பலான அனுபவங்கள் : 4 (ஜெயகாந்தன்)

Posted on

அண்ணே வணக்கம்ணே ! நேத்திக்கு வெறுமனே சுக்கிரன் இருந்தா கில்மா தான். வெறுமனே சந்திரன் இருந்தா கற்பனை தான் . ரெண்டு பேரும் சேர்ந்ததாலன்னுட்டு தொங்கல்ல விட்டுட்டன்.

அந்த காலத்துல புருசன் பொஞ்சாதி பகல் நேரத்துல சண்டை ,சாடின்னு அலப்பறை பண்ணா பெருசுக “விடு விடு ..எல்லாம் விளக்கு வச்சப்பறம் சரியா போகும்” அசால்ட்டா சொல்வாய்ங்க. பாக்யராஜ் கூட
“விளக்கு வச்ச நேரத்துல தந்தானனா”னுட்டு பாட்டு எளுத வச்சாரு. சீரியல் கூட பண்ணாப்ல இருக்கு.

அந்த காலத்துல. இந்த தியரிய ரெம்பவே நம்பினாய்ங்க .ஒர்க் அவுட்டும் ஆனாப்ல இருக்கு. அதுக்கு ஆயிரம் காரணம் .

இயற்கையுடன் நெருங்கிய வாழ்க்கை , முக்கியமா யூரியா ,பூச்சி மருந்து கலப்பில்லாத சோறு,தண்ணி மாசில்லாத ,காத்து ,பால்ய திருமணம் , வீடு நிறைய சனங்க. தொட்டுக்க கூட திருட்டு தனம் பண்ணனும்.

இன்னைக்கு எல்லாமே தலை கீழா மாறிப்போச்சு. எது ஒன்னுமே கிடைக்கும் – கிடைக்காதுங்கற டைலமா இருந்தா தான் எல்லாமே சீறீக்கிளம்பும்.

சுஜாதா ஒரு நாவல்ல /அனேக கதைகள்ள மாவாட்ட வளையல்களை இறுக்கிக்கிட்ட கணக்கா ஓப்பனிங் இருந்தா சப்த நாடியும் ஒடுங்கிரும்.

கில்மால கற்பனைக்கு முக்கிய இடம் இருக்கு.ஏன்னா அசலான செயல்ல எந்த வித குழப்பமோ – கவிதையோ – கருமாந்திரமோ கிடையாது. உணவுக்கு ருசியை பசி வழங்கறாப்ல – கில்மாவுக்கு ருசியை பிரம்மச்சரியம் தருகிறது.

உணவு பற்றிய கற்பனை வாய்ல சலைவாவையும் (உமிழ் நீர்) – வவுத்துல ஹைட் ரோ க்ளோரிக் அமிலத்தையும் சுரக்கசெய்றாப்ல கில்மா பற்றிய கற்பனைகள் உடலின் இனப்பெருக்க மண்டலத்தில் அற்புதங்களை ஏற்படுத்துகிறது.

நான் சொல்ல வந்தது இந்த மாதிரி கையாலாகாத கற்பனைகளை அல்ல களத்திலான கற்பனைகள்.கம்பேனியன் மாராப்பை மாத்திப்போட்டாலே புது அனுபவம் கிடைக்கும். இதுல எல்லாத்தையும் மாத்தி ரோசிச்சா புது புது அனுபவங்கள் கிடைக்கும்.

அது பலான நேரத்துல -பலான இடத்துல -பலான போஸ்ச்சர்லன்னு ஃபிக்சடா இருந்தா எல்லாமே சலிச்சு போகும். ஒளிஞ்சுக்கும்.

எது எப்படியோ சந்திர சுக்கிர சேர்க்கை காரணமா -சந்திரன் மனோ காரகன் ங்கறதால ஃபிசிக்கல் ஆர்காசத்தை விட -சைக்கலாஜிக்கல் ப்ளானிங் -அப்ரோச் – முன்னெடுப்பு – வியூகம் -வழி நடத்தல் இத்யாதி தான் நம்மை கவர்ந்தது.

அந்த கடைசியான மேட்டரு தவிர்க்க முடியாதது தான் இல்லேங்கலை. ஆனால் ஓப்பனிங்குக்கும் க்ளைமாக்ஸுக்கும் இடையில ஒரு இடைவெளி இருக்குல்ல.

அதை ஏன் முழுக்க உபயோகிச்சுக்க கூடாதுங்கற பொறி தட்டினதுக்கு சுக்கிர தசைய காரணமா சொல்றத விட சந்திர புக்தியை காரணமா சொல்லலாம். ( 19/Aug/1977 => 19/Apr/1979 )

ஒரு ஆறாங்கிளாஸ் பையன் ஃபிசிக்கலா என்னத்தை கிளிக்க முடியும்.ஆனாலும் ரெண்டு வருசம் ஒரே பெண்ணை கணக்கு பண்ணினேன்.

அவிக அம்மா ஹவுஸ் வைஃப் ,விடோ . தாத்தா ஆத்தா லைன் அப்ல ஏதோ சாதனைகள் /பூஜைகள் செய்துக்கிட்டிருந்ததா ஞா.வயித்து பொழப்புக்கு டெய்லரிங். இதுல அவருக்கு மீடியமா ஒரு பொம்பள.

எப்படியோ அந்த டெய்லர் எங்க அப்பாவுக்கு பரிச்சயமாக -வந்து போக இருக்க – அந்த சாக்குல நாம அவிக வீட்டுக்கு போக வர.. இருந்தம்.

அக்மார்க் ஃபிசிக்கல் காண்டாக்ட்லாம் 1980 லதேன். (பார்ட்டி வேற) ஆனால் இந்த காலகட்டத்துல கண்ணால கிண்ணால கனவெல்லாம் கிடையாது. ஒன்னு ரெண்டு அவசர முத்த தீற்றல்கள் – அரை குறை ஹக்ஸ் இத்யாதிய சாதனையா சொல்லலாம்.

இதெல்லாம் ஸ்கூல் லெவல்ல நடந்த ட்ராக். மற்றபடி மதர்லாண்ட் ட்ராக் வேற இருக்கு அதையும் சொல்லத்தான் போறேன்.

அதுக்கு மிந்தி ஒரு சின்ன க்ளாரிஃபிகேஷன். இந்த பதிவை படிக்கிறதால “எங்களுக்கு என்ன புண்ணியம்:னு சிலர் கேப்பாய்ங்கனு நினைச்சேன். ஒருத்தருதான் கேட்டிருக்காரு. வாழ்க!

இந்த பதிவை படிக்கிறதால உங்களுக்கு அஸ்ட்ராலஜி, சைக்காலஜி,செக்ஸாலஜிங்கற 3 மேட்டர்லயும் ஒரு புரிதல் ஏற்படும்.

எல்லா தப்புகளையும் நாமே செய்து திருத்திக்கனும்னா ஆவிசு போதாது. இந்த மாதிரி மேட்டரை எவனும்
எழுதமாட்டான். ஃபேஸ் டு ஃபேஸ் சொல்றச்சா இஷ்டாத்துக்கு ரீலு விட்டு நமக்கு தாழ்வு மனப்பான்மை வரவச்சுருவாய்ங்க.

உலகத்துலயே கேடு கெட்ட சம்மம் நம்முதுதேன். நமக்கு இமேஜு இத்யாதில எல்லாம் நம்பிக்கை இல்லை. பல காலம் பொய்யாவே வாழ்ந்து சத்தியத்துக்கு திரும்பினதால பொய்னாலே அலர்ஜி. இதுமாதிரி ஒரு மேட்டர் பாஸ்ட்லயும் வராது -ஃப்யூச்சர்லயும் வராது.

அது சரி தலைப்பு என்னமோ ஜெயகாந்தனின் பலான அனுபவம்னு இருக்கு ஜெயகாந்தனோட வெள்ளை மீசையோட நுனி கூட வரலியேன்னு கேப்பிக.

தன் அறியா வயசுல (வகுப்பு?) ஒன் பாத்ரூம் போகறச்ச தனக்கும் (வகுப்பு?) தோழிக்கும் உள்ள கருவி வித்யாசத்தை பார்த்து பேப்பர்ல குழாய் பண்ணி பொருத்தப்பார்த்ததை சொல்லியிருக்காருங்கோ..

ஸ் ..அப்பாடா எப்படியோ தலைப்பை பதிவுல வரவச்சுட்டம். நாளைக்கு சந்திப்போம்.

Advertisements

8 thoughts on “பலான அனுபவங்கள் : 4 (ஜெயகாந்தன்)

  Thudimannan said:
  October 14, 2012 at 7:56 am

  நல்ல முயற்சி, தொடருங்கள்.
  /–
  கில்மால கற்பனைக்கு முக்கிய இடம் இருக்கு.ஏன்னா அசலான செயல்ல எந்த வித குழப்பமோ – கவிதையோ – கருமாந்திரமோ கிடையாது –/

  சரியாகச் சொன்னீர்கள். ஆங்கிலத்தில் இதை ‘fantasy’ என்று சொல்வார்கள். சில சமயம் கனவில் வெளியேறும் ‘–‘ன் அளவு கலவியில் வெளியேறுவதை விட அதிகம் என்பதற்குக் காரணம். அடுத்தவர்களின் ‘அனுபவ’க் கதைகள் கேட்க ஆர்வம் பொங்குவதும் இதனால்தான். ‘PEARL’ என்றொரு புத்தகம் 1900-களில் வந்தது. என்னிடமிருந்து நண்பன் ஒருவன் ஆட்டயப் போட்டுவிட்டான். அது வெளிவந்த காலத்தில் இங்கிலாந்தில் மக்கள் ‘குய்யோ முறையோ’ என்று புலம்பினார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். Nancy Friday என்ற பெண்மணி, பெண்களின் கற்பனைகளையும், அவை அவர்களுடைய கலவி வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க எவ்வாறு உதவின என்பதையும் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். கணவன் – மனைவி இடையேயான கதைகளை விட, சமூகத்திற்கு மாறுபட்ட திருட்டுத்தனமான கதைகள்தான் அதிகம் வரவேற்பைப் பெறுகின்றன என்றும் படித்துள்ளேன். குருவி லேகியத்தை விட இந்த மாதிரிக் கதைகள் அதிகம் ‘வலிமை’ தரக்கூடியவை. என்னமோ போங்க, சந்தர்ப்பம் சூழ்நிலை இருந்தும் எதுவுமே செய்ததில்லை, கற்பனையிலேயே காலம் கழிச்சுட்டேன். எனக்கும் 2-ல் சுக்கிரன் + சந்திரன் கூட்டணி , சுக்கிரன் உச்சம் வேறு. இருந்தாலும் கலியாணம் ஆகி 2 குட்டி போட்ட பின்னால் எனக்குச் சுக்கிர திசை வந்திருக்கிறது. கலவிக்கு பதிலாகக் கடவுளை நோக்கி நான் ஈர்க்கப்பட்டு வருகிறேன். எனக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு (கடவுள் பற்றித்தான் சாமி, கலவி பற்றியல்ல!!!!!), பின்னொரு நாளில் தொடர்பு கொள்கிறேன்..

   S Murugesan said:
   October 14, 2012 at 4:37 pm

   ஐயா,
   //கலவிக்கு பதிலாகக் கடவுளை நோக்கி நான் ஈர்க்கப்பட்டு வருகிறேன்// பதிலாக என்ற வார்த்தைய அப்ஜெக்ட் பண்றேன்.

   ஏன்னா உண்மையான கலவி கடவுளுடன் நிகழ்வது.

  Thudimannan said:
  October 14, 2012 at 8:07 am

  பகுதி 3-ல் இருந்து:
  /–
  ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற உணவால்/ சீரணத்தால் ஏற்படும் அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. அந்த குழந்தை இதுலயே திருப்தியடைய ஆரம்பிச்சுட்டா ஆபத்து.

  ஏன்னா செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.
  —/
  இதைப்பற்றி அதிகம் தெரியாது. ஆனால் கில்மாவிற்கு வாய்ப்பு குறைவாக இருப்பவர்கள் (வேலை காரணமாக மனைவியைப் பிரிந்து இருப்பவர்கள்) பெரும்பாலும் அதிகம் பேசுபவர்களாக இருப்பதைக் கவனித்து இருக்கிறேன். அதற்கு இந்த வாய் – மூலாதாரம் தொடர்புதான் காரணமா? தியானம் செய்யும்போது சிலசமயம் கீழேயும் வாயும் ஒரே நேரத்தில் துடிக்கும். (குண்டலினி? ).

  ‘இரையைப் பார்க்கும்போது எச்சில் ஊறுவது’ இதனால்தானா ?!!!

   S Murugesan said:
   October 14, 2012 at 4:36 pm

   வாங்க!
   நீங்க கோட் பண்ணியிருக்கிறது ஓஷோ சொன்ன விஷயம். நம்ம பகுத்தறிவும் அனுபவமும் ஏத்துக்கிட்ட விஷயம்.

   வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  Thudimannan said:
  October 15, 2012 at 8:46 am

  /–
  ஏன்னா உண்மையான கலவி கடவுளுடன் நிகழ்வது.
  –/
  புரியலையே…

   S Murugesan said:
   October 15, 2012 at 11:08 am

   வாங்க துடிமன்னன் !
   பரமாத்மனை தன்னில் உணராது வெளியில் தேடும் ஆத்மா ஸ்த்ரீ தத்துவம் -பரமாத்மா புருஷ தத்துவம். ஸ்த்ரீ -புருஷர்கள் கலப்பது கலவிதானே..

   (இறுதியில் நடப்பதென்னவோ கலவியில்லை – தானே அது என்ற சின்ன புரிதலை பெற்றுக்கொள்வதே)

  Thudimannan said:
  October 16, 2012 at 5:00 am

  தியானம் செய்யும்போது சிலசமயம் உடம்பு அதிர்வதும், காம உணர்வு அதிகமாவது போலத் தோன்றுவதும் இதனால்தானா?

   S Murugesan said:
   October 16, 2012 at 5:41 am

   ய்யா !
   உங்களில் இருப்பது ஒரே சக்தி. அது கீழ் நோக்கி பாய்ந்தால் காம சக்தி. மேனோக்கி எழுந்தால் அது யோக சக்தி : ஓஷோ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s