சோனியாவும் -வசந்தசேனையும்

Posted on

“சுதந்திர நாட்டின் அடிமைகளே!” ஏதோ தமிழ் பட பாடல் வரின்னு ஞா. நான் ஏதோ வெறுமனே குடிமக்களை மட்டும் சுதந்திர நாட்டின் அடிமைகளே!னு விளிக்கிறதா நினைச்சுராதிங்க. ஆட்சியாளர்கள் உட்பட இந்தியர்கள் அனைவருமே அடிமைகளாவே கிடக்காய்ங்க. இதான் சோகம்.

இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்ணா “பெத்த பேர்” கொண்டிருக்கிற சோனியா மேடம் உட்பட அடிமைகளாத்தான் இருக்காய்ங்க. அடிமைத்தனமாத்தான் ரோசிக்கிறாய்ங்க. அடிமைகளைத்தான் விரும்பறாய்ங்க.

இன்னைக்கு நமக்கு அடிமையா இருக்க சம்மதிக்கிறவன். நாளைக்கு நம்ம எதிரிக்கும் அடிமையா மாறுவாங்கற சிம்பிள் லாஜிக் அடிமைப்படுத்தறவுகளுக்கு ஸ்பார்க் ஆகமாட்டேங்குது. அடிமைப்படுதலை விட அடிமைப்படுத்துதல் இன்னம் ஆபத்தானது.

மனோகரால வசந்தசேனை மூளை வளர்ச்சியில்லாத பித்தனான வசந்தனை ராசாவாக்க துடிக்கிறாப்ல ராகுலை ராசாவாக்க மெனக்கெடறாய்ங்க. ஆருனா மனோகராவை இந்தியில சப் டைட்டில் போட்டு மேடத்துக்கு போட்டு காட்டினா நெல்லாருக்கும்.

சோனியா மேடம் தன் அடாத ஆசைக்கு அடிமைன்னா மன்மோகனார் இந்த அடிமையின் அடிமை. பலவீனர்கள் எளிதில் அடிமையாகிறார்கள். பலவீனர்கள் என்றால் உடல் ,மன ரீதியாக பலவீனர்களாக உள்ள அனைவரையுமே குறிப்பிடுகிறேன்.

யார் இந்த படைப்பின் ஊற்றுக்கண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார்களோ அங்கு சக்தியின் ஊற்று நிச்சயம். எங்கு சக்தியின் ஊற்று இருக்கிறதோ அங்கு அடிமைத்தனத்துக்கு இடமே இல்லை. அடிமைத்தனம் மரணத்துக்கொப்பானது. வாழ்க்கையில எதை இழந்தாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டியது சுதந்திரத்தை. ஆனால் நம்ம சனம் வாழ்க்கைய காப்பாத்திக்க கொடுக்கிற மொத பலி சுதந்திரம்.

வாழ்க்கையில மாத்த முடியாதது -தவிர்க்க முடியாதது மரணம் ஒன்னைத்தான். அடிமைக்கும் மரணம் உண்டு. சுதந்திரனுக்கும் மரணம் உண்டு. சுதந்திரனின் மரணம் அடிமைகளின் குருட்டு விழிகளுக்கும் ஒளி தருகிறது.ஆனால் அடிமையின் வாழ்வோ சுதந்திரர்களின் வாழ்விலும் சந்தேக இருளை நிறைக்கிறது.

படைப்பின் ஊற்றுக்கண்ணோடு தொடர்பு கொண்டு நம்மில் சக்தியின் ஊற்றை கண்டெடுக்க வேண்டுமானால் நாம் படைப்பை உற்று கவனிக்க வேண்டும். படைப்பு என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டும்.

நம்மை நாம் வெற்றாக வைத்துக்கொண்டால் படைப்பு நம்மோடு பேசுகிறது. நம் வழியே பேசுகிறது. எது எழுதப்படவேண்டுமோ அதை ஆரம்பித்தால் அது கனவே போல் எழுதப்பட்டுவிடுகிறது. எது செய்யப் படவேண்டுமோ அதை துவங்கினால் அதுவே முடிகிறது.

மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது என்று புலம்புகிறோம். ஆனால் மின்சாரத்துக்கு அடிமையாகவே தொடர்கிறோம். பிச்சைக்காரனுக்கு போடுவதையோ -புத்தகம் வாங்குவதையோ -வேலைக்காரி சம்பளத்தையோ-அவளுக்கு தரும் ஒரு வேளை காஃபியையோ குறைத்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கட்டியே விடுகிறோம்.

அரசு ஏன் உயர்த்துகிறது கூடுதலாக பைசா வரும் என்று. மக்கள் அனைவரும் தம் பழைய கட்டண அளவுக்கே தன் மின் வினியோகத்தை குறைத்துக்கொண்டால் என்ன ஆகும்?

இதே விதியை பஸ் கட்டணம் ,பால், காய்கறி எல்லாவற்றுக்கும் அப்ளை செய்து பாருங்கள். நாம் எப்பேர்கொத்த அக்மார்க் அடிமைகளாக இருக்கிறோம் என்று?

ஆமை தன் கால்களை தன் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதை போல – நாம் நம் தேவைகளை சுருக்கிக்கொண்டால் ஹிப்பாக்ரட்டுகளால் வழி நடத்தப்படும் இந்த கேடு கெட்ட சமுதாயத்துக்கு அடிமையாக இருக்கத்தேவையில்லை.

என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்….? என்று அன்றே எழுதிய பாரதி இன்றிருந்தால் இன்னும் என்னெல்லாம் எழுதியிருப்பானோ?

Advertisements

4 thoughts on “சோனியாவும் -வசந்தசேனையும்

  S.Sivakumar said:
  November 16, 2012 at 12:30 am

  நாம் தற்கால வசதிகளுக்கு அடிமையாகிவிட்டது உண்மையென்றாலும் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறோம் பேர்வழி என்று மறுபடியும் கற்கால வாழ்க்கை முறைக்கு மாற முடியுமா? அனுபத்து வரும் வசதிகளை விட்டு வெளியே வருவது என்பது இயலாத காரியம் தானே. தேவைகளை குறைப்பது தான் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வழி என்றால் அதன் முடிவு என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? இன்று ஏ சி பயன் படுத்தாதீர் என்று சொல்வீர். நாளை மின்விசிறி வேண்டாம் என்பீர். பின்னர் விளக்கே வேண்டாம் என்பீர். ? தேவைகளை குறைக்கிறோம் என்றால் எல்லாரும் மீண்டும் ஆதிவாசிகளாக மாறினால் தான் நீங்கள் சொல்லும் சுதந்திரம் கிடைக்கு போலிருக்கிறது.

   S Murugesan said:
   November 16, 2012 at 1:31 am

   வாங்க சிவா !
   இன்றைய பதிவு தான் உங்களுக்கான என் விரிவான பதில்

  துடிமன்னன் said:
  November 16, 2012 at 4:42 am

  /*
  இன்று ஏ சி பயன் படுத்தாதீர் என்று சொல்வீர். நாளை மின்விசிறி வேண்டாம் என்பீர். பின்னர் விளக்கே வேண்டாம் என்பீர். ? தேவைகளை குறைக்கிறோம் என்றால் எல்லாரும் மீண்டும் ஆதிவாசிகளாக மாறினால் தான் நீங்கள் சொல்லும் சுதந்திரம் கிடைக்கு போலிருக்கிறது.
  */
  30 வருடங்களுக்கு முன்பு மேலே சொன்ன வசதிகள் கிராமங்களில் இல்லை. இந்த வசதிகள் இல்லை என்பதால் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று ஆகுமா?
  இல்லையே, நகரவாசிகளை விட கிராமவாசிகள் சுதந்திரமாகத்தானே வாழ்ந்தார்கள், இப்போதும் வாழ்கிறார்கள்.
  ஏ.சி. ரூமுக்குள் எல்லா சன்னல்களையும் மூடிக்கொண்டு ‘எப்போது கரண்ட் போகுமோ’ என்று பயத்துடன் கிடப்பதுதான் சுதந்திரமா? இல்லை, வேப்ப மரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் காலாட்டிக் கொண்டு படுத்துக் கிடப்பது சுதந்திரமா?
  யோசியுங்கள் சிவகுமார்.
  வேண்டுமானால் கவிஞர் சகாராவின் இந்தக் கவிதை உங்களுக்கு சுதந்திரத்தைத் தெளிவு படுத்தும் என்று நினைக்கிறேன்.
  “மண்ணைப் பறித்துப்
  படுத்ததும்
  உறங்கிப் போனது
  நாய்,
  பக்கத்தில் பொறாமையோடு
  நான்”

  தளைகளில் இருந்து விடுபடுவதுதான் சுதந்திரம்.
  மலையாளப் படம் ஒன்றில் ஒரு ஜோக் வரும். அதில் இரண்டு வேலை இல்லாத திண்ணை தூங்கிகள் இருப்பார்கள்.
  அதில் ஒருவன் சொல்வான், “ஒரு வேலை கிடைத்தால், லீவு போட்டுவிட்டு, இப்போது இருப்பது போலவே ஓய்வு எடுக்கலாம்” என்று.
  இந்த மனநிலையில்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.
  பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். செல்வம் நிம்மதியைத் தருவதில்லை என்பது அப்பட்டமான உண்மை.

  a.s maheswaren said:
  November 17, 2012 at 6:48 am

  sudhanthiram pakkathu veetu karan koota romba namba manam verukkum seyal seiran sonna romba cheiran

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s