இளமையில் முதுமை (கில்மா பதிவல்ல)

Posted on

null

ஸ்ரீ ஸ்ரீ தன் மஹா ப்ரஸ்தானத்துல “புட்டுக்கத்தோ வ்ருத்துலு”ன்னு சொல்வாரு. அதாவது பிறக்கும்போதே கிழவாடியா பிறந்த பார்ட்டின்னு அருத்தம். அப்படி ஒரு கேரக்டரை பத்தி சொல்லத்தேன் இந்த பதிவு. வயசு 20+ படிப்பு பத்தாங்கிளாசுக்குள்ள. அம்மா அப்பங்காரன் டார்ச்சர் தாங்காம சின்ன வயசுலயே குட்டி தங்கச்சியோட கிணத்துல குதிச்சு டிக்கெட்டு. அப்பன் சரியான லக்காடி

( ஆமா இதுக்கு ஆக்சுவல் அருத்தம் என்ன? வயசு அம்பதாகுது முந்தா நேத்து ஒரு பட்லியோட ஃபோன்ல கடலை போட நானூறு ரூவாய்க்கு டாப் அப் போட சொல்லி பிள்ளைக்கு போன் பண்ணான். இந்த அருத்தத்துல தான் இந்த வார்த்தைய நான் உபயோகிச்சேன் )

அம்மா டிக்கெட் போட்டதும் இன்னொரு கண்ணாலம் கட்டிக்கிட்டு இவனை கழிச்சு விட்டுட்டான். இவன் அம்மாவ பெத்த பாட்டியோட குடிசை வீட்லயே வளர்ந்தான்.சின்னவயசுலருந்தே காசு மேட்டர்ல கெட்டி. அஞ்சு காசு பத்து காசு சீட்டுலருந்து சேர்க்க ஆரம்பிச்சவன்.

என்ன இவன் சேர்ப்பான்.அப்பங்காரன் அதை லவட்டிக்கிட்டு போயி குடிச்சு கூத்தடிச்சுருவான். நெல்ல வேளையா புத்திர பாக்கியம் இல்லை. நம்மாளு எங்கயோ இலை எடுத்து பொளப்பை ஓட்டிக்கிட்டிருக்க ஒரு குட்டியோட லவ்ஸு. அவளை பெத்தவன் நம்மை போல ப்ராக்டிக்கல் ஆசாமி போல.

ஒரு ரூட்டை போட்டு கொடுத்து பொளப்புக்கு வழி காட்டினான்.ஒடனே அப்பங்காரனுக்கு பொத்துக்கிச்சு பாசம். ஏதோ ப்ளாட்டை வித்தேன்னு ஒரு லட்ச ரூவாயை கண்ல காட்டிட்டு அதை இவன் தொழிலுக்காகவே செலவழிச்சதா கதை பண்ணி கணக்கு பண்ணிட்டு ரெண்டாவது பாரால சொன்ன டாப் அப் மாதிரி ஆயிரக்கணக்குல சுரண்ட ஆரம்பிச்சான்.

இடையில அப்பங்காரன் குடிச்சுட்டு ரோட்டோரமா உட்கார்ந்திருக்கிற எருமைங்க மேல டூ வீலரை விட்டு விலா எலும்பை உடைச்சுக்கிட்டு ரோட்ல கிடக்க தெரிஞ்சவுக அள்ளிக்ககிட்டு வந்து பஸ் ஸ்டாண்ட்ல டம்ப் பண்ணிட்டு போனது தனி கதை .

அதுக்கப்பாறம் ஏதோ சில்லறை தகராறுல செருப்பு கூட போட்டுக்க விடாம அடிச்சு முகத்தை வீங்க வச்சு விரட்டி விட்ட சாதனையும் மேற்படி அப்பாக்கள் குல திலகத்துக்கே சொந்தம்.

இந்த அலப்பறைல்லாம் போதாதுன்னு கங்கையம்மன் திருவிழாவுக்கு நன் கொடை கேட்க வந்த ஊர் தலைவர் கிட்ட ஏடாகூடமா பேசி அவிக வீட்டுக்காரர் சைனியத்தை அனுப்ப – இந்த அ நியாயத்தை தட்டி கேட்க பிள்ளைக்கு கீர் போட்டு அனுப்பின சாதனையும் அவருக்கே சொந்தம். நம்மாளு ஏதோ படத்துல ராஜ்கிரண் அடி வாங்கறதை பார்த்து பொங்கி எழும் அஜித் கணக்கா பொங்கி எழுந்து மறு நாள் விடியல்ல ஊர் தலைவர் வீட்டண்டை போய் ஏடாகூடமா பேச அவிக நாப்பது பேருக்கு குறையாம மிதிச்சு “செத்துரப்போறான்” னு பெருக்கி தூர தள்ளிட்டாய்ங்க.

இப்படியா கொத்த அப்பன் தன் பேர்ல இருக்கிற ப்ளாட்ல இருக்கிற வீட்டை ( ரூமுங்ண்ணா) கட்டு கட்டுன்னு ஓதி ஓதி இறக்கிவிட்டுட்டான்னா இது அவனோட ஜாலக்கு. நம்மாளுக்கு மூளை எங்க போச்சு.20+ வயசுக்கு வீடு கட்டற எண்ணம் வர்ரதே அப் நார்மல் . இதுல அந்த மேரி அப்பன் சொல்ல கேட்டான்னா என்னான்னு சொல்றது?

வீடுங்கறது இன்செக்யூரிட்டியில தவிக்கிற சனத்துக்கு ஒரு கற்பனையான பாதுகாப்பை கொடுக்கிற ஒரு அம்சம். வீடு கட்டனுங்கற எண்ணம் 40+ல வந்தா அது நார்மல்.

20+ல வருதுன்னா என்னாங்கறது? இதான் இளமையில் முதுமை போல (அப்பாடா .. தலைப்பை பதிவுக்குள்ள கொண்டு வந்துட்டம்) .

எப்படியோ நம்மாளும் சொந்த தொழில் இருக்கிற தகிரியத்துல கண்ட இடத்துல கைய நீட்டி ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டின கணக்கா கட்டினான் கட்டினான் ரெண்டு வருசம் கட்டினான். எட்டு லட்ச ரூவாய விழுங்கிட்டு தேமேனு நிக்கிற வீட்டுக்கு இன்னம் எலக்ட்ரிக்கல் ஒர்க் கூட முடியலை. கிரகபிரவேச வைபவமும் நடந்தேறிருச்சு.இந்த வைபவத்துக்கும் கூடுதலா ஒரு இருபதாயிரம் கடன் வாங்கியாச்சு.

அந்த ப்ளாட் இருக்கிறது ஒரு கிராமாந்தர ஏரியாவுல.. அந்த ப்ளாட்ல கையில உள்ளதை எடுத்து கட்டினாலே வெட்டி. வங்கியில உள்ளதை எடுத்து கட்டினாலே வட்டி நஷ்டம். கடன் வாங்கி கட்டினா ஒரு பத்து வருச வாழ்க்கை நஷ்டம . இளமை நஷ்டம் .

ஏற்கெனவே தனுஸ் தனமான பாடி – ரெண்டு பைசா மூஞ்சி . இதுல குன்டிய சுத்தி கடன். கடங்காரனை நினைச்சா சகலமும் ஒடுங்கிராதோ?

லவ்ஸ் மேட்டர் என்னாச்சுன்னு சொல்லவே இல்லியே ! மொதல்ல வீடு கட்டி முடியட்டும் அப்பாறம் பேசி முடிச்சுரலாம்னு சொன்ன அப்பங்காரன் எனக்கென்னமோ கடனை அடைச்சுட்டு கண்ணாலம் கட்டிக்கிறது பெஸ்டுன்னு தோனுதுனு பேச ஆரம்பிச்சானா பெண்ணை பெத்தவன் அலார்ட்டாயிக்கினு ரெஜிஸ்டர் மேரேஜ் முடிச்சாச்சு. என்ன சாந்தி முகூர்த்தம் தான் கொஞ்சம் தள்ளி போகுது.

இளமை பொங்கினாதானே இதெல்லாம் சிரமம். இளமையில் முதுமை வரம் பெத்தவனுக்கு இதெல்லாம் ஒரு கணக்கா ஃப்ரீயா உடுங்க..

நம்முது கடகலக்னமாச்சா – கடக லக்னக்காரன்லாம் வீடு கட்டியே போண்டியாறதையும் – கட்டி பாதியில நின்னு போறதையும் பார்த்து பார்த்து வளர்ந்தமா -அதனால வீடு மேட்டருக்கு நம்ம மைண்ட் இம்யூன் ஆயிருச்சு.

அதனால லெச்சுமி கூரைய பிச்சுக்கிட்டு கொட்டி கொடுத்து லட்சங்களே மிச்சமாயிட்டாலும் தாளி நம்ம ப்ளான்………….. படத்தை பார்த்திங்கல்ல..

Advertisements

2 thoughts on “இளமையில் முதுமை (கில்மா பதிவல்ல)

  Nathan said:
  November 28, 2012 at 4:43 am

  சார் உங்க பதிவுகள் எல்லாம் நல்ல இருக்கு, ஆனா உங்க தமிழ் புரிய கஷ்டமா இருக்கு,படித்து முடிக்க நிறைய நேரம் ஆகுது இன்னும் கொஞ்சம் தெளிவா புரிய வைக்குமாறு பணிவோடு கேட்டுகொள்கிறேன்.

   S Murugesan said:
   November 28, 2012 at 6:51 am

   நாதன் தாள் வாழ்க .. நமசிவாயம் வாழ்க. சிவ சிவா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s