2012,ராகு கேது பெயர்ச்சி பலன்: மேஷம்,ரிஷபம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

லைஃப்ல ரெண்டாவது சோசியரை சந்திச்ச புதுசுல ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றவுக மார்க்கெட் ரிசர்ச் பண்ற கணக்கா கிரக பெயர்ச்சிகளை அப்சர்வ் பண்ண பார்ட்டி தான் நாமளும். ஆனால் சொந்த அனுபவம்+ நம்ம க்ளையண்டுகளோட அனுபவங்களை எல்லாம் பார்த்து “அப்படியா..”னுட்டு ஸ்க்ரால் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டம்.

என்னைக்குமே ( ஐ மீன் நம்ம சைட்ல) கோசார பலனை நாம ஹைலைட் பண்ணதில்லை. ஆனாலும் ஹிட்ஸுக்காக, அதுவும் தீவிர பதிவுகள் சராசரி ஹிட்ஸை குறைச்சுரக்கூடாதுங்கறதுக்காவ -மக்கள் கருத்தே மகேசன் கருத்துன்னுட்டு குரு பெயர்ச்சி ,சனிபெயர்ச்சி பலன்லாம் எழுதியிருக்கமே தவிர கிரகங்கள் மாறும்வரை காத்திருக்கற மென்டாலிட்டியை நாம என்கரேஜ் பண்ணதே இல்லை.

அதுக்காவ கோசாரத்துக்கு பலனே இல்லையான்னு கேப்பிக இருக்கு. உதாரணமா நமுக்கு லக்னத்துக்கு அஞ்சு பதினொன்னுல வந்தாய்ங்க.

5 ஆமிடம் = புத்தி ஸ்தானம் = புத்திக்குழப்பம் வரனும். டி.என் அனந்த நாயகிக்கு பதிலா பி.டி.சரஸ்வதி பேரை மென்ஷன் பண்ணிட்ட கூத்தெல்லாம் நடந்தது.

5 பேர் புகழை காட்டும் இடம் = அவமானம் நடக்கனும் ; ஜா.ரா பாவம் நம்ம கருமத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு பரிகாரம் பண்ணிக்கிட்டிருந்தாரு.இதுவும் போதாதுன்னு மாப்ளை மேட்டர்ல அ,ஆ,இ ,ஈ தெரியாத டிக்கெட்டுங்க கிட்ட எல்லாம் பஞ்சாயத்து பண்ண வேண்டியதாயிருச்சு.

5 குழந்தைகளை காட்டுமிடம் = கடந்த ராகு கேது பெயர்ச்சி காலத்துல மவ கன்ஸ்யூமர் கல்ச்சருக்கு அக்மார்க் அடிமையாயிட்டா.திண்ணையில தாத்தா மாதிரி புலம்ப வேண்டியதாயிருச்சு. டிவியில எஃப் சானல் (தானே) வந்தா படக்குன்னு மாத்தறாப்ல விளம்பரம் வந்தாலே மாத்தவேண்டியதாயிருச்சு.இல்லின்னா மறு நாளே விளம்பரிக்க பட்ட சந்தேகாஸ்பதமான வஸ்துவை எல்லாம் வாங்கிட்டு வர ஆரம்பிச்சுட்டா.

போதாக்குறைக்கு ஸ்கின் ப்ராப்ளம். ராகு கேதுன்னாலே விஷம். அசிமிலேஷன் -எலிமினேஷன் கரீட்டா நடக்கலின்னா பாடியில பாய்சன் கன்டென்ட் உருவாகும் .அதை பாடி எதிர்த்தா வாந்தி,பேதி,ஸ்கின் ப்ராப்ளம் இப்டி வந்துக்கிட்டு கிடக்கும். புது ஆளுங்க நம்ம ஸ்கின்னை பார்த்த பார்வையே சவுக்ல வேட்டி உருவிட்ட கணக்கா ஃபீல் ஆச்சு.

அதுக்குன்னு பித்தம் பிடிக்கலை, பஞ்சாயத்துல நிறுத்தி சாணி கரைச்சு ஊத்தலை. மவ தற்கொலைக்கு முயற்சி பண்ணலை. இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா கோசாரத்தோட இம்பாக்ட் எந்தளவு இருக்கும்னு விளக்கத்தேன்.

கிரக பாதிப்புகளில் இருந்து ஓரம் கட்டிக்கிறது ஒரு கலை. அதுக்கு ஈகோ தூக்கி வீசனும். நடக்கறதை நடக்க அனுமதிக்கனும்.ரெசிப்டிவா இருக்கனும். அப்படி இல்லாத பட்சத்துல டங்குவார் அறுந்துரும்.

இப்டி ஒரு அசால்ட்டான வழி இருந்தாலும் சனம் வீம்புக்கு அலையறதால – பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிக்கிடறதால – நேர்லயும் -ஃபோன்லயும் – மெயில்லயும் நிறைய பேரு ரிமைண்ட் பண்ணிக்கிட்டே இருக்கிறதால டிசம்பர் 23 ஆம் தேதி நடக்க உள்ள ராகு -கேது பெயர்ச்சிக்கான பலனை எழுதறம்.

பலன்ல நாம தரப்போற டூஸ் அண்ட் டோன்ட்ஸை ஃபாலோ பண்ணிக்கறதா இருந்தா இந்த பெயர்ச்சி பிரதிகூலமா உள்ள ராசிக்காரவுகளுக்கு நாம சொல்லியிருக்கிற தீயபலன்லாம் சமாளிக்கக்கூடியதுதாங்கறதை சொல்லிட்டு பதிவுக்கு போறேன்.

புதியவரவுகளுக்கு:

ஏற்கெனவே ஒரு தாட்டி சொன்னாப்ல ஞா . நம்ம ட்ராஃபிக் சோர்ஸே கூகுல் கூகுல் தான். இன்ட்லி,தமிழ்வெளி,தமிழ் 10 லாம் கொஞ்சம் கொசுறு போல. ஆனாலும் புதுப்புது சைஸுல ஆளுங்க வர்ராய்ங்க.

2000 லருந்து எளுதிக்கிட்டிருக்கிறதால அதுலயும் 2009 லருந்து தீவிரமா எளுதிக்கிட்டிருக்கிறதாலயும் எதை எழுத நினைச்சாலும் ஏற்கெனவே எளுதிட்ட மாதிரியே ஒரு ஃபீலிங். நம்முது கடகலக்னமாச்சா எதுவாருந்தாலும் புதுசா இருக்கனும்.

நீங்க ஒன்னு பண்ணுங்க.இந்த ப்ளாக்ல /சைட்ல உள்ள கூகுல் கஸ்டம் சர்ச்ல போயி ராகு/கேதுன்னுட்டு அடிச்சு தேடுங்க. முக்கியமா போனவருசம் எளுதின ராகு கேது பெயர்ச்சி பலன் ங்கற பதிவை ஒரு ஓட்டு ஓட்டுங்க. நெட் கனெக்ட் ஆனதும் நான் குறிப்பிட்ட அந்த பதிவுகளுக்கான தொடுப்புகளை தர ட்ரை பண்றேன்.

டைட்டில்ஸ்:
எல்லா கிரகமும் க்ளாக் வைஸ் சஞ்சரிக்க -ராகு கேது மட்டும் ஆன்டி க்ளாக் வைஸ் போறாய்ங்க. இப்பம் விருச்சிகத்துல உள்ள ராகு துலாமுக்கு போறாரு. ரிஷபத்துல உள்ள கேது மேஷத்துக்கு போறாரு. ஒருத்தருக்கொருத்தரு 180 டிகிரிஸ்ல – 7 ஆம் வீட்ல இருக்கிறதால பரஸ்பரம் பார்த்துக்கறதால இவிகளை பிரிச்சு பலன் சொல்றதே வெட்டி. ஒருத்தரு அனுகூலமா -மத்தவர் பிரதிகூலமா இருக்கிறச்ச பலன்ல வித்யாசம் தெரியுமே தவிர அவரு இவர் ஜோலிய -இவர் அவர் ஜோலியை பார்க்கிறதும் உண்டு. இவிக 3,4,6,10,11,12 ல இருந்தா நெல்லது. இது பொது விதி.

கண்டிஷன்ஸ் அப்ளை:
இவிகளுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. தாம் நின்ற பாவாதிபதி -தம்முடன் சேர்ந்த கிரகங்கள், தாம் பார்க்கும் கிரகங்கள், தம்மை பார்க்கும் கிரகங்களை பொருத்து பலன் தருவாய்ங்க.

மேஷம்:( 1-7 ல் கேது ராகு)

உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன் ,அழகு , நிற‌ம்,கவர்ச்சி பாதிக்கப்படும். நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி மேட்டர்ல அவிகளோ /நீங்களோ சீக்ரெட் மெய்ன்டெய்ன் பண்ண வேண்டி வரலாம், அவிகளுக்கும் உட‌ல்,ம‌ன‌,குண‌ ந‌ல‌ன் ,அழகு , நிற‌ம்,கவர்ச்சி பாதிக்கப்படும். உங்கள் இடையிலான உறவு பாதிக்கப்படலாம் . தொப்புளை சுற்றி வலி வரலாம்.

உடல்: இளைக்கலாம் / ஊளைசதை பெருகலாம். மறதி வரலாம் . குறுக்கு வழிகளில் மனம் செல்லலாம்.பாடி கலரே ஒரு மாத்து குறையலாம்.ஃபுட் பாய்சனிங் ,மெடிக்க அலர்ஜி,புழு பூச்சி வைரஸ் தொல்லை தரலாம்,

பிறமொழி ,பிறமதத்தினரால் பிரச்சினை வரலாம்.வெளி நாட்டு மோகம் நஷ்டம் தரலாம்.லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை ஆகியவற்றில் பிரச்சினை வரலாம்,நஷ்டம் ஏற்படலாம்.

சனி ராகு சேர்க்கை:
10,11 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால செய் தொழில் உத்யோகம்,வியாபாரம் பாதிக்கலாம். வரவேண்டிய பங்கு ,பாக்கியில வில்லங்கம் வரலாம். சிலருக்கு காதல் தோல்வி, சிலருக்கு மணவாழ்வில் சிக்கல்,மிக சிலருக்கு வாழ்க்கை துணையை நிரந்தரமா பிரிதல் கூட நடக்கலாம்.

பரிகாரம்: (பொது)
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. வெளியிடத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். . ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.அன்னிய மொழி கற்கவும். யோகிகளின் வாழ்க்கை வரலாறு படிக்கவும் /கிடைச்சா டிவிடி பாருங்க.

பரிகாரம் (சிறப்பு)
வாரத்துல ஒரு நாளாச்சும் தண்ணீர் பாட்டில் ,கட்டுச்சோத்தோட போயி வெளிய தங்கிப்பாருங்க. மேற்சொன்ன பரிகாரங்களை வாழ்க்கை துணையும் செய்துக்கனும்.

2.ரிஷபம்: ( 6-12 ல் ராகு கேது)
மேஷ ராசிக்காரவுகளுக்கு எந்தெந்த மேட்டர்ல எல்லாம் நஷ்டம் வரும்னு சொன்னமோ அந்த மேட்டர்ல எல்லாம் பயங்கரமா பார்கெய்ன் பண்ணி -எதிராளியை கன்வின்ஸ் பண்ணி – பேதியாக்கி லாபம் அடையலாம். அவிகளுக்கு சொன்ன தீயபலன்லாம் உங்களுக்கு பாஸ்ட்ல நடந்திருக்கும். அதெல்லாம் மாறிரும். சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கும். தாய்மாமன் நிலை மட்டும் கவலை தரலாம்.

சில சமயத்துல வீண் விரயம் ஏற்படலாம். தூக்கம் கெடலாம். வேளைக்கு திங்க முடியாம போவலாம்.என்னடா லைஃப் இதுன்னு விரக்தி கூட தலை காட்டும்.

சனி ராகு சேர்க்கை:
9,10 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் தொடர்பாகவும் – செய் தொழில் உத்யோகம்,வியாபாரத்துலயும் ஒரு வித சூதாட்டத்தனம் வந்துரும்.( வர்ரும் ஆனால் வராது )

பரிகாரம்:
பெட் ஸ்ப்ரெட் ,பில்லோ கவர் காவி நிறத்துல இருந்தா நல்லது. கட்டில் ,மெத்தை தவிர்க்கவும். பெட் ரூம்ல யாராவது பிறமத துறவி/யோகி படத்தை வச்சுக்கங்க.

பரிகாரம் (சிறப்பு )
முக்கியமான டாக்குமென்ட்ஸை பாம்பு தோல் போன்ற எஃபெக்டோட இருக்கிற பேக் /அல்லது ஃபைல்ல போட்டு வைங்க. தொழில்/உத்யோக/வியாபார ஸ்தலத்துல துர்கை படத்தை வச்சு பூஜை பண்ணுங்க.

Advertisements

6 thoughts on “2012,ராகு கேது பெயர்ச்சி பலன்: மேஷம்,ரிஷபம்

  MARUTHAPPAN said:
  November 21, 2012 at 1:17 am

  நான் கேள்விப்பட்டேன் ராகு கேது பெயர்ச்சி டிசம்பர் 3இம் தேதின்னு. ஏன் இந்த வித்தியாசம்.

   S Murugesan said:
   November 22, 2012 at 6:21 am

   வாங்க மருதப்பன் !
   இது வாக்கிய திருக்கணிதபஞ்சாங்கங்களுக்கிடையிலான வித்யாசம்.

   நம்ம அனுபவம் என்ன சொல்லுதோ அதை பார்க்கனும்.அதான் முக்கியம்.

   உதாரணமாக என் லக்னத்துக்கு ஐந்தில் ராகு உட்கார்ந்து ஸ்கின் ப்ராப்லம் கொடுத்தாரு.

   அது எப்போ குறைய ஆரம்பிக்குதோ அன்னைக்கு ராகு கேது பெயர்ச்சி நடந்ததா அருத்தம்.

  விமலாதித்தன் said:
  November 24, 2012 at 5:43 pm

  //பெட் ரூம்ல யாராவது பிறமத துறவி/யோகி படத்தை வச்சுக்கங்க.//
  சரியானவர் யார்?
  புத்தர், மகாவீரர், குருநானக்,

  // கட்டில் ,மெத்தை தவிர்க்கவும்//
  உடல் கருதி காவி உடை அணிந்து தூங்கலாம? நான் வசிப்பது ஒரு மான்சனில் இங்கே நிர்வாகம் தரும் படுகைதான் உபயோகிக்க முடியும்.

  //உத்யோக/வியாபார ஸ்தலத்துல துர்கை படத்தை வச்சு பூஜை
  பண்ணுங்க.
  குருசண்டாளயோகம் ஜாதகர்கள்……………

   S Murugesan said:
   November 25, 2012 at 1:49 am

   வாங்க விமல்!
   புத்தர்,மகாவீரர் பத்தி தெரியும். ரெண்டு பேரும் கடவுள்ங்கற கான்செப்டை டச் பண்ணவே இல்லை. குரு நானக்? நோ ஐடியா.காவி நிற பெட் ஸ்ப்ரெட், பில்லோ கவர் யூஸ் பண்ணுங்க.தூக்கம்? தாராளமா தூங்கலாம்.

   குரு சண்டாள யோகம் …! துர்கை? நாட் ஓகே. பூஜை தவிர்க்கவும்

  Muthamizh said:
  November 27, 2012 at 7:26 am

  en peyar Muthamizh. DOB 14.09.1985. Afternoon 3.35 PM. Simma rasi. Indru salaiyil two wheeler il sellumbothu oru siriya visayathukkaga innoru manitharai adithu vitten. Sirithu neram kalithu yosithu partha pothu migavum varuthamagivittathu. Uruthugirathu. Ennaiyum meeri en ippadipatta kovam thevai illatha kovam varugirathu. Itharku en manam buthi karanama illai gragangal karanama? Andha innoru manithar parkka ennai vida balasaliyaga rowdyaga irundhirundhal enakku ippadi seiya thondri irukkathu. Nan en ippadi seithen. Ippothu unmaiyileye varuthapattalum andha kanathil nan mutrilum veriyodu irundhen. enakku en ivvaru nerndhathu. Ithu pol meendum nadakkamal irukka enna vazhi. Neengal vandi no vaithu en vandiyil karuppu nila pinnaniyil manjal lingam otta sonneergal. Nan innum ottavillai. No plate siriyathu enbathal head light ku mele karuppu pirai nilavum atharku mel lingamum ottalam endru irukkiren. Indha varathirkul. Anal indru nadandha sambavam enakku migavum varuthamalikkirathu uruthugirathu. nyamana kovam vandhu nanmaiyil mudindhal sari. Ippadi patta thevai illatha kovam meendum varamal irukka enna seiyalam. Appadi kovam varumbadiyana sambavangalo manithargalo nammai nerungamal irukka enna seiyalam

   S Murugesan said:
   November 27, 2012 at 7:54 am

   ஐயா,
   மனம்,புத்தி யாவும் ஈகோ வழி நடப்பவை.இவற்றை கிரகங்கள் வெகு எளிதாக பாதிக்கும். ஈகோவை விலக்கி வைத்தால் கிரகமும் விலகி நிற்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s