பலான அனுபவங்கள்: 8

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நாம ஆரம்பிச்சு பாதியில விட்ட தொடர்களோட டேட்டாவை நான் மறந்துட்டாலும் பலர் மறக்கலை. அதனால ஒழுங்கு மரியாதையா இந்த பலான அனுபவங்கள் தொடரை எழுதி முடிச்சுர்ரதா கங்கணம் கட்டியிருக்கோம். ஆத்தா விட்ட வழி.

பதிவுக்கு போறதுக்கு மிந்தி முன் கதை சுருக்கம்:

இந்த தொடர்பதிவை ஆரம்பத்துலருந்து படிக்கிற பார்ட்டிகள் இந்த முன் கதை சுருக்கத்தை தாராளமா ஸ்க்ரால் பண்ணிருங்க.புதிய பறவைகள் மட்டும் ஒரு குன்ஸா படிச்சுருங்க. இல்லின்னா புரியாது.

பலான அனுபவங்கள்னு தலைப்பு வச்சிட்டு சொந்த முதுகை சுவாரஸ்யமா சொறிஞ்சு விட்டுக்கறாப்ல வெறுமனே சொந்த கதைய சொல்லி அறுக்காம – நம்ம ஜாதகம் -ஜாதகத்திலான கிரக நிலைகள் – அந்தந்த கால கட்டத்துல நமக்கு என்னென்ன தசாபுக்தி நடந்ததுங்கற டேட்டாவையும் கொடுத்து அனலைஸ் பண்ணப்போறேன். கடந்த காலம்ங்கறது ஒரு பிணம்.அதை மார்ச்சுவரி பண்ணா சில அசலான மேட்டர்லாம் வெளிய வரும்.

இது ஜோதிட ஆர்வம் உள்ளவுகளுக்கும் பயன் படும் .இல்லாதவுகளுக்கும் பயன்படும்.ஓகேவா.. உடுங்க ஜூட்டு..

முக்கியமா இந்த தொடர்ல நான் எடுத்துக்கப்போற கால கட்டம் 20/Apr/1973 முதல் 20/Apr/1993 வரை .ஏன்னா இந்த காலகட்டத்துல தான் நமுக்கு சுக்கிர தசை நடந்ததுங்கோ..இந்த தொடருக்கு பலான அனுபவங்கள்ங்கற தலைப்பு வைக்க முக்கிய காரணம் இதுதான். சுக்கிரன்னா கில்மா .கில்மான்னா சுக்கிரன். இவரு தான் ஜனனேந்திரியத்துக்கும் இன்னபிற கெட்டகாரியங்களுக்கும் காரகன்.

மொதல்ல நம்ம ராசி சக்கரம்: லக்னம் கடகம். ராசி :சிம்மம் நட்சத்திரம்: மகம் ,லக்னத்துலயே 2 க்கு அதிபதியான சூரியன், 6/9 க்கு அதிபதியான குரு , 3/12 க்கு அதிபதியான புதன் , தனபாவத்துல லக்னாதிபதியான சந்திரன் மற்றும் 4/11 க்கு அதிபதியான சுக்கிரன், நான்கில் 5/10 க்கு அதிபதியான செவ் +கேது , பாக்ய பாவத்துல 7/8 க்கு அதிபதியான சனி வக்ரம். நட்சத்திரம் மகம்.

குறிப்பு: ரெண்டுல சுக்கிரன் இருக்கிறதா சொல்லியிருக்கேன்.எல்லா கிரகமும் ஏழாவது ராசியை பார்க்கும் (இது பொது விதி – சனிக்கு அடிஷன்லா 3 ஆம் இடத்து பார்வை ,செவ்வாய்க்கு 4, 8 ஆமிடத்து பார்வை உண்டு என்பது உபரி தகவல்)

எட்டுங்கறது ஆயுள்ஸ்தானம் .மரணத்தை காட்டுமிடம். சுக்கிரன்னா கில்மா. கில்மாலயே உசுரு போகனும். பெண்காளாலயே ஆவிசு ஆவியாயிரனும். நல்ல வேளையா லக்னத்துல உச்சமா இருந்த குருவும் -வித்யா ஸ்தானத்துல புத்தி ஸ்தானாதிபதியோட சேர்ந்த கேதுவும் ஜஸ்ட் 7 வருசத்துல நம்மை ரிலீஸ் பண்ணிட்டாய்ங்க.

எட்டுங்கறது மருமஸ்தானத்தை காட்டுமிடம் .இந்த பாவத்தை மர்மஸ்தானத்தை குறிக்கும் சுக்ரனே பார்க்கிறாரு. ஆனால் வாக்குல இருக்காரு. கடலை போட்டே கட்டிலை தயார் பண்ற பார்ட்டிடா நீயின்னு பசங்க சொல்வாய்ங்க. நம்ம கடலைக்கு குட்டிங்க மயங்கலாம்.ஆனால் அவிக ஊட்ல கீறவுக? அவிகளை பிக் அப் பண்ண நினைக்கிற பிக்காலிங்க? நோ நெவர். இப்டி ஒரு செனேரியோல குட்டிங்கள கணக்கு பண்ணிட்டாலும் – தேர்ட் பார்ட்டீஸால நாம வார்னிங் – உதை வாங்காத ஏரியாவே கிடையாது. (இந்த மேட்டர்ல நாம வடிவேலு மாதிரி ) .

நாமதேன் நாலாங்கிளாசுல இருந்தே “கெட்ட பய புள்ளைங்க”சகவாசம் பண்ற பார்ட்டியாச்சே. அடி உதைல்லாம் முடிஞ்ச பிறவு அடிச்சவன் எவன்னு அவன் ஜாதகத்தை தோண்டி எடுத்து ..எங்கன ஸ்விட்ச் ஆஃப் பண்ணா நியூட் ரல் ஆயிருவான்னு கண்டுபிடிச்சு பஞ்சாயத்துதேன் – செட்டில் மென்டுதேன். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் தொடர் நகரவே இல்லை போல ஒரு ஃபீலிங் வர்ரதால விட்ட இடத்துக்கு போயிருவம்.

கடந்த பதிவுல எட்டாம் வகுப்பு செனேரியோ -சென்னையிலருந்து புறப்பட்டு – நம்ம ஊருல அறையெடுத்து தங்கி படிக்க வந்த பார்ட்டி -இத்யாதி விஷயங்களை டச் பண்ணேன். இப்பம் அங்கருந்து ஆரம்பிக்கலாம். நியூ அட்மிஷன் -அதுவும் பாதி அகடமிக் இயர்ல வந்து சேர்ந்ததால – நாமதேன் சட்டாம்பிள்ளைங்கறதால அவள் ஏறக்குறைய நம்ம “அப்பரைன்டைஜு ” மாதிரி ஆயிட்டா .

நோட்ஸு கொடுக்கிறது – வாங்கறதெல்லாம் சகஜம். அப்பம் நம்ம குடும்ப நிலை என்னடான்னா அப்பாவை மானிலத்துல இருக்கிற ஜில்லாவுக்கெல்லாம் தூக்கி அடிச்சு வெறுத்துபோன மேலதிகாரிங்க ..ஹைதாராபாத்லயே போஸ்டிங் போட்டுட்டாய்ங்க.

கடக லக்னம்னாலே சம்சார சுக ஹீனன்னு ஒரு விதி இருக்கு. நம்ம அப்பாவும் கடகலக்னம்தேன் ( புதுசா பிறக்கிற குழந்தயோட ஜாதகத்தை கணிச்சா அதுல அதனோட அப்பா அம்மாவோட ஜாதகத்துல உள்ள ஓரிரு அம்சங்களாச்சும் வந்துரும் ) அம்மா ஹெல்த்தியா இருந்தவரைக்கும் இவரு ஓரிடம். அம்மா ஓரிடம். சித்தூர் வந்து செட்டில் ஆறதுக்கும் அம்மாவுக்கு கான்சர் அட்டாக் ஆறதுக்கும் கரீட்டா போச்சு.

அப்பா ஹைதராபாத்ல இருந்தப்பயும் அவருக்கு நாயடிதேன். அம்மாவுக்கு தனிமைதேன்.ஆனால் சிட்டி லைஃபால அப்பாவோட மைண்ட் செட் கொஞ்சம் போல மாறிருச்சுன்னே சொல்லனும். சிட்டில எக்சிபிஷன் அது இது நடக்கும் போது (தான் தின்னு திங்காம மிச்சம் பிடிச்சு – ஒரு மீல்ஸ் வரவச்சுக்கிட்டு அதை ராத்திரிக்கும் அஜீஸ் பண்ணுவாராம்னா பார்த்துக்கங்க) ஒரு ப்ளாக் அண்ட் வைட் டிவி, டைனிங் டேபிள்,ஒயர் பின்னின டீப்பாய், சேருங்க ஒரு செட்டு ,டின்னர் செட்டு ,அம்மாவுக்கு மானாவாரியா காட்டன் சாரிங்க ( விலை? சொன்னா பயந்துக்குவிங்க ரூ.35 முதல் அம்பது வரை இருக்கும் -ஆனால் செம க்யூட்டா இருக்கும்) சோளாப்புரி ரோட்டி (நெருப்புல சுட்டது) இதையெல்லாம் வாங்கி போட்டுக்கிருந்த கால கட்டம்.இதையெல்லாம் ஏன் சொல்லி அறுக்கிறேன்னா அந்த நாட்கள்ள ஒரு பெண் ஒரு ஆணை சந்திக்கனும் -பேசனும்னா ரெம்ப கஷ்டம். ஆனால் மேற்படி என்விரான்மென்ட்ல இருந்ததால மேற்சொன்ன குட்டி வீட்டுக்கு வந்து “முருகன்”னு குரல் கொடுத்தா அப்பாவே வீட்ல இருந்தாலும் “வாம்மா..உட்காரு.. சார்(?) உள்ள இருக்காரு.வரச்சொல்றேன்”பாரு.

அதே போல அவளோட அறைக்கு நாம போறதா இருந்தாலும் பிரச்சினையே கிடையாது. அவிக அப்பா இவளை அங்கன குடிவைக்கிறப்ப கோ டெனன்ட்ஸு கிட்டே சொல்ட்டு போயிருப்பாரு போல.அதுல ஒரு அம்மா (கோ டெனன்ட்) ” வாப்பா “னுட்டு அது வேலைய அது பார்க்க ஆரம்பிச்சுரும். இப்படி எல்லாமே அனுகூல சூழல் இருந்ததாலயோ என்னமோ .. “நாமன்னா அதுக்கு ஒரு இது .. தட்ஸ் எனஃப்” என்ற எண்ணம் இருந்ததே தவிர ஃபிசிக்கலா “முன்னேறனும்”ங்கற துடிப்பெல்லாம் இல்லை.

இந்த நிலை இதுல இன்னொரு கேரக்டர் என்ட்ரி ஆகிற வரைக்கும் தேன். அந்த இன்னொரு கேரக்டரும் க்ளாஸ்மெட்டுதேன்.ஆனால் ஏழாவதுல கோட் அடிச்சுட்டு ஜூனியர்களான எங்களோட சேர்ந்து படிக்கவேண்டி வந்துட்ட சீனியர்.

அந்த காலத்துலயே ஸ்டெப் கட்டிங் ,வீட்ல தனியறை ,சிகரட்டுல்லாம் கூட பிடிப்பான் போல. ஒரு நாள் நம்மை பிக் அப் பண்ணி நாமன்னா அதுக்கு ஒரு இதுனு நினைச்சிருந்தமே அதே குட்டியை தான் “விரும்பறதாவும்” தன்னை பத்தி “நல்லவர் வல்லவர்”னு அவளுக்கு சொல்லனும்னும் ப்ரப்போஸ் பண்ணான். அதுக்கப்பாறம் கதையே மாறிப்போச்சு..

தசாபுக்தி கணக்கை பார்த்தா அப்பம் நமுக்கு 19/Apr/1979 => முதல் 19/Jun/1980 வரை சுக்கிர தசையில செவ் புக்தி நடந்துக்கிட்டிருக்கு.

செவ்வாய்னா எதிரி இவரு காதலுக்கு காரகரான சுக்ரனோட வீட்ல (துலாம்ல ) இருக்காரு. ப்ரப்போஸ் பண்ணவன் பேரும் செவ் காரகம் கொண்ட பேருதான். ஆக்சுவலா கட்டிப்புரண்டிருக்கனும் போல.ஆனால் செவ்வாயோட ஞான காரகனாகிய கேதுவும் சேர்ந்திருக்கிறதால தத்துவார்த்தமாவே இதை டாக்கிள் பண்ணோம்.

அம்மன் சத நாமாவளி சித்தூர் எடிஷன் அச்சாகி பார்சல் வந்துக்கிட்டிருக்கு. (ஆன்லைன் தோழமைகளுக்கான தமிச் எடிஷன் அச்சாகி,சார்ட் அவுட்லாம் முடிஞ்சு கட்டிங் ஸ்டேஜுல இருக்கு. நாளைக்கே ஐ மீன் இன்னைக்கே கூரியர்ல புக் பண்ண ட்ரை பண்றேன்)

சித்தூர் எடிஷன் தொடர்பான ஃபீல்டு ஒர்க்ல இறங்க வேண்டியிருக்கிறதால சாப்டரை இத்தோட முடிச்சுக்கிட்டு நாளைக்கு தொடர்ரேன்.ஓகேவா உடுங்க ஜூட்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s