நச் பரிகாரம் : 5 ஆம் பாவம் (தொடர்ச்சி)

Posted on

அண்ணே வணக்கம்ணே!

நச் பரிகாரங்கள் வரிசையில 9 கிரகங்கள் கெட்டா என்ன பரிகாரம்னு சொல்லிமுடிச்சம். அடுத்து ஒவ்வொரு பாவமா பாவங்கள் கெட்டா என்ன பரிகாரம்னு சொல்லிக்கிட்டிருக்கம். நேத்திக்கு 5 ஆம் பாவத்தை தொட்டோம்.

“புத்திமான் பலவான்”னுட்டு ஒருபழமொழி உண்டு. வாத்யாரு “பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்”னு பாடிவச்சிருக்காரு. “பெயர் சொல்ல பிள்ளை”ம்பாய்ங்க. இந்த ஐட்டமெல்லாம் உங்களுக்கு ஒர்க் அவுட் ஆகனும்னா அஞ்சாம் பாவம் சுப பலமா இருக்கனும்.

இது கெட்டா என்ன நடக்கும் ( ஜா.ரா மாதிரி ஆயிருவம்) – என்னாவிதமான பரிகாரம் செய்துக்கனும்னு நேத்திக்கே ஓவர் ஆலா சொல்லியிருந்தேன். இந்த பாவத்தை பத்தி சொல்ல நிறைய மேட்டர் இருக்குங்ணா. அதையெல்லாம் இன்னிக்கு பார்ப்போம்.

இந்த பாவம் சூரியனால் கெட்டால்:
ஈகோயிஸ்டா இருக்கலாம். சிடு சிடுன்னு இருப்பாய்ங்க. தானகுனம் இருக்கும். குழந்தை வரம் கேட்டு கோவில் கோவிலா சுத்தோனம்.அப்படி பிறந்த கொளந்தைங்களும் தான் என்ற கர்வத்தோட இருப்பாய்ங்க.

பரிகாரம்:
சூரிய உதய காட்சியை உங்க டேபிள் முன்னாடி -பெட் முன்னாடி போஸ்டரா வச்சிருங்க. ஞா வர்ரப்பல்லாம் பார்த்துக்கிட்டே இருங்க. அதை அப்படியே உள் வாங்க ட்ரை பண்ணுங்க. வெளிய இருக்கிறச்ச அந்த காட்சியை கற்பனை பண்ண ட்ரை பண்ணுங்க. குழந்தைகளை ரிமோட் வில்லேஜஸ்ல பிக்னிக் ,மலை ஏற்றம்னு பழக்கப்படுத்துங்க. குழந்தைய இன்னம் ஸ்கூல்ல சேர்க்கலின்னா பாஸ்கர்,கதிரவன்,சூர்யா மாதிரி சூரிய சம்பந்தப்பட்ட பேரா வைங்க.வசதியை பொருத்து சைக்கிளோ டூ வீலரோ வாங்கி கொடுத்து மார்க்கெட்டிங்,சேல்ஸ்,சூப்பர் வைசிங்ல ஈடுபடுத்துங்க.ஷெட்யூல்ட் ட்ராவல் பண்ண வைங்க.

சந்திரனால் கெட்டால்:
ஆகாச கோட்டை கட்டுவிங்க. குழந்தைகள் சீதள சம்பந்த நோய்களோட இருப்பாய்ங்க.அவிக குணம்,அவிகளுடனான உங்க ரிலேஷன் ரெண்டேகால் நாளைக்கொருதரம் தலைகீழா மாறிரும்.

பரிகாரம்:
குழந்தைகளுக்கு நீந்தகத்துக்கொடுங்க. ( நீச்சல் குளம் இருக்கிற ஸ்கூல்ல சேத்துட்டா போறும்னு நினைக்காதிங்க.) அருவி,கடல் ,ஆறு தொடர்பான காட்சியை உங்க டேபிள் முன்னாடி -பெட் முன்னாடி போஸ்டரா வச்சிருங்க. ஞா வர்ரப்பல்லாம் பார்த்துக்கிட்டே இருங்க. அதை அப்படியே உள் வாங்க ட்ரை பண்ணுங்க. வெளிய இருக்கிறச்ச அந்த காட்சியை கற்பனை பண்ண ட்ரை பண்ணுங்க..ஒரு அக்வேரியம் வாங்கி அதை மெயின்டெய்ன் பண்ற பொறுப்பை குழந்தைகளுக்கு கொடுங்க/சின்னவுகளா இருந்தா அவிகளை வச்சுக்கிட்டு செய்ங்க.

செவ்வாயால் கெட்டால்:
கோவக்காரரா இருப்பிங்க.ஏற்கெனவே ஒன்னு ரெண்டு மிஸ் கேரி ஆகியிருக்கலாம். உங்களுக்கு தீ,மின்சாரம்,அயுதம்,எதிரியால் அபாயம் ஏற்பட்டிருந்தா குழந்தைகளுக்கும் ஏற்படலாம்.

பரிகாரம்:
குழந்தைகளுக்கு சமைக்க கத்துக்கொடுங்க.மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்க சொல்லுங்க. நம்மை போல கார்ப்பென்டரிங் பண்ணாலும் ஸ்ரேஷ்டமே.

ராகுவால் கெட்டால்:
குழந்தைகளுக்கு ஒரு காமிரா வாங்கித்தாங்க. ஃபோட்டோ கலையில என் கரேஜ் பண்ணுங்க.பரமபதம் ஆடுங்க. கார்ட்ஸ் விளையாடுங்க (குழந்தைகளோட சேர்ந்து) -இந்த பாவாதிபதியும் கெட்டால் குழந்தை பாக்கியத்துல சிக்கல் வரலாம்.

இதை தவிர்க்க சீட்டாட்ட க்ளப்,பாருக்கு போயி ச்சொம்மா வேடிக்கை பாருங்க (என்விரான்மென்ட் சேக் -நீங்க் கோதாவுல இறங்கிராதிங்க -கதை கந்தலாயிரும்)

குருவால் கெட்டால்:
கொஞ்சம் போல பயந்த சுபாவம் ( நீங்களானாலும் சரி -குழந்தைகளானும் சரி) டூ குட்னெஸ்.

பரிகாரம்:
குடும்பத்தலைவரோட ஆட்காட்டி விரல் ஸைஸை மிஞ்சாதபடிக்கு ஒரு சிவலிங்கம் வாங்கி தினசரி பூஜை பண்ணுங்க.

சனியால் கெட்டால்:
அழுக்கா இருங்க -தாடி மீசையை மாசத்துல ரெண்டு நாள் மட்டும் எடுங்க. -வெளிறிப்போன ஆடைகள்/ நூல் பிரிந்த ஆடைகள் மட்டும் அணியவும். வீட்ல/வாக்/ஜாக் போகும் போது காக்கி நிற வேட்டி அணியவும்.
( விக்கிறாய்ங்க – ட்ரைவர்,கண்டக்டர்களுக்காவ)

புதனால் கெட்டால்:
அடுத்தவுக மேட்டர்ல மூக்கை நுழைக்காதிங்க. குழந்தை ஆணா இருந்தா பெண் குழந்தை போலவும் -பெண் குழந்தை இருந்தால் ஆண் குழந்தை போலவும் ட்ரஸ் அப் ,கெட் அப் மெயின்டெய்ன் பண்ணுங்க.

கேதுவால் கெட்டால்:
தினசரி ஒரு மணி நேரம் -வாரத்துல ஒரு நாள் காவி உடை பூண்டு வினாயகர் பூஜை செய்யவும்.

சுக்கிரனால் கெட்டால்:
ஓவியம் ,சிற்பக்கலை பழகவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s