நச் பரிகாரம்: 7 ஆம் பாவம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

நச் பரிகாரங்கள் வரிசையில 9 கிரகங்கள் ஓவர். 6 பாவங்கள் ஓவர் . இன்னைக்கு 7 ஆம் பாவம் கெட்டிருந்தா செய்துக்க வேண்டிய பரிகாரங்களை பார்ப்போம்.

7ங்கறது மனைவியை காட்டும் பாவம். இந்த மனைவிங்கற கான்செப்டால பாதிக்கப்படாத மன்சனே கிடையாது.

அவ்வையாரே ” கொண்டதோர் மனைவி வேறானால் கூறாமல் சன்னியாசம் கொள்”னு எளுதியிருக்காய்ங்க. நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதிகளை ரெண்டு கேட்டகிரியா பிரிக்கலாம். ஒன்னு பிரிஞ்சுட்டவுக ரெண்டு பிரிய தைரியம் இல்லாதவுக. ஆங்கிலத்துலயே “பெட்டர் ஹாஃப்”ங்கறாய்ங்கன்னா மனைவிங்கற மேட்டரு லைஃப்ல எவ்ள முக்கியம்னு புரியுது.

இந்த 7 ஆம் பாவம் கெட்டா – அது எந்த கிரகத்தால கெட்டதோ அதை பொருத்து விதவிதமா எஃபெக்ட் கொடுக்கும்.

1.சூரியன்:
சூரியனால இந்த பாவம் கெட்டா பொஞ்சாதி ஈகோயிஸ்டா இருக்கலாம். காலப்போக்குல உங்க உடல்,உள்ள நலம்,கவர்ச்சி,திறமை எல்லாமே ஆவியாயிரலாம்.

2.சந்திரன்:
சித்தம் போக்கு சிவன் போக்கு கணக்கா எல்லா மேட்டர்லயும் இன் ஸ்டெபிலிட்டி இருக்கும்., ஏறுமுகம்,இறங்கு முகம்னு மாறி மாறிவரும். இருக்கிறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டுக்கிட்டு உலகத்தின் பார்வையில “அந்தாளு சரியில்லிப்பா”ங்கற பேச்சு வந்துரும்.

3.செவ்வாய்:
திடீர் மரணம் ஏற்படலாம். பொஞ்சாதியோட கைகலப்பு ஏற்படலாம்.கையில கிடைச்சதை வீசி காயமாயிரலாம். போலீஸ் பிரச்சினை ,நெருப்பு,மின்சாரம், கூர்மையான ஆயுதங்களால கூட பிரச்சினை வரலாம்.

4.ராகு:
லாலா பார்ட்டி ஆயிரலாம், லாட்டரி ,சூதாட்டத்துல விருப்பம் வரலாம். ஃபுட் பாய்சன்,மெடிக்கல் அலர்ஜி நடக்கலாம்,சட்ட விரோத காரியங்களில் ஈடுபாடு வரலாம்.

5.குரு:
ஃபைனான்ஸ் ப்ராப்ளம் வரும், செல்வாக்கு செல்லாக்காசாயிரும். வயிறு இதயம் தொடர்பான பிரச்சினை வரலாம். லோக்கல் விஐபிங்க கிட்டே மோத வேண்டி வரலாம். வங்கி ,நீதிமன்ற விவகாரங்கள்ள சிக்கல் வரலாம்.

6.சனி:
சொந்த தொழிலை ஊத்தி மூடிட்டு வேலை தேடி அலையவேண்டி வரலாம். கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினை வரலாம். சீக்கிரமே கிழடு தட்டி போகலாம்.

7,புதன்:
சம்பந்த மில்லாத மேட்டர்ல எல்லாம் மூக்கை நுழைச்சு மூக்கு பஞ்சர் ஆகலாம். தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை வரலாம். கில்மா பார்ட்டிங்க சகவாசம் ஏற்படலாம்.

8.கேது:
ராகுவால் 7 ஆம் பாவம் கெட்டா என்னெல்லாம் பிரச்சினை வருமோ அதெல்லாம் வரலாம். லாஜிக்கே இல்லாம பிரச்சினை வரலாம். பட்லி கிட்டே ரிலாக்ஸ் ஆகலாம்னு அவ வீட்டுக்கு போனா வீட்ல போலீஸ் ரெய்டு வர்ரது.

9.சுக்கிரன்:
இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரத்துலவர்ர பிரச்சினைகள் எல்லாம் வரலாம்.

இதுக்குண்டான பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம். தொழிற்களம் வலைதளத்துல பணம் பணம் பணம் சீரியல் ஓடிக்கிட்டிருக்கு. இன்னைக்கு 15 ஆவது நாள். ஆரெல்லாம் இன்னம் அந்தப்பக்கம் வரலியோ அல்லாரும் வந்துருங்ணா..

2 thoughts on “நச் பரிகாரம்: 7 ஆம் பாவம்

  arul said:
  September 22, 2012 at 9:00 am

  anna, why are you delaying the remedies for this post?

  MINNAL said:
  September 24, 2012 at 6:48 am

  why no parikam for this topic?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s