வெட கோழி : பாலியல் கலைச்சொல்

Posted on Updated on

null

மொதல்ல இந்த பதிவுக்கு விடை கொடு ஆத்தான்னு தேன் தலைப்பை வச்சேன். விடை கொடுங்கற வார்த்தைக்கு ரெண்டு அருத்தம் .ஒன்னு ஆன்ஸர் மீ ! ரெண்டு ஆளை விடு ! இதுல ரெண்டாவது அருத்தத்துலதான் இந்த பதிவோட தலைப்பை வச்சிருக்கன். “விடை”ங்கற வார்த்தைக்கு இன்னொரு வில்லங்க அருத்தமும் இருக்கும். “வெட கோழி”ங்கற வார்த்தை ஞா வருதா?

வெட கோழின்னா இனப்பெருக்கத்துக்கு தயாரா இருக்கிற கோழின்னு அருத்தம். ஒரு உயிர்/உயிரினம் இனப்பெருக்கத்துக்கு(?) தயாரா இருக்கிற சமயம் அதன் உடல் எடை – நலம் – நோய் எதிர்ப்பு சக்தில்லாம் அதன் உச்சத்துல இருக்கும். அந்த சமயத்துல இனப்பெருக்கம் நடக்கலின்னா “முத்தி”போக ஆரம்பிக்கும். பிறவு ? கட்டுத்தளர ஆரம்பிக்கும் .இதான் இயற்கையின் தனித்தன்மை.

எப்படியோ தலைப்பை ஜஸ்டிஃபை செய்தாச்சு.

நல்லாத்தானே போயிட்டிருந்தது. அதுக்குள்ற ஏன் ஆத்தாவை விடை கொடுங்கறேனு கேப்பிக.சொல்றேன்.

அக்டோபர் 11 ஆம் தேதி பந்தாவா 1081 பேஜ் வ்யூஸ் வந்ததா எழுதியிருந்தன். அக்டோபர் பத்தாம் தேதி பலான அனுபவங்கள் தொடரை ஆரம்பிச்சிருந்தம். இடையில நாலே நாள் தான் ஆத்தா -சத நாமாவளின்னு ட்ராக் மாறினோம். பேஜ் வ்யூஸ் என்னாச்சு தெரியுமா? வெறும் 385. இதுக்காக என்னே தமிழர்களின் ரசனை?னு ஆரம்பிச்சு கலம்பகம்லாம் பாடப்போறதில்லை.

பலான அனுபவங்கள் ஏறக்குறைய தடை செய்யப்பட்ட நாடு -மானிலம் -சமூகம் இப்படிப்பட்ட ரசனைய கொண்டிருக்கிறது சர்வ சகஜம். இதுக்குத்தேன் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து தொலைங்கப்பான்னு மன்னாடறேன்.

மொதல்ல இந்த இழவு என்னன்னு தெரிஞ்சு தொலைச்சுட்டா அடுத்து என்னன்னு மனசு தேட ஆரம்பிக்கும்.

ஒரு விஷயம் தடை செய்யப்படும் போதுதான் அதன் மீதான கவர்ச்சியே அதிகரிக்கும். ஒரு விஷயத்துலருந்து மனித மனதை திசை திருப்பனும்னா அதை திறந்து விட்டுரனும்.

ஆணுக்கு பெண்மேல ஏற்படற கவர்ச்சிக்கு பல காரணங்களை நானே பழைய பதிவுகள்ள சொல்லியிருக்கேன். ( கருப்பைக்கு திரும்புதல் – தன்னில் குறைபட்ட பெண்மையை நிறைவு செய்தல் – மீண்டும் ஓருயிராதல் – எட்செட்ரா) இப்பம் புதுசா இன்னொரு காரணத்தை சொல்லப்போறேன்.

எல்லா ஆணும் சிவனோ இல்லையோ ..ஆனால் எல்லா பெண்ணும் சக்திதான். சக்தியில்லையேல் சிவமில்லை. சிவம் எப்போதும் சக்தியை தான் நாடும். இவனுள் இருக்கும் சிவாம்சம் எவ்வளவு வலியதாய் இருந்தால் அந்தளவுக்கு இவன் மனம் சக்தியை நாடும்.

ஆனால் இந்த சக்திக்கான -சக்தி மீதான நாட்டம் – சக்தியை சென்றடையும் பயணம் பெண்ணில் இருந்து துவங்கலாம்.ஆனால் பெண்ணிலேயே முடிந்து விடக்கூடாது. இந்த சின்ன சூட்சுமத்தை இளமையிலயே புரிஞ்சிக்கிட்டா லைஃப் ரெம்ப பெட்டராயிரும்.

நம்மை பொருத்தவரை 22 வயசுல ஆட்டம் க்ளோஸ். தாளி ..அது இல்லாம குப்பை கொட்ட முடியாது. அதே நேரம் அதை தாண்டியே ஆகனும். வைரத்தை வைரத்தால தான் அறுக்கனும்ங்கறதை போல பெண் பித்தை பெண்ணை கொண்டே தீர்த்தாகனும்னுட்டு கன்க்ளூட் ஆயிட்டம்.

செக்ஸ்ங்கறது அவெய்லபிளா இருக்கும் போது -அதன் மீதான பிரமைகள் வடிஞ்சுரும். அதுவும் வித் ரெகுலர் இன்டர்வெல் கிடைக்கும் போது சான்ஸே கிடையாது.

படிப்பு-நிறம்-மண்ணாங்கட்டின்னு எதையும் பார்க்கலை. பிடிச்சிருக்கு. நமக்குன்னே வச்சுக்குவம் -இதான் கான்செப்ட். இப்படித்தான் நம்ம மொத முயற்சி நடந்துச்சு. சனம் புண்ணியம் கட்டிக்கிட்டாய்ங்க. ரெண்டு வருசம் மறுபடி இமிசை. இமிசை மீன்ஸ் .. நாம கில்மா இத்யாதிய எல்லாம் தாண்டி பால் வீதியில மிதந்துக்கிட்டிருப்பம். திடீர்னு பயாலஜிக்கல் சிம்ப்டம்ஸ்.

எப்படியோ 1991 ல செட்டிலாயிட்டம்.இதுவும் காதல் கண்ணாலம் தேன். நம்ம 24 ஆவது வயசுல கில்மா வேட்டைக்கு மங்களம் பாடியாச்சு. கடவுளோட அருளால நமக்கு ஏழ்மையும் ஒரு குருவாகி ப்ராக்டிக்கல் பிரச்சினைகள் அதிகரிச்சுட்டு கில்மாங்கறது ஒரு பயாலஜிக்கல் -சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம் அவ்ளதாங்கறது புரிஞ்சு போச்சு.

என்னதான் 1982லயே 15 வயசுலயே நம்ம கோல் ஆஃப் தி லைஃப் ( ஆப்பரேஷன் இந்தியா 2000 ) லாங் ஷாட்ல மசமசன்னு தரிசனம் கொடுத்துட்டாலும் – அதுக்கான கன்னி முயற்சிகள் துவங்கிட்டாலும் 24 வயசுலருந்து தான் நம்ம முயற்சிகள் நூல் பிடிச்ச கணக்கா போக ஆரம்பிச்சுருச்சு.

சொன்னா நம்பமாட்டிங்க. ஒரு கிழவாடி.வயசு 70+ . 2 பெண் குழந்தைகள் – 3 ஆண் குழந்தைகள். எல்லாரும் வீடு வாசல்,கண்ணாலம் காட்சின்னு செட்டில் ஆயாச்சு. பேரன் பேத்தியெல்லாம் எடுத்தாச்சு. பொஞ்சாதி டிக்கெட் போட்ட 6 ஆவது மாசம் நம்மை டவுட் கேட்குது.

பூஜை ,புனஸ்காரம்னு இருக்கிறப்பத்தேன் “அந்த” நெனப்பு அதிகம் கிராஸ் ஆகுது. இது ஏன்?

அடங்கோ.. உனக்குள்ள இருக்கிறது ஒரே சக்தி. சாதனையால அதுல சலனம் ஏற்படுது. ஆனால் அதுக்கு நீ ஆதி நாள் முதலா போட்டு வச்ச பாதை அதோ முகம் ( கீழ் நோக்கிய பாதை) பழக்க தோஷத்துல அது கீழ் நோக்கி பாய துடிக்குது. இத்தனை காலம் மடை திறந்த வெள்ளமா ஓடிக்கிட்டிருந்தது. இப்பம் திகைச்சு நிக்குது.அதனாலதேன் இந்த கிராசிங். லேசா கன்வின்ஸ் பண்ணிட்டா மேனோக்கி சீறும்யான்னு சொன்னேன். (உபயம்:ஓஷோ+ நம்ம அனுபவம்) கூடவே சில பல டிப்ஸ்.உடனே கிழவன் கைய பிடிச்சு கண்ல ஒத்திக்கிச்சு.

70+ பார்ட்டிக்கு உபதேசம் கொடுத்தது எனக்கு வேணம்னா பெருமையா இருக்கலாம். ஆனால் நம்ம நாடு -சமுதாயம் எல்லாம் தலை குனியனும்.

என்னமோ போங்க.. பயங்கர கடுப்பு .. எந்த அளவு இறங்கி வரனுமோ இறங்கி வந்து கொஞ்சம் போல உசந்த மேட்டரை கொடுத்தாலே ஹிட்ஸும் – பேஜ் வ்யூஸும் இந்தளவு பல்பு வாங்குதுன்னா ரெம்ப கஷ்டம். கில்மா அனுபவங்களை எழுதறதுல நமக்கேதும் கில்ட்டி எல்லாம் இல்லை.

நாம சத நாமாவளி பத்தி எழுதினாலும் சரச சல்லாபங்கள் பத்தி எழுதினாலும் நம்ம எழுத்தின் நோக்கம் மன்சனை அடுத்த படிக்கு நகர்த்தறதுதேன்.

இருந்தாலும் இன்னம் கூட கில்மால இருந்தே ஆரம்பிக்கவேண்டியிருக்கேன்னு கொஞ்சம் ஃபீல் பண்றேன். எனி ஹவ்.. நாளை முதல் கில்மா அனுபவங்கள் தொடரும். அதுக்கு மிந்தி ஆத்தான்னா ஏதோ நகராட்சி கக்கூஸுகணக்கா சிராமிக் டைல் போட்ட இருட்டறையில -அவாளே ஜெயிலரா -அவாளே வார்டர்களா – கைதியா கிடக்கிற பொம்பளைன்னு யூத்து நினைக்கிறாப்ல இருக்கு.

அவளோட நாமாக்கள்ள சிலதை மட்டும் சொல்லி அதுக்குண்டான அருத்தம் என்னான்னு சொல்லி முடிச்சுர்ரன். அப்பத்தேன் தெரியும் தாங்கள் நூத்துக்கணக்கான சிசி டூவீலர்ல துரத்தறதெல்லாம் சப்பை ஃபிகரு..ன்னு.

அம்ருத்தாயை நம:
அமுதம்னா தெரியும்ல. சாவும் வராது.இளமையும் போகாது. ஆனால் இவிக துரத்திக்கிட்டு அலையற குட்டிக பின்னாடி டூ வீலர்ல அலைஞ்சா இளமையும் காலி. சாவும் கியாரண்டி.

இந்த நாமாவை எளுதினவரு அடக்கி வாச்சிருக்காரு. நாமளா இருந்திருந்தா சஞ்சீவின்யை நம:னு எழுதியிருப்பம். ஏன்னா அமுதம் சாவை தடுக்கும் தட்ஸால்.ஆனால் சஞ்சீவின் செத்துபோனதை உயிர்ப்பிக்கும்.

நம்ம மேட்டர்ல இது நெஜம். வாக்காளர் பட்டியல்லருந்து ,உறவுக்காரவுகளோட கல்யாண அழைப்பிதழ் அனுப்பற அட்ரஸ் லிஸ்ட்லருந்து கூட நீக்கப்பட்டு அரசியல் -பொருளாதார-சமூக -மனோ மரணங்களுக்கு உள்ளான பார்ட்டி நாம. ஆனால் இன்னைக்கு ? வாத்தியார் கணக்கா ” நான் செத்து பிழைச்சவண்டா”ன்னு பாடவேண்டியதுதேன்.

ஆர்த்த ஜன ரக்ஷின்யை நம:
புகல் கேட்டு வந்தவுகளைகாத்து ரட்சிக்கிறவள்னு அருத்தம். இந்த குட்டிகளை நாமதேன் ரட்சிக்கனும். இதுக சேஷ்டைகளுக்கு கண்டவன் சீண்டுவான். நாமதேன் மல்லு கட்டனும்.ஆனால் ஆத்தா நம்மை ரட்சிக்கக்கூடியவள்

ஆத்யந்த சிவரூபாயை நம:
ஆதி முதல் அந்தம் வரை மங்கள வடிவுடையவள்னு அருத்தம். இந்த குட்டிகளை பார்த்த ஒரே மைக்ரோ செகண்ட்ல சொல்லிர்ரிங்க. மச்சி எல்லாம் பரவால்லை மச்சி.. அந்த மூக்குதான்..

அந்த காலத்துல புருசன் செத்தாதேன் முடியை மழிப்பாய்ங்க. அதை பெண்ணுரிமையாளர்கள்ளாம் எதிர்த்து
போராடினாய்ங்க. இன்னைக்கு என்ன நடக்குது? ப்யூட்டி பார்லருக்கு போயி அதே வேளையா வெட்டிப்போடுதுங்க. பொட்டு? மத்திய காலத்துல விதவைகள் தயங்கி தயங்கி வச்ச புரட்சி பொட்டு தேன். பூவு? பேசப்படாது. மஞ்சள் ? ஊஹூம். குங்குமம் ? நோ சான்ஸு..

அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயின்யை நம:
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருபவள்னு அருத்தம். இந்த குட்டிகளுக்கு டாப் அப் கூட நீங்கதேன் போடனும். அட பொஞ்சாதியாவே வந்தாலும் சீரு,செனத்தி,வரதட்சிணைனு கொண்டு வர்ரதையெல்லாம் கொண்டு வந்துட்டு
சப்கான்ஷியஸா உங்களுக்குள்ள இன்ஃபிரியரா உணரவச்சு – அதுல உங்க பயாலஜிக்கல் க்ளாக் திணற ஆரம்பிச்சு – செக்ஸ் பவர் அதல பாதாளத்துக்கு போயி -முடியாத குறைக்கு எரிஞ்சு விழுந்துக்குட்டு – மேட்டர் எக்குத்தப்பா போயி ஷாட் கட் பண்ணா மஹிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு

அபய வரத ஹஸ்தின்யை நம:
ஆத்தாளோட ஒரு கை அபய ஹஸ்தம். பயத்துக்கு எதிர்மறை அபயம். இனி உனக்கு பயமில்லாம செய்துரும். இன்னொரு கை வரத ஹஸ்தம் .அதாவது வரம் கொடுக்கிற கை. ஆனால் இந்த குட்டிகளோட கை? அட பொஞ்சாதியாவே வந்தாலும் அவளோட கை? அதை பார்க்கிறப்பல்லாம் அது தங்க வளையல் கேட்கும். அட்சய திருதியை வருதுடான்னு ஞா படுத்தும் தட்ஸால். தலைவலிக்கு இதம்மா கொஞ்சம் தைலம் தேய்க்கனும்னா கூட தலைவலியும் – அரியர்ஸும் ஒரே டேட்ல வந்தாதான் உண்டு.

ஆத்யந்த ரஹிதாயை நம:
முதலும் முடிவும் இல்லாதவள்னு அருத்தம். இந்த குட்டிகளுக்கு? ஆரம்பம் அம்மா. முடிவு மகள். நீங்க மட்டும் அனாதை .டெலிஃபோன் பில் /பவர் பில் கட்டிக்கிட்டு கிரைண்டர் ரிப்பேர்காரனுக்கு அலையற பாய்.

சதுர் சஷ்டி கலாத்மிகாயை நம:
சதுர் =4 , சஷ்டி =6 நாலை ஆறால பெருக்கினா 24. இருபத்து நான்கு கலைகளும் ஒருங்கிணைந்த அழகு உடையவள்னு அருத்தம். அதென்ன 24 கலைகள்? கேட்டா சொல்றேன்.

ஆனால் இந்த குட்டிங்க. பருவத்தில் பன்னி கூட அழகுன்னு ஒரு ரெண்டு வருசம் சீன் போடும்.அப்பாறம் ஒன்னு காஞ்சு கருவாடா போயிரும்.அல்லது காற்றடிச்ச டன்லப் டயர் மாதிரி ஆயிரும். ஒரு பத்து வருசத்துல மொத்தம் சுருங்கி போயிரும்.

ஸ்ரீ தேவியோட ஆத்துக்காரர் சம்பளத்துக்கு வேலை செய்றாரு.தெரியுமோன்னோ? மேட்டர் என்னடான்னா ஸ்ரீ தேவி ஆன்டி சொத்தையெல்லாம் ப்யூட்டி பார்லர்காரவுகளுக்கு எழுதி வச்சுட்டாய்ங்களாம். எழுதி என்ன புண்ணியம் முகத்துல “கெய்வி”னு எழுதி ஒட்டியிருக்குதே..

ஜனன்யை நம:
ஜனனி =தாய் . லேட்டஸ்டா ஒரு தாய் பெத்த குழந்தைய ரூ.3 ஆயிரத்துக்கு வித்துட்டு செல்ஃபோனை வாங்கியிருக்கா .( தமிழக அரசியல்: கேள்வி பதில்)

ஜ்யோதிர்மயே நம: ஒளிமயமானவள்
தாய்குலத்தின் முகத்துல ஒளி வரனும்னா உங்க அப்பா ,அம்மாவை ஓல்டேஜ் ஹோம்ல போடனும்.தம்பியை ஹாஸ்டல்ல பெட்டர் என்விரான்மென்ட் கிடைக்கும்டானு கழட்டி விடனும். நண்பர்களை கேட்டுக்கு வெளிய கழட்டி விடனும். ஆனால் ஆத்தா மேட்டர்ல அதெல்லாம் பிரச்சினையே கிடையாது. சதா சர்வ காலம் 365 நாள் ,24 மணி நேரம் ஜ்யோதிர்மயீ.

ஜ்வாலா முகே நம:
ஜுவாலைன்னா நெருப்புங்கற வார்த்தை பக்கத்துலயே வந்து உட்கார்ந்துக்கும். அவ்ளோ கோவமா இருப்பாளான்னு கேப்பிக. இருக்கலாம். வடிவேலு முறைச்சுக்கிட்டே சாப்பிட என்னா கஷ்ட படறாரு.ஆத்தா மட்டும் தர்மாவேசத்தால் – நெருப்பாய் -நெருப்பின் ஜுவாலையாய் -ஒளிரும் முகத்தோட ஜுவாலாமுகியா இருக்காள்.

இதை நம்ப முடியாதவுக பொஞ்சாதிகிட்டே மாமனார்,மாமியார் பத்தியோ மச்சான் பத்தியோ ஒரு ஜோக் அடிச்சு பாருங்க. முகம் ஜ்வாலா முகமா மாறும்.அப்பாறமாச்சும் நம்புங்க.

மோஹின்யை நம:
விவரிக்கனுமா என்ன?

மீனாக்ஷ்யை நம:
அக்ஷ=கண் . மீன் விழினு சொல்லிட்டு போயிரலாம்.ஆனால் வாரியார் இதுக்கான அருத்தத்தை ரெம்ப அழகா சொல்லியிருக்காரு. நான் கூட மென்ஷன் பண்ணதா ஞா.இருங்க பார்க்கிறேன். ஊஹூம்.பெட்டர் லக் @ நெக்ஸ்ட் போஸ்ட்

தம்பிகளா மறந்துராதிங்க.. அடுத்த பதிவிலிருந்து பலான அனுபவங்கள் நிச்சயம் தொடரும்..

2 thoughts on “வெட கோழி : பாலியல் கலைச்சொல்

  Muthamizh said:
  October 22, 2012 at 4:48 pm

  Athenna 24 kalaigal? motham 64 kalaigal thane…

   S Murugesan said:
   October 22, 2012 at 5:39 pm

   பஞ்ச =ஐந்து ,தசா =பத்து பஞ்ச தசாக்ஷரின்னா அம்பது.

   சதுர் =நான்கு ,சஷ்டி = 6 சதுர்சஷ்டின்னா 24 .அவ்ளதேன்..

   லெட் அஸ் வெய்ட் ஆரோ ஒருத்தரு வராம போவாய்ங்களா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s