நச் பரிகாரம் : ஆயுள் பாவம் (தொடர்ச்சி)

Posted on

அண்ணே வணக்கம்ணே !

இந்த எட்டாமிடம் ரெம்ப சென்சிடிவ் பாவம். இங்கன நின்ன கிரகம், இந்த பாவத்துக்கு அதிபதியான கிரகம், இதை பார்க்கிற கிரகம் எல்லாமே நமுக்கு டிக்கெட் போடத்தான் பார்க்கும். இந்த கிரகங்கள் 6 ல நின்னா எதிரிகள் நாசம். கடன் ஒழியும்,வழக்கு விவகாரம் ஜெயமாகும். இந்த கிரகங்கள் 12ல் நின்றால் செலவு குறையும் (எப்டி குறையும்னு கேட்காதிங்க.மனசு நொந்துரும்) ,தூக்கம் கெடும், திங்க முடியாது.

மேற்சொன்ன கிரகங்களுக்கு இன்னம் வேற ஏதாச்சும் பாவத்துக்குண்டான ஆதிபத்யம் கிடைச்சிருந்தா 6,12 ல நின்ன காரணத்தால் மேற்படி ரிலீஃபோட , அதன் ஆதிபத்யத்தை பொருத்து தீயபலனையும் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

மேற்சொன்ன கிரகங்களில் 6,12 ல் நிற்காத இன்ன பிற கிரகங்கள் எப்டியெல்லாம் அழும்பு பண்ணும்னு இப்பம் பார்த்துரலாம்..

1.சூரியன்:
அப்பாவுக்கு டிக்கெட்/அப்பாவோட பேச்சு வார்த்தை இல்லாம போகலாம்.அல்லது அவர் நொடிச்சு போயிரலாம். பல் கொட்டிப்போகலாம். மண்டை உடையலாம். ஸ்பைனல் கார்டுல பிரச்சினை வரலாம்.

2.சந்திரன்:
ஆஸ்மா,டிபி,வீசிங் பிரச்சினை வரலாம். ஜலகண்டம் ஏற்படலாம். அஃதாவது ஏரி குளத்தில் தவறி விழுதல், தண்ணீர் லாரி மோதுதல். பைத்தியம் பிடிக்கலாம். கிட்னி ப்ரேக் டவுன் ஆகலாம்.

3.செவ்:
விபத்து,தீவிபத்து,லாக்கப் டெத் நடக்கலாம். எதிரிகளோட கொலை வேறி தாக்குதலுக்கு இலக்காகலாம். ஆடு,மாடு முட்டலாம், மின் விபத்து நடக்கலாம். ஒசரமான இடத்துலருந்து விழலாம். ரத்தம் கெட்டுப்போகலாம், கட்டி கொப்புளம் வரலாம்.

4.ராகு:
ஆல்க்கஹாலிக் ஆகலாம். வாந்தி பேதி,விஷப்பூச்சி கடி,பாம்பு கடி, லாட்டரி,சூது,ஸ்மக்ளிங், ஷேர் மார்க்கெட்ல இறங்கி ஜீரோ பாலன்ஸுக்கு வந்துரலாம். இடுப்புக்கு கீழ் பாகத்தில் டாக்டருக்கே புரிபடாத பிரச்சினைகள் வரலாம். ஃபிட்ஸ் வரலாம். விஷம் சாப்பிடலாம்.

5.குரு:
கண்ணாலமே ஆகாது போகலாம். மனைவி டிக்கெட் போடலாம். அவிகளே உங்களை கொல்ல முயற்சி பண்ணலாம். நீங்க அவிகளை கொல்ல முயற்சி பண்ணலாம். பணம் ,நகை கொள்ளை போகலாம். உங்க சொத்தை அரசாங்கம் கையகப்படுத்தலாம்.கோர்ட்டு ஜப்தி ஆர்டர் தரலாம்.

6.சனி:
பைல்ஸ் வரலாம், பக்கவாதம் (லக்குவான்) தாக்கலாம், நொண்டியாகலாம்.சிறைப்படலாம். கொத்தடிமையாகலாம்.

7.புதன்:
ஸ்கின்ப்ராப்ஸ் வரலாம், ஆண்களுக்கு விதைகள்,பெண்களுக்கு ஓவரிஸ் பாதிக்கப்படலாம்.கீல் வாதம் வரலாம். தாய்மாமனே எமனாகலாம்.

8.கேது:
போலி மந்திரவாதிகளிடம் ஏமாறலாம். (தப்பித்தவறி) உண்மையான மந்திரவாதிகள் இருந்து அவிக மந்திர பிரயோகத்துக்கு பலியாகலாம். உடலில் புண்கள் வரலாம். இடுப்புக்கு மேல் பாகத்தில் டாக்டருக்கே புரிபடாத பிரச்சினைகள் வரலாம்.

9 சுக்கிரன்:
அளவுக்கு மீறிய சுகபோகங்களே உங்களுக்கு எமனாகலாம்.கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம்.ஆண்மை இழப்பு ஏற்படலாம்.

எச்சரிக்கை:
இந்த தீயபலனிலிருந்து தப்ப செய்துக்கவேண்டிய பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம். இந்த பதிவை குறைஞ்சது ஆயிரம் பேராச்சும் படிச்சபிற்காடுதான் பரிகாரம்..ஆமாம் சொல்ட்டன்..

4 thoughts on “நச் பரிகாரம் : ஆயுள் பாவம் (தொடர்ச்சி)

  S Muthukumar said:
  September 27, 2012 at 3:37 am

  Dear Sir,
  8-ஆம் இடத்தை பொருத்தை வரை அந்த இடம் கெடனும் என்று சொல்லி இருந்தீர்கள்.
  லக்னாதிபதியை விட பலம் குறைந்து இருந்தால் நல்லது என்றீர்கள்.
  அப்படியானால் 8- இல் சனியோ அல்லது செவ்வாயோ நீச்சமோ அல்லது பகை பெற்று
  இருந்தால் என்ன பலன்.?
  மேலும் அந்த இடத்தில ஒரு கிரகம் கேட்டு இருந்தால் அந்த கிரஹத்தின் உடைய ஆதி பத்தியமும்
  பாதிக்க படுமே ?
  sir, please explain…
  Muthukumar

   S Murugesan said:
   September 27, 2012 at 3:52 am

   //8- இல் சனியோ //

   மரணத்துக்கு பதில் சிறை / கால் ஊனம் /ஐ.பி போடுதல்/அடிமை நிலை இப்படி ஏதாவது ஏற்படலாம்

   //அல்லது செவ்வாயோ நீச்சமோ அல்லது பகை பெற்று
   இருந்தால் என்ன பலன்.?//

   ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள் ஆப்படிக்கும். கொலை வெறி தாக்குதலுக்கு இலக்காகலாம். நெருப்பு,மின்சாரம் பாதிக்கலாம்.ஆனால் உசுரு போகாதுனு எதிர்பார்க்கலாம்.

   //மேலும் அந்த இடத்தில ஒரு கிரகம் கேட்டு இருந்தால் அந்த கிரஹத்தின் உடைய ஆதி பத்தியமும் பாதிக்க படுமே ?//

   நிச்சயமா பாதிக்கப்படும். ஒரு ஃபோக்கஸ் லைட்டை எரிய விடும் போது வெளிச்சம் மட்டுமா வருது .உஷ்ணமும் வருதுல்ல (ஒரு தீவிபத்தையே உருவாக்கிற அளவுக்கு) மேலும் ஃபோக்கஸ் லைட்டுக்கு பின்னாடி இருட்டு நிச்சயம் இல்லியா.. அப்படித்தான் இதுவும்.

  S Muthukumar said:
  September 27, 2012 at 4:45 am

  Thank You So Much Sir. One More Doubt Sir.
  அப்படியானால் சனியோ, செவ்வாயோ 8 க்கு உடையவனாக இருந்து வேறு ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து அங்கு
  நீச்சமோ அல்லது பகையோ ஆனால் என்ன பலன் ?

   S Murugesan said:
   September 27, 2012 at 5:25 am

   ஐயா,
   6 அல்லது 12 ஆமிடத்தில் இருந்தால் சேஃப். மத்த எந்த பாவத்துல இருந்தாலும் அந்த பாவ காரகம் நசியும். ஒரு வேளை 10 ல் நின்று இதர கிரகங்கள் அனுகூலமாக இருந்து ஜாதகர் வேலை வெட்டி பார்ப்பவராக இருந்தால் ஒர்க்கஹாலிக்கா இருப்பார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s