காங்கிரசில் இருந்து சிரஞ்சீவி விலகல்?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
சிரஞ்சீவி பிரஜாராஜ்ஜியம் கட்சியை துவக்கினது . 20+ எம்.எல்.ஏக்களோட காங்கிரஸுல ஐக்கியமானது , இப்பம் சென்டர்ல சுற்றுலாத்துறை மந்திரியா இருக்கிறதையெல்லாம் சொன்னா அடிக்கவே வருவிக. ஏன்னா இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச மேட்டரு. அதனால டைரக்டா மேட்டருக்கு வந்துர்ரன்.

2009 , செப்டம்பர்ல ஒய்.எஸ்.ஆர் இறந்த பிறகு -அதுவும் ஒய்.எஸ்.ஜகன் காங்கிரஸ்லருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு ஆந்திராவுல காங்கிரஸ் நாளொரு கலகம், பொழுதொரு கலக்கமாத்தான் காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கு.

தெலுங்கானா மேட்டர் வேற க்ளைமாக்ஸுக்கு வந்துக்கிட்டிருக்கு. ஜகன், நாங்க நினைச்சா ஆட்சிக்கு சங்குன்னு சவால் விட ,சிரஞ்சீவி நீங்க சங்கு ஊதினா நான் சஞ்ஜீவினி வேரா உசுரை கொடுப்பேன்னுட்டு காங்கிரஸ்ல சேர்ந்துக்கிட்டாரு.

இன்னைக்கிருக்கிற தேதியில சிரஞ்சீவி கட்சியை விட்டு வெளியேறினா காங்கிரஸுக்கு 10+ எம்.எல்.ஏக்கள் நஷ்டமானாலும் ஆட்சி கோவிந்தா .

இணைப்பு விழா எல்லாம் முடிஞ்சி இத்தனை காலம் ஆனாலும் இன்னமும் காங்கிரஸ் – பிரஜாராஜ்யம் எண்ணெயும் தண்ணியுமா தான் கிடக்கு. இந்த நிலையில ஆந்திர முதல்வர் கிரண் சி.எம் ஆகி இது வரை 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணத்தை உசத்தி சாதனை படைச்சாச்சு.

இது போதாதுன்னு இப்பம் மறுபடி 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உசத்த போறாய்ங்களாம். ( இந்த ஆளு மனசுல என்ன தான் நினைச்சிருக்காரோ தெரியலை ..எனக்கென்னமோ சாதிப்பாசத்துல ஜகனை சி.எம் ஆக்கியே தீர்ரதுனு கங்கணம் கட்டியிருக்காரோன்னும் தோனுது)

இந்த மேட்டர்ல தான் பிரஜாராஜ்ஜியத்துக்கும் -காங்கிரசுக்கும் முட்டிக்கிச்சு. மின் கட்டண உயர்வு விஷயமா சிரஞ்சீவையையோ – பி.ரா கட்சிகாரவுகளையோ இந்த அரசு கலந்து பேசலை. அர்ஜென்டா மானில கட்சி பொதுக்குழுவை கூட்டனும்னுட்டு முன்னாள் பிரஜாராஜ்ஜிய தலைவரும் – இன்னாள் அற நிலையத்துறை மந்திரியுமான சி.ராமசந்திரய்யா கட்சியின் மானில தலைவர் பொத்சா சத்ய நாராயணாவுக்கு கடிதாசு போட்டிருக்காரு.

அந்த நாள்ள வாத்தியார் தான் சொல்ல நினைச்சதை காளிமுத்து மூலமா சொல்ல வைப்பாரே அந்த ரேஞ்சுல சிரஞ்சீவிதான் சி.ராவை கிள்ளி விட்டிருக்காருன்னு சொல்லவா வேணம். மேடம் சோனியா இந்த மாதிரி மேட்டர்ல எல்லாம் ரெம்பவே அடக்கி வாசிப்பாய்ங்க. பொதுக்குழுவும் கூட போறதில்லை, ஒரு இழவும் எடுக்கப்போறதில்லை. இதையே காரணமா காட்டி சிரஞ்சீவி மறுபடி தனி ஆவர்த்தனம் ஆரம்பிக்க திட்டம் போடறதா தான் தெரியுது.

சிரஞ்சீவி இப்படி முரண்டு பிடிக்க வலுவான காரணம் இன்னொன்னும் இருக்கு. தெலுங்கானா மேட்டர்ல காங்கிரஸ் ஒரு தாட்டி மூக்கை நீட்டி பஞ்சர் ஆன பிறகு ரெம்பவே ஊறப்போட்டு நாறடிச்சிட்டிருந்தது. எந்த ……………செத்தானோ கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சென்டர் ஹோம் மினிஸ்டர் தலைமையில அனைத்து கட்சி கூட்டம் ஒன்னு கூட்டினாய்ங்க. .ஒரு மாசத்துல பைசல் பண்ணிர்ரம்னு ஹோம் கூட வாயை விட்டாரு.

ஆந்திரா ராயல சீமாலா ஜகன் அலை அடிச்சிட்டிருக்கு. அங்கன எப்படியும் பப்பு வேகாது. தெலுங்கானா கொடுத்து ஒழிச்சுட்டு – தெலுங்கானா ராஷ்டிர சமிதியை காங்கிரசோட சேர்த்துக்கிட்டா என்னன்னு ரோசிக்கிறாய்ங்க. நேத்திக்கே பொத்சா தில்லி போயாச்சு. நாளைக்கு கிரணும் போறாரு.

இந்த மேட்டர்ல சிரஞ்சீவிக்கு எங்கன வலிக்குதுன்னு கேப்பிக.சொல்றேன். ஆந்திராவுல ஒன்று பட்ட ஆந்திரமா,பிரிவினையான்னு கேள்வி வந்தப்போ சிரஞ்சீவி ஒன்று பட்ட ஆந்திரத்துக்கு கைய தூக்கிட்டாரு. தெலுங்கானால பிரஜாராஜ்ஜியத்தை ஊத்தி மூடிட்டாய்ங்க.

இப்பம் தெலுங்கானா கொடுத்து தொலைச்சுட்டா சிரஞ்சீவி நாக்கைத்தான் வழிக்கனும். ஆந்திரா ராயலசீமாலயும் சுப்ரீம் ஹீரோ ஜீரோ ஆயிருவாரு. அடுத்த தேர்தல்ல டிக்கெட் கிடைச்சாலும் ஓட்டு கிடைக்காது (ரெண்டு பகுதியிலயும்)

அசலான மேட்டர் இதான். இதுக்காவ போர்க்கொடி தூக்கறதை விட மின் கட்டண உயர்வை சாக்கா வச்சு கலாய்ச்சா பொலிட்டிக்கல் மைலேஜும் கிடைக்கும்ல. மேலிடத்துல கூப்டா -உள்ளாற போயி இந்த மேட்டர்ல செட்டில்மென்ட் பண்ணிக்க நினைச்சிருக்கலாம்.

எப்படியோ சிரஞ்சீவி தமிழ் நாட்ல விஜய்காந்தை போல மறுபடி தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சாலும் நான் ஷாக் ஆகமாட்டேன்.

அனுபவம்:
தனி மீட்டருக்காகவே வீட்டை மாத்திக்கிட்டு மேல வந்த பிறகு வந்த பில்லு ரூ.150 .போன மாசம் கட்டின பில்லு ரூ.500 .இந்த மவனுவ மறுபடி உசத்தினா ஆயிரம் வந்துருமா?அதுக்கு மேல போயிருமான்னு கலக்கமா இருக்கு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s