வேசியும் -புவனேசியும்

Posted on Updated on

null

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு அம்மன் சத நாமாவளியில வர்ர சில நாமாக்களை பத்தி நம்ம வியாக்யானத்தை எழுதியிருந்தேன். அதை தொடரலாம்னு ஒரு உத்தேசம்.ஆனால் வில்லங்கமா எதுவும் தலைப்பு வச்சு ஒரு பாராவாச்சும் எளுதலின்னா பதிவு ரீச் ஆகாது.

அதனால தான் இந்த தலைப்பும் பாராவும். ஆத்தாவுக்கு நித்திய கல்யாணின்னு ஒரு நாமா உண்டு. ஏன்னா ஒவ்வொரு யுகத்தின் முடிவுலயும் ஆத்துக்காரரை தானே போட்டு தள்ளிட்டு புதுசா க்ளோனிங் பண்ணிக்கிளே. இதே பேரை சிலர் பாலியல் தொழிலாளிகளுக்கும் பொருத்திப்பார்ப்பாய்ங்க.ஏன்னா அவிகளுக்கும் விதவை கோலம் கடியாதே அதனாலே.

ஸ் ..ஒரு வேலை முடிஞ்சது.இப்பம் பதிவுக்கு போயிரலாம்.
சத்ய ரூபின்யை நம: தர்ம ரூபின்யை நம:
இந்த நாமாவை பார்க்க ரெம்ப ரொட்டீனா இருக்கும். ஆனால் கொஞ்சம் ரோசிச்சா முடிவான உண்மையையே நெருங்கிரலாம். இந்த நாமா ரொட்டீனா தோன்ற காரணம் இந்த தர்மம் -சத்தியம் இத்யாதியை எல்லாம் சனம் அதுவும் தப்பான சனம் சகட்டு மேனிக்கு உபயோகிச்சு நாறடிச்சுட்டதுதேன்.

தர்மம்ன்னா முறை – வாழ்க்கை முறை – கடமை -இயல்புன்னு பல அருத்தங்கள் வருது.ஆனால் நம்ம சனம் தர்மம்னா பிச்சை போடறது மட்டும்ன்னு நினைக்கிறாய்ங்க. சிலர் இந்து தர்மம்ங்கற வார்த்தை செலாவணியில இருக்கிறதால தர்மம்னா மதம்னு கூட அருத்தப்படுத்திக்கிறாய்ங்க. மதம்ங்கற வார்த்தை கருத்துங்கற அருத்தத்துல உபயோகிக்கப்படறதை பார்த்திருக்கேன். என்.டி.ஆர் கூட அபிமதம்ங்கற வார்த்தைய நிறைய உபயோகிப்பாரு
( அவரு தெலுங்கு பி.ஏ லிட்டரேச்சருங்கோ)

கிட்ணர் கூட பரதர்மம் -ஸ்வதர்மம்னு மென்ஷன் பண்றாரு. எதை செய்தாலும் நம்மோட இயல்பான ஆட்டிட்யூடை விட்டுராம – நமக்குன்னு உள்ள முறையில செய்யனும். இதான் அசலான அருத்தம்.ஆனால் இந்துத்வாவாதிகள் மதமாற்றத்தை எதிர்க்க இந்த சுலோகத்தை உபயோகிக்கிறாய்ங்க.

ஆக தர்மம்னா மேற்சொன்ன அருத்தங்களை எல்லாம் மீறி ஒரு அருத்தத்தை தர்ர வார்த்தை. மனித குலத்தை தாங்கி வாழ வைக்கும் பூமிக்கு தீங்கு விளைவிக்க கூடாது : இது தருமம் , நம்பினவனை நட்டாத்துல விடப்படாது : இது தர்மம். நேரிடையாவோ மறைமுகமாவோ நம்மை வாழ வைக்கிற சமூகம் உயர நம்ம பங்களிப்பை நிச்சயம் தரனும்: இது தருமம்.

ஆத்தான்னவுடனே பலருக்கு பல வடிவங்கள் மனத்திரையில நிழலாடும். ஆனால் பாருங்க இந்த நாமா சுருக்கமா தர்ம ரூபின்யைங்குது. தர்மத்தின் வடிவா இருக்காள். தருமமே இவள்.இவளே தருமம். தர்மோ ரக்ஷிதி ரக்ஷித ங்கறான்.தர்மத்தை நீ காப்பாத்தினா தர்மம் உன்னை காப்பாத்துங்கறது இதுக்கு அருத்தம்.

சாக்தேயம் எவ்ள சிம்பிளா போச்சு பாருங்க. கோவிலுக்கு போக தேவையில்லை. ஆத்தாளுக்கு சொம்படிக்க தேவையில்லை. உங்க தருமத்தை பக்காவா ஃபாலோ பண்ணா போதும்.

இதே போல சத்தியம்ங்கற வார்த்தை இதுவும் அசலான பொருளை இழந்துருச்சு. சின்ன வயசுல படிச்ச கதை ஒன்னு ஞா வருது. ஒரு புலி பசுவை கொல்ல வரும். பசு ” யப்பா.. என் கன்னு பசியா காத்துக்கிட்டிருக்கும். ஒரு நடை போயி பால் கொடுத்துட்டு வந்துர்ரன்”ங்கும். புலியும் சரி போய் வான்னுருது.

பசு விடு விடுன்னு போயி பாலை கொடுத்துட்டு “த பாருபா வந்துட்டன்”னுது. நொந்து போன புலி “தூத்தெறிக்க”னுட்டு அதை கொல்லாமயே போயிருது.

சத்தியமும் -தர்மமும் ஆத்தாவின் வடிவம்ங்கறதுக்கு இன்னொரு காரணத்தையும் சொல்லலாம். இது ரெண்டையும் கவசமா கொண்டு வாழ்ந்தா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி எல்லாம் பிச்சை வாங்கனும். தாயின் கருப்பையை விட பாதுகாப்பான பாதுகாப்பு கிடைக்கும்.

அதே நேரம் இந்த கவசங்களோட வாழற ஒருத்தனை சீண்டினா இந்த சத்தியமும் தர்மமும் அணு உலையை விட -அணு உலை கசிவை விட படுபயங்கரமா நம்மை தாக்கும்.

நாம ஒன்னும் ஆத்தாளுக்கு பி.ஏவும் கிடையாது -அட்வைசரும் கிடையாது.அதே போல இந்த சத்தியம் தருமத்துக்கெல்லாம் நம்ம கிட்டே பேடன்ட் ,காப்பிரைட்னு எதுவும் கிடையாது. நம்மை போன்ற பொய்யன,புரட்டன், துரோகி ,மொள்ளமாறி,முடிச்சவிக்கி,எஸ்கேப்பிஸ்ட்,கன்சர்வேட்டிவ்,சந்தர்ப்ப வாதி,குழப்பவாதி ஆரும் இருக்க முடியாது.

எதுக்கோ இந்த “பொளப்பு” நாற பொளப்புன்னு அப்பப்போ ஸ்பார்க் ஆகிட்டே இருந்ததா (ஜன்மத்துல உள்ள உச்ச குரு?) கொஞ்சம் கொஞ்சமா கழண்டுகிட்டே வந்திட்டிருக்கம்.

நாம காப்பாத்தற சத்தியம் -தருமம்லாம் ஒன்றரையணா கூட பெறாது. ஆனால் இந்த ஒன்றரையணா மேட்டருக்கே.. என்னென்னமோ நடந்து போயிக்கிட்டிருக்கு.

சிம்பிளா ஒரே ஒரு உபகதைய சொல்ட்டு கழண்டுக்கறேன்.

சைக்கிள்ளருந்து டூவீலருக்கு மாற முடிவு பண்ணி (அப்பம் சனி நாலை பார்க்கிறாரு) பஜாஜ் சன்னிங்கற வழக்கொழிஞ்ச வண்டிய வாங்கி தொலைச்சம். ஒரு மெக்கானிக் நம்ம கிட்ட பழைய கார்ப்பரேட்டர் இருக்குன்னு ஒரு ஐ நூறு ஆட்டைய போட்டு மாத்தினான். திமுக அரசு போயி அதிமுக அரசு வந்த கதையா அவதிதேன்.போதாக்குறைக்கு நம்ம வண்டியல இருந்த பழச சுட்டுர அதையும் காந்தி ஸ்டைல்ல மீட்டு வீட்ல வச்சிருந்தம்.

இன்னொரு ஒரு மெக்கானிக் நம்ம கிட்ட புது கார்ப்பரேட்டர் இருக்கு மாத்திட்டா லிட்டருக்கு 50 கி.மீ கியாரண்டின்னு பீலா விட்டான். நாமளும் இன்னொரு ரூ.500 மொழி எழுதிட்டம். அதான் இனி அம்பது வரப்போகுதேன்னுட்டு யான் பெற்ற துன்பம் பெறாதொழிக இவ்வுலகுன்னுட்டு கழட்டி போட்ட பழைய கார்ப்பரேட்டர் ரெண்டையும் அவனுக்கே கொடுத்து ஆருனா கிழவாடிங்க வந்தா ஃப்ரீ ஆஃப் காஸ்ட் போட்டுருப்பா. உன் சார்ஜ் மட்டும் வாங்கிக்கன்னு சொல்ட்டு வந்துட்டம்.

புது கார்ப்பரேட்டரை ஃபிட் பண்ணதுல பயங்கர குழப்படி செய்து நாறடிச்சுருந்தான்.கடவுள் தயவால நெஜமாலுமே சீமான்ங்கற பேர் கொண்ட சீமான் கணக்கான மெக்கானிக் கிடைச்சு அதை செட் ரைட் செய்துட்டாரு. இது ஓகே.. இது ஜஸ்ட் பின்னணி தான் சொல்ல வந்த உபகதை இங்கே துவங்குது.

நமக்கு பப்ளிக் லைஃபும் இருக்கே. நாம ஜகன் ஆளு. லோக்கல் காங்கிரஸ் எம்.எல்.ஏவோட சப்போர்ட்டர். ஒய்.எஸ்.ஆருக்கு தத்து பிள்ளை மாதிரி.இந்த சமயத்துல கட்சி மாறி ஜகன் பக்கம் போனா அவருக்கு எதுவும் பிரச்சினை வராது. ஆனால் நம்மை மாதிரி தத்து பித்துகளை நோண்டி நுங்கெடுத்துருவாய்ங்க. அதனால அவரு கட்சி மாறுவதை தள்ளி போட்டுக்கிட்டு வராப்ல இருக்கு.

ஒரு வேளை அவர் ஜகன் பக்கம் வந்துட்டா இருக்கிற சன்னியை ஜகன் கட்சி கலருக்கு மாத்திட்டு பிரசாரத்துக்கு மட்டும் உபயோகிக்கிறாப்ல ஒரு திட்டம். அதுக்காவ இன்னொரு சன்னிக்கு காத்திருந்தோம் .கிடைச்சது.,விலை எவ்ளோங்கறிங்க ரூ.1,500 .இதுக்கு பழைய கார்ப்பரேட்டரை போட்டு ஒப்பேத்திரலாம்னு நப்பாசை.

மெக்கானிக்குக்கு ஃபோன் போட்டா எடுக்கவே மாட்டான். ஜஸ்ட் ச்சொம்மா ரோசிக்க ஆரம்பிச்சம். திருட்டு வண்டி வாங்கி வித்ததா ஸ்டேஷனுக்கு போயி ரூ.40 ஆயிரம் மொழி. ( நேர்ல போனப்ப அவனே சொன்ன சோக கதை)

சரின்னுட்டு கவர்ன்மென்டு ஆஃபீஸ்ல சர்ச் சார்ஜ் கட்டின கணக்கா காத்தால இந்த இருபது வச்சிக்க தேடிவைன்னுட்டு வந்துட்டம். இரவு போயி அவனோட சீடப்பிள்ளைக்கு ஒரு பத்து ரூவா கொடுத்து உங்க பாஸுக்கு ஞா படுத்தி -தேடிவைப்பான்னுட்டு வந்துட்டன். மறுபடி 3 நாளாச்சு.

நாலாவது நாள் போறம். கடை சாமான் மொத்தம் ரோட்ல இருக்கு.பில்டிங் ஓனரோட ஏதோ வில்லங்கம் போல. மெக்கானிக் ” அண்ணா.. உன் கார்ப்பரெட்டர்ங்களை பார்த்து எடுத்துக்கங்கண்ணா”ங்கறான்.

நமுக்கு எரியற வீட்ல பிடுங்கிக்கோங்கறாப்ல ஒரு ஃபீலிங் வந்துருச்சு. “இல்லை நைனா எல்லாம் செட் ரைட் ஆன பிறகே வாங்கிக்கறேன்.. நீ மொதல்ல வேற கடைய பாரு”ன்னுட்டு வந்துட்டன்.

இதான் சத்தியம் -தருமத்தோட சக்தி. சக்தின்னாலே அவள் தானே.. இன்னமும் அவள் சத்ய ரூபினி -தர்ம ரூபினிங்கறதுல உங்களுக்கெதுனா அப்ஜெக்சன் இருக்கா?

Advertisements

4 thoughts on “வேசியும் -புவனேசியும்

  துடிமன்னன் said:
  October 21, 2012 at 4:48 am

  உங்க ஆத்தாவை ஒரு சமயம் தூக்கி வைத்து பேசுகின்றீர்கள். மறுசமயம் தாக்கி பேசுகின்றீர்கள். ஏன் இந்த பச்சோந்தித்தனம்?

  !! குண்டு போட்டாச்சு , இனி புகையட்டும்!!!

   S Murugesan said:
   October 21, 2012 at 5:24 pm

   ஐயா,
   அவள் ஸ்தோத்திர பிரியை . ஸ்தோத்திரம் செய்தாலும் அருள் புரிகிறாள். அவளை வைவதற்கு கூட நிந்தா ஸ்துதி என்றே பெயர். இதையும் ஸ்தோத்திரமாகவே கொண்டு அருள் புரிகிறாள்.

   இதை பச்சோந்தி தனம்னு சொல்றதை விட ஸ்பான்டேனியஸ்னெஸ்னு சொல்லலாம். ஒரு குழந்தைய போல மனசுல பட்டதை போட்டு உடைக்கிறம்ல.

   தாயை நெருங்க குழந்தையாக மாற முடிவது முதல் தகுதி. (குழந்தை தனமாக அல்ல குழந்தையாக)

  துடிமன்னன் said:
  October 22, 2012 at 3:42 am

  /**

  துடிமன்னன்

  22 hours ago

  உங்க ஆத்தாவை ஒரு சமயம் தூக்கி வைத்து பேசுகின்றீர்கள். மறுசமயம் தாக்கி பேசுகின்றீர்கள். ஏன் இந்த பச்சோந்தித்தனம்?
  **/
  அய்யோ, இது நான் போட்ட கம்மெண்ட் கிடையாது.

   S Murugesan said:
   October 22, 2012 at 4:54 am

   உடுங்க பாஸூ ..
   இதுக்குன்னே ஜெராக்ஸுக்கு பிறந்த ஜந்து ஒன்னு இருக்கு .ஒழிஞ்சு போவட்டும். சிலராவது இந்த கேள்விய கேட்க நினைச்சிருப்பாய்ங்க. ஆனா கேட்கலை.

   இந்த பரதேசி பன்னாடை கேட்டதுக்கு நாம சொன்ன பதிலு அவிகளுக்கும் போயி சேருதுல்ல.ஃப்ரீயா உடுங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s