ஊர் பேரை கெடுக்கிற உட்டாலக்கடி பார்ட்டிகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
தமிழ்ல நாம ஊழல்ங்கறோம். தெலுங்குல கும்பகோணம்ங்கறான். அல்லாரும் தேன் குசும்பு பண்றோம்.ஆனால் குசும்புன்னாலே கோயம்பத்தூருதான் ஞா வருது. எல்லா ஊருலயும் ரவுடியிசம் இருக்கு.ஆனால் சித்தூர்ல இருந்து ஆளை கொண்டு வந்து போட்டு தள்ளிருவம்னு பயமுறுத்தறாய்ங்கன்னுட்டு தான் புகார் தராய்ங்க.

அதே போல அல்லாரும் தேன் ஐ மீன் எல்லா ஊர் காரனும் தேன் கழட்டி விடறோம் – ஆப்படிக்கிறோம் -நம்பிக்கை மோசடி பண்றோம்.ஆனால் மேற்படி வேலைய செய்தவன் சென்னையை சேர்ந்தவனா இருந்தா கோவத்துல இந்த மெட் ராஸ்காரன் வேலைல்லாம் நம்ம கிட்டே காட்டாதேன்னு ரேங்கறோம்.

சரி இந்த ரெஃபரன்ஸ் டு தி கான்டெக்ஸ்ட் எல்லாம் எதுக்குன்னு கேப்பிக சொல்றேன். நாம நடத்தற ஆட் பேஸ்ட் லோக்கல் மேகசின் சார்பா காலண்டர் போடறது வளக்கம். இந்த தாட்டி கொஞ்சம் அகல கால் வச்சுட்டோம்.

நம்ம மேகசினுக்கு சன்மானம் இல்லாத ப்ராண்ட் அம்பாசிடரு.. நம்ம எம்.எல்.ஏ, அவருக்கு சம்பளமில்லாத பி.ஆர்.ஓ நாம. அவரு மனசுல என்ன இருக்கோ தெரியாது. நம்ம மனசுல உள்ள கான்செப்ட் இதான். இந்த தாட்டி டேட் காலண்டர் போடறதா முடிவு பண்ணி ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சோம். ரெஸ்பான்ஸ் நெல்லாவே இருந்தது.

43 ஸ்பான்சரர்ஸ். ஆவரேஜா தலைக்கு ரூ.1000 .ஒரு காலண்டரோட காஸ்ட் ரூ.26க்கு இழுத்துருச்சு. தலைக்கு பத்து காலண்டர் கொடுத்துட்டு மத்ததை டீக்கடை,சலூன் மாதிரி வெகுஜன பாய்ண்டுகள்ள டிஸ்போஸ் பண்ணிருவம். இதுலயும் நோ ப்ராப்ளம் .என்னா ப்ரொடக்சன் மொத்தம் வேலூர் ,சித்தூர்.

இன்னொரு மாடல் அஞ்சு அஞ்சு பேரா அஞ்சு க்ரூப் ( 25 பேரு ) ஸ்பான்சரர்ஸ். எம்.எல்.ஏவோட விஸ்வரூப படம் காமன். கீழே உள்ள காலியிடத்துல அவிகவிக படம்,மேட்டரை டபுள் கலர்ல போட்டுக்கலாம்.ஒவ்வொரு க்ரூப்பும் ரூ.5,200 கொடுத்தா 200 காலண்டர் கொடுத்துர்ரது.அவிக அவிக சர்க்கிள்ள கொடுத்துக்குவாய்ங்க. இதுலயும் நோ ப்ராப்ளம்.என்னா ப்ரொடக்சன் மொத்தம் வேலூர் ,சித்தூர்.

மேற்படி ரெண்டு மாடல்லயும் நம்ம ஊரு எம்.எல்.ஏ தான் சென்ட்ரல் அட்ராக்சன். சுத்தியும்/அல்லது கீழே அவரோட ஆதரவாளர்கள்.

மூனாவதா ஒரு மாடல் ப்ளான் பண்ணோமே அது கமர்ஷியல். சென்டர்ல லட்சுமி. சுத்தியும் கமர்ஷியல் அட்வர்டடைஸ்மென்ட்.. ஒரே ஷீட்டுதேன். காஸ்ட் அஞ்சு ரூவா. டோட்டலா 12 பேரு ஸ்பான்சரர்ஸ். இதுலதான் வில்லங்கமே.

குறிப்பிட்ட சென்னை ப்ரிண்டர்ஸ் போன வருசமே பயங்கரமா கலாய்ச்சுட்டாய்ங்க.ஏதோ தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் கணக்கா அடிச்சு பிடிச்சு வேலை முடிஞ்சது. நியூ இயர் தினமே காலண்டர் டெலிவரி எடுத்துட்டு டிஸ்பர்ஸ் பண்ணிட்டம்.

இந்த தாட்டி பயங்கர ஆப்பு. ஆர்டர் எடுத்த பார்ட்டி ரோட்ல போறவனில்லை. அந்த நிறுவனத்தோட வாரிசு. இதோ ஆயிருச்சு அதோ ஆயிருச்சுன்னு பாவ்லா காட்டிக்கிட்டே இருந்து நேத்திக்கு ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டான். ப்ரின்டர்ஸ்ல ரெஸ்பாண்டே ஆக மாட்டேங்கிறாய்ங்க.

இதைத்தான் மெட் ராஸ் வேலைங்கறது. நாம லோக்கல்ல இருந்துக்கிட்டு டீல் பண்றவரைக்கும் எல்லாம் பர்ஃபெக்டா இருக்கும். எப்பம் சென்னையில அடி வச்சு டீல் பண்ண ஆரம்பிக்கிறோமே அப்பமே மெட் ராஸ் வேலை ஆரம்பிச்சுரும். ஒரு ரெண்டு வருசமா லாபமோ நஷ்டமோ பங்க்சுவலா பண்ணிக்கிட்டு வந்தோம். அந்த சாதனைக்கு இந்த பிக்காலி சமாதி கட்டிட்டான். ஒரு டுபாகூர் பார்ட்டி பண்ற டுபாகூர் வேலைக்கு ஊர் பேரு கெடுது பாருங்க.

இந்த யாவாரத்தை ஆரம்பிக்க நாம வச்ச முதல் சிவாஜி படத்துல ரஜினி மாதிரி ஒரே ஒரு ரூவா தான். வைட் ஷீட் ஒன்னு வாங்கிக்கிட்டு லே அவுட் போட்டு கான்வாஸ் பண்ணி ஆட் பேஸ்ட் மேகசின் ஆரம்பிச்சம். அது டபுள் கலராகி,மல்ட்டி கலராகி,டேட் காலண்டராகிறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பம். (முக்கியமா ஆத்தா எவ்ளோ கஷ்ட பட்டிருப்பா)

ஒரே ஒரு பொறுப்பில்லாத நாயால இத்தனை வருசத்து குட் வில் ஃபணால் ஆயிருக்கனும்.ஆனால் அதை எப்டியோ நம்ம கிரிமினல் மூளையை வச்சு போஸ்ட்போன் பண்ணியிருக்கம். அப்படி என்னதான்யா பண்ணேன்னு கேப்பிக. ஊஹூம் சொல்ல மாட்டேன்.யாவார ரகசியம்.

உங்கள்ள ஆராச்சும் அதை கெஸ் பண்ணி சொன்னிங்கன்னா தூள் நைனா! ஊருல நமக்கு சின்ன சைஸ் தொழிலதிபர்னு பேரு.ஆனால் கூலிக்கு ஆள வச்சு -அவனுக்கு சிந்தாத சிதறாத கூலி கொடுத்து அவன் வேலையையும் தானே செய்ற கூமுட்டை ஆருன்னா நாமதேன்.

அதுலயும் நாம இந்த மாதிரி வேலைகள்ள இறங்கும்போதுதேன் சோம்பேறிக்கு சோறெடுத்துக்கிட்டு போற சோப்ளாங்கியெல்லாம் வரிசையா வந்து ஹலோ சொல்லுதான். ஊட்டுக்காரிக்கு ஓம்புக்கு வந்துருது. உள்ள காசு பணம்லாம் ஏற்கெனவே இன்வெஸ்டட். மிச்சம் மீதியை மவள் சென்னை கொண்டு போயிருக்க – ஏடிஎம் கார்டும் மவ கிட்டே நின்னுர ஏறக்குறைய அந்த நாள் ஞா நெஞ்சிலே வந்ததேன்னு பாட வேண்டிய நிலை. கணக்குல காசிருக்கு .எடுக்க முடியாது.கடன் கேட்கிறதை எப்பயோ விட்டாச்சு. சிங்கிள் டீ வாங்கித்தர கூட ஆளில்லை.
( இப்பம் நாமதேன் வாங்கிதரோம்) .

என்னா லொள்ளு பாருங்க. இந்த மேரி நேரத்துல எனக்கு நான் கொடுத்துக்கிற கவுன்சிலிங் என்னடான்னா
” முருகேசா! எல்லாமே அனுகூலமா இருந்தா தாளி ..ரஜினி கூட சூப்பர் ஸ்டாருதேன். எல்லாமே ஆப்படிக்கிறப்ப மேனேஜ் பண்ணி காரியத்தை முடிச்சாத்தான் முருகேசனுக்கும் பெருமை.முருகேசனை படைச்ச கடவுளுக்கும் பெருமை”

சென்னை ப்ரஸ்ல ரெண்டு நாள் வாய்தா கேட்டிருக்காய்ங்க. அதுக்குள்ள வேலை நடக்கலை .. நாறடிச்சுர்ரதே சரி..நம்ம காசை வாங்கி ஏப்பம் விட்டா ஆத்தா பார்த்துப்பான்னு விட்டுருவம். இது ஊருகாசு..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s