பலான சம்பவங்கள் மூன்று

Posted on

சம்பவம் 1

நமக்கு ஸ்கின் ப்ராப்ளம் ஆரம்பமான சங்கதி அல்லாருக்கும் தெரியும். இது ஆரம்பமான புதுசுல நண்பர் ஒருத்தரு வந்தாரு. முகத்தை ஒரு மாதிரி வச்சுக்கிட்டு .. காரணத்தை தேடினாரு போல. அந்த நேரம் பார்த்து பாமரேனியன் நாய் குரல் கொடுத்தது. கிடைச்சுதடா காரணம்னு நம்ம ஸ்கின் ப்ராப்ளத்துக்கு அதுதான் காரணங்கற மாதிரி மொக்கை போட ஆரம்பிச்சுட்டாரு.

அவரோட பேச்சை நம்பியிருந்தா தாளி அகில இந்திய அளவில் நாய்களை வெறுப்போர் சங்கம் ஆரம்பிச்சு அதுக்கு அன் அப்போஸ்ட் ப்ரசிடென்ட் ஆகியிருக்கனும். ஃப்ரீயா உடு நைனான்னு நினைச்சுட்டு நியூட்ரலா இருந்துட்டம்.

இந்த சந்திப்பு நடந்த 3 ஆவது நாள் அன்னார் கிட்டே இருந்து ஃபோன் ” ஏம்பா .. நீ ஏதோ ஸ்கின் ஸ்பெஷலிஸ்டை பார்த்தேன்னியே .. அட்ரஸ் சொல்லு..”

“யாருக்கு பிரச்சினை சார்.. வி.ம. அவிக கொடுக்கிற மருந்து மாயத்தை இந்த காட்டுமிராண்டியாலயே தாங்க முடியலை .குழந்தைங்க,பொம்பளைங்க,கிழவாடிங்கன்னா நாறிருவாய்ங்க”

” இல்லப்பா.. எனக்கு தான் . ஜட்டி போட முடியலின்னா பார்த்துக்கயேன்”

சம்பவம்: 2

நேத்திக்கு ஃபேஸ்புக்ல பால் தக்கரே மரணம் – ஸ்டேட்டஸ் – லைக் – சிறை மேட்டரை பத்தி நாம பேசிக்கிட்டிருந்தம். அதை ஒரு நண்பர் ரெம்ப புத்திசாலித்தனமா நக்கலடிச்சாரு. தக்கரே தக்காம போயாச்சு.பந்தா நடந்தாச்சு.ஸ்டேட்டஸ் போட்டு என்ன லாபம்? பால் தக்கரே மறைவுக்கு பந்த நடந்தது -ஸ்டேட்டஸ் போட்டவுகளை உள்ள போட்டப்போ நடந்ததா? அப்போ மெஜாரிட்டி ஆரு பக்கம்ங்கறது அவரோட கான்செப்ட்.

இன்னைக்கு பார்ட்டிக்கு பைசா புரள்ற சமாசாரம் .பத்து மணிக்கு ஆளனுப்பறேன்.பேசி முடிச்சுக்கன்னு சொல்ல போன் போட்டேன்.

“இல்லை சார் இன்னைக்கு கடை திறக்கற மாதிரி இல்லை”

“ஏன்.. பர்ச்சேஸுக்கு போறிங்களா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை சார். எங்க ஏரியா கவுன்சிலர் செத்துட்டாய்ங்களாம்.கடை திறக்கக்கூடாதாம்”

அவரோட குரல்ல அப்படி ஒரு கொலை வெறி..

சம்பவம்: 3

ஜோதிடர்களுக்கு சவால் பதிவை படிக்காதவுக இங்கே அழுத்தி படிச்சுக்கலாம். அந்த பதிவுல சொன்ன 2 பெஞ்ச், ரெண்டு ஷெல்ஃப் அடிச்சப்ப கையில நறுக். செதில் ஏறிருச்சு. செட்டியாரை யோவ் வெளிய தெரியுது பாருய்யா. இடுக்கில பிடிச்சு எடுத்துருன்னா யாவார பிசியில இருந்தாப்ல. இன்னொரு ஆச்சாரி அதை எடுத்துட்டாருன்னு வைங்க.

இது நடந்தது பகல் .ராத்திரிக்கே செட்டியாருக்கு பல்ப். செதிலை பிடுங்கினது சாக்கடை அடைப்பை நீக்கினதும் கொட்டுமே அந்தமேரி ரத்தம் கொட்டித்து, இதுல செட்டியாருக்கு ஷுகர் வேற இருக்கு.

இந்த 3 சம்பவங்களை எப்படி புரிஞ்சுக்கனும். ஆருனா சொல்லுங்கப்பு..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s