எல்லா கோயிலையும் இழுத்து மூடுங்கடா!

Posted on

அண்ணே வணக்கம்ணே !

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ,ஆலயம் தொழுவது சாலவும் நன்று மாதிரி பொன்மொழி எல்லாம் நிறைய கேட்டிருக்கம்.ஓஷோவின் மறைந்திருக்கும் உண்மைகள் புஸ்தவத்தை படிச்சிருக்கம்.

லேட்டஸ்டா கூட ஆன்லைன் ஜோதிட ஆலோசனையில சக்கை போடு காரணமா (புத காரகம்) ஸ்கின் ப்ராப்ளம் (இதுவும் புதகாரகம்) நான் பேரபிளா மாறினதும் மைண்டு ஆத்தாவின் கோவிலை தேடித்தான் போச்சு.

நம்ம பாடியில மருந்து மாயம்லாம் பெருசா இல்லாததாலயோ -ஆத்தா அருளாலயோ உலக அதிசயம் போல சூப்பர் ஸ்பெஷாலிட்டியிலயே ஒரே சிட்டிங்ல பிரச்சினை தீர்ந்துருச்சு.

நடிகவேள் எம்.ஆர் .ராதா “கோவிலுக்கு போ -சாமி கும்பிடு -வந்துடு -அங்கயே குடித்தனம் பண்ணாதே”ம்பாரு. நாம ஒரு ஸ்டெப் அட்வான்ஸ் ஆகி கோவில்ல விஷயம் இருந்தா காம்பவுண்டு எதிர்க்க நின்னு/உட்கார்ந்து ஒரு தம் போட்டுட்டு வா. தெய்வத்தை நீ பார்க்க தேவையில்லை.தெய்வம் உன்னை பார்த்தா போதும்ங்கறது தான் நம்ம ஸ்டாண்டு. நாம ஃபாலோ பண்றதும் இதையேத்தான்.

மாசத்துக்கு 3 மழை பொழிஞ்சு சனங்க அல்லாரும் சுபிட்சமா இருந்தப்போ – தேவைகள் மிக குறைவா இருந்தப்போ அல்லாரும் மண்ணு வீட்ல வசிச்சப்போ ஊருக்கெல்லாம் சேர்த்து தானிய கிடங்கு/ஆடிட்டோரியம்/சோஷியல் சென்டர்/வைத்திய சாலை/வெள்ள நிவாரண முகாம்னு மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்டா கோவில் கட்டினாய்ங்க.

இப்ப என்ன ” ம” னாவுக்கு கட்டறாய்ங்களோ தெரியலை. கோவில் கரீட்டா இருந்தா அந்த கோவிலுக்குள்ளாற போகனுங்கற அவசியம் கூட இல்லை. அதை தாண்டி போனாலே பலன் கிடைக்கும். அந்த ஊரோட “நூஸ்ஃபியரே “மாறிரும்.

இன்னைக்கு கோவில் கர்பகிருகத்துல மூலவரை தொட்டு பூஜை பண்ற ஐயருக்கே ஒரு இழவும் நடக்க மாட்டேங்குது. ஒவ்வொரு கோயிலை சுத்தியும் ஒரு மாஃபியாதான் வளருது.

டென்டர் வாங்க ஒரு நெட் ஒர்க். காண்ட்ராக்ட் வாங்க ஒரு நெட் ஒர்க், குறுக்கு வழியில தரிசனம் செய்விக்க ஒரு நெட் ஒர்க். நியூஸ்பேப்பருக்கு விளம்பரம் வாங்க ஒரு நெட் ஒர்க்.. ஒவ்வொரு அரசியல் தலைவன் ஒவ்வொரு கோயிலை கேப்ச்சர் பண்ணி வச்சிருக்கான்.அவனுக்கு சில கைத்தடிகள்.அந்த கைத்தடிகளுக்கு சில கைத்தடிகள்.அந்த கைத்தடிகளை பைலட்டா உபயோகிச்சு சில பண முதலைகள்.

இன்னைக்கு பிரபலமா இருக்கிற ஒவ்வொரு கோவிலையும் சுத்தி 25 சதுர கி.மீட்டருக்கு வைபரேஷனே மாறிப்போயிருக்கு. அந்த ஏரியாவுக்குள்ள நுழையற நல்லவன்ல கூட கொலை வெறி தான் பிறக்கும் போல.

திருச்செந்தூர் கோவில்ல ஐயருங்கல்லாம் பத்து வட்டி,மீட்டர் வட்டிக்கு லாவா தேவி பண்றாய்ங்களாம். காளஹஸ்தியில சர்ப்பதோச பரிகாரம் பேர்ல நடக்கிற கூத்து தனி. இன்னம் சொல்லப்போனா மூலவருக்கு சார்த்தின பட்டுப்புடவை / கோவணம் /கோவணம் நனைச்ச தண்ணி எல்லாத்துக்கும் ரேட்டு.

திருப்பதின்னா கீழ் திருப்பதியிலயே கொள்ளை ஆரம்பிச்சுருது. சித்தூர் திருப்பதியில ப்ராஞ்ச் ஆஃபீஸ் இருந்தா அந்த கிளையில வேலை செய்யறவன் வேலையே பார்க்க தேவையில்லை. ஹெட் ஆஃபீஸ்லருந்து வர்ர அதிகாரிகளுக்கு குழையடிச்சு அவிகளுக்கு ரூம் ஏற்பாடு செய்து தரிசனம் செய்வித்தா போதும் .வர்ர அதிகாரி இளந்தாரின்னா பீடி,சிகரட்,பான்,பீடா,கஞ்சா,அபின்,பட்லில்லாம் ஏற்பாடு பண்ணனும்.

திருமலையில ஒரு பார்ட்டி .பேரு டாலர் சேஷாத்ரி. கவுண்டர்ல விலைக்கு விக்க வேண்டிய பெருமாள் படம் போட்ட டாலர்களை கித்தாப்பா இவருக்கு வேண்டிய வி.ஐ.பிங்களுக்கு இலவசமா கொடுக்க செய்து அந்த பொறுப்புல உள்ளவன் கழுத்துக்கெல்லாம் கத்தி. பெரிய குளறுபடி.

இதனாலயே டாலர்ங்கற பட்டம் ஒட்டிக்கிச்சு. இந்த ஆசாமி கிழவாடி ஆகி மாமாங்கம் ஆனாலும் எக்ஸ்டென்ஷன் மேல எக்ஸ்டென்ஷன். மேட்டர் என்னடான்னா விஐபிங்க தங்கியிருக்கிற கெஸ்ட் ஹவுசுக்கே போயி பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் (தந்து) சொம்படிக்கிறது.

இந்த கோவில்கள் மேட்டர்ல வெறுமனே ‘அவாள் அவாள்”னு கிழிக்கிறதுல நியாயமில்லை. நம்மாளுங்களும் பயங்கர அலப்பறை. சிவன் சொத்து குல நாசம்னாய்ங்க. இப்பம் ட்ரென்டு என்னடான்னா சிவன் சொத்தை அடிக்கலின்னா அவன் ரெம்ப மோசம்னு ஆயிப்போச்சு.

கானிப்பாக்கம் தேவஸ்தானத்துல தினத்தந்திக்கு வரவேண்டிய பாக்கி அம்பது ரூவா கிட்ட இருக்கு. நானும் ஆஃபீஸ்ல கேட்டு பார்த்தேன். இவனுகளை ஒழுங்கு மரியாதையா கேட்டா தரமாட்டானுவ. ஒரு லட்டை பிச்சி மத்தியில கரப்பான் பூச்சியை வச்சு போட்டோ எடுத்து அனுப்பறேன்.போட்டு விடுங்கன்னேன். ஆனால் தந்தியில ஒத்துக்கிடலை. வாழ்க ஆதித்தனார்!

தேவஸ்தானத்துல காசு இல்லையான்னா இருக்கு. இந்த பத்திரிக்கை காரவுக ஆளுக்கொரு பினாமி பேப்பர் வச்சிருப்பான். தான் வேலை செய்யற பெரிய பத்திரிக்கைக்கும் விளம்பரம் தரனும். இவனோட பினாமி பேப்பருக்கு விளம்பரம் தரனும். இதனால பட்ஜெட் டபுளாயிருச்சு.ஆடிட்டிங்ல இமிசை. அதனால ஒத்திக்கு ரெட்டியா ஆர்.ஓ கொடுத்துர வேண்டியது .எவன் கரப்பான் பூச்சிய வச்சு ஃபோட்டோ எடுத்து போட்டுருவானோ அவனுக்கு மட்டும் செக் கொடுக்கிறது.

நிர்வாகம், அவாள் கதையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சாமி பார்க்க போறானே நம்மாளு. இவன் மட்டும் என்ன குறைச்சலா ? சாமி பார்க்க போகனும்ங்கற எண்ணம் வந்ததுமே தன் டயரியை/ செல் ஃபோனை பீராய ஆரம்பிச்சுர்ரான்.எதுக்கு? சிபாரிசுக்கு – ரூமுக்கு -தரிசனத்துக்கு. ஆன்லைன் புக்கிங் அது இதுன்னு எத்தனை கொண்டுவந்தாலும் பெப்பே தான்.

ஊருல சிங்கிள் டீ அடிக்க பத்து நிமிசம் ரோசிக்கிறவன்லாம் கத்தை கத்தையா கொண்டு வந்துர்ரான். வாரி விடறான். இவன் கண்ணை பார்த்தே ஒரு க்ரூப் இவனை ஓரங்கட்டும். எல்லாத்துலயும் பங்கு இருக்கு. எல்லாத்துக்கும் பங்கு இருக்கு .ரூம், தரிசனம் ,லட்டு,வடை இப்படி இதுக்கு தான்னு இல்லை.எல்லாத்துக்கும் இந்த இழவுதான். இந்த பீத்தரைங்களால உண்மையான பக்தியோட வர்ரவனும் இந்த வேட்டையில சிக்கிக்கிரான்.

ஆன்மீகம் வளர்க்க வேண்டிய கோவில்கள் நாத்திகம் தான் வளர்க்குது. ஒவ்வொரு பிரபல கோவிலையும் சுத்தி ஒரு சோம்பேறி கும்பல் வளர்ந்துக்கிட்டு இருக்கு.ஆட்டைய போடறதை தவிர வேற ஒன்னும் தெரியாது.

அறுவடை காலத்துல எலிக்கு 60 பெண்டாட்டிங்கறாப்ல “சகலமும்” வந்து சேர்ந்துருது. ச்சொம்மா வந்த பணம் ச்சொம்மா போறாப்ல வேட்டு விட்டுக்கிட்டிருக்கு. ஒரு கோவிலால அந்த ஊரோட எக்கானமியே மாறிப்போகுது. சனங்க மென்டாலிட்டியே மாறிப்போகுது.

எல்லா பிரபல கோவில்களையும் ஒரு வருசத்துக்கு மூடி தொலைச்சா அவனவன் கொள்ளையடிச்சு வச்சதையெல்லாம் வாரி இறைச்சுட்டு யதார்த்தத்தை புரிஞ்சு பொழப்ப பார்க்க ஆரம்பிப்பான் போல.

இந்த பிரபல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு போயி இழந்துட்ட வர்ரவுகளுக்கு பெருசா ஒன்னும் இழப்பில்லை.ஆனால் இவிக இழப்புல தங்கள் வாழ்க்கைய அமைச்சுக்கற சனம் -மஞ்ச குளிக்கிற சனம் -மாறிப்போற எக்கானமி -பெருகும் விபச்சாரம் – பெருகும் வட்டி இதையெல்லாம் கோவில்ல குடியிருக்கிற ஆண்டவனே ஸ்பெஷல் ட்ரைவ் கன்டக்ட் பண்ணாலும் மாத்த முடியாது.

அதனாலதான் சொல்றேன் எல்லா கோயிலையும் இழுத்து மூடுங்கடா!

மன்மோகனார் என்னடான்னா “பணம் மரத்துலயா காய்க்குது” ங்கறாரு. (இதுக்கு உங்க கிட்டே பிடுங்கினாதானேடா காசுன்னு அருத்தம்) அன்னிய செலாவணியும் -அன்னிய முதலீடும் வரும்னா என்ன வேணா பண்ணிருவாய்ங்க போல.

கொய்யால .. கை ,கால் நெல்லா இருக்கிற ஒவ்வொருத்தனும் உழைக்கனும்.அவன் உழைப்புக்கேத்த கூலி கிடைக்கனும்.அவன் கூலியை எவனும் கொள்ளையடிச்சுராம இருக்கனும். இந்த 3 மேட்டர் நடந்தா போதும். உலக வங்கிக்கு நாம கடன் கொடுக்கலாம்.

உலக நாடுகளுக்கே இது கேடுகாலம் போல இருக்கு. தாராளமயம்,உலக மயம் ,தனியார் மயம்னுட்டு வாய்வலிக்க பலூனை ஊதினாப்ல ஊதி ஊதி விட்டானுங்க. சில நாடுகளோட பொருளாதாரங்கள் ஆரம்பத்துலயே வெடிச்சுருச்சு. அப்ப தாக்கு பிடிச்சிட்டிருந்த இதர நாட்டு பொருளாதாரங்களும் வெடிக்கிற காலம் வந்துருச்சு போல.

ஒவ்வொரு நாடும் தன் மக்களை நசுக்கி உலக அரங்கத்துல நிமிர்ந்து நிக்க நினைக்கிறாப்ல இருக்கு. சீனாவில் சுரங்க விபத்து சுரங்க விபத்துன்னு வருதே.ஏன்? உற்பத்தி செலவை குறைச்சு -உலக நாடுகளோட போட்டி போட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நாமம் போட்டுர்ராய்ங்க போல.

இந்த இக்கட்டான நிலையில கோவில் குளம்னு சகட்டுமேனிக்கு எரிபொருளை,காசை ,பணத்தை ,வேலை நேரத்தை வீணாக்கிறது முட்டாள்தனம்.

அதனாலதேன் சொல்றேன். எல்லா கோயிலையும் இழுத்து மூடுங்கடா!

Advertisements

7 thoughts on “எல்லா கோயிலையும் இழுத்து மூடுங்கடா!

  Thriumalaibaabu said:
  October 3, 2012 at 4:40 am

  இதே ” எண்ண ஓட்டங்கள் ” ஓடிக்கொண்டிருக்கும் பல லட்சம் மக்களின் பிரதி ..இந்த பதிவு !!!
  பதிவை முடிக்கும் முன்னமே ஆத்திரம் தலைக்கு ஏறியது .ஆனால் எண்ண பிரயோஜனம் !!!

  பதிவுக்கு மிக்க நன்றி .

  Muthamizh C said:
  October 3, 2012 at 8:37 am

  I have been reading your blogs for around 6 months. It was an accident. I have been searching for some sex content. One search link lead to your blog. After reading that, I have read almost all of the blog posts in your blog “nakedtruths”. Then I started to read “nirvanaunmaigal” and “anubavajodhidam”. Once I had asked astrological solution regarding my brother marriage. You have replied. In between my brother got an alliance and now married. I have also asked “when will I settle in my life financially”. But I never got a reply. May be you would have thought that I was doing it for time pass :-). Anyway, come to the point. Except a small no of post, I like almost all of your posts, especially your posts on religion and politics and your Operation India and of course women and sex. Many times I thought about commenting on your posts. But after reading this post only I really wanted to comment. I also have the same feelings regarding the temples in our country. Great religious places like Tirupati temple are became like shopping malls. I went there 3 times. I like Tirupati temple. But their ticketing system is like movie theaters. As you said, most of the people in and around it, are using it for money. I heard from my friends that Palani temple and some other temples also doing like this. Arrogant Iyers. Local thugs etc. Hope one day this will change. Temples are deviated from their true purpose. Moreover, people are all opening temples like fast food hotels. Occupying public roads. Wasting power for 100s of tube lights and speakers during festival times. And polluting ocean in the name of Vinayagar Chathurthi. But I really hope somehow these all will change.

  Muthamizh C said:
  October 3, 2012 at 8:47 am

  I don;t know Tamil unicode typing thats y I am using English. Now I have two doubts. Which I believe you definitely know something about it.

  1. When and who started vinayagar chathurthi “silai karaipppu” in oceans and water resources.

  2. I heard one of my friend said actually the statue in Tirupati is a Murugan statue and it is Murugan temple originally. When I browsed in net about this, I got some interesting conspiracies. Some say it is a jain temple and the statue is of a Theerthangara. I would like to read if you create two separate posts regarding these two things. If you have time and if you don’t have any problem :-).

  Thanking you.

  டாலர் சேஷாத்ரி said:
  October 3, 2012 at 11:17 am

  முருகேசா!

  உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? மொபைல் நம்பர்  குடுக்குறது பெரிசி கிடையாது. அதை எப்பவும் ஆன் பண்ணி வைக்கனும். 

  …………. நெம்பருக்கு மிஸ் கால் அடி. நானாவது பேசுறேன்.

   S Murugesan said:
   October 3, 2012 at 1:30 pm

   வா ஜானகிராமா!
   சேலம் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு உன்னை பத்தின புகாரோட வர்ரதுக்காகவே புதுசா பள பளன்னு மஜ்தூர் வேன் வாங்கப்போறேன். நம்ம மெய்கீர்த்திகளையெல்லாம் பேனரா ஒட்டி சீக்கிரமே வரேன். நேர்லயே பேசலாமே எஸ்.பி முன்னிலையில ..

   ஆமா இது என்ன நெம்பர்? கூகுல்ல தேடினா எல்லா(மே) எல்லோவா இருக்கு. தொழிலை மாத்திக்கிட்டியா என்ன?

  MANI said:
  October 4, 2012 at 3:39 am

  ஜா.ரா !
  //டாலர் சேஷாத்ரி சார்ட்ட உங்களுக்கு எதுக்குண்ணே வீண் வம்பு. பேசாம அவர்ட்ட மன்னிப்பு கேட்டுருங்கண்ணே. //

  டா.சே வுக்கு பதில் ஜா.ரானு வச்சுக்கிட்டா இதுவும் முந்தின கமெண்டுதான்.

  இதை எழுதினதும் ஜா.ராவாகிய நீர் தான்.

  ISMAIL said:
  October 4, 2012 at 3:45 am

  அய்யா,

  சேஷாத்ரி சார் யாருன்னு தெரியலை. நீங்க பாட்டுக்கு உங்களோட திருப்பணியை தொடருங்கள் அய்யா. சூரியனைப் பார்த்து… கதைதான்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s