ரஜினிக்கான அங்கீகாரம் : ஒரு வரலாற்றுப் பிழை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ரஜினிங்கறவரு ஒரு ஆக்டரு. அவரு ஆக்டு குடுக்காரு. சனம் காசு கொடுத்து பார்க்குது. அந்த நபருக்கு 63 வயசு ஆயிருச்சுன்னா அது அவரோட தனிப்பட்ட சமாசாரம். இதுல எதுக்கு இத்தனை அலப்பறை புரியலை.

அப்படி கூட அவரு பிறவி நடிகராவோ – நடிகர் திலகமாவோ இருந்தாலும் பரவால்லை. அந்த கருமமும் கிடையாது.சரி ஒழியட்டும் எம்.ஜி.ஆரை போல ஏழை பாழைன்னா மனமிரங்கற வள்ளலான்னா அதுவும் கடியாது.

அன்னாரின் ரசிகர்கள் அலப்பறை பண்ணா அதுல ஒரு அருத்தம் இருக்குது. பராம்பரியம், பனை வெல்லம்னு அலட்டிக்கிற ஆனந்த விகடன்ல ரஜினி 63ன்னுட்டு பிட்டுபடம் ஓட்டியிருக்காய்ங்க.

நாட்ல எத்தனையோ பிரச்சினை பத்தி எரியுது. அதையெல்லாம் விட்டுப்போட்டு ஏறக்குறைய ஒரு கோமாளியான ரஜினி புராணத்தை போட்டு பக்கங்களை நிரப்பிர்யிருக்காய்ங்க.

அதை பார்த்ததுமே(படிச்சதுமே இல்லை) கடுப்பாயிதான் இந்த பதிவை போடறேன். அவிக அதை போடாம இருந்திருந்தா நாம இதை போடாம இருந்திருப்பம். இந்த பதிவுல மொக்கை போடாம ரஜினி மேல கடுப்பாக நமக்குள்ள காரணங்களை பாய்ண்ட் டு பாய்ண்ட் பட்டியலிடப்போறேன்.

முன் குறிப்பு:
நமக்கும் ரஜினிக்கு வரப்பு,வாய்க்கா தகராறு எதுவும் கிடையாதுங்கோ. இன்னம் சொல்லப்போனா மிஸ்டர் பாரத் பார்க்கிற வரை நாம பக்கா ரஜினி ரசிகன்.

1.தமிழ் தமிழ்னு ஜல்லியடிச்சுக்கிட்டு இன்னமும் ஒழுங்கா தமிழ் பேச கத்துக்காதது.

2.பெங்களூர் போனா ராஜ்குமார் -ஹைதராபாத் வந்தா என்.டி.ஆர்,நாகேஸ்வர் ராவ் -தமிழ் நாட்ல இருந்தா எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு ஜல் ஜக் போடறது.

3.தனக்கும் மத்தவுகளுக்கும் என்ன வித்யாசம்? தன்னை ஏன் மக்கள் அங்கீகரிச்சாய்ங்க? ங்கற விசயத்தையே ரோசிக்காம அந்தகால எம்.ஜி.ஆருக்கு நகலா மாறினது.

பழைய ஒரிஜினல் ரஜினிக்கு உதாரணம்: ராணுவ வீரன் படத்துல ரயில் கொள்ளை காட்சி , நகலா மாறின ரஜினிக்கு உதாரணம்: படையப்பால பாம்பு சீன் .கடேசில வடிவேலுவை கூட இம்மிட்டேட் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டது .

4.எம்.ஜி.ஆர் கிட்டயே மோதறதா சீன் போட்டுட்டு கடேசில கலைஞர்,ஜெ வுக்கு கூட ஜல் ஜக் போட்டது.

5.தன்னை ஹீரோவாக்கின சின்ன தயாரிப்பாளர்களை டீல்ல விட்டுட்டு அவிகளுக்கெல்லாம்
அஞ்சு பத்து தருமம் பண்ணி அவமானப்படுத்தினது.

6.பாலச்சந்தர் துரோணர் அர்ஜுனனுக்கு சைடு கொடுத்த கணக்கா கமலுக்கு சைடு கொடுக்கிறது தெரிஞ்சும் கால்ஷீட் தானம் பண்ணி ரசிகர்களை ஏமாத்தினது ( அமீர்ஜான் டைரக்சன்ல கூட படம் வந்ததுங்கோ)

7.தன்னை வளர்த்த சேரி சனங்க, பிற்படுத்தப்பட்டவுக,மைனாரிட்டிங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து அய்யராத்து பிள்ளையா காட்டிக்கிட்டது. அத்வானிக்கெல்லாம் ஜல்ஜக் போட்டது.

8.கும்பகோணம் பள்ளி தீவிபத்து சமயம் அறிவிச்ச தொகைய இன்னம் செட்டில் பண்ணாரா இல்லியான்னு ஆருனா தகவல் கொடுங்கப்பு

9.தன் ஆத்து கண்ணாலத்துக்கு ரசிகர்களுக்கு டின்னர் கொடுக்கிறேன்னு அல்வா கொடுத்துக்கிட்டிருக்கிறது.

10.ஆர்.எம் வீரப்பன், மூப்பனார், அடைக்கலராஜ்னுட்டு ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஒவ்வொரு பவர் சென்டருக்கு தன்னை நெருக்கமா காட்டிக்கிறது.சொந்த காரியங்களை (மட்டும்) சாதிச்சுக்கறது.

11.சொந்த காரணங்களால கடுப்பாகி (போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்பு பேரால் இவர் காரை செக் பண்ணாய்ங்களாம்) அதை மறைச்சு – ஒதகாத பேர் வைக்கிற சமாசாரத்தையும் -மணிரத்தினம் வீட்ல பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையும் பப்ளிக் இஷ்யூ போலவாக்கி ஸ்டேட்மென்ட் கொடுக்க – காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா ஜெ அரசு விழ – அதை தன்சாதனையா நினைச்சு அன்பு மணி அண்ட் கோ கிட்டே மோதினது.

தமாசு என்னடான்னா இவர் ஓட்டுப்போடாதிங்கன்னு சொன்ன பா.ம.க தான் செயிச்சது.

12.தனக்கு லைஃப் கொடுத்த சினிமாவுக்கு எதியாச்சும் செய்யனும்ங்கற எண்ணம் மட்டும் கிடையாது. இதுவரைக்கும் ஒரு ஷார்ட் ஃபிலிம் கூட ஸ்பான்சர் பண்ணது கிடையாது. எத்தனையோ “நெல்ல” படம் வந்திருக்கு. அதுல ஒன்னுத்தலயும் அய்யாவோட பங்களிப்பு கிடையாது.

13.இவர் முகராசிக்கு -இவரோட பயாக்ரஃபில மொத மொதலா திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் பதவி கொடுத்த என்.டி.ஆருக்கு சந்திரபாபு ஆப்படிச்சப்போ லச்சுமி பார்வதி துஷ்ட சக்தி.அவரை விட்டுட்டு வந்தா தலைவர் பதவி கொடுங்க. அதுவரை தலைவர் பதவியை காலியா வைங்கன்னு “அருள் வாக்கு”.

சந்திரபாபு தலீவர் பதவியை கபளீகரம் செய்த பிறவும் கிர்க்க மர்க்காங்கலை.

14.ரஜினி நடிச்ச ரங்கா படத்துல கராத்தே மணிக்கும்,ரஜினிக்கும் ஒரு சீன்.

மணி: ஏம்பா இப்படி சிகரட்டா ஊதி தள்ளி இஷ்டத்துக்கு தண்ணி போடறியே உடம்பு என்னத்துக்காகும்?
ரஜினி: தோ பார் குரூ.. ( ரஜினி ஸ்டைலுங்கோ) ஒங்களே மாதிரி 60 …..70 வயசுல்லாம் வாழனும்னு எனக்கு ஆசையில்லே..என் இஷ்டப்படி வாழ்ந்து 40 அல்லது 45 வயசுல போயிருவன்

இப்படிப்பட்ட சீன்ஸ் ஆயிரம் இருக்கு. இந்த சீன்ஸால இன்ஃப்ளுயன்ஸ் ஆகி தண்ணி போட ஆரம்பிச்சவுகள்ள எத்தீனி பேரு குடி நோயாளி ஆயிட்டாய்ங்களோ தெரியாது. நம்ம ரேஞ்சுக்கு நாம செயின் ஸ்மோக்கர்.

ஆனால் தலீவரு மட்டும் யோகி ஆயிட்டாரு. இதுவரைக்கும் சிகரட் பிடிக்காதிங்கப்பா, தண்ணி போடாதிங்கப்பான்னு ஒரு அட்வைஸு கூட விட்டதில்லை. கவுர்மென்டே டாஸ்மாக் திறந்து நாறடிச்சப்போவும் மூச்

15 படையப்பா:
ரஜினி வயசு புள்ளைங்க நடிகைகளோட போஸ்டர் மேல படுத்து சுய இன்பம் அனுபவிச்ச கதையா படையப்பா எடுத்தாரு. இவரோட அடி மனசுல ஜெயா அம்மாவை என்னெல்லாம் செய்யனும்னு நினைச்சாரோ அதையெல்லாம் ரம்யா கிருஷ்ணனை வச்சு செய்து நிறைவேத்திக்கிட்டாரு.இதெல்லாம் அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை.

16.இவருக்கு டூப்ளிக்கேட்டா வந்த நடிகர் விஜய்காந்த். இவரோட கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள்தான் விஜய்காந்த்தை வச்சு படம் எடுத்துட்டிருந்தாய்ங்க. அந்தாளு அரசியல்ல நுழையறதென்னா .. அவரோட ரசிகர்ங்க அட்லீஸ்ட் உள்ளாட்சி, நகராட்சின்னு நுழைஞ்சு அரசியல் அதிகாரத்தை கைப்பத்தறதென்ன.. வரப்போற தேர்தல்ல வி.காந்தோட கட்சி டிசைடிங் ஃபேக்டரா இருக்கிறதென்னா..

ரஜினியோட ரசிகர்கள் மட்டும் கண்டவன் கிட்ட செருப்படி வாங்கிக்கிட்டு முகத்தை எங்கயோ வச்சிக்கிட்டு வளைய வர்ரதென்ன.. இவர் மட்டும் செருப்பாலடிச்சவன் செருப்பையெல்லாம் துடைச்சி விட்டு மகளோட கண்ணாலத்துக்கு அழைப்பு வைப்பாரு. ரசிகனுக்கு மட்டும் ஆப்பு வைப்பாரு.

17.ரஜினி வீட்டு கண்ணாலத்துக்கு சமையல் காண்ட்ராக்டரா வேலை பார்த்த அறுசுவை மன்னர் நடராஜனோட மகன் குமாரின் வார்த்தைகளிலேயே :

“ரஜினி சார் ஒரு ஐட்டத்தோட திருப்தி அடைஞ்சுட்டார்.ஆனா லதா மேடம் அப்படி இல்லே………………………………………………….அதே சமயம் பராம்பரிய சுவையையும் விட்டுக்கொடுத்துர கூடாது ( பராம்பரியம்னா என்ன பார்ப்பன பராம்பரியம் தான் அடுத்த வரியை பாருங்க ..புரியும்) கல்யாணத்துக்கு முந்தின நாள் அக்கார வடிசல் ,தயிர் வடை, சாத்தமதுனு அய்யங்கார் வகை சமையல் வகைகளும் அவசியம் இருக்கனும்னு சொன்னார்”

18.அவரு குழந்தையாம் . அல்லாரும் அலங்காரம் பண்ணி சேல் பண்ராய்ங்களாம். #பிணத்தை கூட பிறர் தான் அலங்கரிச்சு கொண்டு போறாய்ங்க. பேச்சா இதெல்லாம்.

19.காவிரி பிரச்சினனையில காவிரிய பத்தி பேச பயந்துக்கிட்டு நதிகளை இணைக்ககனும்னு “அர்ஜி”கொடுத்துட்டு நதிகளை இணைக்க ஒரு கோடி ரூவா கொடுக்கிறேன்னு அறிவிச்சது.இதையாச்சும் “அவுத்தா” நெல்லாருக்கும். நாலு ஏரிகளையாவது தூர்வாற உபயோகப்படும்.

20. பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்ன ரஜினி தன் மக‌ளின் அரங்கேற்றத்துக்கு ஆஜர் ( அப்பாறம் பார்த்தா சொல்றதத்தான் செய்வேன் -செய்றதத்தான் சொல்வேன்னு பஞ்ச் வேற)

21.ரஜினி 25 ங்கற பேர்ல 25 ரூவா டீ ஷர்ட்டை 250 ரூவாய்க்கு வித்து காசாக்கினது. ( ஆஷ்ரம் ஸ்கூலுக்கு நிதி சேர்த்தாய்ங்களாம்)

22.காவிரி மேட்டர்ல தனிக்கச்சேரி பண்ணது -மேடையில கூட இருந்த விஜய்குமார் ஆருன்னு அல்லாருக்கும் தெரியும் -மேடையில ஒலிச்ச மியூசிக் அய்யாவோட டேஸ்டை காட்டிருச்சு. இவரை ரசிக்கிறவன் மட்டும் “அங்கயே” நிக்கோனம். இவரு மட்டும் உசந்த ரசனையோட இருப்பாரு.

23.மகளோட மிஸ்மேனேஜ்மென்டால அவிக ப்ராஜக்டுக்கு கடன் கொடுத்தவுகல்லாம் தலையில துண்டு போட்டுக்கிற நிலைமை வந்து கொடுத்த காசை திருப்பி கேட்டா அவிக மேலயே ஸ்டேஷன்ல கேஸ் கொடுக்கிறது.ஏரியாவுல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் தீபாவளிக்கு ட்ரஸ் வாங்கி கொடுத்தாராம்ல.

24.அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு கொடுத்து மண்டபம் கொடுக்கிறது. அன்னா ஹசாரே ஊழலை எதிர்த்தாரு. ஆனால் நம்மாளு ஊழலின் மறு உருவமா இருக்கிறா கலைஞருக்கும் -முதல்வருக்கும் சொம்படிக்கிறாரு. என்னா ஒரு முரண்பாடு பாருங்க.

முரண்பாடுகளின் மொத்த உருவமான ரஜினிகாந்தை இப்படியெல்லாம் தூக்கி பிடிச்சா ஏற்கெனவே நாசமான தலைமுறைகளை போலவே அடுத்த தலைமுறையும் நாசமாத்தான் போகும். டேக் கேர்.

Advertisements

16 thoughts on “ரஜினிக்கான அங்கீகாரம் : ஒரு வரலாற்றுப் பிழை

  ETHIKAN said:
  December 9, 2012 at 1:14 pm

  REALLY ,REALLY GOOD ONE.

  tamil seithigal said:
  December 9, 2012 at 2:25 pm

  வித்தியாசமான விமர்சனம்
  மிக்க நன்றி.

  Kumaravel said:
  December 9, 2012 at 5:55 pm

  Super!!!!!!!!!!!!!! correct comment as well real habit of Rajini.He is an actor ,not a LEADER.

   S Murugesan said:
   December 11, 2012 at 5:32 pm

   வாங்க குமாரவேல் !
   இந்த பக்கம் சோபன்பாபு இருந்தாரு. ஜென்டில்மேன். இருக்கிற இடமே தெரியாது. அவரை போல கிடந்தா ஆரு கேட்கமுடியும்.

   அதை விட்டுட்டு இந்தாளு டகுலு விடுவானேன் – டாரா கிழிபடுவானேன்ங்கறதுதான் நம்ம கேள்வி.

  arull said:
  December 10, 2012 at 2:09 am

  true message , at least a good blogger has the courage to reveal the truth..that guy shows the collective madness of tamil cinema.

  arul said:
  December 10, 2012 at 10:23 am

  murugesh anna,
  please continue your posts about parigarm for houses series

   S Murugesan said:
   December 11, 2012 at 5:31 pm

   வாங்க அருள் !
   எந்த பாவம் வரை எழுதினம்னு கூட ஞா இல்லை. சீக்கிரமே தொடருவம்.

  krishnamoorthy said:
  December 10, 2012 at 1:06 pm

  நீங்க சொல்ற விசயங்களை யோசிக்க வேண்டியதாகத்தான் இருக்கு சார்

   S Murugesan said:
   December 11, 2012 at 5:30 pm

   வாங்க கிருஷ்ணமூர்த்தி !
   யோசிங்க. நெல்ல முடிவா எடுங்க.

  Muthamizh said:
  December 11, 2012 at 12:56 pm

  Indha pathivukka thodarbu illatha marumozhi. Enakkoru sandhegam. Engal ooril oruvar tharpothu salaiyai aakramithu suvar eluppi abagarikkirar. Ithai “aandavan pathuppan” endru vittu vidalama allathu satta reethiyaga nadavadikkai edukka munaiyalama? neengalaga irundhal enna seiveergal?

   S Murugesan said:
   December 11, 2012 at 5:30 pm

   முத்தமிழ் !
   சொந்த பிரச்சினைக்கு போராடறதில்லைங்கறது கொள்கை முடிவு. நம்ம மேட்டர்ல நாம போராடினப்பல்லாம் தோத்துதான் போயிருக்கம். அட போடான்னு நான் விட்டுட்ட மறுகணத்துலருந்து பார்ட்டிங்களுக்கு நாயடி பேயடிதான். ஒரு மாயக்கரம் பொறுப்பேத்துக்கிடுது.

   ஆனால் அடுத்தவுக மேட்டருன்னு வரும்போது போராடுவோ போராடுவோம் இறுதி வரை போராடுவோம்ங்கறது தான் நம்ம ஸ்டாண்டு.

  Muthamizh said:
  December 11, 2012 at 12:59 pm

  Pona mathamthan thangalin anubava jodhidam valaithalathin perumbalana pathivugalaiyum 4 natkal thodarndhu padithu mudithen. Ungalin jodhida pathivugalai vida pothu vishayangal thodarbana pathivugalin rasigan nan.

   S Murugesan said:
   December 11, 2012 at 5:27 pm

   வாங்க முத்தமிழ் !
   மிக்க நன்றி. சில சமயம் எனக்கே ஒரு சந்தேகம் வரும். சனம் ஜோதிடப்பதிவுகள் தானே எதிர்பார்க்கிறாய்ங்க.அதை மட்டும் போட்டுக்கிட்டு நல்ல புள்ளையா இருந்துட்டா என்னன்னு? தங்களை போன்றவர்கள் ஜோதிடமல்லாத பதிவுகளை விரும்பது பெரும் உற்சாகத்தை தருகிறது. நன்றி.

  Kumar said:
  December 11, 2012 at 7:44 pm

  Hi Sir,
  Different thoughts and many (if not all – Im not sure) unknown info. Thanks for that.

  I completely agree that 12/12/12 is a big hypo but a needed one for his fans since they are his true followers.

  I am not a fan for any cinema people including Rajini but Rajni (at least, in his recent days), he seems to be true in what he says. I think the same thing he has quoted in his recent movie that the producers/directors are making him for some of his dialogues – I accept that this is absolutely not acceptable as he has a mass following and he has to ensure the result/impact of what he says.

  I may be wrong because Im not that much knowledgeable like you and other people in this forum, but all of us have proved that the hypo is correct – because, we are all talking about this and Im seeing that many comments for this topic than many other good topics posted by you.

  Note to CM (C. Murugesan sir) – After a long time, I got some free time and since this is an interesting topic and comments, thought to share my points. Sorry if anything wrong in my sharing.

  iniyamoneythan said:
  December 12, 2012 at 7:17 am

  kumudam,vikatan rajini 63 left our yout points.thjank u ,thank u.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s