கூட்டி கொடுக்கும் தமிழ் பத்திரிக்கைகள்

Posted on

அக்பர் காலத்துக்கு மிந்தி இந்துக்களுக்கு ஜசியான்னு ஒரு வரி போடுவாய்ங்களாம். தீர்த்தயாத்திரை போகனும்னா இந்த வரியை கட்டனும். எனக்கென்னமோ இது நல்ல அம்சமாத்தான் தோனுது. தீர்த்த யாத்திரைகளால ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவது – சந்தேகாஸ்பதம் தான்.

ஓட்டை பாத்திரங்களை கங்கையிலயே முங்கி எடுத்தாலும் ப்ர்ர்ர்ர்ர். இதுவே நல்ல பாத்திரம் “அண்டை வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதத்துலயே நிரம்பிரும்.

அரசாங்கம் -நிர்வாகத்தை பொருத்தவரை ஆன்மீகம்ங்கறதே அன் ப்ரொடக்டிவ். ஒரு பிரதமர்/முதல்வர்/கவர்னர்/ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் அட ஒரு சலூன் காரராவே இருந்தாலும் அவரு தீர்த்த யாத்திரை போனா டூரிசம் டெவலப் ஆகலாமே தவிர – இது கூட வெளி நாட்டு காரன் வந்தா அன்னிய செலாவணி சாஸ்தியாகும். லோக்கள் ஆளு போனா என்ன நடக்கும்? அதுவும் லட்சக்கணக்குல போனா உற்பத்தி -சேவை துறைகள் தான் முடங்கும். அரசாங்கத்துக்கு வரி நஷ்டம் தேன்.

ஒரு முஸ்லீமோ -கிறிஸ்தவனோ வருசத்துல ஒரு தாட்டி ஹஜ் -ஜெருசேலம்னு போய் வந்துர்ராய்ங்க.ஆனால் இந்துக்களுக்கு? வருசம்லாம் வாய்ப்பிருக்கு. ஆக ஜசியா வரி கரீட்டு தான்.

அக்பர் இந்துக்கள் கிட்டே அதும் முக்கியமா ராஜபுத்திரர்கள்கிட்டே லொள்ளு வச்சிக்கிட்டா ஸ்திரத்துவம் – நிர்வாகம் கஷ்டம்னுட்டு அஜீஸ் ஆயிட்டாரு. இன்னைக்கு நம்ம “மத சார்பற்ற அரசுகள்” வாக்கு வங்கி அரசியல் நடத்தறாப்ல அக்பர் ஜசியா வரியை ரத்து பண்ணிட்டாரு அது வேற மேட்டரு.

ஔரங்கசீப் அதை மறுபடி அமலுக்கு கொண்டுவந்தாரு. இந்துத்வா சக்திகள் அவரை வில்லனா சித்தரிக்க இதுவும் ஒரு காரணம். சரி ஓவரா சரித்திரம் பேசினா கடுப்பாயிருவிக.

இன்றைய காலகட்டத்துக்கு வந்துர்ரன். நாம இருக்கிறது ஆந்திர மானிலம் சித்தூர். (தெரிஞ்சகதை தானே ரிப்பீட்டு எதுக்குன்னு கேப்பிக சொல்றேன்) நமக்கும் இந்த பத்திரிக்கைகள் படிக்கிற வழக்கம் இருக்கு. சிற்றிதழ்கள் இத்யாதி இல்லின்னாலும் பிரபல பத்திரிக்கைகளை ஒரு ஓட்டு ஓட்டிர்ரது.

வழக்கமா லெண்டிங் லைப்ரரியில தான் வாங்கி படிக்கிறது. சில சமயம் அகாலமா புது பத்திரிக்கை படிக்கனுங்கற ” அரிப்பு” சாஸ்தியாயிட்டா பஸ் ஸ்டாண்டு பக்கம் ஒதுங்கறதுண்டு.

தாளி ..ஏறக்குறைய எல்லா பத்திரிக்கையும் ரெண்டு விலை வச்சிருக்கான். தமிழகம் மட்டும் ஒரு விலை. வெளி மானிலங்களுக்கு ஒரு விலை. ஒரு ரூவா அதிகம். வெளி மானிலத்தமிழன் தமிழ் பத்திரிக்கைய விலைக்கு வாங்கி படிக்கிறான்னா அவனை என்கரேஜ் பண்ணனும்.ஒரு ரூவா குறைச்சு கொடுக்கனும். இவிக கூட்டி கொடுக்கிறாய்ங்க. ஸ் அப்பாடா எப்படியோ பதிவின் தலைப்பை ஜஸ்டிஃபை செய்தாச்சு.

கேட்டா வரிம்பான். மானில அரசு வரியா? மத்திய அரசு வரியா? மானில அரசு வரின்னா அது தமிழக அரசு போடற வரியா? ஆந்திர அரசு போடற வரியா? அதை எதிர்த்து போராடவேணாமா? எங்க தலையில மிளகாய் அரைக்கிறானுவ.

நிற்க ஆக்சுவலா இன்னைக்கு ” ஆந்திர அரசியல் : ஒரு லாங் ஷாட்”னுட்டு ஒரு பதிவை போடத்தான் நினைச்சோம். இங்கன லாங் ஷாட்டுங்கற வார்த்தைய போட்டதுக்கு காரணம் லாங் ஷாட்ல பார்த்தாதான் அவுட் லைன் தெரியும்.

இதை படிக்கிற தமிழ் நாட்ல இருக்கிற உங்களுக்கு /அ வெளி மானில / அ புலம் பெயர் தமிழரான உங்களுக்கு ஆந்திர அரசியலோட டீட்டெய்ல்ட் அப்டேட் தேவையில்லாத மேட்டரு. நாங்கல்லாம் ஒரு ரூவா சாஸ்தி கொடுத்து பத்திரிக்கை வாங்கி எங்களுக்கு தேவையில்லாத மேட்டரை படிச்சிட்டிருக்கோம்.
தலை எழுத்து.

நிற்க இந்த பதிவில் ஆந்திர அரசியல் பத்தி எழுத நினைச்சதுக்கு காரணம் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் டிக்கெட் போட்ட பிறவு , அவர் மகன் ஜகன் காங்கிரசை கை கழுவின பிறகு செயில்ல கிடக்காரு. உத்தாரா 150 நாள் ஆகியிருக்கலாம்.

ஒரு பக்கம் சந்திரபாபு உங்களுக்காக வரேன்னுட்டு பாதயாத்திரை செய்து தன் இருண்ட கால ஆட்சியை ஞா படுத்தி சேம் சைட் கோல் போட்டுக்கிட்டே போயிட்டிருக்காரு.

இன்னொரு பக்கம் முதல்வர் கிரண் இந்திரம்ம பாட்டான்னுட்டு ( பாட்டான்னா பாட்டு இல்லிங்கோ -பாதை/வழினு அருத்தம் அவ்ளதேன்) கெவுர்மென்டு செலவுல ஜில்லா ஜில்லாவா போயிட்டிருக்காரு.

ஜகன் கட்சிக்கு கடந்த ஸ்டார் கேம்பெய்னரா இருந்த ஜகன் தங்கை ஷர்மிலா நேத்திக்கு பாத யாத்திரை ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஃப்யூச்சர் தெரியனும்னா பாஸ்டை பார்க்கனும். ரெம்ப பாஸ்டுக்கு போயிட்டா நீங்க சைட்ல இருந்து பாஸ் ஆயிருவிங்க.அதனாலதேன் உங்களுக்கு வலிக்காம ஆந்திர அரசியலை சொல்ல நினைச்சேன்.

நம்ம லோக்கல் ஆட் பேஸ்ட் மேகசின் சார்பா அம்மன் சத நாமாவளி கையடக்க புத்தக வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. ( இலவச வினியோகம் தேன் -வருமானம் ? விளம்பரம் மூலமாத்தான்) . தசமிக்கு வினியோகிக்க திட்டம்.

இந்த மேட்டரை ஃபேஸ்புக்ல அப்டே செய்ததுல தமிழா தெலுங்கான்னு கூட விஜாரிக்காம ஆன் லைன் தோழமைகள் கான்ட்ரிப்யூட் பண்ணிட்டாய்ங்க. இதுவரை சேர்ந்த தொகை? வேணாம்ங்கோ இதுக்கும் கெவுர்மென்டுல வரி கேட்க வந்துரப்போறானுவ.

தமிழர் காசுல தெலுங்கு புஸ்தவம் அடிச்சு இலவசமா கொடுத்து என்ன புண்ணியம்னு ரோசிச்சு தமிழ்லயும் போட வேலைய ஆரம்பிச்சுட்டம். ( நன் கொடையாளர் விவரம் புஸ்தவத்துல விலாவாரியா வரும்)

இலவச பிரதிகள் தேவைப்படுவோர் / இந்த நெல்ல வேலைக்கு கான்ட் ரிப்யூட் செய்ய விரும்புவோர் இங்கு அழுத்தவும்.

ஆந்திர அரசியல்? இந்த வேலை முடியட்டும்.. நோண்டி நுங்கெடுத்துருவம்.உடுங்க ஜூட்டு..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s