நச் பரிகாரம்: 7 ஆம் பாவம் (தொடர்ச்சி)

Posted on

அண்ணே வணக்கம்ணே !

நச் பரிகாரங்கள் வரிசையில 9 கிரகங்கள் ஓவர். 6 பாவங்கள் ஓவர் . இன்னைக்கு 7 ஆம் பாவம் எந்தெந்த கிரகங்களால் கெட்டிருந்தா என்ன பலன் , என்ன மாதிரி பரிகாரம் செய்துக்கனும்னு பார்ப்போம்.

1.சூரியன்:
சூரியனால இந்த பாவம் கெட்டா பொஞ்சாதி ஈகோயிஸ்டா இருக்கலாம். காலப்போக்குல உங்க உடல்,உள்ள நலம்,கவர்ச்சி,திறமை எல்லாமே ஆவியாயிரலாம்.

பரிகாரம்:
திருமணம் ஆகாதவர்கள்:

சூரியன் தொடர்பான பெயர் கொண்ட பெண்ணை மனைவியாக்கிக்கலாம்.ரிமோட் வில்லேஜ்ல,மலை பிரதேசத்துல ,புத்தம் புதிய காலனியில பெண்ணெடுக்கலாம். பெண் ஒல்லியோ ஒல்லியா,பவர் க்ளாஸ் போட்டிருந்தா சிரேஷ்டம்

திருமணம் ஆனவர்கள்:

வாரத்துல ஒரு நாள் ரிமோட் வில்லேஜ் அ மலைபிரதேசத்துல ரா தங்கலாம். மனைவி சூரிய வடிவ ஆரஞ்சு ஸ்டிக்கர் பொட்டு யூஸ் பண்ணலாம். ஆரஞ்சு நிற ஆடை அணிகலன் நிறைய உபயோகிக்கலாம்.
கிருத்திகை, உத்தரம்,உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் மனைவியை பிரிந்திருங்கள்.

2.சந்திரன்:
சித்தம் போக்கு சிவன் போக்கு கணக்கா எல்லா மேட்டர்லயும் இன் ஸ்டெபிலிட்டி இருக்கும்., ஏறுமுகம்,இறங்கு முகம்னு மாறி மாறிவரும். இருக்கிறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டுக்கிட்டு உலகத்தின் பார்வையில “அந்தாளு சரியில்லிப்பா”ங்கற பேச்சு வந்துரும்.

பரிகாரம்:
திருமணம் ஆகாதவர்கள்:

சந்திர காரகம் கொண்ட பெண்ணை மணக்கலாம்.

ஆனவர்கள்:
மனைவியை சந்திரன் தொடர்பான பரிகாரங்கள் செய்ய சொல்லவும்.ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் மனைவியை பிரிந்திருங்கள்.

3.செவ்வாய்:
திடீர் மரணம் ஏற்படலாம். பொஞ்சாதியோட கைகலப்பு ஏற்படலாம்.கையில கிடைச்சதை வீசி காயமாயிரலாம். போலீஸ் பிரச்சினை ,நெருப்பு,மின்சாரம், கூர்மையான ஆயுதங்களால கூட பிரச்சினை வரலாம்.

திருமணம் ஆகாதவர்கள்:

செவ் காரகம் கொண்ட பெண்ணை மணக்கலாம்.

ஆனவர்கள்:
மனைவியை செவ் தொடர்பான பரிகாரங்கள் செய்ய சொல்லவும். மிருகசீரம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் மனைவியை பிரிந்திருங்கள்.

4.ராகு:
லாலா பார்ட்டி ஆயிரலாம், லாட்டரி ,சூதாட்டத்துல விருப்பம் வரலாம். ஃபுட் பாய்சன்,மெடிக்கல் அலர்ஜி நடக்கலாம்,சட்ட விரோத காரியங்களில் ஈடுபாடு வரலாம்.

திருமணம் ஆகாதவர்கள்:

ராகு காரகம் கொண்ட பெண்ணை மணக்கலாம்.

ஆனவர்கள்:
மனைவியை ராகு தொடர்பான பரிகாரங்கள் செய்ய சொல்லவும். திருவாதிரை,ஸ்வாதி,சதயம் ஆகிய நட்சத்திரங்களில் மனைவியை பிரிந்திருங்கள்.

5.குரு:
ஃபைனான்ஸ் ப்ராப்ளம் வரும், செல்வாக்கு செல்லாக்காசாயிரும். வயிறு இதயம் தொடர்பான பிரச்சினை வரலாம். லோக்கல் விஐபிங்க கிட்டே மோத வேண்டி வரலாம். வங்கி ,நீதிமன்ற விவகாரங்கள்ள சிக்கல் வரலாம்.

திருமணம் ஆகாதவர்கள்:

குரு காரகம் கொண்ட பெண்ணை மணக்கலாம்.

ஆனவர்கள்:
மனைவியை குரு தொடர்பான பரிகாரங்கள் செய்ய சொல்லவும்.புனர்வசு,விசாகம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் மனைவியை பிரிந்திருங்கள்.

6.சனி:
சொந்த தொழிலை ஊத்தி மூடிட்டு வேலை தேடி அலையவேண்டி வரலாம். கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினை வரலாம். சீக்கிரமே கிழடு தட்டி போகலாம்.

திருமணம் ஆகாதவர்கள்:

சனி காரகம் கொண்ட பெண்ணை மணக்கலாம்.

ஆனவர்கள்:
மனைவியை சனி தொடர்பான பரிகாரங்கள் செய்ய சொல்லவும். பூசம், அனுஷம்,உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் மனைவியை பிரிந்திருங்கள்.

7,புதன்:
சம்பந்த மில்லாத மேட்டர்ல எல்லாம் மூக்கை நுழைச்சு மூக்கு பஞ்சர் ஆகலாம். தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை வரலாம். கில்மா பார்ட்டிங்க சகவாசம் ஏற்படலாம்.

திருமணம் ஆகாதவர்கள்:

புத காரகம் கொண்ட பெண்ணை மணக்கலாம்.

ஆனவர்கள்:
மனைவியை புதன் தொடர்பான பரிகாரங்கள் செய்ய சொல்லவும். ஆயில்யம்,கேட்டை,ரேவதி

8.கேது:
ராகுவால் 7 ஆம் பாவம் கெட்டா என்னெல்லாம் பிரச்சினை வருமோ அதெல்லாம் வரலாம். லாஜிக்கே இல்லாம பிரச்சினை வரலாம். பட்லி கிட்டே ரிலாக்ஸ் ஆகலாம்னு அவ வீட்டுக்கு போனா வீட்ல போலீஸ் ரெய்டு வர்ரது.
திருமணம் ஆகாதவர்கள்:

கேது காரகம் கொண்ட பெண்ணை மணக்கலாம்.

ஆனவர்கள்:
மனைவியை கேது தொடர்பான பரிகாரங்கள் செய்ய சொல்லவும். அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களில் மனைவியை பிரிந்திருங்கள்.

9.சுக்கிரன்:
இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரத்துலவர்ர பிரச்சினைகள் எல்லாம் வரலாம்.

திருமணம் ஆகாதவர்கள்:

சுக்கிர காரகம் கொண்ட பெண்ணை மணக்கலாம்.

ஆனவர்கள்:பரணி,பூரம்,பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் மனைவியை பிரிந்திருங்கள்.
மனைவியை சுக்கிரன் தொடர்பான பரிகாரங்கள் செய்ய சொல்லவும்.

எச்சரிக்கை:

சூரியன் முதலாக சுக்கிரன் வரை கிரக காரகம் கொண்டபெண்களின் லட்சணங்களை கீழே தந்திருக்கிறேன்.

1.சூரிய பெண்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

தேன் நிற விழிகள் , செம்பட்டை கூந்தல் ,ஒல்லியான தேகம் , அவிக குடும்பத்துக்கு கிராமாதிபத்யம் இருக்கலாம்.

ஹார்ட் ஆஃப் தி டவுன் /புதிய காலனியில் முதல் வீடு/ குக்கிராமத்துல இவிக சாதியை சேர்ந்த குடும்பம் வேறு எதுவும் இருக்காது.

இவிக மேட்டர்ல 1 என்ற எண் விளையாடும். ஒரே பெண்ணா இருக்கலாம். பவர் க்ளாஸ் அணியலாம்.

2.சந்திர பெண்கள்:

ஒருவித குளுமை ( இவிக மனசுலயும் இருக்கும் -இவிக கிட்ட கொஞ்ச நேரம் பேசினா அது நமக்குள்ளயும் பரவும்) , தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும்)

தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும்.

எவரேனும் ஏற்கெனவே போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம்.

தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் தாய்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.

3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம், லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்

5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

6.சனி தொடர்பான பெண்கள்:
நிறம் ஒரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாநிறமொரு சனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.

இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .

7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 7 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு

சூரியன் முதலாக சுக்கிரன் வரை நவகிரகங்களுக்கான நவீன பரிகாரங்களை அறிய இந்த தொடரிலான 1 முதல் 9 அத்யாயங்களை பார்க்கவும்.

தொழிற்களம் வலைதளத்துல பணம் பணம் பணம் சீரியல் ஓடிக்கிட்டிருக்கு. இன்னைக்கு 16 ஆவது நாள். ஆரெல்லாம் இன்னம் அந்தப்பக்கம் வரலியோ அல்லாரும் இங்கன அழுத்தி வந்துருங்ணா..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s