நாடாவை அவிழ்த்து பார்த்தால் : கலைஞர்

Posted on

null

அண்ணே வணக்கம்ணே !
ஒரு காலத்துல எம்.ஜி.ஆர் மந்திரி சபையில பி.டி.சரஸ்வதின்னு ஒரு மந்திரி (சமூக நலத்துறை) இருந்தாய்ங்களாம். அப்பம் கலைஞர் எதிர்கட்சி தலீவரு (சொல்லனுமா என்ன?) சமூக நலத்துறை மேல சகட்டு மேனிக்கு புகார் பட்டியல் வாசிக்க. . மந்திரி மறுக்க கலீஞரு இர்ரிட்டேட் ஆகி (ஜாதகத்துல 2-8 ல கேது ராகு வேற) “நாடாவை அவிழ்த்து பார்த்தால் தெரியும்”னுட்டாராம். சட்டமன்றம் பொங்கி எழ ” நான் சொன்னது கோப்பு நாடாவை”னுட்டு கழண்டு கிட்டாராம்.

சம்பந்தா சம்பந்தமில்லாம எதுக்கு இந்த ஃப்ளாஷ் பேக்குன்னு கேப்பிக.சொல்றேன். சினிமால வர்ர இரட்டை அருத்த வசனத்துக்கெல்லாம் மகளிர் சங்கம் இத்யாதி போர்க்கொடி உசத்திக்கிட்டிருப்பாய்ங்க. சுஜாதா சொல்வாரு : ரெண்டாவது அருத்தம் உங்க மண்டையில இருக்கு.

கலீஞரு நாடாவை அவிழ்த்து பார்த்தால்னு சொன்னதுமே சனங்க மைண்ட்ல பாவாடை நாடாதான் ஓடனுமா என்ன? மன்சன் பிறக்கறதே செக்ஸ்ல தான் – மனித உடலின் -மனதின் மையம் செக்ஸ் தான்.ஆண் பெண் சேர்ந்து எத பேசினாலும் அண்டர் கரண்ட்ல இதான் ஓடும். ஆண் பெண் சேர்ந்து எதை செய்தாலும் அண்டர் கரண்ட்ல இதான் ஓடும்.

அதுவும் ஏறக்குறைய செக்ஸ் தடை செய்யப்பட்டிருக்கிற இந்த ஹிப்பாக்ரட்டிக் -கன்சர்வேட்டிவ் சொசைட்டில ஹ்யூமன் மைண்டு இப்டித்தான் வேலை செய்யும். ஸ் அப்பாடா ஒரு தத்துவம் ஓவர்.

இப்பம் இந்த அவிழ்த்து பார்க்கிற கான்செப்டுக்கு வந்துர்ரன்.

இங்கன – இந்த சமுதாயத்துல எல்லாத்துக்குமெ ஒரு பூச்சு இருக்கு. ஒரு கவர் இருக்கு. அந்த கவரை பிரிச்சு பார்த்தாதான் ஒரிஜினல் பிக்சரே தெரியும்.

தெலுங்குல “பைன பர்சனாலிட்டி லோன முனிசிப்பாலிட்டி”ம்பாய்ங்க. தமிழ்ல “மேல பார்த்தா அழகான கொண்டையாம் தாழம்பூவாம் ..பிச்சு பார்த்தா ஈறும் பேனுமாம்”ங்கறோம்.

நம்ம சொந்த கதை எல்லாருக்கும் மனப்பாடம். 2007 வரைக்கும் கூட நாம ப்ரெட் ஹன்டருதேன். இடையிடையில வர்ர ரிலீஃப் சீசன்ல ஐந்தாண்டு திட்டம் கணக்கா ரோசிச்சு பொருட்களை வாங்கறது . கஷ்ட காலம் வந்தப்போ திருட்டு ஜாமான் விக்கிறாப்ல கால் விலைக்கும் அரைக்கால் விலைக்கும் வித்து தொலைச்சுர்ரது.

அந்த கஷ்ட காலத்துல வந்த நஷ்டத்தை தவிர்க்க -எதை வாங்கினாலும் செகண்ட்ஸ்ல வாங்கறதை ஒரு கொள்கை முடிவாவே வச்சிருக்கம்.

இந்த சீக்வென்ஸ்ல வாங்கினது தான் வாஷிங் மெஷினும். வாங்கினது ரெண்டாயிரம். கொடுத்த காசுக்கு ஒரு பத்து மாசம் மாங்கு மாங்குன்னு வேலை செய்துருச்சு. ( ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ்ஸுங்களுக்கு எக்ஸ்டென்ஷன் கொடுத்த கதை தேன்)

கடந்த மாசம் ஒட்கார்ந்துக்கிச்சு . துணி போடலின்னா வேகமா சுத்தும். துணிய போட்டதும் உட்கார்ந்துக்கும். மொதல்ல ரோட்டீனா அதை நமக்கு வித்த பார்ட்டிய டச் பண்ணோம். அவரு இதோ அதோன்னு பூச்சி காட்டினாரு. இன்னொரு விஞ்ஞானிய வரவழைச்சோம்.அவரு பேக் டோரை மட்டும் திறந்து பார்த்துட்டு ஒரு 750 ரூ வச்சுக்கங்க முடிச்சுரலாம்னாரு.

நாலு இடத்துல டச் பண்ணதுல எல்லாரும் பெல்ட் மேல பழி போட்டாய்ங்க. மக்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்கனும்னு ரூ.85 கொடுத்து புது பெல்ட் வாங்கி போட்டாச்சு (செல்ஃப் சர்வீஸுங்கோ) .

வாங்கிவர அனுப்பிச்சது மகளை. எக்ஸ்பாண்ட் ஆயிட்ட பெல்டை பார்த்து கடைக்காரன் அதை விட ஒரு அரை இஞ்ச் குறைவான பெல்ட்டை தந்திருக்கனும்.அல்லது மகளே கேட்டிருக்கலாம் (லாஜிக்கு) அல்லது நமக்காச்சும் இந்த பாய்ண்ட் ஸ்பார்க் ஆகியிருக்கலாம். ஆகல.

வாங்கிட்டு வந்த பெல்ட்டை மாத்தின பிறகு ஞம ஞமங்குது.என்னடா இது நாம ஒரு சிவிலியன் இவ்ள அசால்ட்டா பெல்ட்டை மாத்திட்டமேன்னு ரோசிச்சன். சரி ஒழியட்டும்னு ட்ரையல் பார்த்தா கலைஞர் ஆட்சி போயி ஜெயா ஆட்சி வந்த கணக்கா தான் நிலைமை இருக்கு.

இன்னம் கொஞ்சம் மேஜர் டிஃபெக்டா இருக்கும் போலன்னுட்டு மோட்டர்,புல்லி, பக்கெட்டை சுழட்டற சாஃப்டை விஜாரிச்சோம்.

சாஃப்டையும் பக்கெட் புல்லியையும் இணைக்கிற நெட் லூஸு.டைட் பண்ணலாம்னு பார்த்தா ஜாம் ஆயிருக்கு. தண்ணி ஒழுகுதுங்கோ.. விலைமகள் மவனுவ சாஃப்டையே பித்தளையில போட்டிருக்கலாம்.கு.பட்சம் பக்கெட்டும் சாஃப்டும் இணையற இடத்துல ஒரு பிளாஸ்டிக் வாஷராச்சும் போட்டிருக்கலாம். பக்கெட்லருந்து தண்ணிர் ஒழுகி இந்த நிலை.

கழட்டவும் முடியலை – டைட் பண்ணவும் முடியலை. இனி சர்ஜரிதான்னு டிசைட் பண்ணி ஆக்சால அறுத்து எடுத்தாச்சு.

சாஃப்டை கழட்டி லேத்துக்கு கொண்டு போயி மரை போட்டுக்கிட்டு வந்து ஃபிட் பண்ணி பார்த்தோம். பக்கெட் -பக்கெட் புல்லி எதுலயும் ஷேக் இல்லை .எல்லாம் பக்கா.

மறுபடி ட்ரையல் ..ஒரு இழவு மாற்றமும் இல்லை. ஆக மிச்சமிருக்கிற சாய்ஸ் பெல்ட் மட்டும் . இன்னொரு பெல்ட் வாங்கற அட்வென்சருக்கு தில்லு வரல்லை. புது பெல்ட்ல எதுனா குரங்கு வேலை செய்து ஃபெய்ல் ஆயிட்டா ரூ.85 வட்டம்.

பழைய பெல்ட்டை எடுத்து நமக்கு தேவையான அளவுக்கு மார்க் பண்ணி பைன்டிங் வைர் போட்டு ஒரு புத்தூர் கட்டு கட்டி தூக்கி மாட்டிட்டம் வாஷிங் மெஷின் நவ் ரன்னிங்.

ஆகவேண்டிய செலவு ரூ.750 :

இந்த கொட்டேஷனை கொடுத்த எலக்ட்ரீஷியனுக்கு காஃபி செலவுக்கு கொடுத்து அனுப்பினது ரூ.20
புது பெல்ட்டு ரூ.85 (இதை உபயோகிக்கவே இல்லை .ஸ்பேரா வச்சிருக்கம் )
சாஃப்டுக்கு மறை போட ரூ.20
நாம வேலை செய்ததெல்லாம் பவர் கட் நேரத்துல அதுவும் அன்றைய அஜெண்டால உள்ள ஜாதகங்களுக்கு மொபைல்ல பலன் பதிவு பண்ண பிற்காடுதேன்.

மிஞ்சிப்போனா ஒரு 20 ரூவா பெட்ரோல் செலவாயிருக்கும்.

ஆக செலவழிச்சிருக்க வேண்டியது ரூ.750/-
ஆக மொத்த செலவு : 20+85+20 தேன் மொத்தம் 125/-

நமக்கு மிச்சமானது : ரூ.625 + தன்னம்பிக்கை+ உருவாக்கின திருப்தி..

இது எப்படி சாத்தியமாச்சு? அவிழ்த்து பார்த்ததாலதானே..

Advertisements

3 thoughts on “நாடாவை அவிழ்த்து பார்த்தால் : கலைஞர்

  துடிமன்னன் said:
  October 17, 2012 at 5:56 am

  /**
  இந்த ஹிப்பாக்ரட்டிக் -கன்சர்வேட்டிவ் சொசைட்டில ஹ்யூமன் மைண்டு இப்டித்தான் வேலை செய்யும்
  **/
  இந்தியில ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம், ‘அமெரிக்கன் மூளையை வேலையில் வைப்பான், –1–ஐ –2– ல் வைப்பான்.
  இந்தியன் –1–ஐ வேலையில் வைப்பான், மூளையை –2–ல் வைப்பான் என்பது அதன் பொருள்.
  1, 2 என்பதை நீங்கள் நீங்கள் நிரப்பைப் படியுங்கள். இது ஏறக்குறைய உண்மையும் கூட. கில்மா எளிதாகக் கிடைப்பதால், மற்ற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். நாமோ பாதி நேரம் கில்மா சிந்தனையில் இருந்து கொண்டு பல விஷயங்களைக் கோட்டை விடுகிறோம்.

  கொச்சின் தேவதாஸ் said:
  October 17, 2012 at 6:28 pm

  ஐயா தாங்கள் கொடுத்துள்ள தகவல் தவறானது.1971 ல் இரண்டாவது முறை திமுக ஆட்சியைப் பிடித்தது.அப்போது முதல்வர் கலைஞர்.எதிர்கட்சித்லைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கருத்திருமன் அவர்கள்.அந்த எதிர்க்கட்சி வரிசையில் இருந்த டி.என். அனந்தநாயகி என்பவருடன் நடந்த விவாதத்தில்தான் கருணாநிதி நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும் என்றார்.

   S Murugesan said:
   October 17, 2012 at 7:32 pm

   கொச்சின் தேவதாஸ் அவர்களே!
   தனி மனித நினைவுகள் எந்தளவுக்கு பழுதானவை என்பது புரிகிறது . தவறை திருத்தியமைக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s