டாக்டர் பட்டம் வேண்டுமா?

Posted on

அண்ணே வணக்கம்ணே !

நீங்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்னுதான் நம்ம பதிவுகளை ஆராய்ச்சி பண்ணி கட்டுரை சமர்ப்பிக்கனும்.

வெறுமனே புற நானூற்றில் வரும் கிழவிகள் -அக நானூற்றில் வரும் குமரிகள்னு ஆராய்ச்சி பண்றதை விட சம்பந்தா சம்பந்தமில்லாம கண்டதையும் எழுதினாலும் எல்லாத்துக்கும் அடி நாதமா தேச புனர் நிர்மாணம் – மனிதம் -தொலை நோக்கை வச்சு எழுதிக்கிட்டிருக்கிற நம்ம பதிவுகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கிட்டா அரை டஜன் டாக்டர் பட்டம் கியாரண்டி.

ஆர்வம் உள்ளவுக மெயில் பண்ணுங்க. தலைப்புகளை சிபாரிசு பண்றேன். டாக்டர் பட்டம் வாங்கித்தர கூடிய எத்தனையோ பதிவுகளை போட்டிருக்கம்.இந்த பட்டியல்ல் இன்றைய பதிவு “தோல் வியாதிகள் : ஒரு ஜோதிட பார்வை”

தனக்கு வந்தா தான் தலைவலி தெரியுங்கறாப்ல நமுக்கு இந்த ஸ்கின் ப்ராப்ளம் வந்த பிற்காடு நம்ம மண்டையில ஸ்லீப் மோட்ல இருந்த மேட்டர் எல்லாம் 3 ஆவது நாளு ஏசு உயிர்த்தெழுந்தாப்ல எந்திரிச்சுருச்சு.

மனித உடலில் தோலுக்கு காரகர் புதன். இந்த புதன் கெட்டாலே தோல் பிரச்சினை கியாரண்டி (சிலருக்கு அண்டம்,கீல் தொடர்பான பிரச்சினைகளும் வந்துருது)

ஒரு ஜாதகத்துல புதன் கெட்டிருக்காரா இல்லையானு பார்க்க ஆயிரத்தெட்டு விதிகள் இருக்கு.ஆனால் படம்பார்த்து கதை சொல்லுங்கறாப்ல ஒரு மன்சனோட கம்யூனிகேஷன் ஸ்கில்ஸை வச்சு அவன் ஜாதகத்துல புதன் எந்த நிலையில இருக்காருன்னு சொல்லிரலாம். இந்த கேரக்டர் உள்ளவுகளுக்கெல்லாம் தோல்,கீல்,அண்டம் தொர்பான வியாதிகள் கியாரண்டி.

1.தனக்கு தெரியாத மேட்டரே இல்லின்னு கண்டதுலயும் மூக்கை நுழைப்பாய்ங்க.

2.சம்பந்தா சம்பந்தமில்லாத ஆட்களோட கோக்கு மாக்கான அறிமுகங்கள் – இன்டர் ஆக்ட் -டீலிங் இருக்கும்.

3..வைத்தியத்துல ஒரு இழவு அடிப்படையும் தெரியாம எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டேன் ரேஞ்சுல இஷ்டாத்துக்கு பீலா விட்டுக்கிட்டிருப்பாய்ங்க.

4.நியூமரிக்கல் எபிலிட்டி ரெம்ப தேசலா இருக்கும் .

5.நிறைய சங்கங்களில் உறுப்பினர் /பதவியில இருக்கிறதை பார்க்கலாம்.

6. முக்கியமான தபால் தவறிப்போறது ,கூரியர்ல வந்த செக்கை அடுத்த அரைமணியிலயே ஆஃபீசை தலை கீழா போட்டு தேடறதும் நடக்கலாம்.

7.டாக்குமென்ட்ஸ்ல ஃபோர்ஜரி /டுபாகூர்/டகால்ட்டி வேலைகளுக்கு தயங்க மாட்டாய்ங்க.

8.பாடி லேங்குவேஜுக்கும் -பேச்சுக்கு சம்பந்தமே இருக்காது “சிஸ்டர்” ம்பான் பார்வை தப்பா இருக்கும்.

9.எந்த வேலையிலயும் ஒரு கோ ஆர்டினேஷன் இருக்காது. குழப்பி அடிச்சிக்கிட்டிருப்பாய்ங்க.எதையும் தீர்மானிக்க மாட்டாய்ங்க.

10.மீடியேஷன் செய்யும் போது ரெண்டு பார்ட்டிக்கும் கலகம் வச்சு -அதுல தான் குளிர் காய பார்ப்பாய்ங்க.

11.சந்தேகாஸ்பதமான பிசினஸுக்கு கான்வாஸ் பண்றது – மிஸ்டிக் மெடிசின்ஸ் ,ருசுப்படுத்தப்படாத எக்விப்மென்டை விக்கிறதும் உண்டு.

12.முக்கியமா இந்த எம்.எல்.எம் ஸ்கீம்ஸ்ல சேர்ந்து -தன்னவர்களையும் சேர்த்து திணறிக்கிட்டிருப்பாய்ங்க.

13.ஸ்டேஜ் ஃபியர் இருக்கலாம். மைக் கிடைச்சா உளறிக்கொட்டுவாய்ங்க.

14.மாமனார் பணத்துல மஞ்ச குளிப்பாய்ங்க.

இதுல ஒவ்வொரு பாய்ண்டும் எப்படி தோல் வியாதிக்கு காரணமாகுதுன்னு “மொக்கை” போட நான் தயார்.ஆனாலும் ஃப்ளோ கட்டாயிர கூடாதுனு அடுத்த பாய்ண்டுக்கு தாவிர்ரன்.

வெறுமனே புதன் கெடறதால மட்டும் தோல் வியாதி வந்துராது. கேது கெட்டால் புண்கள் வரும். சீலை பேன் அடிச்சு கம்கட்ல வறட்டு வறட்டுன்னு சொறிஞ்சிக்கிட்டிருப்பாய்ங்க. சந்திரன் கெட்டால் அலர்ஜி தொடர்பான நமைச்சல் ஏற்படும். செவ்வாய் கெட்டால் ரத்த சுத்தி இல்லாததால வர்ர பிரச்சினைகள் வரும். ராகு சரியில்லின்னா பூச்சி பொட்டால தோல்ல பிரச்சினை வரலாம்.குரு சரியில்லினா ஹார்ட் ஃபங்சனிங்ல பிரச்சினை காரணமா தோல் வியாதி வரலாம்.சுக்கிரன் கெட்டால் கில்மா காரணமா வர்ர பிரச்சினைகள் வரலாம்.

முதலிரவு நடக்கப்போற அறையை மல்லி,முல்லை சரம்லாம் போட்டு அலங்கரிக்கிறாய்ங்க. படுக்கையிலும் அவற்றை சகட்டுமேனிக்கு தூவறாய்ங்க. மணப்பெண்ணுக்கும் தலை நிறைய வச்சு அனுப்பறாய்ங்க.ஏன் தெரியுமா?

முன்ன பின்ன தெரியாத ரெண்டு பாடி முதல் முதலா உரசும் போது ஒவ்வாமை ஏற்படலாம்.ஒருத்தருக்கு
இருக்கிற ஸ்கின் ப்ராப்ளம் இன்னொருத்தருக்கு மாட்டிக்கலாம். இதை தவிர்க்கத்தேன் இந்த ஏற்பாடு.

சிலருக்கு இந்த பூக்களே அலர்ஜியாயிருக்கிறது சோகம்.

சில ஜாதகங்கள்ள சூ -புத சேர்க்கை இருக்கும் போது வெள்ளை தேமல் வர்ரதை பார்க்கலாம். ஆனல் இது பரவப்படாது. பரவினா அது வியாதிங்கோ..

நிற்க. ப்ராக்டிக்கலா /சைன்டிஃபிக்கா தோல்வியாதிகள் வருவதற்கான காரணங்களையும் -அதற்கான ஜோதிட காரணங்களையும் 48 நாளைக்கு எழுதி கிழிச்சுரலாம்.ஆனால் பதிவுலகத்துல ஹிட் வாங்கனும்னா ராசிபல் -கில்மா தான் உத்தமமான வழி.

எனவே இந்த தொடர்பதிவு ஐடியாவுக்கு அம்பேல் ..நாளையிலருந்து நச் பரிகாரங்கள் தொடர் மீண்டும் துவங்கும். விடுங்க ஜூட்டு..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s