2012 ராகு கேது பெயர்ச்சி பலன் (மேஷம் To மீனம்)

Posted on

அண்ணே வணக்கம்ணே !

லைஃப்ல ரெண்டாவது சோசியரை சந்திச்ச புதுசுல ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றவுக மார்க்கெட் ரிசர்ச் பண்ற கணக்கா கிரக பெயர்ச்சிகளை அப்சர்வ் பண்ண பார்ட்டி தான் நாமளும். ஆனால் சொந்த அனுபவம்+ நம்ம க்ளையண்டுகளோட அனுபவங்களை எல்லாம் எதிர்கொண்ட பிறகு கிரக பெயர்ச்சிகளை “அப்படியா..”னுட்டு ஸ்க்ரால் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டம். ( செவ்வாய் மேட்டர்ல மட்டும் இப்பவும் ரெம்ப அலார்ட்டா இருப்பம்)

என்னைக்குமே ( ஐ மீன் நம்ம சைட்ல) கோசார பலனை நாம ஹைலைட் பண்ணதில்லை. ஆனாலும் ஹிட்ஸுக்காக, அதுவும் தீவிர பதிவுகள் சராசரி ஹிட்ஸை குறைச்சுரக்கூடாதுங்கறதுக்காவ -மக்கள் கருத்தே மகேசன் கருத்துன்னுட்டு குரு பெயர்ச்சி ,சனிபெயர்ச்சி பலன்லாம் எழுதியிருக்கமே தவிர கிரகங்கள் மாறும்வரை காத்திருக்கற மென்டாலிட்டியை நாம என்கரேஜ் பண்ணதே இல்லை.

அதுக்காவ கோசாரத்துக்கு பலனே இல்லையான்னு கேப்பிக இருக்கு.

கிரக பாதிப்புகளில் இருந்து ஓரம் கட்டிக்கிறது ஒரு கலை. அதுக்கு ஈகோவை தூக்கி வீசனும். நடக்கறதை நடக்க அனுமதிக்கனும்.ரெசிப்டிவா இருக்கனும். இன்னம் சொல்லப்போனா இன்னைக்கு நடக்கிறதை வச்சு நாளைக்கு நடக்க இருப்பதை கெஸ் பண்ணி அதை முன் கூட்டியே நடத்திக்காட்டனும். அப்படி இல்லாத பட்சத்துல டங்குவார் அறுந்துரும்.

இப்டி ஒரு அசால்ட்டான வழி இருந்தாலும் சனம் வீம்புக்கு அலையறதால – பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிக்கிடறதால – நேர்லயும் -ஃபோன்லயும் – மெயில்லயும் நிறைய பேரு ரிமைண்ட் பண்ணிக்கிட்டே இருக்கிறதால டிசம்பர் 23 ஆம் தேதி நடக்க உள்ள ராகு -கேது பெயர்ச்சிக்கான பலனை முக்கி முக்கி துண்டு துண்டா எழுதி ஒப்பேத்திட்டம்.

இருந்தாலும் ஏதோ ஒரு வித கில்ட்டி. அதனாலதேன் இன்னொரு தாட்டி எல்லாத்தையும் பார்த்து லேசா நகாசு வேலைகள் செய்து ஒரே பதிவா போடறோம்.

இந்த பலன்ல நாம தரப்போற டூஸ் அண்ட் டோன்ட்ஸை ஃபாலோ பண்ணிக்கறதா இருந்தா இந்த பெயர்ச்சி பிரதிகூலமா உள்ள ராசிக்காரவுகளுக்கு நாம சொல்லியிருக்கிற தீயபலன்லாம் சமாளிக்கக்கூடியதுதாங்கறதை சொல்லிட்டு பதிவுக்கு போறேன்.

புதியவரவுகளுக்கு:

நீங்க ஒன்னு பண்ணுங்க.இந்த ப்ளாக்ல /சைட்ல உள்ள கூகுல் கஸ்டம் சர்ச்ல போயி ராகு/கேதுன்னுட்டு அடிச்சு தேடுங்க. முக்கியமா போனவருசம் எளுதின ராகு கேது பெயர்ச்சி பலன் ங்கற பதிவை ஒரு ஓட்டு ஓட்டுங்க. ராகு கேதுவை பத்தி ஒரு ஐடியா வரும்.

டைட்டில்ஸ்:
எல்லா கிரகமும் க்ளாக் வைஸ் சஞ்சரிக்க -ராகு கேது மட்டும் ஆன்டி க்ளாக் வைஸ் போறாய்ங்க. இப்பம் விருச்சிகத்துல உள்ள ராகு துலாமுக்கு போறாரு. ரிஷபத்துல உள்ள கேது மேஷத்துக்கு போறாரு. ஒருத்தருக்கொருத்தரு 180 டிகிரிஸ்ல – 7 ஆம் வீட்ல இருக்கிறதால பரஸ்பரம் பார்த்துக்கறதால இவிகளை பிரிச்சு பலன் சொல்றதே வெட்டி. ஒருத்தரு அனுகூலமா -மத்தவர் பிரதிகூலமா இருக்கிறச்ச பலன்ல வித்யாசம் தெரியுமே தவிர ரெண்டு பேரும் அனுகூலமாவோ -பிரதிகூலமாவோ இருந்தா அவரு இவர் ஜோலிய -இவர் அவர் ஜோலியை பார்க்கிறதும் உண்டு. இவிக 3,4,6,10,11,12 ல இருந்தா நெல்லது. இது பொது விதி.

கண்டிஷன்ஸ் அப்ளை:
1.இவிகளுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. தாம் நின்ற பாவாதிபதி -தம்முடன் சேர்ந்த கிரகங்கள், தாம் பார்க்கும் கிரகங்கள், தம்மை பார்க்கும் கிரகங்களை பொருத்து பலன் தருவாய்ங்க.

2.இவிக சஞ்சரிக்கிற கிரக பாத சாரத்தை பொருத்தும் பலன் லேசா மாறும்.

3.ராசி மாறுவதற்கு 3 மாதம் முன்னாடியே பலன்ல மாற்றம் வந்துரும்.

4.தங்களோட ரெண்டாவது பாதியில மோர் எஃபெக்டிவ் ( ஒன்னரை வருசத்தை ரெண்டா பிரிச்சுக்கங்க)

மேஷம்:( 1-7 ல் கேது ராகு)

உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன் ,அழகு , நிற‌ம்,கவர்ச்சி பாதிக்கப்படும். முகம் கருக்கலாம். உடல் மெலியலாம் அ நீர் உடம்பா மாறலாம். குறுக்கு வழிகளில் மனம் செல்லலாம்.பாடி கலரே ஒரு மாத்து குறையலாம்.ஃபுட் பாய்சனிங் ,மெடிக்க அலர்ஜி,புழு பூச்சி வைரஸ் தொல்லை தரலாம்,

நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி மேட்டர்ல அவிகளோ /நீங்களோ சீக்ரெட் மெய்ன்டெய்ன் பண்ண வேண்டி வரலாம், அவிகளுக்கும் உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன் ,அழகு , நிற‌ம்,கவர்ச்சி பாதிக்கப்படும். உங்கள் இடையிலான உறவு பாதிக்கப்படலாம் . தொப்புளை சுற்றி வலி வரலாம்.

பிறமொழி ,பிறமதத்தினரால் பிரச்சினை வரலாம்.வெளி நாட்டு மோகம் நஷ்டம் தரலாம்.லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை ஆகியவற்றில் பிரச்சினை வரலாம்,நஷ்டம் ஏற்படலாம்.

சனி ராகு சேர்க்கை:
10,11 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால செய் தொழில் உத்யோகம்,வியாபாரம் பாதிக்கலாம். இதுக்கு காரணம் நீங்க செய்ற புதுமையா இருக்கலாம். வேலையில்லாம இருக்கிறவுகளுக்கு நிச்சயமா ஒரு வேலை கிடைக்கும்.

அது சினிமா, டாஸ்மாக்,ஃபாரின் கொலாபரேஷன், தொடர்பானதா இருந்தா ஒன்னரை வருடம் கியாரண்டி. ஐரன்,ஸ்டீல்,ஆயில்,சுரங்கம்,தொழிலாளர் துறை ,விவசாயம் தொடர்பானதா இருந்தா 28 மாசம் கியாரண்டி.

வரவேண்டிய பங்கு ,பாக்கியில வில்லங்கம் வரலாம். சிலருக்கு காதல் தோல்வி, சிலருக்கு மணவாழ்வில் சிக்கல்,மிக சிலருக்கு வாழ்க்கை துணையை நிரந்தரமா பிரிதல் கூட நடக்கலாம். அல்லது அவிகளுக்கோ உங்களுக்கோ கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினை வரலாம்.

பரிகாரம்: (பொது)
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. வெளியிடத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். . ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.அன்னிய மொழி கற்கவும். யோகிகளின் வாழ்க்கை வரலாறு படிக்கவும் /கிடைச்சா டிவிடி பாருங்க.

பரிகாரம் (சிறப்பு)
வாரத்துல ஒரு நாளாச்சும் தண்ணீர் பாட்டில் ,கட்டுச்சோத்தோட போயி வெளிய தங்கிப்பாருங்க. மேற்சொன்ன பரிகாரங்களை வாழ்க்கை துணையும் செய்துக்கனும்.

2.ரிஷபம்: ( 6-12 ல் ராகு கேது)
பயங்கரமா பார்கெய்ன் பண்ணி -எதிராளியை கன்வின்ஸ் பண்ணி – பேதியாக்கி லாபம் அடையலாம். சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கும். தாய்மாமன் நிலை மட்டும் கவலை தரலாம்.

சில சமயத்துல வீண் விரயம் ஏற்படலாம். பழக்கமே இல்லாதவுக கூட டாஸ்மாக் பக்கம் ஒதுங்க நேரலாம். அல்லது சீட்டு கச்சேரி. ஏகெனவே இந்த பழக்கம் உள்ளவுக சாக்கிரதை. பொளப்பு நாறிரும். தூக்கம் கெடலாம். வேளைக்கு திங்க முடியாம போவலாம்.என்னடா லைஃப் இதுன்னு விரக்தி கூட தலை காட்டும்.

சனி ராகு சேர்க்கை:
9,10 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் தொடர்பாகவும் – செய் தொழில் உத்யோகம்,வியாபாரத்துலயும் ஒரு வித சூதாட்டத்தனம் வந்துரும்.( வர்ரும் ஆனால் வராது )

இந்த நிச்சயமற்ற தன்மை காரணமா ரெம்ப உணர்ச்சி வசப்படவேண்டி வரலாம். நாற்பதை தாண்டினவுகளுக்கு நெர்வஸ் வீக்னெஸ் வரலாம். ஏற்கெனவே இருக்கிறவுகளுக்கு எசகு பிசகா கூட எதுனா நடக்கலாம்.

பரிகாரம்:
பெட் ஸ்ப்ரெட் ,பில்லோ கவர் காவி நிறத்துல இருந்தா நல்லது. கட்டில் ,மெத்தை தவிர்க்கவும். பெட் ரூம்ல யாராவது பிறமத துறவி/யோகி அ சைனீஸ் ட்ராகன் படத்தை வச்சுக்கங்க.

பரிகாரம் (சிறப்பு )
முக்கியமான டாக்குமென்ட்ஸை பாம்பு தோல் போன்ற எஃபெக்டோட இருக்கிற பேக் /அல்லது ஃபைல்ல போட்டு வைங்க. தொழில்/உத்யோக/வியாபார ஸ்தலத்துல துர்கை படத்தை வச்சு பூஜை பண்ணுங்க.
3.மிதுனம்: ( 5ல் ராகு -11 ல் கேது)
நம்ம அனுபவத்தை ஒரு தாட்டி படிச்சுக்ககங்க. நல்லா யோசிச்சு முடிவெடுங்கன்னு சொல்லமாட்டேன். உங்கள் துறைக்கு தொடர்பில்லாத வெல் விஷர் யாரையாவது கன்சல்ட் பண்ணிக்கங்க. நெல்லது. 11ங்கறது லாப ஸ்தானம். இங்கன கேது இருந்தா ஆன்ம ஞானம் கிடைக்கனும்.ஆன்ம ஞானம் சொம்மா கிடைக்குமா என்ன?

நிராசை, அவமானங்கள்,அவப்பேர்,வாரிசுகள் விஷயத்துல மனோவியாகூலம்,அதிர்ஷ்டத்தை நம்பி செய்யற வெலைகளில் ஆப்புல்லாம் தொடர் கதையாகி இதன் விளைவாக ஆன்மா ஞானம் கிடைக்கும்.

அஞ்சுல ஏற்கெனவே சனி இருக்காருங்கோ.இவர் 8 -9 பாவங்களுக்கு அதிபதி. சனி பெயர்ச்சி காலத்தை ரெண்டா பிரிச்சுக்கிட்டா மொதல் பார்ட்ல அஷ்டமாதிபதியா வேலை செய்வார்.(ஒன்னேகால் வருசம்?) அடுத்த பாதியில பாக்யாதிபதியா வேலை செய்வார்.

முதல் பாதியில அஷ்டமாதிபதியா வேலை செய்ற காலத்துல ரெண்டாவது பாரால சொன்ன மேட்டர் பிச்சு உதறும்.கண்ணை கட்டும் .

ரெண்டாம் பாதியில நவமாதிபதியா வேலை செய்ற காலத்துல மேலிடம் உங்கள் உதவியை நாடும். அப்பா,அப்பாவழி உறவுகளால் ஏற்பட்ட – இருந்த வில்லங்கம்லாம் தீரும், நஷ்டம் லாபமாகும். அப்பாவழி சொத்து ,உங்க சேமிப்பு ,முதலீடு இத்யாதியெல்லாம் ஏழை பாழைகள், எஸ்.சி, பி.சி குலத்தினர் உதவியால் பன்மடங்கா பெருகும். தூர தேசங்களில் இருந்தெல்லாம் ஆதரவு குவியும்.

ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு உதறல் இருந்துக்கிட்டே இருக்கும். வாழ்க்கை சூதாட்டம் கணக்கா இருக்கும். ( ஜகன் கூட இந்த ராசி தேன். என்னமா பொருந்துது பாருங்க)

சிலருக்கு ராகு சனி சேர்க்கை கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளை கூட தரலாம்.டேக் கேர்.

பரிகாரம்:
பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில் நிறுத்துங்க.

4.கடகம்:

5-11 ல ராகு கேது இருந்ததால வந்த லொள்ளெல்லாம் ரிலீஃப் ஆகும். ( அப்ப நம்ம ஸ்கின் ப்ராப்ளம் கூட ஓவர் தானா) 4-10 ல் ராகு கேது வர்ரது நல்லது தான். ஆனாலும் தாய் வீடு வாகனம் கல்வி இத்யாதி விஷயங்கள்ள சிறு சிறு கலாய்ப்புகள் இருக்கும். செய் தொழில் உத்யோகம் வியாபாரத்துல புதிய ஆட்களால் ,பூனை கண்ணர்களால் பிரச்சினை வரலாம். புதுமைய புகுத்தறேன் பேர்வழி்னு குழப்பியடிப்பிங்க.

7-8 க்கு அதிபதியான சனி 4 ல் ராகுவோட சேர்ராரு. இதனால காதல்,திருமணம்,காதலி,மனைவி விஷயங்கள்ள சஸ்பென்ஸ் / குழப்பம் ஏற்படலாம். அவிகளுக்கு ஃபுட் பாய்சன், மெடிக்கல் ரியாக்சன் எதுனா நடக்கலாம் .டேக் கேர். 8+ராகு என்ற காம்பினேஷன் உங்க கைப்பொருள் திருடு போகவும் – பிக் பாக்கெட் போகவும் வாய்ப்பிருக்குன்னு சொல்லுது. கண்ட இடத்துல திங்காதிங்க. கண்ட இடத்துல குடிக்காதிங்க ( நான் சொல்றது ப்யூர் ஹெச் டூ ஓ)

பரிகாரம்:
ராகு காலத்துல சோடி போடாதிங்க. நீங்க மட்டுமில்லை உங்க மனைவியும் எதையும் வெளியில திங்காதிங்க குடிக்காதிங்க.

5.சிம்மம்: (3-9)
கடந்த 1.5 வருசமா 4-10 ல இருந்த ராகு கேது இப்பம் 3-9 க்கு வர்ராய்ங்க. 3ங்கறது தைரிய ஸ்தானம். இங்கன பாப கிரகம் அதுவும் சர்ப்ப கிரகம் வர்ரது நெல்லதுதேன். இதனால தில்லு துரையா மாறிருவிங்க. நேருக்கு நேரா மோதலின்னாலும் உள்ளடியாவது அடிச்சு எதிரியை கிறுகிறுக்க வச்சிருவிங்க. பயணத்துக்கு அஞ்சமாட்டிங்க. சகோதர வர்கத்துல உங்க கை மேல் கையா மாறும். எல்லாம் ஓகே .ஆனால் சவுண்ட் பாக்ஸ் ரிப்பேர் ஆயிர சான்ஸ் இருக்கு.சாக்கிரதை.

தெலுங்குல தைர்யே சாஹசே லக்ஷ்மீம்பாய்ங்க. அதாவது தகிரியமும்- சாகசமும் தான் மன்சனுக்கு லெச்சுமின்னு அருத்தம். ஆனால் டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் இல்லியா. இடம் தெரியாம -ஆள் தெரியாம மோதிட்டு சொத்து,சுகத்தை எல்லாம் விட்டு ஸ்டேட் விட்டே ஓடவேண்டி கூடவரலாம் . சிலர் வெளி நாட்டுக்கே கூட போயிரலாம்.

சனி+ராகு:
சனி 6-7 பாவங்களுக்கு அதிபதி. ஆறுக்கதிபதிங்கறதால சகோதர வர்கம் நோய் வாய்ப்படலாம். அவிகளோட உங்களுக்கு வழக்கு வில்லங்கம் ஏற்படலாம். லாவா தேவி நடக்கலாம். அதே சமயம் உங்க சத்ருக்கள் இருட்டுக்கு போயிருவாய்ங்க. கடன்கள் மீதான ப்ரஷர் குறையலாம். ஏழுக்கதிபதியா சனி 3 க்கு வர்ரது நெல்லதில்லை. இதனால மனைவிக்கு அல்லல் அலைச்சல் அதிகரிக்கும். ராகு காரக நோய்கள் ஏற்படலாம். அவர் உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத மேட்டர்ல ரகசியம் காக்க நீங்க சிண்டை பிய்ச்சுக்கலாம்.
பரிகாரம்:
சொத்து,முதலீடு ,சேமிப்பு தொடர்பான டாக்குமென்டுகளை போட்டு வைக்கிற ஃபைல்ல வினாயகர் படத்தை ஒட்டி வைங்க. அல்லது மல்ட்டி கலர் ஃபைல் யூஸ் பண்ணுங்க (க்யூப் கணக்கா) தூர பிரயாணம் செய்யும் போது பிற மத பிரார்த்தனை ஸ்தலங்களுக்கு போய் வழிபடுங்க. மனைவியை பாம்பு வடிவ மோதிரம் அணிந்து துர்கையை வழிபடச்சொல்லுங்க.

6.கன்னி:(2-8)
ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்
கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்
சனி+ராகு:
சனி 5-6 க்கு அதிபதி. 6க்குஅதிபதியான இவர் 2 ல் நிற்கிறதால கடன் ,வாக்கால் விரோதம், குடும்ப கலகம்,கண் நோய் ஏற்படலாம். அதே நேரம் இவர் அஞ்சுக்கும் அதிபதியா இருக்கிறதால திடீர்னு லாட்டரி தனமா ஒரு தொகை கைக்கு வரலாம். அதே நேரம் கூட ராகு இருக்கிறதால வந்ததும் தெரியாம போனதும் தெரியாம போயிரலாம். நிராசை, அவமானங்கள்,அவப்பேர்,வாரிசுகள் விஷயத்துல மனோவியாகூலம்,அதிர்ஷ்டத்தை நம்பி செய்யற வேலைகளில் ஆப்பை எதிர்ப்பார்க்கலாம்.

பரிகாரம்:
பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில் நிறுத்துங்க.

6.துலா :(1-7)
லக்னங்கறது உங்க பாடி,மைண்ட், அப்சர்வேஷன், ஞா சக்தி,முடிவெடுக்கும் திறன், பொறுமை இப்படி பல விஷயங்களை காட்டும்.

கேது,ராகுன்னா தெரியுமில்லே . நிழல் கிரகங்கள். எனவே உங்க மைண்டை ஒரு நிழல் மறைச்சுரும்.

இந்த ரெண்டு கிரகமும் எங்கன நின்னாலும் அந்த பாவத்தோட காரகத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துரும். எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும்.

ஆக ராகு லக்னத்துல நின்னதால உங்க பாடி,மைண்ட், அப்சர்வேஷன், ஞா சக்தி,முடிவெடுக்கும் திறன் எல்லாம் கோவிந்தா.

ராகு சுதந்திர மனப்போக்கை தருவாரு. ஆனால் நம்ம சமூகம் கிழவாடிகளால, ஹிப்பாக்ரட்டுகளால வழி நடத்தப்படும் சமூகம். ஆகவே சமூகத்துக்கும் நமக்கும் ஒத்துப்போகாத நிலை வரும்.

காதலி,பொஞ்சாதில்லாம் இந்த சமூகத்தோட பிரதி நிதிகள் . இவிகளோடவும் ஒத்துப்போகாத நிலை வரலாம்.

ஜாதகத்துல 1-7 ல் ராகு கேது நிற்பதை சர்ப்ப தோஷம்ங்கறாய்ங்க. இது ஜாதகரோட உடல் நலம் உள்ள நலத்தை பாதிக்கிறதோட இன்டர் ஆக்சனை பாதிக்கிற அமைப்பு. ஆரோடவும் ஒத்துப்போகாது .

பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்

கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

சனி+ராகு:
மேலும் இவர் சனியோட ஜாய்ன் பண்ணிக்கிறாரு. ஏற்கெனவே சொன்னபடி ராகு கேதுக்கள் எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும். சனி உங்களுக்கு 4-5 க்கு அதிபதி.

ஆகவே தாய்,வீடு,வாகனம்,கல்வி எல்லாமே நொண்டியடிக்கும். அதே போல புத்தி குழப்பம் ஏற்படும், அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும் வேலைகள் ஊத்திக்கும். வாரிசுகள் விஷயத்துலயும் நாஸ்தி தான். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பிருக்கு.

பரிகாரம்:
தாய்,வீடு,வாகனத்தை பிரிந்திருங்கள் . கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில் நிறுத்துங்க.

8.விருச்சிகம்:(6-12)

ஆறுங்கறது சத்ரு ரோக ருணஸ்தானம் . இங்கன கேது நிக்கிறது நல்லது தான். இதனால சத்ரு ஜெயம், ரோக நிவர்த்தி, ருண விமுக்தி (கடன் தீருதல்) ஆகிய நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

அதே நேரம் கடன் தீரனும்னா மொதல்ல கடன் ஏற்படனும் , நோய் தீரனும்னா மொதல்ல நோய் ஏற்படனும்ங்கற லாஜிக்கை மறக்காதிங்க.

கடந்த ஒன்னரை வருசமா அஞ்சுல இருந்த கேது புத்திய குழப்பி -உங்க பயோ கெமிஸ்ட்ரியையே மாத்தி ரத்தத்தை கெடுத்து வச்சிருப்பாரு. அந்த மலினங்கள், ஃபாரின் மேட்டர்லாம் க்ளியர் ஆகனும்னா நோய் வந்தாகனும்.

12ங்கறது நாம செலவழிக்கிற முறையை ,தூக்கம் ,செக்ஸ் இத்யாதிய காட்டும். இங்கன ராகு இருக்கிறதால
ராகுன்னாலே நிழல்ங்கறதால மேற்படி விஷயங்கள்ள சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணவேண்டி வரலாம். ரகசியம் வெளியாகும் போது…….

தூக்கம் கெடலாம் ,வீட்டம்மாவுக்கு எங்கயோ எரிஞ்சதுன்னு வைங்க சோத்துல மண்ணு ,கில்மாவுக்கு ஆப்பு. டேக் கேர்.

பரிகாரம்:
கரிய நிற பில்லோ கவர் ,பெட் ஸ்ப்ரெட் உபயோகிக்கவும்.பெட் ரூம்ல சைனீஸ் ட்ராகன் போஸ்டர் வச்சுக்கங்க. ஒரு விதவை பெண் மலையாள பிட்டு படம் போல வலை வீசலாம் சிக்கிராதிங்க.

ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்

கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

குறிப்பு:
இதையெல்லாம் பெட் ரூம்லயே செய்ங்க ஸ்ரேஷ்டம்.

சனி+ராகு:
ஏற்கெனவே விரயத்துல உள்ள சனியோட ராகு வந்து ஜாய்ன் பண்ணிக்கிறாரு. ஏற்கெனவே சொன்னபடி ராகு கேதுக்கள் எந்த கிரகத்தோட சேர்ந்தாலும் அந்த கிரகத்தோட பலத்தை ஸ்வாஹா பண்ணிரும். சனி உங்களுக்கு 3-4- க்கு அதிபதி.

ஆகவே சகோதர வர்கத்தின் நிலை கவலைக்கு இடம் தரலாம். உங்களுக்கு சவுண்ட் பாக்ஸ்ல பிரச்சினை வரலாம். சொந்த ஊருலயே நெறய அலைஞ்சு திரிஞ்சு வேலை பார்க்கவேண்டி வரலாம். மனசுல தில்லு சாஸ்தியாகும். தாய்,வீடு,வாகனம்,கல்வி எல்லாமே நொண்டியடிக்கும்.

பரிகாரம்:
சகோதரர்கள் விஷயத்துல உதவுங்க. நெல்லது. அதுக்குன்னு ஜாய்ன்ட் ,ஷ்யூரிட்டில்லாம் தராதிங்க. கொடுக்கல் வாங்கல் வச்சுக்காதிங்க. காதுல கண்டதையும் போடாதிங்க. தாய்,வீடு,வாகனத்தை பிரிந்திருங்கள் . கல்வியில் அதிக கவனம் செலுத்தவும்.

தனுசு: ( 5-11)

உங்களுக்கு கேது அஞ்சுக்கும் – ராகு 11 க்கும் வர்ராய்ங்க. கடந்த ஒன்னரை வருசமா 6-12 ல இருந்ததோட ஒப்பிட்டா இது ரெம்பவே பிரதிகூலம் தான். அஞ்சுங்கறது ரெம்ப சென்சிட்டிவான பாவம். (புத்திபாவம்)

புத்திமான் பலவான்.

KNOWLEDGE IS POWER

இந்த கான்செப்ட்ல ஆயிரத்தெட்டு கொட்டேஷன் எடுத்து விடலாம். இப்படியா கொத்த புத்திஸ்தானத்துல கேதுவர்ரச்ச நீங்க வேதாந்தம் , தியானம்,யோகம்னு டைவர்ட் ஆயிட்டா ஓகே. அப்படியல்லாது லவ்ஸ்,கண்ணாலம், பார்ட்டின்னு இருந்திங்கனா ஆப்புதேன்.

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் – மாவு விக்க போனா காத்தடிக்குது கணக்கா கடுப்படிக்கும்.

இது புத்ர ஸ்தானம். உங்க வாரிசுகள் வேதாந்தம் , தியானம்,யோகம்னு டைவர்ட் ஆயிட்டா ஓகே. அப்படியல்லாது லவ்ஸ்,கண்ணாலம், பார்ட்டின்னு இருந்தாங்கனா நாறிரும்.

தென்னைய பெத்தா இள நீரு
பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு அவதிபடவேண்டி வரும்.

தோன்றிற்புகழோடு தோன்றுகன்னாய்ங்க. ( நிருபர் பசங்களுக்கு கவர்ல காசு கொடுத்துல்லாம் பெயர் புகழை வாங்க முடியாதுன்னு அந்த காலத்துல நம்பியிருக்காய்ங்க )

இந்த உலகமே பரிசா கிடைக்கிறதா இருந்தாலும் அவப்பேர் தரக்கூடிய வேலைய செய்யமாட்டோம்னு ஒரு பாட்டு கூட இருக்கு.

இப்பல்லாம் 40”x60″ மனை கிடைச்சா போறும்.பொஞ்சாதிய விட்டுர்ரதுக்கு ரெடி சனம். கலி முத்திப்போச்சு.

நிற்க .. அஞ்சுல கேது புத்திய மாத்தி, புத்திரர்களோட மோத வச்சு, அடாத செயல் எல்லாம் செய்யவச்சு படாத பாடு படுத்திருவாரு. சாக்கிரதை.

அதே நேரம் இவர் எந்தளவுக்கு ஆப்படிக்கிறாரோ -ஆப்படிச்சு முடிக்கிறாரோ அந்தளவுக்கு 11 ல ராகு ரிலீஃப் கொடுப்பாரு. நல்லது திடீர்னு நடக்கும். ஸ்பெக்குலேஷன்,வின்ட் ஃபால் கெயின்ஸ் இத்யாதிய எதிர்பார்க்கலாம்.

வேறு மொழி பேசுவோர், வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் உதவலாம்.சினிமா,லாட்டரி,வைன்ஸ் ,இம்போர்ட்,எக்ஸ்போர்ட் மாதிரியான ராகு காரகங்கள் அனுகூலம் தரலாம்.

11 ல் சனி ராகு:

2-3 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால பணம் திருடு போகலாம்,கொடுத்து ஏமாறலாம். ஃபுட் பாய்சன், மெடிக்கல் ரியாக்சன் நடக்கலாம். விஷ பீதி ஏற்படலாம். வாக்கு தவற நேரலாம்.கொடுத்த வாக்கை நிறைவேற்ற ரெம்பவே லாஸ் ஆக நேரலாம். குடும்பத்துல குழப்பம் வரலாம்.(விதவை பெண்களிடம் – ஓரப்பார்வை பார்க்கும் பெண்களிடம் எச்சரிக்கை ) கண் பார்வை கூட பாதிக்கப்படலாம்.

சகோதரர்கள் நிலை கவலைக்கிடமாகலாம்.ஆனால் இதனாலயே அவிக வழிக்கு வந்து சொத்து பிரச்சினை தீரலாம். அதே சமயம் உங்க கைக்கு வந்ததை எவன்னா லவுட்டிக்கிட்டும் போயிரலாம் டேக் கேர்.

பரிகாரம்:

நீங்களும் உங்க வாரிசும் தினசரி 1 மணி நேரம் – வாரத்துல ஒரு நாள் காவி உடை தரித்து வினாயகர் துர்கையை தியானம் செய்யவும் (அவிக உருவத்தை கற்பனை செய்தா போதும்)

மகரம்:(4-10)
உங்க ராசிக்கு 4 ல் கேதுவும் 10 ல் ராகுவும் வர்ராய்ங்க. தாய் தினசரி 1 மணி நேரம் – வாரத்துல ஒரு நாள் காவி உடை தரித்து வினாயகர் பூஜை செய்துவந்தால் நோ ப்ராப்ளம். இல்லின்னா உடல் நலம் பாதிக்கலாம் (ஜெனரல் வீக்னெஸ்),வீடு ஒரு ஆசிரமம் போல மாறனும்.இல்லின்னா பிரச்சினை வரலாம். வாகன மேட்டர்ல வாரத்துல ஒரு நாள் சர்ச் அ தர்கா போய்வரவும்.இல்லின்னா அதுலயும் பிரச்சினை வரலாம்.

4 =வித்யா ஸ்தானம் ,கேது = ஆத்ம ஞான காரகன் .ஆகவே ஆன்மீகம் -தியானம் தொடர்பான நூல்களை படிக்கவும். ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அவை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்குது.

பத்தில் ராகு வரும்போது செய்யும் தொழில்ல புதுமைகளை புகுத்தி ஆரம்பத்துல சில சல சலப்புகளை எதிர்கொள்விங்க.

சனி+ராகு:

சனி உங்களுக்கு லக்ன+தனபாவாதிபதி. இவரோட ராகு சேர்ரதால சனி பலமிழக்கும் வாய்ப்பிருக்கு. எனவே உடல்,உள்ள நலம் பாதிக்கலாம். (சந்தேக புத்தி சாஸ்தியாயிரும் அல்லது உங்களை சனம் சந்தேகிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க) . பாடி துவைச்சு போட்டாப்லயே இருக்கும். அதே போல பணம் ,பொருள் திருடு போறது,கொடுத்து ஏமாந்துர்ரது,வாக்கு தவறுவது, வாக்கை காப்பாத்த அதிக அளவுல நஷ்டபோறது,குடும்பத்துல குழப்பம் வரலாம்.(விதவை பெண்களிடம் – ஓரப்பார்வை பார்க்கும் பெண்களிடம் எச்சரிக்கை ) கண் பார்வை கூட பாதிக்கப்படலாம்.

பரிகாரம்:
பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வீட்டு ஹாலில் அந்த கால க்யூப் தனமான வால் பேப்பர் அ போஸ்டர் வைக்கவும்.

கும்பம்: (3-9)
3ங்கறது தைரிய ஸ்தானம். இங்கன பாப கிரகம் அதுவும் சர்ப்ப கிரகம் வர்ரது நெல்லதுதேன். இதனால தில்லு துரையா மாறிருவிங்க. நேருக்கு நேரா மோதலின்னாலும் உள்ளடியாவது அடிச்சு எதிரியை கிறுகிறுக்க வச்சிருவிங்க. பயணத்துக்கு அஞ்சமாட்டிங்க. சகோதர வர்கத்துல உங்க கை மேல் கையா மாறும். எல்லாம் ஓகே .ஆனால் சவுண்ட் பாக்ஸ் ரிப்பேர் ஆயிர சான்ஸ் இருக்கு.சாக்கிரதை.

தெலுங்குல தைர்யே சாஹசே லக்ஷ்மீம்பாய்ங்க. அதாவது தகிரியமும்- சாகசமும் தான் மன்சனுக்கு லெச்சுமின்னு அருத்தம். தமிழ்ல கூட துணிவே துணை , துணிந்தவனுக்கு துக்கமில்லைன்னெல்லாம் பழமொழிகள் இருக்கு.குமுதத்துல சில்க் ஸ்மிதா கத்து கொடுத்தாதான் தெலுங்கு கத்துக்க முடியுமா என்ன? அதனாலதேன் தெலுங்குக்கு தாவினேன்.

தில்லு தேவை தான். ஆனால் டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் இல்லியா. இடம் தெரியாம -ஆள் தெரியாம மோதிட்டு சொத்து,சுகத்தை எல்லாம் விட்டு ஸ்டேட் விட்டே ஓடவேண்டி கூடவரலாம் . சிலர் வெளி நாட்டுக்கே கூட போயிரலாம்.. கூடுதலா மகர ராசிக்கு சனி+ராகு என்ற உப தலைப்பில் சொன்ன பலன் நடக்க வாய்ப்பிருக்கு. (இவிகளுக்கும் சனிதான் ராசியாதிபதி)

மாற்றம் எங்கன வரும்னா சனி மகரத்துக்கு 1/2 பாவாதிபதி. கும்பத்துக்கு 1/12 பாவங்களுக்கு அதிபதிங்கறதால இவிகளுக்கு மகர ராசியினரை போல் தனம்,வாக்கு,குடும்பம், கண்கள் விஷயத்துல பெரிய பாதிப்பு இருக்காது.

அதே நேரம் விரய பாவாதிபத்யம் பெற்ற சனியோட ராகு சேருவதால் ரகசிய செலவுகள், கனவில் பாம்பு,தேள் இத்யாதி விஷ ஜந்துக்கள், வெளியிடத்தில் சாப்பிடும் உணவால் தொல்லைகள் ,வெகு சிலருக்கு தப்பான உறவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கு.

மீனம்: ( 2/8)

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்
கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்

கூடுதலா 11/12 பாவங்களுக்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால மூத்த சகோதர சகோதிரிகளுக்கு பாதிப்பு, கணுக்காலில் பிரச்சினை, ரகசிய லாபங்கள் (கைக்கு வராது -வந்தாலும் வீண் விரயமா போகும்) .

விரயபாவாதிபதியான சனியோட ராகு சேருவதால் ரகசிய செலவுகள், கனவில் பாம்பு,தேள் இத்யாதி விஷ ஜந்துக்கள், வெளியிடத்தில் சாப்பிடும் உணவால் தொல்லைகள் ,வெகு சிலருக்கு தப்பான உறவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கு.சிலருக்கு ஆசனம் தொடர்பான இன்ஃபெக்சன் கூட வரலாம்.

டாக்டர் கிட்டே போனா ஸ்ட்ரெச்சர்ல ஏறு ,குப்புற படு, முட்டி போடு ,பிரிச்சு காட்டும்பாய்ங்க. தேவையா? வாயை கட்டுங்க.

ஸ்.. அப்பாடா ராகு கேது பெயர்ச்சி பலன் முற்றும். இனி நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ந்து வெளிவரனும்னு ஒரு “தாட்” ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ்..

Advertisements

One thought on “2012 ராகு கேது பெயர்ச்சி பலன் (மேஷம் To மீனம்)

    a.s maheswaren said:
    December 5, 2012 at 9:21 am

    அண்ணே நம்ம கும்பத்து க்கு பரிகாரம் எதுவும் இல்லையா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s