நச் பரிகாரம்: 5 ஆம் பாவம்

Posted on

இந்த பாவம் கெட்டால் புத்தி அலைபாய்ஞ்சுக்கிட்டே இருக்கிறது ,எல்லாரையும்/எல்லாத்தையும் குறை சொல்றது, தற்கொலை எண்ணம், கொலைக்கும் ப்ரிப்பேர் ஆயிர்ரது, வரவு எட்டணா செலவு பத்தணான்னு சிங்கி அடிக்கிறது சந்தானமின்மை,புத்தி ஸ்வாதீனமில்லாம போறது, அவப்பெயர்,அவமானம், சட்டவிரோத,சமூக விரோத செயல்களில் ஈடுபடறது,சதி திட்டங்கள் தீட்டறது,சில சமயம் சதிகளுக்கே பலியாவது,அதிர்ஷ்டத்தை நம்பி செய்யற வேலைகளை பிரதானமாக்கி ஆகாய கோட்டைகள் கட்டறதுல்லாம் நடக்கும்.

மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தர அவற்றை மீண்டும் கீழே காப்பி பேஸ்ட் பண்றேன். ( ஹி ஹி பக்கமும் ரொம்புமில்லை)

புத்தி அலைபாய்ஞ்சுக்கிட்டே இருக்கிறது:
ட்ராவல் பண்ணுங்க. நிறைய ட்ராவல் பண்ணுங்க. ,போலீஸ் ஸ்டேசன் கோர்ட்டு சர்க்கிள்ள நட்பு வட்டத்தை ஏற்படுத்திக்கங்க. சொந்த வேலையா போகாதிங்க.

எல்லாரையும்/எல்லாத்தையும் குறை சொல்றது:
ஒரே சப்ஜெக்டை எடுத்துக்கிட்டு ப்ரோவா ஒரு பக்கம் ஆன்டியா ஒரு பக்கம் எழுதுங்க. உ.ம் வரதட்சிணை நல்லதே /வரதட்சிணை கொடுமையானது .ஒவ்வொரு நாளையும் கடன்ல ஆரம்பிங்க. சின்ன வியாதிகள் வந்தால் ( அவை பெரிய வியாதிக்கான முன்னோட்டம் என்ற நிலை இல்லாத பட்சம்) நோ ட்ரீட்மென்ட்.

தற்கொலை எண்ணம், கொலைக்கும் ப்ரிப்பேர் ஆயிர்ரது:
மரணத்துக்கு பின் வாழ்வு, ஆவிகள் உலகம் மாதிரி புக்ஸ் படிங்க/டிவிடி பாருங்க.ஆன்லைன்ல தேடிப்பிடிச்சு படிங்க.உங்க ஏரியாவுல அனாதை பிணங்களை புதைக்கும் அமைப்பு இருந்தா அவிகளுக்கு கான்ட் ரிப்யூட் பண்ணுங்க. கோ ஆப்பரேட் பண்ணூங்க.ஆரு செத்தாலும் ஒரு நடை போயி பார்த்துட்டு வாங்க.கடும் உடல் உழைப்பு கட்டாயம்,

வரவு எட்டணா செலவு பத்தணான்னு சிங்கி அடிக்கிறது:
உங்க ஜாதகப்படி விரயாதிபதி ஆருன்னு பாருங்க. அந்த கிரகத்தோட நிறத்துல பெட் ரூம்ல பெட் ஸ்ப்ரெட்,தலையணைல்லாம் ஏற்பாடு பண்ணிக்கங்க.

சந்தானமின்மை:
பெயர் புகழுக்கு ஆசைப்படாதிங்க. உங்க தவறுகளை சுட்டி காட்டறவுகளுக்கு ஊக்கம் கொடுங்க.

புத்தி ஸ்வாதீனமில்லாம போறது/மனோ தத்துவ பிரச்சினைகள்:
குழந்தைகளை ஆஸ்டல்ல போடுங்க
:
அவப்பெயர்,அவமானம்:
எதுக்கும் மின்ன நிக்காதிங்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாதிங்க.குழந்தைகளை ஆஸ்டல்ல போடுங்க
பிஞ்ச செருப்பு, வெளுத்த ஆடைகள், நூல் பிரிந்த உடைகளை அணியவும்.

சட்டவிரோத,சமூக விரோத செயல்களில் ஈடுபடறது,சதி திட்டங்கள் தீட்டறது,சில சமயம் சதிகளுக்கே பலியாவது,அதிர்ஷ்டத்தை நம்பி செய்யற வேலைகளை பிரதானமாக்கி ஆகாய கோட்டைகள் :

குழந்தைகளை ஆஸ்டல்ல போடுங்க.

குறிப்பு:
நாம நடத்திக்கிட்டிருக்கிற லோக்கல் மேகசினோட சதுர்த்தி ஸ்பெசல் வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு.அதான் பதிவு படக்குன்னு முடிஞ்சுருச்சு. அஞ்சாம் பாவத்தை பத்தி இன்னம் நிறைய சொல்லோனம். நாளைக்க்கு சொல்றேன்.

Advertisements

2 thoughts on “நச் பரிகாரம்: 5 ஆம் பாவம்

  BALA, riyadh said:
  September 17, 2012 at 5:22 pm

  Till end I could not read 4th Bhavam. It is taking and toggling between two sites. Pl let me have final link

   S Murugesan said:
   September 17, 2012 at 8:23 pm

   Sir,
   I am extremely sorry for the inconvenience. You can read the complete article in this site itself.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s