பட்டைய கிளப்பும் புதிய தொழில் வாய்ப்புகள்

Posted on

ஃப்ரீலான்ஸ் ஃபோட்டோ கிராஃபர்கள்/ ஃபோட்டோ ஸ்டுடியோ காரர்கள்: மேட்ரி மோனி/ ரெஸ்யூம்க்கான ஸ்பெஷல் ஃபோட்டோஸ் எடுத்து தரலாம்

கூடவே ஒரு லேடீஸ்/ஜென்ட்ஸ் ப்யூட்டி பார்லரோட புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தா நல்லது. அங்கன போயிட்டு இங்கன வந்து ஃபோட்டோ எடுத்தா பெட்டர் ரிசல்ட் கிடைக்கும்.

சரியான ஜட்ஜிங், எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா சினிமா சான்ஸுக்கு ட்ரை பண்றவுகளுக்கு ஆல்பம் கூட பண்ணி தரலாம்.

(இது சுக்ர ,ராகு காரகம்)

பெருசா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திராது -ஆனா திடீர்னு பயமுறுத்திரும். இப்படியா கொத்த சில வியாதிகள் இருக்கு. உ.ம் ஷுகர், ரத்தக்கொதிப்பு,வீசிங் ஒரு டாக்டர் – ஒரு நர்ஸ் – ஒரு லேப் டெக்னீஷியன் அதே போல நம்மை மாதிரி ஒரு கேரக்டர் ஒரு டீமா உருவானா இந்த தொழிலை செய்ய முடியும்.

ஒரு ஃபோன் போட்டா நிலைமைய பொருத்து வீட்டுக்கே போயி செக் அப் – முதலுதவி -சிகிச்சை தரலாம்.
(இது புத காரகம்)
அவனவன் வீட்ல தினசரி உபயோகிக்கிற பொருட்கள் பத்துன்னா என்னைக்குமே உபயோகிக்காத பொருட்கள் ஆயிரமாவது இருக்கு. சிலது ரன்னிங் கண்டிஷன்ல கூட இருக்கலாம்.

இந்த பீடைகளை எல்லாம் எப்ப /எப்படி ஒழிக்கிறதுன்னு தெரியாம சனம் தவிக்குது. நாம சீசனலா மார்கழி/ஆடி மாசங்கள்ள கரி நாள்ள கல்யாண மண்டபம் மாதிரி வென்யூவை அரேஞ்ச் பண்ணிக்கிட்டு வைடா பப்ளிசிட்டி பண்ணா கொண்டாந்து குமிச்சிருவாய்ங்க.

இன்னம் வீட்டண்டையே வந்து பிக் அப் பண்ணிக்கிறோம்னா ரெஸ்பான்ஸ் பிச்சிக்கும். குத்து மதிப்பா என்ன ரேட்டு எதிர்பார்க்கிறாய்ங்களோ அதை குறிச்சிக்கிட்டு மேலே ஒரு 15% குறிச்சு மண்டபத்து கொண்டு வந்து வச்சிட்டா கேஷ் ஆயிரும்.

சின்னதா செக் போட்டு வீட்டுக்கு கொரியர்ல அனுப்பிட்டம்னு வைங்க.உச்சந்தலையில செருப்பாலடிச்ச சந்தோசமாயிரும்.

இந்த செகன்ட்ஸ் மார்க்கெட்டை 30 நாளைக்கு நடத்தனும். அடுத்து எந்த மாசம்னும் முன் கூட்டியே அறிவிச்சிரனும். வேணம்னா வாங்க வர்ரவனுக்கு என்ட்ரி டிக்கெட் கூட போடலாம்.

(இது சனி காரகம்)
நியூஸ்பேப்பர் ஃபார் லிங்குவிஸ்டிக் மைனாரிட்டி:

சென்னையில தெலுங்கு மைனாரிட்டி. அவன் என்னதான் தமிழ் நாட்ல இருந்தாலும் அவன் உசுரு ஆந்திரா பக்கம் தான் அடிச்சுக்கும் இதை வீக் பாய்ண்டா பிடிச்சுக்கிட்டு மேஜர் நியூஸ் பேப்பர்லாம் ஆந்திரா சரக்கை ஜிலேபி ஜிலேபியா தெலுங்குல அடிச்சு காசு பிடுங்கிர்ராய்ங்க.

நாம தமிழ் நாடு செய்தியை -அதுவும் அவன் வாழ்க்கைய நேரடியா பாதிக்கக்கூடிய லோக்கல் செய்திகளை தெலுங்குல அடிச்சு கு.ப ஈவ்னிங் டெய்லியா கொடுத்தா கூட ஒர்க் அவுட் ஆகும்.
(இது புத காரகம்)

ஊட்டுக்கு ஒரு விஞ்ஞானி இருக்கான்.ஆனால் அவனுக்கு உற்சாகம் தர்ரவுக கடியாது. வழி காட்டறவுக கிடையாது. அவனுக்கு பேட்டன்ட் ரைட்னா என்ன தெரியாது -காப்பிரைட்டுன்னு என்ன தெரியாது .. இதையெல்லாம் தரக்கூடியவுக ஒரு டீமா ஃபார்ம் ஆகி ஸ்பான்சரர்ஸை பிடிச்சு இருட்ல உள்ளவனை வெளிச்சத்துக்கு கொண்டுவரலாம். சேவைக்கு சேவை – பைசாவுக்கு பைசா .

(இதுவும் புத காரகம் தான்)
வெளி நாட்ல எல்லாம் ரைட்டரு ஜோல்னா பையோட பத்திரிக்கை ஆஃபீஸுக்கு/ பப்ளிஷர்ஸ் ஆஃபீஸுக்கு போயி தலை சொரிய மாட்டாரு. ஒரு ஏஜென்சி இருக்கும்.அந்த ஏஜென்சிக்கு ரைடிட்டிங்ஸை கொடுத்துட்டா அவிக கரெக்சன் சஜஸ்ட் பண்ணி ரீ ரைட் பண்ண வச்சு மார்க்கெட் பண்ணி பிரசுரமாக செய்வாய்ங்க.

இப்படி ஒரு ஏஜென்சியை செய்தா செமர்த்தியா சக்ஸஸ் ஆகும். இதுல என்ன ஒரு லொள்ளுன்னா இன்னைக்கு புஸ்தவம் போடறவன்லாம் வேற ஏதோ ப்ராபல்யத்தை வச்சு வங்கி கடன் வாங்கி மேலும் கடன் வாங்க அதை ஒரு சாக்கா வச்சி ஏதோ ஓட்டிக்கிட்டிருக்கான்.

ஆயிரம் பிரதி விற்க ஒரு வருசம் கூட ஆயிர்ரதா கேள்வி. இவிக ஜட்ஜ்மென்டு ரெம்ப தப்பா இருக்கும். நாம உண்மையிலயே துடியான ஸ்க்ரிப்டை கொண்டு போயி கன்வின்ஸ் பண்ணா கூட வேலைக்காகாது.

சில பரதேசிங்க ரைட்டர்க்கே குல்லா போட்டு காசு வாங்கி புஸ்தவம் போட்டுர்ராய்ங்க. நாம அப்டியெல்லாம் பண்ணாம கொஞ்சம் காசை மொதல் வச்சு நேரடியா வாசகனுக்கு விற்க ட்ரை பண்ணனும்.

ஒரு வருச வட்டிய புஸ்தவத்து மேல போட்டுர்ராய்ங்க. நாம மார்க்கெட்டிங்ல துடியா இருந்தா சரியான சப்ஜெக்டா இருந்தா ஒரு மாசத்துல வித்து தீர்த்துரலாம் . ஜோதிடம் 360 ஆன்லைன்லயே 419 பேர் முன் பதிவு செய்தாய்ங்கன்னா பார்த்துக்கங்க.

(இதுவும் புத காரகம் தான்)
இப்படி கோக்குமாக்கா நிறைய ரோசிச்சு வச்சிருக்கேன். உங்க ரெஸ்பான்ஸை பார்த்து அடுத்தடுத்த பதிவுகள்ள சொல்றேன்.

இல்லேன்னா இருக்கவே இருக்குது ராசிபலன் /பரிகாரம்/ கில்மா ..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s