செவ் தோஷம்: ஆண் பெண் வித்யாசம் 3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டின்னு ஒரு தொடரை ஆரம்பிச்சோம்.அதுல செவ்வாயுடன் பேட்டி கொஞ்சம் நீளமா போயிருச்சு. இதை செவ் தோஷம் :ஆண் பெண் வித்யாசங்கற தலைப்புல கொண்டு போயிட்டிருந்தம். இதுல செவ் 4 ல் நின்ற தோஷ விஷயத்துல ஆண் பெண் வித்யாசத்தை கடந்த பதிவுல பார்த்தோம். இன்னைக்கு செவ் ஐந்தில் நின்ற தோஷ விஷயத்துல ஆண் பெண் வித்யாசத்தை பார்ப்போம். செவ்வாயுடன் பேட்டி தொடருது.

நான்:
அண்ணா வணக்கம் ! அஞ்சுங்கறது புத்தி , புத்திர ,பூர்வ புண்ணிய ஸ்தானம். இங்கன நீங்க நின்னா கோபம் – கர்ப நாசம் – புத்ர நஷ்டம் -துரதிர்ஷ்டம் ஆகிய பலன் களை சொல்லலாம். புத்தி -கோபம் -பூர்வ புண்ணியம்லாம் ஆண் பெண்னுக்கு பொதுவானதுதானே ..இதுல என்ன வித்யாசம் ?

செவ்:
நாங்களும் ரோசிப்போம்லங்கறே.. கண்ணா ..ஆண் பெண்ணுக்கு புத்தி பொதுவானதுன்னு எப்படி சொல்லப்போகும்? ஆண் ஸ்ட்ராங்கர் செக்ஸ் – பெண் வீக்கர் செக்ஸ். இவன் ஓவர் கான்ஃபிடன்ட். அதனால நெருப்பு -மின்சாரம் -கூர்மையான ஆயுதங்களை டீல் பண்ணும் போது அசால்ட்டா இருந்து பல்பு வாங்குவான். பெண் வீக்கர் செக்ஸுங்கறதால அலார்ட்டா இருப்பா.

நான்:
கரெக்டுங்ணா ! ஆனா தாய்க்குலம் சதா சர்வ காலம் ஒரு சின்ன வட்டத்துலயே ரோசிக்கிறதால நெருப்பு -மின்சாரம் -கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான விஷய ஞானம் குறைவா இருக்குமே.. உதாரணமா ஆடையில தீப்பிடிச்சா ஓடி ஆடக்கூடாது – தீக்கு காத்து கிடைக்காம பண்ணனும் – மாதிரி சூட்சுமம்லாம் தெரிஞ்சு வச்சுக்க மாட்டாய்ங்களே .. அதுவும் நெருப்பு மேட்டருக்கு வரும் போது அவிக ஆடைகள் சீக்கிரம் தீப்பிடிக்கிற வகையிலதானே இருக்கு.

செவ்
இதெல்லாம் தீப்பிடிச்ச பிறவுதான். தீப்பிடிக்கவே சான்ஸு குறைவுங்கறதுதானே ப்ளஸ்..

நான்:
அப்டின்னா நான் அம்பேல்..அண்ணா .. இந்த ஆயுத மேட்டர்ல ஒரு விஷயம் கண் சிமிட்டுது சொல்லலாமா?

செவ்:
சொல்லு நைனா..

நான்:
நீங்க நெல்ல இடத்துல இருந்தா ரத்தம் ஓகே. உடல் பலம் ஓகே. கோபம்ங்கறதே இயலாமையின் வெளிப்பாடுதானே. நீங்க தப்பான இடத்துல உள்ளவன் ரத்தக்குறைவு காரணமா வீக்கா இருப்பான். அதனால ஆயுதம் தூக்கறான் – நீங்க தப்பான இடத்துல இருக்கிறதால ஆயுதம் அவன் கையில இருந்தாலும் அவன் ஆயுதத்தோட கையில கருவியாயிர்ரான். தேவையே இல்லாம உபயோகிச்சுர்ரான்.கொலை விழுந்துருது. ஆம் ஐ கரெக்ட்?

செவ்
கரெக்டுப்பா..ஆனா பெண்கள் ஆயுதம் தூக்கறது ரேரா இருக்கே ..அது ஏன்?

நான்:
அதானே.. ஆங் .. அவிக வீக்கர் செக்ஸா இருந்தாலும் ஓஷோ சொல்றாப்ல ரெசிப்டிவா இருக்காய்ங்க. எதிராளியின் கோபத்தை – முக்கியமா கணவன் – ச்சொம்மா ரிசீவ் பண்ணிக்கிறாய்ங்க. ரெபல் ஆனாதானே சிண்டுபிடி -ஆயுதம்லாம்..

செவ்
அவிக ஏன் ரெசிப்டிவா இருக்காய்ங்க..அதுவும் கோப விஷயத்துல (இர்ரெஸ்பெக்டிவ் ஆஃப் தோஷங்கள்)

நான்:
மெஸ்ட்ருவல் சைக்கிள்??

செவ் :
ய்யாஆஆஆஆஅ.

நான்:
இதுவரை நீங்க சொன்னதெல்லாம் ஓகே பாஸ்.. நீங்க எதிரிகளுக்கும் காரகர் தானே.. எதிரி மேட்டர்ல மொத அட்டாக் நம்முதா இருந்தாதானே நல்லது. பெண்கள் எதிரிகள் மேட்டர்ல அடக்கி தானே வாசிக்கிறாய்ங்க.

செவ்:
எதிரி சக பெண்ணா இருந்தா ரெசிப்டிவா இருக்கிறதே சேஃப் பண்ணிரும். எதிரி வெளி ஆணா இருக்கிறச்சதான் காம்ப்ளிக்கேட் ஆயிருது. இந்த சந்தர்ப்பத்துல கூட பெண் டிப்பென்டன்டா இருக்கிறதால க்ளாஸ் டீச்சருக்கோ -ப்ரின்சிபாலுக்கோ – அப்பா -அண்ணனுக்கோ பிரச்சினையை ஃபார்வார் பண்ணிர்ரா.
அவிக இன் டைம் கரெக்டா -கீனா ரெஸ்பான்ட் ஆனா மேட்டர் ஓவர். அவிக ஊறப்போடறச்ச தான் நாறிருது. மேலும் எல்லா எதிரிகளோட மேட்டர்லயும் மொத அட்டாக் நம்மோடதா இருக்கனுங்கற தியரி ஒர்க் அவுட் ஆகாதே.

நான்:
கரெக்டுங்ணா.. இதனால நாம ஆரம்பத்துல பேசின விஷயத்தை ரிப்பீட் பண்ண வேண்டியிருக்கு..பெண் ரெசிப்டிவா இருக்கிறதால -கோபத்தை வெளிக்காட்டாம இருக்கிறதால – முதுகுவலி -இடுப்பு வலி – அல்சர் இத்யாதி வரலாம். ஆண் கோபத்தை வெளிக்காட்டறதால ரத்தகொதிப்பு – அடிதடி -போலீஸ் -ரவுடி பிரச்சினைகள் வரலாம். ..இல்லையா?

செவ்
ஆமாம். இந்த ரியல் எஸ்டேட்டுக்கும் நான் தான் காரகன்.ஆனால் பெண்கள் ஏன் இந்த மேட்டர்ல ஆர்வம் காட்டறதில்லை? கில்மா தோச்சு வில்லங்கமா ஏதும் தியரி சொல்லிராதே..

நான்:
இப்டியெல்லாம் நிபந்தனை போட்டா சச்சின் கிட்டே பேட்டை பிடுங்கிக்கிட்டு செஞ்சுரி போட சொன்னாப்ல ஆயிருமேண்ணா.. மன்சன் கில்மால பிறக்கிறான். அவனோட செக்ஸை (பால் வேறுபாடு) நிர்ணயிக்கிற ஜீனும் – அறிவை நிர்ணயிக்கிற ஜீனும் ஒன்னுதான்னு எங்கயோ படிச்சதா – அதை நானே எழுதினதா ஞா. பின்னே கில்மா இல்லாம எப்டி பதில் சொல்றதாம்?

செவ்:
சரி சொல்லித்தொலை..

நான்:

மனைங்கிறது பாதுகாப்பற்றது. வீடுங்கறது பாதுகாப்பானது. அதனாலதேன் பெண்கள் வீடு,அப்பார்ட்மென்டை விரும்புகிற அளவுக்கு மனையை விரும்பறதில்லை. ஏன்னா மனை என்பது உடலுறவுக்கான களம் மட்டுமே. உடலுறவில் பெண் அடைவது சூன்யம்.

ஆனால் வீடு கட்டறதுங்கறது கர்பம் தரித்தல் – கரு தாங்குதல் போன்ற திருப்தியை தருகிறது .ஓருயிரில் ஆரம்பித்து பல்லுயிராய் பெருகிய உயிர்கள் மீண்டும் இணைய துடிப்பதே மனித செயல்பாடுகளின் மூலம்.பெண் இன்னொரு உயிரை தாங்கும்போது இந்த இணைவை சாத்தியமாக்குகிறாள்.இயற்கைக்கே சவாலாக நிற்கிறாள்.

ஆனால் ஆணை பொருத்தவரை நிலமே மிகப்பெரிய யோனி அந்த காலத்து ராஜாக்களோட நாடு பிடிக்கும் ஆசையிலருந்து – இன்றைய அரசியல் வாதிகளின் நில ஆக்கிரமிப்பு வரை இதான் காரணம். எல்லா ஆணுக்குள்ளும் ஒரு அலெக்சாண்டர் இருக்கான். இதனாலதேன் ஆண்கள் மனை விஷயத்துல ரெம்ப ஆர்வம் காட்டுறாய்ங்க. மனைங்கறது எதிரியை கவரும் விஷயம். ஒவ்வொரு ஆணும் உள்ளுக்குள்ள யுத்தத்தை விரும்பறான்.

செவ்
யப்பா .. நான் ரியல் எஸ்டேட் தொழில்ல பெண்கள் ஏன் ஆர்வம் காட்டறதில்லைன்னு கேட்டேன். நீ சொந்த உபயோகத்துக்கு மனை வாங்கறதை பத்தி சொல்லிட்டு வரே..

நான்:
தியரியை அப்படியே எக்ஸ்டென்ட் பண்ண வேண்டியதுதான் பாஸ்.. அளப்பரிய ஆண்மை உள்ளவன் தனக்கு சொந்தமான எல்லா மனையிலயும் வீட்டை நடுகிறான் ( யோனியில் உறுப்பை செலுத்துவதற்கு சமம் இது ) . அது போதாதவன் விக்கிறான்.

செவ்
அடச்சை.. ஏம்பா .. இப்டி கலீஜா ரோசிக்கிற..

நான்:
கலீஜுலருந்து வந்ததுதானே மன்ச ஜம்மம்.. நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

செவ்
அஞ்சாமிடத்தை பொருத்தவரை பெண்கள் ரெண்டு மேட்டர்ல சேஃப் . ஒன்னு அலார்ட்டா இருந்து மின்சாரம் – நெருப்பு – கூர்மையான ஆயுதங்கள்ளருந்து காப்பாத்திக்கிறாய்ங்க. ரெண்டு இந்த நில மேட்டர்ல அவிகளுக்கு அட்டாச் மென்ட் இல்லாததால “வந்த விலைக்கு வித்து தொலைச்சுருங்க –எங்கயாவது போயி நிம்மதியா வாழலாம்”ங்கற மென்டாலிட்டியோட இருக்காய்ங்க. ஆனால் ஆண் அசால்ட்டா இருந்து பல்பு வாங்கறான். உள்ளங்கை நிலத்துக்காக சுப்ரீம் கோர்ட்டு வரை – வாடகை கொலையாளிகள் வரை போறான்.இந்த கொளந்தைங்க மேட்டர்ல மட்டும் பெண் ஒரு விக்டிம். அஞ்சாமிடத்துல நின்ன நான் கர்ப நாசம் – புத்ர நாசம்னு கொடுக்கிறச்ச அதை அனுபவிக்கிறது பெண் மட்டுமே..

நான்:
அப்ஜெக்சனுங்ணா.. ஏன்னா..

செவ்
த பாரு இப்பமே உன் உதவாக்கரை தியரிகளை கேட்டு நான் செமை கடுப்புல இருக்கேன். நாளைக்கு பேசலாம்..

நான்:
ஓகேங்ணா..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s