நச் பரிகாரம்: லக்ன பாவம்

Posted on

null

அண்ணே வணக்கம்ணே !
எங்கன எந்த அக்ரகாரம் எரிஞ்சு போச்சோ தெரியலை. ட்ராக் மாறாம இந்த நச் பரிகாரம் தொடர்பதிவு ஓடிக்கிட்டிருக்கு. இதுவரைக்கும் சூரியன் முதல் சுக்ரன் வரை கிரகங்கள் கெட்டிருந்தா என்ன பரிகாரம்னு பார்த்தோம்.

இன்னைலருந்து லக்னம் முதல் விரய பாவம் வரை பாவங்கள் கெட்டிருந்தால் என்ன பலன்னு பார்ப்போம். இந்த வரிசையில மொதல் பாவம் லக்ன பாவம்.

இது கெட்டிருந்தா அழகு படுத்திக்காதிங்க . ஆடையில் எளிமை. அணிகலன் கூடவே கூடாது. எதுலயும் மின்ன நிக்க கூடாது. ஆரையும் கமாண்ட் பண்ணப்படாது .கும்பல்ல கோவிந்தா போடனும். ஜாய்ண்ட் ஷ்யூரிட்டி கூடாது. நோ டெசிஷன் மேக்கிங். உங்க ஜாதகத்துல வேற எதுனா கிரகம்/பாவம் பலம் பெற்றிருந்தா அந்த கிரக/பாவ காரகத்வம் கொண்ட உறவை உங்க ஆலோசகரா வச்சுக்கங்க.

மேற்சொன்ன ஜெனரல் ரெமீடீஸோட – இந்த பாவம் எந்த கிரகத்தால கெட்டிருக்கோ அதை பொருத்து சில பரிகாரங்கள் செய்துக்கனும். கீழே தந்திருக்கேன் பாருங்க.

ஜாகத்துல குரு+ சனி/ராகு/கேது சேர்க்கை உள்ளவுக இந்த பரிகாரங்களில் உள்ள கோவில் குளம் தொடர்பான பரிகாரங்களை தவிர்க்கவும்.

சூரியன்:
ஒன்னுக்கடிக்க போனாலும் தனிய போங்க. எதுவா இருந்தாலும் லீகலா -பட்டப்பகல்ல செய்ங்க.பெண்கள் சூரிய வடிவிலான கஷாய நிற பொட்டை யூஸ் பண்ணுங்க.. காவி நிற ஆடைகள் அதிகம் உபயோகிக்கவும். காயத்ரி தேவியை தியானம் பண்ணுங்க.சூரிய நமஸ்காரம் நல்லது.

சந்திரன்:
எந்த முடிவையும் ஸ்பாட்ல எடுக்காதிங்க. ப்ளானை எக்காரணம் கொண்டும் மாத்தாதிங்க. அதிர்ஷ்டத்தை நம்பி இறங்காதிங்க. பட்சி சொல்லுது -சிக்ஸ்த் சென்ஸ் சொல்லுதுன்னு மூக்கை நுழைக்காதிங்க. குளிக்க வென்னீரை உபயோகிங்க. பனி/குளிர் பிரதேசங்கள் தவிர்க்கவும். ஊஞ்சலாடுங்கள்,மூன் லைட் டின்னர்.

செவ்வாய்:
இடுப்புல அரணாக்கயிற்றில்,கீ செயினில் எதாவது ஆயுதம் கோர்த்திக்கங்க.வேல் ப்ரிஃபரபிள்.மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்கங்க.சமையல் செய்ங்க. (மாமிசம் ப்ரிஃபரபிள்) உடற்பயிற்சி முக்கியம். பார்க்கவாச்சும் போலீஸ் மாதிரி கெட் அப் மெயின்டெய்ன் பண்ணுங்க (சிரிப்பு போலீசா தெரிஞ்சாலும் பரவால்லை).ரத்த விருத்தி,ரத்த சுத்திக்கு தேவையான எல்லா ப்ரிகாஷன்ஸ், ஃபுட், ட்ரிங்ஸ் எடுத்துக்கங்க.

ராகு:
பெண்கள் பாம்பு வடிவ -கேள்விக்குறி மாதிரி கிடைக்குதுங்கோ_ ஸ்டிக்கர் பொட்டு யூஸ் பண்ணுங்க. மர்ம நாவல் படிங்க. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாருங்க. உங்க ரகசியத்தை ஆருக்கும் சொல்லாதிங்க.அடுத்தவுக ரகசியத்தை சேகரிக்க ட்ரை பண்ணாதிங்க. இல்லீகல் மேட்டர் எதுவும் உடம்புக்காகாது. தண்ணி கூட வீட்லருந்து கொண்டு போய் குடிங்க.லாலா,லாட்டரி,குட்கா இத்யாதி கூடவே கூடாது.

குரு:
ரெம்ப நல்லவுகளா இருக்கிறது கூட அடுத்தவுகளை இர்ரிடேட் பண்ணும்.புரிஞ்சுக்கங்க. மன்னிப்பு தகுதியற்றவர்களுக்கு தப்பு செய்ய இன்னொரு வாய்ப்பா போயிரும். கௌரதை பார்த்து மாட்டிக்காதிங்க மறுக்க கத்துக்கங்க.

சனி:
சம்பாதிக்கிறதே செலவழிக்கத்தேன். நீங்க சொம்மா ..கீழே போட்டு வச்சிருந்தா எவனா அடிச்சிட்டு போயிருவான். நாளை செய்வதை இன்னைக்கே செய்ங்க. இன்னைக்கு செய்றதை இப்பவே செய்ங்க.சமையலுக்கு நல்லெண்ணெய். உப்பு,காரம்,புளி பாதியா குறைச்சுருங்க. நிறைய நடை பழகவும்.கேஷுவல் ட்ரஸ்ஸா காக்கி நிற டீ ஷர்ட்,ஷார்ட்ஸ் யூஸ் பண்ணுங்க.ஒரு டூல்பாக்ஸ் வாங்கி வச்சுக்கிட்டு கண்டதை கழட்டி கிரீஸ்,ஆயில் போட்டு மாட்டுங்க.ட்ரஸ் அப் கூட தையல் பிரிஞ்சது ,வெளிறிப்போனதுன்னு இருக்கனும்.

புதன்:
ஊர்பஞ்சாயத்து வேணா. மெசஞ்சர்ஸ்,தூதர்களை நம்பாதிங்க/. எந்த மேட்டரா இருந்தாலும் ஸ்ட் ரெய்ட் டீல் பெட்டர்.ஆண்கள் மீசை இருந்தா எடுத்துருங்க. சட்டை சுடிதார்ங்க வர்ர டிசைன்ல இருந்தா சிரேஷ்டம்.
பெண்கள் பாய் கட் பண்ணிக்கலாம். கு.பட்சம் அழகு அலங்கார பிசினஸை விட்டுருங்க. முகம் கழுவி ஒரு பொட்டு வச்சிக்கிட்டே போலாமாங்கனும்.

கேது:
தினசரி ஒருமணி நேரம் – வாரத்துக்கொரு நாள் காவி உடை அணிந்து வினாயகரை வழிபடவும். இதர மத கிரந்தங்கள் படிக்கவும்.ஆடியோ கேட்கவும்.இதர மத பிரார்த்தனை ஸ்தலங்களுக்கு செல்லவும். அழகு,அலங்காரம் மூச். நாலஞ்சு கலர் சேர்ந்த ஆடைகளா சூஸ் பண்ணுங்க.

சுக்கிரன்:
ஓவியமோ,சிற்பமோ கத்துக்கங்க. ப்ராக்டிஸ் பண்ணுங்க.கு.ப காகிதத்தையும்,பிளாஸ்டர் ஆஃப் பாரீஸையும் வேஸ்ட் பண்ணுங்க.அதுக்குன்னு தப்பி தவறி அவை சரியா வந்துட்டா காசாக்கிராதிங்க.கிஃப்டா கொடுத்துவிடுங்க. கண்ணாலம் ஆறவரைக்கும் அப்பா அம்மா கூடவே படுத்துக்கங்க.கண்ணாலமானபிறகும் கச முசால்லாம் வாரத்துல ஒரு நாள் அ ரெண்டு நாள் தேன்.

Advertisements

3 thoughts on “நச் பரிகாரம்: லக்ன பாவம்

  தமிழ்மகன் said:
  September 12, 2012 at 3:17 pm

  ஏன் தலை ராகு மற்றும் கேது சனி ஆகியவை கெட்ட கிரகங்கள் அவை எப்படி கெட்டு போகும்?

   S Murugesan said:
   September 12, 2012 at 3:22 pm

   வாங்க தமிழ் மகன் !
   இதெல்லாம் கெட்டவுகளுக்குத்தேன் படக்குனு கேட்ச் ஆகும்.. கெட்ட கிரகம் 3,6,10,11 ல இருந்தா ஓகே மத்த இடத்துல இருந்தா கெட்ட மாரிதான்.

  ramanan said:
  September 13, 2012 at 10:42 am

  excellent Murugesan keep it up…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s