நச் பரிகாரம்: சகோதர பாவம்

Posted on

null

இந்த பாவம் கெட்டால் வாழ் நாள் எல்லாம் அல்லல் அலைச்சல் இருக்கும். வாழ் நாளில் பெரும்பகுதி பிரயாணங்களில் கழியும், உடன்பிறப்புகளால் வீண் விரயம்,அவர்களுடன் வம்பு,வழக்கு ஏற்படும்.ரிஸ்க் எடுக்கிறது ரஸ்கு சாப்பிடற மாதிரின்னுட்டு சகட்டுமேனிக்கு பல்பு வாங்குவிங்க. அல்லது நாலாவது தெருவுல எவருக்கோ தகராறுன்னா இங்கன கதவு சன்னல்லாம் பூட்டிட்டு கதவு மேல காதை வச்சிக்கிட்டிருப்பிங்க.

இந்த பாவம் சுப பலமானால் இளைய சகோதிரி/சகோதரன் முன்னேற்றம் பாதிக்கும். உங்களுக்கு செவிட்டு தன்மை ஏற்படலாம்.

இந்த பாவத்துல அசுபர்கள்,பாவிகள் உட்கார்ந்தால் நல்லது. சூரிய,செவ்,ராகு,சனி,கேது போன்றவர்கள் நின்றால் சுபம்.லக்னாதிபதி நின்னா நாஸ்தி. ரெண்டுக்கதிபதி நின்னா ஓடி ஓடி உழைக்கனும் -உழைப்பின் பலனை பெற அலைஞ்சு திரியனும். 3 க்கதிபதி நின்னா இளைய சகோதிரி/சகோதரன் உங்களை கமாண்ட் பண்ணுவாய்ங்க. நாலுக்கதிபதி நின்னா தாய்க்கு கெடுதல், ஸ்திர வாசம் இராது. டூவீலர்லயும் ,ஃபோர் வீலர்லயும் அலைஞ்சே ஆசனத்துல கட்டி வாங்குவிக.

அஞ்சுக்கதிபதி நின்னா .ரிஸ்க் எடுக்கிறது ரஸ்கு சாப்பிடற மாதிரி. 6 க்கதிபதி நின்னா இளைய சகோதிரி/சகோதரன் நோய்வாய்படுவாய்ங்க. அவிக கிட்ட கடன் வாங்க வேண்டி வரலாம். அ நீங்க கொடுக்கலாம்.பந்தம் இருக்காது.ருணானுபந்தம் தான் இருக்கும். இங்கன 7 க்கதிபதி நின்னா மனைவிக்கு நெல்லதில்லை. எட்டுக்கதிபதி நின்னா இளைய சகோதிரி/சகோதரன் நிலை கவலைக்கிடம். பாக்யாதிபதி நின்னா தந்தைக்கு நல்லதில்லை. ஜீவனாதிபதி நின்னா வாழ் நாளில் பெரும்பகுதி பிரயாணங்களில் கழியும், லாபாதிபதி நின்னா ஒவ்வொரு காசையும் ஓடி ஓடிப்பொறுக்கனும். விரயாதிபதி நின்னா சவுண்ட் பாக்ஸ் அவுட்டு . இளைய சகோதிரி/சகோதரன் முன்னேற்றம் பாதிக்கும்.

இந்த பாவம் எந்த கிரகத்தாலும் கெட வாய்ப்பிருக்கு. இங்கன ராகு /கேது/சனி மட்டும் நின்னா ஓகே. சனியும் நின்னா? குருவோட சேர்ந்து நின்னா? இப்படி எந்த கிரகத்தாலும் 3 ஆம் பாவம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு.

எந்த கிரகத்தால் இந்த பாவம் கெட்டிருந்தாலும் சவுண்டு பாக்ஸு பத்திரம்.கண்டத போட்டு குடையாதிங்க ,மரண கானா பாட்டு கேளுங்க. சோகபாடல்கள் கேளுங்க (ஐபாட்ல ,மொபைல்ல கேட்காதிங்க -ரெமப நேரம் ஃபோன் பேசாதிங்க.

உங்க டேபிள்,கட்டில்,நாற்காலி பீரோ, ஐரன் சேஃப் எல்லாத்துக்கும் சக்கரம் பொருத்திக்கங்க. டூ வீலர்,ஃபோர் வீலரை அவாய்ட் பண்ணிட்டு பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்லயே அலைங்க.சகோதர வர்கத்தை விட்டு விலகியே வாழுங்க. அவிகளுக்கு உதவலாம். வேலை போட்டு கொடுக்கிறது – சொந்த கம்பெனியில சேர்த்துக்கறது.கடன் கொடுக்கிறது -வீட்டோட வச்சுக்கறதெல்லாம் வேணா.

Advertisements

One thought on “நச் பரிகாரம்: சகோதர பாவம்

    S.Sivakumar said:
    September 15, 2012 at 12:53 am

    ethu sakodhara baavam?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s