பலான அனுபவங்கள்: 6

Posted on

பலான அனுபவங்கள்னு தலைப்பு வச்சிட்டு சொந்த முதுகை சுவாரஸ்யமா சொறிஞ்சு விட்டுக்கறாப்ல வெறுமனே சொந்த கதைய சொல்லி அறுக்காம – நம்ம ஜாதகம் -ஜாதகத்திலான கிரக நிலைகள் – அந்தந்த கால கட்டத்துல நமக்கு என்னென்ன தசாபுக்தி நடந்ததுங்கற டேட்டாவையும் கொடுத்து அனலைஸ் பண்ணப்போறேன். கடந்த காலம்ங்கறது ஒரு பிணம்.அதை மார்ச்சுவரி பண்ணா சில அசலான மேட்டர்லாம் வெளிய வரும். இது ஜோதிட ஆர்வம் உள்ளவுகளுக்கும் பயன் படும் .இல்லாதவுகளுக்கும் பயன்படும்.ஓகேவா.. உடுங்க ஜூட்டு.. முக்கியமா இந்த தொடர்ல நான் எடுத்துக்கப்போற கால கட்டம் 20/Apr/1973 முதல் 20/Apr/1993 வரை .ஏன்னா இந்த காலகட்டத்துல தான் நமுக்கு சுக்கிர தசை நடந்ததுங்கோ..இந்த தொடருக்கு பலான அனுபவங்கள்ங்கற தலைப்பு வைக்க முக்கிய காரணம் இதுதான்.

மொதல்ல நம்ம ராசி சக்கரம்:

லக்னம் கடகம். ராசி :சிம்மம் நட்சத்திரம்: மகம் ,லக்னத்துலயே 2 க்கு அதிபதியான சூரியன், 6/9 க்கு அதிபதியான குரு , 3/12 க்கு அதிபதியான புதன் , தனபாவத்துல லக்னாதிபதியான சந்திரன் மற்றும் 4/11 க்கு அதிபதியான சுக்கிரன், நான்கில் 5/10 க்கு அதிபதியான செவ் +கேது , பாக்ய பாவத்துல 7/8 க்கு அதிபதியான சனி வக்ரம். நட்சத்திரம் மகம்.

கடந்த பதிவுகள்ள 6-7 வகுப்புகள் படிக்கிற சமயம் ஏற்பட்ட அனுபவங்களை சொன்னேன். ( இந்த காலகட்டத்துக்கான தசாபுக்தி டேட்டா வேணம்னா கடந்த பதிவை பாருங்க.) இன்னைக்கு எட்டாம் வகுப்பு அனுபவங்கள். .1967+5+7 = 1979 ?

நமுக்கு 19/Apr/1979 => முதல் 19/Jun/1980 வரை சுக்கிர தசையில செவ் புக்தி நடந்தது/ சுக்கிர செவ் சம்பந்தப்பட்டா என்னா ரிசல்ட்டுன்னு தனிப்பதிவே இருக்கு . ஆர்வம் உள்ளவுக இங்கன அழுத்தி படிச்சுருங்க.

நம்ம ஜாதகத்துல சுக்கிரனுடைய ராசியான துலாம்ல செவ் அதுவும் கேதுவோட.அப்பம் வயசா வாலிப வயசு. இந்த 4 ல் செவ் இளமையில தர்க அறிவையும் – அடி தடி ரகளைகளையும் – சம்பாதிக்கிற வயசுல தரித்திரத்தையும் – நடுவயசுல அ முதுமையில இதய நோயையும் கொடுக்கக்கூடியது. ஏதோ கூட கேது இருக்கிறதால ” ஆத்தா ..எத்தனா கொடுத்தியா பிரசாதம் -எத்தனா எடுத்துக்கினியா காணிக்கை” ஆளை விடுன்னுட்டு ஒரு ஃபிலசாஃபிக்கல் அவுட்லுக் வந்துருச்சு. இல்லின்னா நாம போடற தம்முக்கு இப்பத்துக்கு அரை டஜன் தடவை ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்திருக்கனும்.

சுக்கிரன் ஜனனேந்திரியத்தை குறிக்கும் கிரகம்.செவ் ரத்தத்தை குறிக்கும் கிரகம். மொத ஐட்டத்துல ரெண்டாவது ஐட்டம் பாய்ஞ்சா என்ன ஆகும்?

எல்லாம் சரி. அதே நேரம் நமுக்கு அலிகிரகமான புதன் லக்னத்துல உட்கார்ந்து ஃபிசிக்கல் ஆர்காசத்தையெல்லாம் தாமதிச்சிட்டிருந்த வயசு அது. மொத ஸ்கலனம் எப்பங்கறிங்க? 1984 லதேன். இன்னம் அஞ்சு வருசம் பாக்கி இருக்கச்சொல்லவே கெட்ட ஆட்டம்.

இன்னைக்குள்ள மாத்ரு பூதத்தனம்லாம் அன்னைக்கே இருந்ததுன்னா பீலா விடறான்யாம்பிங்க.ஆனால் நெஜம். நம்ம நண்பர் நாம எடுத்த பாடத்தை டெஸ்க்ல படம் வரைஞ்சு பாகம் குறிச்சு ட்யூப் லைட்டுங்களுக்கு பாடம் எடுக்க சொல்ல நாமதேன் லீடரு. அதனால அந்த டெஸ்க் பக்கமா ரவுண்ட்ஸ் வர்ரப்போ கரெக்சன் சொல்ட்டு போயிக்கினே இருப்பம்.

வருசம் தவறாம கர்பமாகிற டீச்சருங்க (2) , ஆறு,ஏழு வகுப்புல மாணவிகள் தோள் மேல கை போட்டு “பீத்தற” வேலை பண்ற ஆசிரியன்கள் (2) இதுல ஒரு பார்ட்டி வெறும் படம் மட்டும் பார்க்கும் போல. இன்னொரு பார்ட்டி “செமை மேட்டரு” போல . மாணவி கர்பம் எல்லாம் ஆயிருக்கு. அவிக குடும்பம் கௌரதையான குடும்பங்கறதால கண்ணும் -காதும் வச்சாப்ல காரியத்தை முடிச்சுட்டாய்ங்க. ஒரே பெண்ணை ஆசிரியர் மாணவர் லவ்ஸ் விட்ட கதையெல்லாம் (கருமமெல்லாம்னு சொல்லனும்) கூட நடந்தேறின என்விரான்மென்ட்ல நாம மட்டும் ச்சொம்மா இருக்க முடியுமா பாஸூ..

எட்டுக்கு வந்தம். தென் கிழக்கு திசையிலருந்து ஒரு டிக்கெட்டு நமக்காகவே வந்தாப்ல சித்தூர் வந்து அதுவும் தனிய ரூம் எடுத்துக்கிட்டு படிக்க வந்தது. அதுவும் நடுவாந்திரத்தில வந்து சேர்ந்தது,

ஆந்திராவுல அறிவியல்,கணிதம்,சமூகவியலுக்கெல்லாம் புஸ்தவம் கிடையாது. பல வருசத்துக்கு மிந்தி ஆரோ இங்க்லீஷ்லருந்தோ தெலுங்குலருந்தோ டப்பிங் பண்ணி நோட்ஸ் எழுத வச்சிருப்பாய்ங்க. ப்ரைட் ஸ்டூடண்ட்ஸோட நோட்ஸை வாத்தியார் வாங்கி வச்சுருவாரு.அதை நமக்கு கொடுக்க நாம ஸ்பெசல் கிளாஸ்ல டிக்டேட் பண்ணனும். (ஸ்கூலு 9.30 க்கு -பெசல் கிளாஸு 8.30 – 9.30 வரைக்கும்.

அதுலயும் சமூகவியல் வாத்தியாருதேன் அசிஸ்டன்ட் ஹெச்.எம். பயங்கர டகுலு பார்ட்டி. வெறுமனே கார்வார் பண்றதோட சரி.. அவரோட க்ளாஸ் எல்லாம் நமக்குதேன். அறிவியல் ? பத்தாங்கிளாஸுக்கு பப்ளிக் எக்ஸாமுன்னுட்டு மேடம் அவிக மேல கான்சன்ட் ரேட் பண்ணுவாய்ங்க. அவிக க்ளாஸும் நமக்குத்தேன். ஒரு கட்டத்துல இங்கிலீஷ் நோட்ஸே நாமதான் எளுதி போட்டுக்கிட்டிருந்தம்னா பார்த்துக்கங்களேன்.

ஆக நாம ஸ்தூலமாத்தான் ஸ்டூடண்டே தவிர – ட்ராயர் போட்ட வாத்தியாரு. லைம் லைட்டுன்னா இதான். இதுல நடுவாந்தரத்துல வந்து சேர்ந்த கேசுக்கு அப்டேஷனுக்கு வாத்தியாரு ஆரை ரெக்கமெண்ட் பண்ணுவாரு. ஹி ஹி..

(தொடரும்)

7 thoughts on “பலான அனுபவங்கள்: 6

  துடிமன்னன் said:
  October 17, 2012 at 11:05 am

  /**இது ஜோதிட ஆர்வம் உள்ளவுகளுக்கும் பயன் படும் .இல்லாதவுகளுக்கும் பயன்படும்.ஓகேவா
  **/

  உங்கள் அனுபவம் நன்றாக உள்ளது.

   S Murugesan said:
   October 17, 2012 at 11:10 am

   ஜா.ரா!
   இந்த பேரு நல்லாருக்கு. ஆனால் ஜால்ரா சத்தம் சாஸ்தி..

  MINNAL said:
  October 17, 2012 at 12:23 pm

  EPPIDI TALAI, JA.RA. EPIDI POTALUM ADIKIREEINGA

   S Murugesan said:
   October 17, 2012 at 3:51 pm

   வாம்மா மின்னல் !
   அஹ்.. அதெல்லாம் இட்சிணி மின்னல் வெட்டின மாதிரி சொல்லிரும்.

  துடிமன்னன் said:
  October 18, 2012 at 5:03 am

  /*

  துடிமன்னன்

  17 hours ago

  /**இது ஜோதிட ஆர்வம் உள்ளவுகளுக்கும் பயன் படும் .இல்லாதவுகளுக்கும் பயன்படும்.ஓகேவா
  **/

  உங்கள் அனுபவம் நன்றாக உள்ளது.
  **/

  இது நான் இட்ட கம்மெண்ட் இல்லையே. எந்தப்பயல் என் பேருல இந்தக் கம்மெண்ட் போட்டிருந்தாலும் போய்
  http://kelvikal.blogspot.in/2012/10/anna-sonna-peruchali-kathai-part1.html
  http://kelvikal.blogspot.in/2012/10/anna-sonna-peruchali-kathai-part2.html

  இத ரெண்டயும் படிச்சுட்டு வரட்டும்.

   S Murugesan said:
   October 18, 2012 at 6:02 am

   திருப்பதிக்கே லட்டு? ஹூம்.. நீக்கிரலாம்

  துடிமன்னன் said:
  October 18, 2012 at 5:09 am

  /**
  இன்னொரு பார்ட்டி “செமை மேட்டரு” போல . மாணவி கர்பம் எல்லாம் ஆயிருக்கு.
  **/
  கல்விக்கூடம் கலவிக்கூடம் ஆயிருச்சுன்னு சொல்லுங்க. நான் படிச்ச ஸ்கூல்லயும் இப்படி ஒருத்தன் இருந்தான். ஆனா இவ்வளவு தூரம் போற ஆள் இல்ல. பொண்ணுகள தொப்புளப் பிடிச்சுக் கிள்ளுவான்.
  ஒரு பொண்ணு பேரு சிவகாமி, அவளப்பாத்து ‘சிவகாமி, கொஞ்சம் காமி’ ன்னு சொல்வான். அப்பல்லாம் நமக்கு இவ்வளவு வெவரம் பத்தாது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s