புருஷன் மாரையே போட்டு தள்ளும் மனைவியர்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
பெண் என்பவள் மசாக்கிஸ்ட் (தன் துன்பத்தில் இன்பம் காணும் தன்மைய சொல்றேன்) .ஆண் என்பவன் சாடிஸ்ட் ( பெண்ணின்/அதுவும் தன் மனைவியின் துன்பத்தில் இன்பம் காணும் தன்மைய சொல்றேன்) இது பொதுவான கருத்து.

ஆனால் நம்ம ப்ராக்டிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்ல பார்க்கும் போது பகல்ல சாடிஸ்டா உள்ளவுக ராத்திரியில மசாக்கிஸ்டாவும் , பகல்ல மசாக்கிஸ்டா உள்ளவுக ராத்திரியில சாடிஸ்டாவும் மாறிர்ராய்ங்க.

மேலும் மண வாழ்வின் ஆரம்பத்தில் (ஒரு பத்து வருசம்?) சாடிஸ்டா இருந்தவுக அடுத்த பத்துவருசத்துல மசாக்கிஸ்டா மாறிர்ராய்ங்க. ஆரம்பத்துல மசாகிஸ்டா இருந்தவுக அடுத்த 10 வருசத்துல சாடிஸ்டா மாறிர்ராய்ங்க.

இதெல்லாம் சகஜம். ஆனால் புருசன் மாரை போட்டே தள்ளிர்ர பொஞ்சாதிகளோட சைக்காலஜி என்ன? இவிக பாவம் நேர்மையானவுகன்னு சொல்லலாம்.ஏன்னா மத்த பொஞ்சாதி மார் எல்லாம் தங்கள் புருசங்களை தவணை முறையில ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ன கணக்கா கொல்ல பார்க்க இவிக நேர்மையா நேரிடையா கொன்னுர்ராய்ங்க.

இந்த புத்தி எங்கன இருந்து வந்தது?

ஆத்தாவ ஜகன் மாதாங்கறாய்ங்க. ஜகம் =உலகம் , மாதா =தாய் . இந்த தாய் போட்ட குட்டிங்கதானே இந்த பொஞ்சாதி மாரும். ஆத்தா புத்திதானே இவிகளுக்கும் வரும்.. ஆத்தா என்ன பண்றா ஊழி காலம் வரும் போது தன் ஆத்துக்காரரான சிவாவை போட்டு தள்ளிர்ரா. மறுபடி படைப்பை ஆரம்பிக்கும் போது புது சிவா.

வில்லங்கம் போதுமில்லை. ஹிட்டு ,கமெண்ட்டுல்லாம் கொட்டுமில்லை

நாம பதிப்பிக்கப்போற சத நாமாவளி கையடக்க பதிப்புல வர்ர ஒவ்வொரு நாமாவையும் .( அவா ஒக்காபிலிரிங்கோ) இதுக்கு நாமத்தை /பெயரைன்னு அருத்தம் அவ்ளதேன் . மேற்படி நாமாக்களை உச்சரிக்கிறப்போ அந்த செகண்டுல பல வியாக்யானங்கள் மனசுல ஓடும். அதை எல்லாம் ஞாபகத்துலருந்து தேடிப் பிடிச்சு பதிவாக்கினா ஆத்தாளுக்கு கொஞ்சம் குஜிலியாகும்ல. (அவளுக்கு ஸ்தோத்திர ப்ரியேன்னும் ஒரு நாமா இருக்கு -ஆனா இது நம்ம சத நாமாவளியில வராது )

ஆத்தாவை ஸ்தோத்திரம் பண்ணாதான் குஜிலியாவாள்னு இல்லை. பெரியார் கணக்கா விமர்சிச்சா இன்னம் குஷியாயிருவா. இந்த டெக்னிக் தான் நமக்கு படுபயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சு

இந்த சத நாமாவளிய எடுத்துக்கிட்டு ஒவ்வொரு நாமாவா அலசி இந்த நாமாவுக்கு எல்லாம் நீ அன்ஃபிட். ஆள விடுன்னு ஒரு நீண்ட கவிதை எழுதினேன். அதுக்கப்பாறம் தேன் நம்ம லைஃப்ல காட்சிகள் வேகமா மாற ஆரம்பிச்சது. ( நிந்தா ஸ்துதி)

இந்த பதிவை போட ரெண்டு காரணம் இருக்கு. நாம எடுத்த வேலை பர்ஃபெக்டா முடிஞ்சாகனும். நம்ம காசு நாசமா போனா டோன்ட் ஒர்ரி.ஆனால் சனங்களோட பணத்துல செய்யற காரியம் தப்பா போகப்படாது.

ஜோதிடம் 360 புக் மேக்கிங்ல நடந்த தவறுகள் ரிப்பீட் ஆகக்கூடாதுங்கற கட்டாயம் வேற இருக்கு. அதனாலதேன் ஆத்தாவுக்கு கொஞ்சம் போல சொம்படிக்கிறோம்.

இப்பம் நாமா – வியாக்யானம் பாய்ண்ட் டு பாயிண்ட் போயிரலாம். உங்களை இந்த பகுதிக்குள்ள கொண்டு வரத்தேன் மொத பாராக்கள் + வில்லங்க தலைப்பு.

1. ” ஆத்யந்த சிவரூபாயை நம:”
ஆதி = ஆரம்பம் அந்தம் = முடிவு ஆக இந்த நாமாவுக்கு ஆதியிலருந்து அந்தம் வரை சிவ ரூபமாய் இருப்பவளேனு அருத்தம்.சிவ ரூபம்னா இதை ரெண்டு ஆங்கிள்ள பார்க்கலாம்.

ஒன்னு ஆத்தாவோட ஹப்பியான சிவனார். பத்து பதினைஞ்சு வருசம் எலியும் பூனையுமா குடித்தனம் பண்ணாலும் புருசன் கிட்ட உள்ள குணங்களில் பலது பொஞ்சாதிக்கும் -பொஞ்சாதிக்கு உள்ள குணங்களில் பலதும் புருசனுக்கு வந்துரும். பல்லாயிரம் கல்பங்களா ஒரே ஆத்துக்காரரோட குப்பை கொட்டினா ரூபம் கூட அவரை போல மாற வாய்ப்பிருக்கா இல்லையா? ஆனால் ஆத்தா என்ன சிவனார் போல பிணம் எரிச்ச சாம்பலையா டால்கம் பவுடரா பூசியிருக்கா ? இல்லியே..

சிவம்னா இன்னொரு அருத்தமும் இருக்கு. மங்களம். ஆத்தா டாப் டு பாட்டம் மங்கள ரூபிணியா இருக்கான்னு தான் எடுத்துக்க வேண்டியிருக்கு.
2.ஆத்யந்த ரஹிதாயை நம:

இந்த நாமாவளியிலயே என்னை மிக கவர்ந்தது இந்த முரண்பாடுகள் தான். ஒரு நாமாவில் ஆத்யந்த சிவ ரூபாயைங்கறான். அதாவது ஆத்தாளுக்கு ஒரு ஆதி -ஒரு ஆரம்பம் இருக்குங்கறாய்ங்க. அடுத்த நாமாவிலயே ஆத்யந்த ரஹிதாயைங்கறான்.ரஹிதான்னா இல்லாதவன்னு அருத்தம். ஆதியுமில்லை – அந்தமுமில்லை.(அந்தம் =முடிவு) இதே ட்ரெண்டுல அனந்தாயைன்னு கூட ஒரு நாமா வருது. இதுக்கு முடிவில்லாதவள்னு ஒரு அருத்தம். பலவாய் உள்ளவள்னும் ஒரு அருத்தம் சொல்லலாம்.

ஒரு நாமாவுல காலாயை நமனு வரும் அடுத்த நாமாவே காலாதீதாயைன்னு வரும். காலமாக இருப்பவளேன்னு சொல்ட்டு படக்குன்னு காலத்துக்கு அதீதமாய் இருப்பவளேன்னு சொன்னா என்னா அருத்தம்?

காலம்ங்கறது நம்மை பொருத்தவரை ஒரு மிஸ்டரி. ஆத்தாவும் ஒரு மிஸ்டரிதான். நமக்கு – நம்ம ஆங்கிள்ள இருந்து பார்த்து அவள் காலமாய் இருக்கிறதா சொல்றான். ஆனால் ஆத்தாளை பொருத்தவரை அவள் காலாதீதை

இங்கே காலாயைங்கற வார்த்தைக்கு இன்னொரு அருத்தமும் இருக்கு. இந்தி /சமஸ்கிருதத்துல கால் என்ற வார்த்தைக்கு காலம் மற்றும் எமன் என்று ரெண்டு அருத்தம் இருக்கு . ஆத்தா வெறும் வுமன் மட்டுமில்லை எமனாவும் இருக்கா..போல.

ஒரு நாமாவுல கன்யகாயைம்பான். (கன்னின்னு அருத்தம்) இன்னொரு நாமாவுல குமார ஜனன்யைம்பான். (குமாரனுக்கு பிறப்பை தந்தவளேனு அருத்தம்) இன்னொரு நாமாவுல கணேச ஜனன்யைம்பான். இதுவாச்சும் பரவால்லை. இன்னொரு. நாமாவுல . மஹோதர்யைம்பான். மஹா =பெரிய ,உதரம் = வயிறு ( கோடானு கோடி உயிர்களை பெற்ற வயிறை உடையவள்னு அருத்தமா? அல்லது ஊழி காலத்துல கோடானு கோடி உயிர்களை விழுங்கி டெப்பாசிட் பண்ணி வச்சுக்கிற வயிறுன்னு அருத்தமா? அல்லது ரெண்டுமா? புரியலை ..என்ன அழகான முரண்பாடு பாருங்க.

ஆத்தா எந்த ஃப்ரேமுக்குள்ள வேணா அடங்கிர்ர வினோதமான உயிரோவியம்.

பிந்து ஸ்வரூபின்யை நம:
பிந்து = துளி ? புள்ளி? கண் மூடி தியானம் செய்யும் போது வர்ண ஜாலம்லாம் நடக்கும். அதெல்லாம் அடங்கி ஒரு பிந்து தெரியும். ஒளி புள்ளி? ஒளித்துளி ? அந்த பிந்து ஸ்வரூபமா இருக்கிறவ தான் ஆத்தா.. இதான் பாய்ண்டு.

சந்த்ர மண்டல வாசின்யை நம:
சந்திரமண்டலம்னா வானவெளியில் சந்திர உள்ள மண்டலமில்லிங்கோ..ஆணுடலில் வலது பாகம் சூரிய மண்டலம் -இடது பாகம் சந்திர மண்டலம்.( பெண் உடலில் இது வலது சந்திரன் -இடது சூரியன் என்று மாறும்) .
பாருங்க ஆத்தா நமக்கு எவ்ள கிட்டக்கா இருக்கா. நாமதேன் உணரமாட்டேங்கறோம். இன்னம் கொஞ்சம் அஸ்ட்ரா டச்சோட பார்த்தா சந்திரன் ஜலதத்துவம்.ஹ்யூமன் பாடியில 70 சதம் நீர் தான். பாடியில இருக்கிற கொழுப்பு,புரோட்டின், விட்டமின் குறைஞ்சா கூட அதனோட எஃபெக்ட் நிதானமாதான் வெளீய வரும்.ஆனால் நீர் சத்து குறைஞ்சா ..ஒடனே டீலாயிர்ரம்.ஆக நம்ம பாடியில உள்ள நீர் சத்தே சந்திரமண்டலம். அதுல சக்தி வாசம் புரியறாள் போல.

இந்த தசரா முடியற வரைக்கும் இன்னம் சில நாமாக்களை வியாக்யானம் பண்ண உத்தேசம் .உங்கள் கருத்துக்களை தவறாது தெரிவிக்கவும்.

Advertisements

4 thoughts on “புருஷன் மாரையே போட்டு தள்ளும் மனைவியர்

  துடிமன்னன் said:
  October 20, 2012 at 4:36 am

  /**
  காலாயை
  **
  காளாயை = கருமை நிறைந்தவளே எனப் பொருள் கொள்ளலாம்.
  இந்தி/சமற்கிருதத்தில் ‘ள’ மட்டுமே உண்டு.

  காளமேகம் = கார் மேகம்.

  காள சர்ப்ப யோகம் (கரும் பாம்பினால் உருவாக்கபடும் தோஷம்) என்பதுதான் கால சர்ப்ப யோகம் என்று தவறாகக் கூறப்படுகிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு இல்லையெனில், ராகு/கேது-வுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்?

  !! குண்டு போட்டாச்சு , இனி புகையட்டும்!!!

   S Murugesan said:
   October 20, 2012 at 8:14 am

   வாங்கய்யா !
   சமஸ்கிருதம் ,இந்தி,தெலுங்குல்லாம் ஒரே கேட்டகிரி . வார்த்தைகள் உச்சரிப்பு- அருத்தம் கூட ஒரே மாதிரி இருக்கும்.

   மேலும் “கால்”ங்கற வார்த்தைய பத்தி ஓஷோவே மென்ஷன் பண்ணியிருக்காரு. “காலா”ங்கற வார்த்தைக்கு கருப்புங்கற அருத்தம் இருக்கு. இல்லேங்கலை. ஆனால் “கால்”ங்கற வார்த்தைக்கு மட்டும் காலம் -எமன் ங்கற வார்த்தை கியாரண்டி.

   காளஹஸ்தி ஓகே .அருத்தம்? தேடிப்பார்க்கிறேன். காலசர்ப்ப யோகம் ? இப்பம் ஃபீல்டு ஒர்க்குல இருக்கம். மேல் மாடிக்கு சப்ளை குறைஞ்சு போச்சு..

   நிதானமா -முக்கி -ரோசிச்சு பதில் தரேனே !

  துடிமன்னன் said:
  October 20, 2012 at 4:43 am

  /**
  பத்து பதினைஞ்சு வருசம் எலியும் பூனையுமா குடித்தனம் பண்ணாலும் புருசன் கிட்ட உள்ள குணங்களில் பலது பொஞ்சாதிக்கும் -பொஞ்சாதிக்கு உள்ள குணங்களில் பலதும் புருசனுக்கு வந்துரும்.
  **/
  குணம் மட்டும் அல்ல, சிலபேர் முகம் கூட ஒரே சாயலுக்கு வந்து விடுகிறது, இதை நான் கண்ணாரப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக, எனக்கொரு அலுவலக நண்பர், அவருடைய மனைவியை நான் பார்த்தது இல்லை. ஒருமுறை கம்பெனி நடத்திய ஒரு ஃபாமிலி பார்ட்டியில் ஒரு பெண்மணியைப் பார்த்தேன், உடனே நம் நண்பரின் நினைவு வந்தது. சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வந்த நண்பர், அப்பெண்மணியைத் தனது மனைவி என்று அறிமுகப்படுத்தினார்!

  arul said:
  October 20, 2012 at 5:56 am

  nice article

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s