பலான அனுபவங்கள் : 3

Posted on

நம்ம சுக்கிர தசை அனுபவங்களை ஜோதிட ஆய்வு கட்டுரை கணக்கா எளுதிக்கிட்டிருக்கம். இதை புரிஞ்சுக்க ராசி சக்கரமாச்சும் இருக்கனும்லியா? அதனால மறுபடியும் நம்ம ராசிச்சக்கர டீட்டெய்லு.

லக்னம் கடகம். ராசி :சிம்மம் நட்சத்திரம்: மகம் ,லக்னத்துலயே 2 க்கு அதிபதியான சூரியன், 6/9 க்கு அதிபதியான குரு , 3/12 க்கு அதிபதியான புதன் , தனபாவத்துல லக்னாதிபதியான சந்திரன் மற்றும் 4/11 க்கு அதிபதியான சுக்கிரன், நான்கில் 5/10 க்கு அதிபதியான செவ் +கேது , பாக்ய பாவத்துல 7/8 க்கு அதிபதியான சனி வக்ரம். நட்சத்திரம் மகம்.

பதிவுக்கு போயிரலாம் …

ஒரு தசை ஒரு ஜாதகரை முழுக்க கெடுக்கனும்னு இருந்தா தன் சுய புக்தியில அடக்கி வாசிக்கும். இதுவா கெடுக்கப்போவுதுங்கற மாதிரி ஒரு ஃபீல் கொடுக்கும்.

சுயபுக்தி முடிஞ்சதுமே வேலைய ஆரம்பிச்சுரும். அடுத்து வர்ர புக்திகளில் எதிர்கால பெரு நஷ்டங்களுக்கான விதைகள் விதைக்கப்பட்டு கிட்டே வரும்.

இப்படி சுக்கிர தசை சூரிய புக்தியிலயே :(19/Aug/1976 => 19/Aug/1977 ) பருவம் பத்திரிக்கை பரிச்சயமாயிருச்சு. வெற்றிலை – படம் விரித்த பாம்பு – க்ரீம் பன் ,பரோட்டாவுக்கு மாவு பிசியறது இத்யாதில்லாம் புரியலின்னாலும் படிச்சாச்சு. மூளை அளவுல – கோடிட்ட இடங்களோடு மேட்டர் ஃபீட் ஆயிருச்சு.. ஆனால் ஃபிசிக்கலா ஒரு இழவும் கிடையாது.

கேள்விகள் ஆரம்பிச்சுருச்சு. பத்து வயசுல லவ்ஸ் ஸ்டார்ட். ஆனால் சைக்காலஜியில இதையெல்லாம் காஃப் லவ்ங்கறான்.(கன்றுக்குட்டி காதல்?)

ஏற்கெனவே சொன்னாப்ல ஊட்டான்டையும் எல்லாம் பெண் குட்டிகளோட தான் சகவாசம். அஞ்சு கல்லு, பல்லாங்குழி, நொண்டி விளையாட்டு. பசங்களோட எதுனா செய்யலாம்னு பார்த்தா ஆத்துக்கு போயி மீன் பிடிக்கறான், மாங்கா தோப்புக்கு போயி மாங்கா அடிக்கிறான், இல்லின்னா பம்பரம்.அதுவும் தலையாரியில பம்பரத்தை நாசமாக்கி அனுப்புவானுவ.

அதுலயும் முத்து கிரி ( கொஞ்சம் போல ரோசனையில இருந்துட்டா போதும் ரப்பர் பந்துல முதுகை பதம் பார்த்திருவானுவ).

அடுத்து கில்லி தாண்டல், இதுல சிங்கிள் டச் ,டபுள் டச்,ட்ரிபிள் டச் எல்லாம் உண்டு. தாளி வத்திக்குச்சியில எல்லாம் எண்ண வேண்டியிருகும் கொடுமைடா சாமி.

இதை விட பெண் குட்டிகளோட ஆடற கலர் கலர் வாட் கலர், கண்ணா மூச்சி,டீச்சர் விளையாட்டு ,அப்பா அம்மா விளையாட்டெல்லாம் சேஃப்.

சதா சர்வ காலம் ஃபீமேல்ஸ் இன்டராக்சன் காரணமா பௌதீக ரீதியா ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தாமதமாயிருச்சுன்னு நினைக்கிறேன்.

இருந்தாலும் அஞ்சாங்கிளாஸ் சம்மர்லன்னு நினைக்கிறேன். ப்ரோக்ரஸ் கார்ட்ல மொத்த வேலை நாட்கள் – மொத்த வருகைன்னு ஒரு Column இருக்கும். அதை ஆக்சுவலா டீச்சருங்க தானே ஃபில் அப் பண்ணனும்.

நம்ம ஸ்கூல்ல ப்ரைட் ஸ்டூடண்ட்ஸை சம்மர் லீவுல ஸ்கூலுகு வரச்சொல்லி நம்மை செய்ய வச்சாய்ங்க. மாடிப்படிக்கு கீழே ஒரு இடம் வருமில்லியா.. அதுக்கு ஒரு கதைவை போட்டு வச்சிருப்பாய்ங்க.

பழைய ரிக்கார்ட்ஸெல்லாம் அதுக்குள்ள கிடக்கும் ( நம்ம ஒக்காபிலரியில டஞ்சன்) . அதுக்குள்ளாற கொஞ்சம் கசமுசாவெல்லாம் ட்ரை பண்ணியாச்சு. ஆனால் கவுன்டர் பார்ட்டுகளுக்கு விழிப்பு போதலியோ அ அவிகளுக்கு சுக்கிர தசை நடக்கலியோ தெரியாது..

அடுத்து சுக்கிர தசையில சந்திரபுக்தி ஆரம்பிச்சுருச்சு. (19/Aug/1977 => முதல் 19/Apr/1979 வரை) சந்திரனா லக்னாதிபதி -சுக்கிரனா கில்மா பார்ட்டி ரெண்டு பேரும் ரெண்டாமிடத்துல சேர்ந்து நின்னு எட்டை பார்க்கிறாய்ங்க. எட்டுன்னா மரணம்/கெண்டம் இத்யாதி தான் ஞா வரும்.ஆனால் எட்டாமிடம் ஜன்ய பாகத்தையும் காட்டும்ங்கறது பல பேருக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.

மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு) இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்)..

ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி).

இப்படி ஆசனப்பருவத்துக்கு போகும் போது இயல்பான மன வளர்ச்சி பாதிக்கப்படுது. ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற உணவால்/ சீரணத்தால் ஏற்படும் அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. அந்த குழந்தை இதுலயே திருப்தியடைய ஆரம்பிச்சுட்டா ஆபத்து.

ஏன்னா செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.

அதிர்ஷ்டவசமா நம்மை பொருத்தவரை இயல்பாகவே ஆசனப்பருவத்தை தாண்டியாச்சு (வாழ்க பால்ய காலத்து சுக்கிரதசை) இல்லின்னா ஹோமோவா – தின்னி பண்டாரமா மாறியிருக்கனும்.

சூரியன் உலகத்தையே தட்டி எழுப்பற பார்ட்டி. சுக்கிர தசையில தன்னோட புக்தி காலத்துல நம்ம ப்ரக்ஞையை தட்டி எழுப்ப – மனோகாரகனாகிய சந்திரன் -சிற்றின்ப காரகனாகிய சுக்கிரனோட சேர்ந்து நின்னதால தன் புக்தி காலத்துல நம்ம மனசை டிஃப்ரன்டா டிசைன் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. வெறுமனே சுக்கிரன் இருந்தா கில்மா தான். வெறுமனே சந்திரன் இருந்தா கற்பனை தான் . ரெண்டு பேரும் சேர்ந்ததால …

அஸ்கு புஸ்கு ..அடுத்த பதிவுக்கு சரக்கு வேணாமா நாளைக்கு சொல்றேன் பாஸூ..

Advertisements

2 thoughts on “பலான அனுபவங்கள் : 3

  S.Sivakumar said:
  October 13, 2012 at 7:30 am

  உங்களோட பலான அனுபவங்களை படிச்சு எங்களுக்கு ஏன்னா ஆவப்போவுது அய்யா?

   S Murugesan said:
   October 13, 2012 at 12:17 pm

   அடுத்த பதிவை பாருங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s