்னைக்கு நோ தியரீஸ் ஓகேவா.
செவ்:
அப்ப சரி .. உன் அப்ஜெக்சன் என்ன சொல்லித்தொலை

நான்:
அண்ணா .. கர்ப நாசம் புத்ர நஷ்டம் ஆகிய பலன்கள் பெண்ணை மட்டுமே பாதிக்குதுன்னு சொன்னிங்க. உடல் ரீதியான பாதிப்புன்னு வரும்போது உங்க பாய்ண்ட் கரெக்ட். மனரீதியான பாதிப்புன்னா மட்டும் ஆண் பெண் ரெண்டு பேருமே சமமா பாதிக்கப்படறாய்ங்க. மேலும் அஞ்சுங்கறது வெறும் புத்ர ஸ்தானம் மட்டுமில்லை. புத்திஸ்தானமும் கூட.

செவ்:
சரி ..அப்படியே வச்சுக்கலாம். அடுத்து 7 ஆம் பாவத்துல நான் நிற்கும் போது ஆண் – பெண்களுக்கான பாதிப்பில் என்ன வித்யாசம்னு பார்ப்போமா?

நான்:
கரும்பு தின்ன கூலியா? கோ அஹெட் ..

செவ்:
என்னப்பா இது டூயட் மாதிரி குஜாலா போயிட்டிருந்த பேட்டியை ..திடீர்னு சோலோவாக்கிட்ட ?

நான்:
போங்கணா.. நான் எதையாவது சொல்ல வந்தா நீங்க கடுப்பாயிர்ரிங்க..அதான் அடக்கி வாசிக்கிறேன்..

செவ்:
ஆணில் உயிரணுக்களின் உற்பத்தி , ஸ்டோரேஜ் ,விறைப்பு ,ஸ்கலிதம் ஆகிய சங்கதிகளுக்கும் என் காரகங்களான கோபம் -அதி உஷ்ணம் – மின்சாரம் – எதிரி – போலீஸ் – அக்னிமுக தொழில்கள் ஆகியவற்றிற்கும் என்ன தகராறுன்னு சொல்லு பார்ப்போம். இதுதான் சாக்குன்னு ரொம்ப கில்மாவா போயிராதே..

நான்:
ஓகேங்ணா.. மொதல்ல உயிரணுக்களின் உற்பத்தியை எடுத்துக்கலாம். ஓவராலா ஹ்யூமன் பாடி ஹெல்த்தியா இருந்து -ரத்த ஓட்டம் -ரத்த சுத்தி நார்மலா இருந்து – கோபம் -பழி வாங்கல் மாதிரியான நான் வெஜ் உணர்ச்சிகள் இல்லாத பட்சத்துல உயிரணுக்களின் உற்பத்தியும் நார்மலா இருக்கும். இல்லின்னா நொண்டும்.

செவ்:
கரெக்டு.. அடுத்து ஸ்டோரேஜ் பத்தி சொல்லு..

நான்:
ஹ்யூமன் பாடி டெம்பரேச்சர் 98.4 இதுல உயிரணுக்கள் வாழமுடியாது.அதனாலதேன் டெஸ்டிக்கல்ஸ் பாடிக்கு வெளிய இருக்கு. நீங்க தப்பான இடத்துல உட்கார்ந்தா கோபம் -அதி உஷ்ணம் இத்யாதி பாதிக்கும். அக்னிமுக தொழிலில் உள்ளவர்களோட என்விரான்மென்டே அதி உஷ்ணத்தோட இருக்கும். இதுவும் பாதிக்கும். அடிக்கடி எலக்ட்ரிக் ஷாக் வாங்கினாலும் இதே எஃபெக்ட் வரலாம். போலீஸு ? ஜஸ்ட் புகார் கொடுக்க ஸ்டேஷன் உள்ளே போனாலே சப்த நாடியும் ஒடுங்கிருது. கோபம் -பழி வாங்கல் மாதிரி உணர்வுகளால கொந்தளிக்கும் போது இந்த டிப்பார்ட்மென்ட் நிச்சயம் முக்கியத்துவத்தை இழந்துரும். இதுவே போட்டு தள்ற அளவுக்கு வெறி இருந்தா கொலை வெறி இருந்து அது நிறைவேற வழி இல்லாத பட்சம் -செக்ஸ் வெறியா வெளிப்படலாம் அது வேற கதை..

செவ்:
அடுத்தது விறைப்பு. பற்றி சொல்லு ..

நான்:
ரத்தம் அந்த இடத்துக்கு வேகமா பாயறதாலதேன் இந்த சம்பவம் நடக்குது. நீங்க சரியான ப்ளேஸ்ல இல்லின்னா வேகம் குறையலாம். சஸ்டெய்ன் ஆகாம போகலாம். மேலும் அடிக்கடி கோபப்படறவுகளுக்கு நாடி நரம்புல்லாம் ரெம்ப முறுக்கேறி முறுக்கேறி ஜாங்கிரி கணக்கா ஆயிரும். இதனாலயும் விறைப்பு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

செவ்:
ஸ்கலிதம் ?

நான்:
பாடி டெம்பரேச்சர் 98.4 க்கு குறைவா இருக்கும் போது டெஸ்டிக்கல்ஸ் தைரியமா பாடியோட நெருங்கும். பாக்கிங் பக்காவா இருக்கும் போது – நாடி நரம்புகள் முறுக்கா இருக்கும் போது ஸ்கலிதம் நார்மலா இருக்கும். நிலைமை இதுக்கு மாறா இருக்கும் போது துரித ஸ்கலிதம் , ஸ்வப்ன ஸ்கலிதத்துக்கெல்லாம் கூட வாய்ப்பு இருக்கு.

செவ்:
இதெல்லாம் ஆண்கள் தொடர்பான விஷயம். பெண்கள் பற்றி சொல்லு..

நான்:
நாளைக்கு சொல்றேண்ணே..

செவ்:
ஒழி ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s