செவ் தோஷம் : ஆண் பெண் வித்யாசம்

Posted on

நான்:
வணக்கம்ணே !
செவ்:
வந்துட்டியா? நேத்திக்கு லக்னத்துல நான் நிக்கிறச்ச ஆண் பெண்களுக்கு என்ன விதமான பலன் ஏற்படும்னு சொன்னேன். இன்னம் கொஞ்சம் டீப்பா போகலாமா?

நான்:
அண்ணே .. நீங்க சொன்ன மேட்டர் என்னை ரெம்ப ரோசிக்க வச்சுருச்சு. நான் ரோசிச்சதை சொல்லட்டா?

செவ்:
சொல்லேன்..

நான்:
இங்கே இருக்கிறது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. பொம்பளை கோவத்தை வெளிக்காட்ட முடியாது. ஆனால் லக்னத்துல நீங்க இருந்தா கோபம் வரும்.அதனால
உள்ளடக்கி வைக்கப்பட்ட கோபம் அல்சரா,இடுப்பு வலி,முதுகு வலியா வெளிப்படலாம்.கரெக்டா?

செவ்: கரெக்ட். மேலே போ..

நான்: ஆண்கள் கோவத்தை காட்டிர்ரதால ஹை பி.பி –வரதட்சிணை கொடுமை வழக்கு இத்யாதி வரலாம். கரெக்டா?

செவ்: கரெக்ட் மேலே போ..

நான்:
லக்ன செவ் உள்ள பெண்கள் அவிக ஜாதகத்துல இன்ன பிற ப்ளஸ் பாய்ண்ட்ஸ் இருந்து அவிக போலீஸ்,ரயில்வே,எலக்ட் ரானிக்ஸ் மாதிரி துறைகளுக்கு போயிட்டா எஃபெக்ட் குறையும். ஐ மீன் இவிகளும் சம்பாதிக்கிறதால புருசன் அடக்கி வாசிக்கலாம். கரெக்டா?

செவ்:
கரெக்டு தான் .. முக்கியமா இவிகளுக்கு மாதவிலக்கு சக்கரத்துல பெருசா பிரச்சினை வராம இருக்கலாம். அதுலயும் காவல் துறையில உள்ளவுக ட்யூட்டி டைம்லயே ரத்தக்களறி ரண களறிய பார்த்துர்ரதால வீட்ல நிலைமை கொஞ்சம் சுமுகமா இருக்கலாம்.

நான்:
அண்ணா ! நீங்க ரெண்டாமிடத்துல இருந்தா ஆண் பெண் விஷயத்துல என்ன மாதிரி வித்யாசங்கள் இருக்கும்?

செவ்:
இது தனபாவம். பொஞ்சாதி ஆஃபீஸ் கோயரா இருந்தாலும் காசு பணம்லாம் புருசன் கைக்கு போயிர்ரதால அல்லது இயற்கையாவே பெண் வீக்கர் செக்ஸுங்கறதால கொஞ்சம் சேமிப்பு ,சிக்கனம்லாம் இருக்கிறதால தனவிரயம் தவிர்க்கப்பட்டு அதுக்கு பதிலா கண்கள்,தொண்டை,வாய் பகுதிகள்ள பிரச்சினைகள் வரலாம். நான் ரெண்டுல நின்னு 7 ஆம் பார்வையா எட்டை பார்க்கிறதால உஷ்ண வியாதிகள், ரத்தம் எரிச்சல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஆயுளை குறைக்கலாம். வைதவ்யத்தை தரலாம். அல்லது 9 ஆம் பார்வை காரணமா மெடிக்கல் பில் ஹெவியா வரலாம். அந்த நேரம் அப்பாவும் இந்த பில்லை பேர் பண்ண வேண்டி வரலாம் (9=அப்பா)

இது வாக்பாவம். பெண்கள் சாதாரணமாவே மனசுல உள்ளதை வெளிய விடமாட்டாய்ங்க.அதுவும் புருசங்காரன் மேட்டர்ல மூச். இதனாலயும் மேலே சொன்னபடி ஆயுள் குறைவு, மாங்கல்ய தோஷம், வைத்திய செலவுகள் எதிர்படலாம்.

இது குடும்ப பாவம். வேலைக்காரியிலருந்து ,பசங்க, மாமியார்,மாமனார் வரை பெண்கள் முட்டி மோதி –கத்தி தீர்க்கிறதால இது பெருசா எஃபெக்ட் பண்னாது.

இது நேத்திர பாவம்ங்கறதால கண் பார்வை பாதிக்கப்படலாம்.

நான்:
ஆண்கள் விஷயத்துல எப்டி எஃபெக்ட் பண்ணுவிங்கண்ணா?

செவ்:
ரியல் எஸ்டேட் பக்கம் இழுத்து ஆப்படிப்பேன். பஞ்ச் டயலாக்ஸ் விட வைப்பேன் (எதிராளி கிட்டேருந்து பஞ்ச் கிடக்கலாம்ல) , நான் வெஜ் மேல மோகத்தை கொடுத்து –அதனால பைல்ஸ் இத்யாதி நோய்களை வரவழைப்பேன். பாகப்பிரிவினையில லொள்ளு –ஸ்டேஷன் பஞ்சாயத்துன்னு அல்லாட வைப்பேன்.

நான்:
நாலாமிடத்துல நின்னா என்னா செய்விங்க ண்ணா?

செவ்:
4ங்கறது இதய ஸ்தானம் .பெண்கள் விஷயத்துல அவிக தங்கள் மன அழுத்தத்தை எல்லாம் கண்ணீரா த்ரோ பண்ணிர்ரதால அவிகளுக்கு ஹார்ட் அட்டாக் சான்ஸ் குறையுது. புகைப்பழக்கம் இருக்காதுங்கறதால சான்ஸ் மேலும் குறையுது. ஆண்கள் மேட்டர்ல ஹார்ட் அட்டாக் சான்ஸ் அதிகம் .

பெண்கள் சதா சர்வ காலம் நெருப்போட விளையாடறதால (சமையல்) வீட்டுக்குள்ள தீ விபத்து நடக்க வாய்ப்பு குறைவு.ஆண்கள் ரேரஸ்ட் ஆஃப் தி ரேரா அடுப்பண்டை போறதால கைய கால சுட்டுக்க சான்ஸ் அதிகம். கவிஞர்கள்,எழுத்தாளர்கள்னா நாபை திறந்துவிட்டுட்டு தீப்பெட்டிய தேடிக்கிட்டிருந்தா அக்னி பிரவேசம் தேன்.

இது மாத்ருஸ்தானமும் கூட ஆண்களை விட பெண்களுக்கு அம்மாவோட அட்டாச் மென்ட் சாஸ்தி. இதனால அவிக அம்மாக்களுக்கு எஃபெக்ட் சாஸ்தி.

இது கிருக ஸ்தானம் (வீடு) ஆண்கள் வீட்ல தங்கற சமயம் குறைவு –அட்டாச் மென்டும் குறைவு –கடன் கிடன் வாங்கி கட்டியிருந்தா வீடுன்னாலே கடுப்பு தான் ஆகும். இதனால இந்த வகையில ஆண்களுக்கு எஃபெக்ட் குறைவுதான்.

ஆனால் பெண்கள் என்னதான் ஆஃபீஸ் கோயர்ஸா இருந்தாலும் வீக்கர் செக்ஸுங்கறதால வீடுங்கறது அவிகளோட சுவர்கம் ( நரகமாவே இருந்தாலும்) சதா சர்வ காலம் அதைப்பத்தியே ரோசிக்கிறதால இந்த எஃபெக்ட் அதிகமா இருக்கும்.

வாகனம்னு பார்த்தா கு.பட்சம் பாதி பெண்களாச்சும் பில்லியன் ரெய்டர்ஸ் தான். ட்ரைவிங் மீன்ஸ் டெசிஷன் மேக்கிங். ட்ரைவ் பண்றவன் தான் டெசிஷன் எடுக்கனும். டெசிஷன் எடுக்கிறவனை தான் ப்ளேனட் எஃபெக்ட் பண்ணும். இதனால வாகன வகையிலயும் பெண்களுக்கு எஃபெக்ட் குறைவுதான்.

மேலும் பெண்கள் புது வெயிக்கிள்ஸ்தான் வாங்குவாய்ங்க. சின்னதா ட்ரபுள் வந்தாலும் ஒடனே சர்வீஸுக்கு போயிருவாய்ங்க.ஆண்கள் over confident ங்கறதால அலட்சியமா இருந்து அடிபடுவாய்ங்க.

இது வித்யாஸ்தானம் . கல்வின்னு பார்த்தாலும் பையனுக்கு ஆயிரத்தெட்டு ஆவகேஷன்ஸ் இருக்கும் . எஃப் டிவி பார்க்கனும், கில்மா ஜோக் தெரிஞ்சுக்கனும்,டீக்கடையில டீ அடிக்கனும், தம் போடனும் ,பாக்குபோடனும். இத்தீனி வேலைகளுக்கு நடுவுல படிக்கவும் செய்யனும். இதனாலயும் பெண்கள் சேஃப் ஆயிர்ராய்ங்க.

நான்:
அண்ணா.. இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? நாங்க அம்பேல் தானா?

செவ்:
இல்லை கண்ணா.. அஞ்சாமிடத்தை பொருத்தவரை நீங்க ரெம்ப ரெம்ப சேஃப் அந்த மேட்டரை நாளைக்கு சொல்றேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s