மத்திய அரசு கவிழ்வது உறுதி

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நம்ம தொப்புள் கொடி சொந்தங்களை கொன்று குவிக்க துணை போனது முதல் லேட்டஸ்டா பென்ஷன் மற்றும் ஓய்வூதியத்துல அன்னிய முதலீடுவரைக்கும் இன்றைய மத்திய அரசு செய்யாத அட்டூழியமில்லை. இது கவிழ்ந்தால் கொண்டாடாத தமிழ் நெஞ்சமே இருக்காது.( ஆந்திர மக்கள் கொலை வெறியில இருக்காய்ங்க. எப்படா தேர்தல் வரும் ..ஊத்தி மூடிரலாம்னு வெய்ட்டிங்)

இந்த மத்திய அரசு கவிழ்வது உறுதிங்கற நல்ல சேதியை தரத்தான் இந்த பதிவு. சோனியா,ராகுல் ஜாதகம்லாம் எந்தளவுக்கு ஸ்க்ராபுன்னு ஏற்கெனவே சொல்லி ஜோதிட ரீதியா அனலைஸ் பண்ணியாச்சு. இதை சுதேசி இதழ் கூட வெளியிட்டது ஞா இருக்கலாம்.

ஆனால் இந்த பதிவு மட்டும் சோதிட பதிவில்லை. அதே நேரம் ஒரு வகையில சோதிடத்தை அடிப்படையா கொண்ட பதிவு தான்.

தெலுங்கு சூப்பற ஸ்டார் சிரஞ்சீவி ஜாதகம் கைவசம் இருக்கு. லக்னம் துலாம். துலாம்ல சனி உச்சம். இந்த ஒரு பாய்ண்டும் + சிரஞ்சீவியோட கடந்த கால சாதனைகளும் (?) தான் இந்த பதிவுக்கு அடிப்படை.

சனியை பத்தி புதுசா சொல்ல தேவையில்லை தான். ஆனா இந்த பதிவுக்கு சில ஹைலைட்ஸ் மட்டும் கட்டாயம் தேவை (மேலும் புதிய வாசகர்கள் கொஞ்சம் போல திணறுவய்ங்கல்ல)

மத்தவுக ஸ்க்ரால் பண்ணிட்டு மேட்டருக்கு போயிரலாம்

சனி தரும் பலன்:

தாமதமா கிடைக்கும் (பிரஜா ராஜ்ஜியங்கற ப்ரைவேட் லிமிட்டட் கம்பெனியை காங்கிரஸ்ங்கற ப்ரைவேட் லிமிட்டட் கம்பெனியோட சேர்த்த எவ்ள காலமாச்சு – நாக்கை தொங்க போட்டுக்கிட்டு லொங்கு லொங்குன்னு தில்லிக்கும் ஹைதராபாதுக்கும் ஷட்டில் அடிச்சே பைல்ஸ் வந்திருக்கும். பைல்ஸுக்கும் ஸ்னை தான் காரகர் )

சனி தரும் சொத்து ஏலத்துல வர்ர சொத்தாவோ – சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம். ( தற்சமயத்துக்கு காங்கிரஸ் கட்சியோட நிலைமையும் இதான்)

சனி சுபனானால்:

ஜாதகர் சில காலம் மரணம் தொடர்பான தொழில்களில் ஈடுபடலாம்.பிரஜாராஜ்ஜியம்னு ஒரு கட்சி நடத்தினாரு.

“யம்” ங்கறது யமனை குறிக்குது. இவரோட மொத ப்ரஸ் மீட்ல கலந்துக்க வேண்டிய பார்ட்டி டிக்கெட் போட்டாச்சு.

இவரோட அரசியல் கூட்டங்களுக்கு போனவுகள்ள ஒருத்தனாச்சும் சாகாம இருந்ததே கிடையாது. 2009 எலக்சன் முடிஞ்ச பிறவு காங்கிரசுக்கு எம்.எல்.ஏக்கள் நெம்பர் குறைஞ்சதால இவரை கட்சிக்கு கொண்டு வர ஒய்.எஸ்.ஆர் ஸ்கெட்ச் போட்டாரு. அவரே டிக்கெட் போட்டுட்டாரு.

இவருக்கு பெண்ணை கொடுக்க அல்லு ராமலிங்கம் முடிவு பண்ணாரு. வயசு பையன் டிக்கெட் போட்டாச்சு.இவரை ஹீரோவா களமிருக்கிறதா ப்ளான் இருந்தது.

நம்ம ஊர்ல ஏற்கெனவே பல படங்களை வெற்றிகரமா எடுத்த ப்ரொட்யூசர் ஷண்முகம் செட்டியார். சிரஞ்சீவிய போட்டு ஒரு படம் ஆரம்பிச்சாரு. பேரு “வட்டி காசுலவாடு”

ஷூட்டிங் ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ளயே பொஞ்சாதி டிக்கெட்டு. ஒரு பஸ் ஆக்சிடென்டு. திவால். ஆக சிரஞ்சீவியோட ஆரு டீலிங் வச்சுக்கிட்டாலும் ஒன்னு டிக்கெட் போடனும் .அல்லது பிச்சை எடுக்கனும்.அல்லது ஸ்க்ராப் ஆகனும்.

சனி என்றால் உடல் ஊனமுற்றவர் . நம்மாளுக்கு ஒரு கால் ரிப்பேர். வாத்து மாதிரி தேன் நடப்பாரு.

ஜன்ம சனி:
சனி ஜன்மத்துல இருந்தா படு கஞ்சரா இருப்பாய்ங்க. எதிராளியை பிழிஞ்சு ரசம் எடுத்து குடிச்சுருவாய்ங்க. நம்மாளு ரசிகர்களோட ரத்தத்தை வாங்கி வித்தாரு. மேலும் ரத்தம் கொடுத்தவன் சிரஞ்சீவியோட ஃபோட்டோ பிடிச்சுக்கனுமா ரூ.200 தண்டம் அழனும். சனி என்றால் முதுமை. நடுவயசை தாண்டின பிறவுதேன் இவர் சூப்பற ஸ்டார் ஆனாரு.

இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். (ஒய்.எஸ்.ஆர் தினசரி வருவாரு போல)

ஏற்கெனவே வாழ்ந்து முடிந்தவர்களின் பாதையில் நடை போட பார்ப்பார்கள் . (அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேங்கறாப்ல) .

நம்மாளும் என்.டி.ஆர் போல கிளிச்சுரலாம்னு இறங்கினாரு.ஆனா கிளிஞ்சிருச்சு.

மூன்றை பார்த்தால்:

இவரோட பிறந்தவுக எல்லாருமே மொக்கை. பவன் கல்யாண் நித்தம் நித்தம் ஏதோ கான்ட் ராவர்சியில மாட்டிக்கிட்டே இருப்பாரு. நாக பாபு டிவி சீரியல்ல கூட வராரு.

ஏழை பார்த்தால்:
பொஞ்சாதி சீக்கிரம் கிளவி ஆயிரும். சிரஞ்சீவி சம்சாரமும் அஃதே. இவரோட டீலிங் வச்சுக்கற நபர் ஆரா இருந்தாலும் பயங்கர மொக்கை ஆயிருவாய்ங்க.

பத்தை பார்த்தால்:
சட்டை போடாதவன்,கிழிஞ்ச சட்டை போட்டவன் காசு பணம்லாம் வந்து சேரும். நம்மாளு மாஸ் ஹீரோ ஆச்சே.

ஆக மொத்தத்துல இவர் அடி வச்ச மந்திரி சபை கவிழ்வது உறுதி. காங்கிரஸ் ஸ்க்ராப் ஆறதும் உறுதி..

Advertisements

9 thoughts on “மத்திய அரசு கவிழ்வது உறுதி

  Thirumalaisamy said:
  October 31, 2012 at 4:48 am

  நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் ….

  MARUTHAPPAN said:
  October 31, 2012 at 10:42 pm

  நல்ல பதிவு, சீக்கிரம் காங்கிரஸ் அரசு கவிழவேண்டும்.

  Muthamizh said:
  November 1, 2012 at 7:03 am

  May I know y my comment was not posted?

   S Murugesan said:
   November 1, 2012 at 7:12 am

   வாங்க முத்தமிழ்!
   உங்கள் கருத்துரை போஸ்ட் ஆகலை.

  Muthamizh said:
  November 1, 2012 at 1:45 pm

  What I have asked is, how long will it take for central government get down and who will be elected next?

   S Murugesan said:
   November 1, 2012 at 5:25 pm

   முத்தமிழ் !
   சோனியா மேடத்தோட ராசி ரிஷபம். செவ் தனுசுக்கு அரட்டும்.(2012,நவம்பர் 10) அங்கன இருந்து ஜஸ்ட் 45 நாள் பாருங்க..பயாஸ்கோப்பு தேன்.

  கொச்சின் தேவதாஸ் said:
  November 13, 2012 at 8:51 am

  அன்பு நண்பரே.தங்களுக்கு எனது இதயங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

   S Murugesan said:
   November 13, 2012 at 4:08 pm

   நன்றி ஐயா !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s