புரட்டிப்போடும் கண்டுபிடிப்பு

Posted on

அண்ணே வணக்கம்ணே !
லைஃப்ல எத்தனையோ தியரி,ப்ரின்ஸிபிள்ஸை அனலைஸ் பண்ண பார்ட்டி நாமன்னு புதுசா சொல்லத் தேவையில்லை. ஆனால் மேற்படி தியரிகளை எல்லாம் புரட்டிப்போடக்கூடிய ஒரு தியரியை கண்டுபிடிச்சேன். சொன்னா அடச்சே இவ்ளதானானு ஆயிரும்.ஆனால் கண்டுபிடிப்பு மட்டும் உண்மையோ உண்மை.

நம்ம வாழ்க்கையின் போக்குக்கும் – திருப்பங்களுக்கும் வெற்றி தோல்விகளுக்கும் என்னடா காரணம்னு மண்டைய ஊறுகாய் பானை கணக்கா குலுக்கி குலுக்கி ரோசிக்க ஆரம்பிச்சென். காரணம் இல்லாம இல்லை.

எதையுமே இழந்த பிறகுதான் அதனோட அருமையே தெரியுமாம் (நமக்கு ரெம்ப பிடிச்ச கொட்டேஷன்) .ஆத்தா நம்மை எப்படி ராஜா ஊட்டு கன்னுக்குட்டியாட்டமா மெயின்டெய்ன் பண்ணாங்கறது அவள் கண்ணசர்ர நேரத்துல நம்ம நிலைமை எப்படி நாறிப்போகுதுன்னு பார்க்கிறப்பத்தேன் உறைக்குது. தலீவரு வேணம்னா இமயம் வரை உயராது எந்தனுயிர் போகாதுன்னு பாடலாம். நமக்கு கட்டுப்படியாகாது.

தாளி ..நமக்குள்ள எத்தனை ஓட்டை இருக்குன்னு நமக்கு தெரியும்.ஏதோ காத்து ஒரு குன்ஸா புகுந்து போகும்போது இசையாயிருது.அதுக்கும் நமக்கும் என்னா சம்பந்தம்? வேணம்னா இதயப்புல்லாங்குழலின் ஓட்டைகளை பிளாஸ்டிக்,எலக்ட்ரானிக் குப்பைகளை கொண்டு அடைக்காததை நம்ம பங்கா சொல்லலாம்.(சுஜாதா ஒக்காபிலரி)

என்னதான் உலகம் தலையில தூக்கி வச்சு ஆடினாலும் நாம எப்படியா கொத்த தக்கைன்னு ம.சா முனகிக்கிட்டே இருக்கும். இதே உலகம் நாளைக்கு மிதிக்கவும் செய்யும். மிதிக்கிறச்ச கு.ப செருப்பை களட்டி வச்சுட்டு மிதிக்க என்னா சேஃப்டி பண்ணிக்கனும்னு ரோசிச்சே தலைமுடியெல்லாம் கொட்ட்டிப் போயிட்டிருக்கு.

காலண்டருன்னா ஆரோ ஓசியில கொடுக்கிறது -நாம வாங்கிக்கிட்டே இருக்கிறதுன்னு நிறைய பேரு வாழறாய்ங்க. காலண்டர் போடறதுன்னு இறங்கி அது ஒரு நாயடி. வழக்கம் போல ஒன் ப்ளஸ் ஒன் போட்டிருந்தா பிரச்சினையே இல்லை. வகுந்து எடுத்திருக்கலாம். இந்த தாட்டி 2+1 .அதுலயும் டேட் காலண்டர் (பெரிய சைஸு -அடக்கமே ரூ.26 ) நெல்ல வேளையா லெச்சுமி காலண்டர்க்கு மட்டும் பட்ஜெட் ரெம்ப குறைவு (கமர்ஷியல்) .

மொத்த இன்வெஸ்ட்மென்ட்26 + 26 + 5 x 2000 அமவுண்டு என்னா வருதுங்ணா? நாம கணக்குல வீக்கு. வசூல்ல கொஞ்சம் சுணக்கம் காட்டினா பட்ஜெட்டுல பெரிய வேட்டியே விளுந்துரும். பணம் ஒரு பக்கம் இருக்கட்டும். நிம்மதி? மேலும் இத்தனை நாள் கிருஷ்ணா ராமான்னிக்கிட்டு மவுசும் கையுமா இருந்துட்டு திடீர்னு கையேந்தறது ரெம்ப கஷ்டம். ( விளம்பர சேகரிப்பை) சொன்னேன். என்னா லொள்ளு என்னா லொள்ளு தமாசா ஆரம்பிச்சு பொளப்பையே கெடுத்துருச்சு.

இத்தனைக்கும் ஆத்தா எத்தீனி வகையா நம்மை அலார்ட் பண்ணனுமோ பண்ணிக்கிட்டே தான் இருந்தா. ஒலிப்பதிவுக்கு உபயோகிக்கிற மொபைலோட உறைய கழட்டி மகள் தலைகீழா மாட்டியிருக்க -சார்ஜ் போட தடுமாறி ஏதோ ஒரு ஓட்டைன்னு ஜாக்கை செருகி தொலைக்க ரூ.100 வட்டம்.

சூர்யா பல்பு டிம் அண்ட் டிப் அடிக்க – குழாய் ஆடிப்போயிருக்க – அதை லேசா அழுத்த பல்பு பல்பு வாங்கிருச்சு. எலக்ட்ரிக் சாமான் வேலை கொடுத்தா மாத்திரம் ரெம்ப உசாராயிரனும் (ஹூம் ஊருக்கெல்லாம் சொல்ற பார்ட்டி நாம ) இது வெறும் எடுப்பு தான்.

மறு நாள் பெட்டர் பெர்ஃபார்மென்ஸுக்காவ சிஸ்டத்தோட கன்ஃபிகரேஷனை மாத்த அது புடுங்கிக்கிச்சு. ஃபார்மட் அடிச்சு தொலைச்சுரலாம்னு பார்த்தா “கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையான்னுட்டு புதுசு புதுசா ஓ.எஸ் இன்ஸ்டால் ஆகுதே கண்டி ஒரு ம..நாவும் மாற்றமில்லை.

சரி ஒளியட்டும் ஒன்னு மனைவி -அடுத்தது துணைவின்னு வேலைய ஆரம்பிச்சம். மறு நாளே நமக்குள்ள இருக்கிற பர்ஃபெக்சனிஸ்ட் முழிச்சுக்கிட்டாரு. தத் ..இதென்னா இது கச்ச கச்சன்னு ஓ.எஸ்ஸுங்க.கு.ப ஸ்டார்ட் அப்லயாச்சும் வராம பண்ணிரனும்னு நெட்ல தேடி டெலிட் பண்ணியாச்சு. தெரியாத்தனமா அசலான ஓ.எஸ்ஸுக்கான ஸ்டார்ட் அப்பையும் டெலிட் பண்ணிர பெசலிஸ்டுக்கிட்டே போகவேண்டியதாயிருச்சு.

பெசலிஸ்டு கோஸ்டை போட்டு ஜீ பூம்பா மராமத்து பண்ணிக்கொடுத்துட்டாரு.அடிஷ்னல் ஓ.எஸ் எல்லாம் எல்லா ட்ரைவ்லயும் பல்லை இளிக்குது. மறுபடி நமக்குள்ளே பர்ஃபெக்சனிஸ்டு விழிக்க அப்கிரேட் பண்ண முயற்சி.அசலுக்கு மோசம். மறுபடி பெசலிஸ்டு.அவர் அன் அவெய்லபிளா இருக்க இடையில ஒரு அமெச்சூர் முயற்சி செய்து அதுவும் தோல்வி .

சிஸ்டம் ரெடியானாலும் அவாஸ்த் படக்கு படக்குன்னு சிஸ்டம் ஃபைல்சை செஸ்டுக்கு அனுப்பறதும் – நாம ரீ ஸ்டோர் பண்றதுமா ஒரு இமிசை. பதிவா போடமுடியலை – அடிக்க ஆரம்பிச்சாலும் பழைய ஃபார்ம் வரலை . ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பயமுறுத்துது.

இத்தீனி லொள்ளுக்கும் இடையில காலண்டர் வேலை அதும்பாட்டுக்கு போயிட்டே இருக்கு.ஏன்னா இதுல பைசாவுக்கு பைசா பேருக்கு பேரு அரசியல் எதிர்காலத்துக்கும் அச்சாரம் விழலாம். பதிவின் ஆரம்பத்துல சொன்ன கண்டுபிடிப்பு மேட்டருக்கு வரேன்.

இடையில என்னங்கடா ஆயிருச்சுன்னு மறுபடி மறுபடி ஒரே கேள்வி.அப்பம் நம்ம மண்டையில ஸ்பார்க் ஆன ஒரே வார்த்தை “பழக்கம்”. விஜய் டிவியில சுபாவம் பத்தி மொக்கை போட்டுக்கிட்டிருந்தாய்ங்க. சுபாவம் இயற்கையா வர்ரது. இருக்கிறது. பழக்கம் நாம ஏற்படுத்திக்கிறது.இது செயற்கை தான். படைப்பு சக்தி உள்ளவுகளுக்கு நரகம் தான்.இல்லேங்கலை.

ஆனால் காலபோக்குல பழக்கங்கறது பாடியை ,மைண்டை ட்யூன் பண்ணிருது. ப்ளாகர்ல போஸ்டை ஷெட்யூல் பண்றாப்ல ஷெட்யூல் ஆயிருது.

என்னை கேட்டா ஒரு ஆசாமி நெல்லவனா இருக்கான்னா அது பழக்கம். அவனால கெட்டதை செய்ய முடியாது. ரெம்ப கஷ்டம். ஒரு ஆசாமி சுறு சுறுப்பா இருக்கான்னா அது பழக்கம் அவனால சோம்பேறியா இருக்கவே முடியாது.

உங்க சுபாவம் என்னங்கறதை பத்தி உங்க மனைவிக்கு தான் தெரியும் -அவிக மட்டும் தான் கவலைப்படுவாய்ங்க. ஆனால் பழக்கங்கறது அப்படியில்லை. ஓவர் ஆல் சர்க்கிள்ள சர்க்யூட்டே சாம்பலாயிரும்.

நெல்ல பழக்கங்களை மாத்திக்க முடியாம ஃபெயிலியர் ஆயிர்ர பார்ட்டிங்களும் இருக்காய்ங்க. கெட்ட பழக்கங்களை படக்குன்னு விட்டுர்ர பார்ட்டிகளும் இருக்காய்ங்க. இதெல்லாம் விதிவிலக்குகள். ( இந்த கேட்டகிரியில தான் நாமளும் வரம் – இதுல ஒரு விதிவிலக்கு என்னடான்னா பதிவு போடறதும் -பலன் சொல்றதும் பழக்கமாயிருச்சு.

ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நமஹன்னு பலனை ஆரம்பிச்சா இது திரு……….அவர்களுக்கான முன்னோட்டம்/பரிகாரம்/தசாபலன்னு முடிஞ்சுரும். இடையில என்ன நடக்குதுன்னே தெரியாது.பதிவும் இப்படித்தான் அண்ணே வணக்கம்ணேன்னு ஆரம்பிச்சதுதான் தெரியும் உடுங்க ஜூட்டுலயோ அடுத்த பதிவுல பார்க்கலாம்னோ முடிஞ்சுரும். இப்பம் என்னடான்னா பாரா பாராவுக்கு சிக்குது. காரணம் என்ன பழக்கம் விட்டுப்போயிருச்சு.

பழக்கம்ங்கறது செயற்கையானது – இதை எப்பவேணா விட்டு -எப்பவேணா தொடரமுடியும். இல்லேங்கலை.ஆனால் பழக்கத்தை கொண்டு வர்ரதும் கஷ்டம் – விடறதும் கஷ்டம் -கொண்டு வந்ததையோ – பெற்ற விடுதலைஐயோ தொடர்ரது அதை விட கஷ்டம்டா சாமீ ..பழக்கத்தை பொருத்தவரையில நீங்க எப்படிங்கறதை பொருத்துதான் உங்க வாழ்க்கை. நம்முது ஏதோ கடகலக்னம்ங்கறதால ரெண்டே கால் நாள்ள சிஸ்டம் ரீ ஸ்டோர் ஆயிருச்சு. மத்தவுக?

Advertisements

One thought on “புரட்டிப்போடும் கண்டுபிடிப்பு

    S.Sivakumar said:
    December 22, 2012 at 3:17 am

    ரொம்ப படிச்சவன் 45 வயசானவன். அம்மா செத்துட்ட துக்கம் தாங்காம தற்கொலை பண்ணிகிட்டான்ரானுன்களே (நித்யஸ்ரீ மகாதேவன்) இது என்னா சைக்காலஜி . இல்ல பொண்டாட்டி நம்மளை விட பெரிய ஆளா போட்டாலே என்ற வயத்தெரிச்சலா? இந்த மாதிரி ஆளுங்க ஜாதகத்துல இவன் தற்கோலை பண்ணித்தான் சாவான்னு இருக்குமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s