பலான அனுபவங்கள்: 9

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நமுக்கு பால்யத்துலயே ஆரம்பிச்சு நடந்த சுக்கிர தசை கால அனுபவங்கள் தான் இந்த தொடர். ஜோதிட ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். அது இல்லாதவுகளுக்கு – முக்கியமா டீன் ஏஜ் சொந்தங்களுக்கு இது ஒரு ப்ளூ ப்ரிண்ட்.

கட்ந்த பதிவுல சென்னையிலருந்து படிக்க வந்த குட்டி – அவளுக்கு நோட்ஸ் இத்யாதி கொடுத்து கைட் பண்ண வேண்டிய சந்தர்ப்பம் -வீட்டுக்கு வந்தா – நம்ம டாடியே இருந்தாலும் -வாம்மா உட்காரு – சார் (?) உள்ள இருக்காரு.அனுப்பறேங்கற அப்பா – இடையில புகுந்து அந்த பெண் கிட்டே தன்னை பத்தி உசத்தி சொல்ல சொன்ன இன்னொரு கேரக்டரு என்டர் ஆனதையெல்லாம் பார்த்தோம்.

அந்த நேரம் நமுக்கு சுக்கிர தசையில செவ் புக்தி நடந்துக்கிட்டிருக்கு. அந்த புது கேரக்டரோட பேரும் செவ் காரகமே.ஏதோ நமக்கு செவ்+கேதுங்கற காம்பினேஷன் இருந்ததால கொஞ்சம் ஃபிலசாஃபிக்கலா திங்க் பண்ணோம்.

அந்த குட்டிக்கிட்டே “பலானவன் நெல்லவன்.பார்க்கத்தேன் ஸ்டெப் கட்டிங்கும் கருத்த உதடுமா இருக்கான். ஆனால் ரெம்ப டாலன்டானவன். ரேடியோ டேப்பையும் -டேப்ல ரேடியோவையும் பாட வைக்கறவன்” அது இதுன்னு எடுத்து சொன்னோம். பெருசா ஒன்னும் வெடிக்கலை.

கண்ணால பந்தியில நமுக்கு சாம்பார் வேணம்னா கேட்க கூச்சமா இருக்கும். பக்கத்துல இலைக்காரனுக்கும் சாம்பார் தேவைன்னு வைங்க ஒடனே “ஏம்பா இங்க சாம்பார் வேணுமாம் பாரு” ன்னு குரல் கொடுக்கலாம். சாம்பார் பக்கெட் கிட்டக்க வந்ததும் அப்படியே இங்கயும் போடுப்பான்னிரலாம்.

இதே ஃபார்முலாதான் இந்த மேட்டர்லயும் ஒர்க் அவுட் ஆச்சு. குட்டி சிட்டி கல்ச்சர் போல. “அவன் மூஞ்சி.. உன்னை பத்தி எதுனா பேசு.அவன் பேச்சு வேணாம்”னுருச்சு.

இஃது இப்படியிருக்க.. அண்ணங்காரனுக்கு பாங்கியில வேலை கிடைச்சுருச்சா .. மொத மாச சம்பளத்துல ஒரு பேண்ட் -ஒரு சட்டை எடுத்து கொடுத்தான். அதை தைச்சு போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு போனம். அதை அதிர்ச்சிங்கறதா -இன்ப அதிர்ச்சிங்கறதா நம்மாளும் நம்ம சட்டை கலர்லயே தாவணி போட்டுக்கிட்டு வந்திருக்காள்..

இருக்கிறதுலயே படு பயங்கர ஸ்ட்ரிக்ட் ஆசாமியான சாரு.. ரெண்டு பேரையும் நிக்க வச்சு ” இவருக்கு சட்டைக்கு வாங்கன துணியில நீ தாவணி தைச்சுக்கிட்டயா? அல்லது உன் தாவணி துணியில மிச்சமானதுல இவருக்கு சட்டை தைச்சிங்களா” னு நக்கல் அடிச்சாரு.

இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கும். ஞா வரது இவ்ளதான். இல்லின்னா அடுத்து நான் சொல்லப்போற சம்பவம் நடக்க சான்ஸே இல்லையே. இட்லிக்கு ஊற வச்ச அரிசியை மென்னு திங்கறதெல்லாம் இதுக்கு மிந்தியே பல தடவை நடந்திருக்கு. ஆனால் நல்லா பக்குவமா வேக வச்ச சோத்தை திங்க தட்டுல கை வச்ச சம்பவம் தான் மேற்சொன்ன சம்பவம் . இதை பத்தி விலாவாரியா அடுத்த பதிவுல பார்க்கலாம்.

இதெல்லாம் நடந்தது 19/Apr/1979 => முதல் 19/Jun/1980 வரையிலான கால கட்டம். நமக்கு லக்னத்துல சூரியன். ஏழை பார்க்கிறார். சூரியன்னாலே இன்டிபென்டென்ட் . தனியன். ( டிப்) . அதனாலதேன் இந்த மாதிரி டிக்கெட்டுங்க நெருக்கம் காட்டுச்சு.

மறுபடி 1987 ல இதே மாதிரி அறையெடுத்து தங்கியிருந்த பார்ட்டியோட நெருக்கம் ஏற்பட்டது. ஆனா இங்கே 19/Feb/1986 => முதல் 21/Apr/1989 வரை சுக்கிர தசையில சனி புக்தி ஓடிக்கிட்டிருந்தது. சனின்னா முதுமைன்னு அருத்தம்.

1987 ல நெருக்கம் காட்டின பார்ட்டிக்கு நம்மை விட பத்து வயசு சாஸ்தி. இந்த அனுபவங்களை தேன் மறுபடியும் அவள்ங்கற தலைப்புல துவங்கி இடையில உனக்கு 22 எனக்கு 32 னுட்டு தலைப்லை மாத்தி தொடர்கதையா எழுதிக்கிட்டிருந்தேன்.இடையிலே ஆரோ பாலகுமாரன் மாதிரி இருக்குன்னுட்டாய்ங்க. படக்குன்னு நிறுத்திட்டன்.

இதுக்கு அதாவது வயசுல மூத்த பெண் நெருக்கமாக ஜோதிட ரீதியிலான காரணம் என்னனு ரோசிச்சா.. நம்முது கடகலக்னமாச்சா சப்தமாதிபதி சனியாச்சா.. சனின்னா முதுமைன்னு அருத்தம். கணக்கு டாலி ஆயிருச்சா..

இப்படி ஜோதிட கணக்குகளை டாலி பண்ணிக்கிட்டே இந்த தொடரை கொண்டு போறதா உத்தேசம். அடுத்த பதிவுல தொடரலாம்,

Advertisements

2 thoughts on “பலான அனுபவங்கள்: 9

  துடிமன்னன் said:
  October 27, 2012 at 3:42 am

  /*
  கண்ணால பந்தியில நமுக்கு சாம்பார் வேணம்னா கேட்க கூச்சமா இருக்கும். பக்கத்துல இலைக்காரனுக்கும் சாம்பார் தேவைன்னு வைங்க ஒடனே “ஏம்பா இங்க சாம்பார் வேணுமாம் பாரு” ன்னு குரல் கொடுக்கலாம். சாம்பார் பக்கெட் கிட்டக்க வந்ததும் அப்படியே இங்கயும் போடுப்பான்னிரலாம்.
  */
  உண்மைதான், ஆனால், இந்த Context-ல இது பொருந்தி வருமான்னு தெரியல

   S Murugesan said:
   October 27, 2012 at 5:03 am

   வாங்க துடிமன்னன் !
   பக்கத்து இலைக்கு சாம்பார் கேட்டாலே சாம்பார் இருக்கா இல்லியான்னு தெரிஞ்சுரும். நாம நமக்குன்னு கேட்டு இல்லேன்னுட்டா மொக்கையில்லியா?

   மேலும் இதை இன்னொரு வகையில சொல்லலாம்.”ஊர் பிள்ளைய தள்ளி கிணத்துல ஆழம் பார்க்கிறது” . நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்ட்டு செருப்படி வாங்கறதை விட அவன் உன்னை லவ் பண்றானாம்னு சொன்னா செருப்படி விழுமா? நாசூக்கா மறுப்பாளான்னு தெரிஞ்சுரும்ல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s