2012 குரு வக்ர பலன் ( அக்டோ.4 முதல் நவ 11 வரை)

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நூல் பிடிச்சாப்ல போயிட்டிருந்தம் (நச் பரிகாரங்கள் தொடர்). ரெம்ப போரடிக்குது.அதனால கொஞ்சம் போல ஹிட்ஸை அள்ள குரு வக்ர பலனை 12 ராசிக்கும் தந்துரலாம்னு ஒரு ஐடியா.

நாம வெகு காலமா நம்பி உபயோகிக்கிற ஆந்திர பூமி -திருக்கணித பஞ்சாங்கப்படி 2012,அக்டோபர்,4 முதல் நவம்பர் 11 வரைக்கும் குரு வக்ரமா சஞ்சாரம் பண்ணப்போறாரு.

ராகு கேதுக்களை தவிர மத்த கிரகங்கள் க்ளாக் வைஸ் தான் சஞ்சரிப்பாய்ங்க. சில நேரம் ஆன்டி க்ளாக் வைஸ் சஞ்சரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ( பிரபாகரனை கைது செய்து கொண்டு வரனும்னு தீர்மானம் போட்ட அம்மா இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா சில நடவடிக்கைகள் எடுக்கலியா அப்படி)

இந்த வக்ரத்துலயும் சுப கிரகத்துக்கு பவர் சாஸ்தி. ஒரு மொள்ளமாரி தண்ணி போட்டாலும், கஞ்சா அடிச்சாலும் அவனோட பிஹேவியர்ல பெருசா வித்யாசம் வந்துராது. இதுவே ஒரு நெல்லவன் திடீர்னு தண்ணி போட்டா அவன் கேரக்டர் தலைகீழா மாறிரும்லியா அப்படி..

வக்ர சஞ்சாரத்தோட நேச்சரை இன்னொரு உதாரணம் மூலமா சொல்ல ட்ரை பண்றேன். பந்தியில உட்கார்ந்திருக்கிங்க. சப்ளை பண்றவர் அல்லாருக்கும் லட்டு வச்சுக்கிட்டே போறாரு. பக்கத்து இலைக்காரனுக்கு ஒன்னுக்கு ரெண்டா வச்சுட்டாரு. உங்க இலையை மிஸ் பண்ணிட்டாரு.

போனவர் அப்படியே போயிட்டா பக்கத்து இலைகாரனுக்கு ஒன் ப்ளஸ் ஒன்னு கிடைச்சது கிடைச்சதுதேன். உங்களுக்கு லட்டு கிடைக்காம போனது போனது தேன்.

சப்போஸ் போனவர் போனவழியே திரும்பி வர்ராருன்னு வைங்க. அப்பம் உங்க இலையில லட்டு இல்லாததை கவனிச்சு லட்டு வைக்க ஒரு சான்ஸ் இருக்கு.அதே போல ஒத்திக்கு ரெட்டியா வச்சிருக்கிற பக்கத்து இலை ஆசாமியை நக்கலா நாலு வார்த்தை கேட்கவும் வாய்ப்பிருக்கு.

கிரக வக்ரத்தை இப்படித்தான் புரிஞ்சுக்கனும்.

இதுல இன்னொரு சமாசாரம் என்னடான்னா குரு -சனி ரெண்டு பேரும் கவுன்டர் பார்ட்ஸ். குரு பிராமணர்கள்,உயர்சாதியினர்,ஆட்சியாளர்களை குறிப்பிடும் கிரகம்.சனி பிற்படுத்தப்பட்டோர்,ஊழியர்கள், உடல் ஊனமுற்றவர்கள்,தொழிலாளர்களை குறிப்பிடும் கிரகம்.

ஏற்கெனவே சனி உச்சம் பெற்றிருக்காரு. இதனாலதேன் நிலக்கரி ஊழல் வெடிச்சுருச்சு. (சனின்னா கருப்பு )
இதுல குரு வேற வக்ரமாயிட்டா ரூலிங் -ரூல்ட் க்ளாஸ் மத்தியில டக் அஃப் வார் ஆரம்பிச்சுரும். நாடு தழுவிய தொழிலாளர் புரட்சி வெடிச்சாலும் வெடிக்கலாம். ஆட்சியே ஃபணால் ஆனாலும் ஆகலாம்.

நாடு எக்கேடு கெட்டு போனா என்ன என் ராசிக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்கய்யாம்பிங்க.சொல்லிர்ரன்.

குரு ரிஷபத்துக்கு மாறிவந்த நாள் முதலா குரு காரகங்கள்ள உங்களுக்கு ஓரளவாச்சும் அனுகூலம் ஏற்பட்டிருந்தா இந்த வக்ர காலத்துல அலார்ட் ஆயிக்கங்க. ஓரளவுங்கற வார்த்தைய உபயோகிக்க காரணம் குரு+கேது சேர்க்கை தான்.

இந்த வக்ர காலத்துல கீழே தந்திருக்கிற குரு காரகங்கள்ள மூக்கை நுழைக்காதிங்க.

ஒரு வேளை குரு ரிஷபத்துக்கு மாறி வந்த நாள் முதலா குரு காரகங்கள்ள உங்களுக்கு பிரதிகூல பலனே ஏற்பட்டிருந்தா இந்த குரு வக்ர காலத்துல குரு காரகங்கள்ள ஒரு ஜாக்பாட் உங்களுக்கு காத்திருக்கு.

குருவோட காரக்த்வம்: ( குருவோட பேட்டை)

ஆருக்கெல்லாம் குரு அனுகூலமா இருக்காரோ அவிக இந்த பேட்டையில புகுந்து விளையாடலாம். ஆருக்கெல்லாம் குரு சரியில்லையோ அவிக இந்த பக்கம் ஒதுங்காம இருக்கிறது நல்லது.

(குருவே சொல்றாருங்கோ.. ) நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

குருவுக்குரிய பரிகாரங்கள்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

Advertisements

2 thoughts on “2012 குரு வக்ர பலன் ( அக்டோ.4 முதல் நவ 11 வரை)

  Thriumalaibaabu said:
  October 3, 2012 at 4:26 am

  Thanks for the post.
  and starting the new topic.

  MINNAL said:
  October 3, 2012 at 7:45 am

  Balance 4 pavangal avalothana?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s