“நச்” பரிகாரங்கள் : சுக்கிரன்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நச் பரிகாரங்கள் வரிசையில இன்னைக்கு சுக்கிரனை பத்தி பார்க்கப்போறோம்.சுக்கிரன் தான் காதலுக்கு காரகன். கிரேக்க கலாச்சாரத்துல காதல் தேவதைக்கு வீனஸ்னு பேரு. வீனஸ் என்பது சுக்கிரனின் ஆங்கிலப்பெயர்.

விந்துவை சுக்கிலம்னுவாய்ங்க. விந்துவில் உள்ள உயிரணுக்களை தெலுங்குல சுக்கில கணங்கள்னு சொல்றாய்ங்க.இதுக்கெல்லாம் காரகம் சுக்கிரன் தான். ஆனால் தெரியாத்தனமாவோ அ உள்ளுணர்வின் காரணமாவோ அ தீர்க தரிசனத்தோடவோ இதுக்கெல்லாம் சுக்கிர சம்பந்தப்பட்ட பெயராவே வச்சிருக்காய்ங்க பாருங்க. அங்கதான் நம்ம முன்னோர்கள் நிக்கிறாய்ங்க.

நாளைக்கு ஒவ்வொரு பாவம் கெட்டுப்போனா என்ன பரிகாரம்னு பார்த்துருவம். அடுத்து ஜாதகத்துக்கு ஆப்படிக்கிற கிரக சேர்க்கைகளுக்கு என்ன பரிகாரம்னு பார்ப்போம். இதையெல்லாம் முடிச்சுட்டுதேன் அடுத்த மேட்டருக்கு தாவறதா உத்தேசம்.ஆத்தா என்ன பண்றாளோ பார்ப்போம்.

இனி ஓவர் டு சுக்கிரன்.

யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் “அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது” என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, சூப்பர் செக்ஸ் பவர். படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி.

தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே.

ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை,துரித ஸ்கலிதம்,சொப்பன ஸ்கலிதம், செக்ஸ்வெறி, பர்வெர்சன்ஸ், செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும்.

நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.

பரிகாரங்கள் :

1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும்.

2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.

3. ஆடம்பரம், படாடோபம், ஃபர்னிச்சர், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.

4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.

5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்- இல்லின்னா சேம்பிள் பவுடர் டப்பா, ஃபேர் அண்ட் லவ்லி இத்யாதி) அவர்கள் ஆசியைப் பெறவும்.

6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.6 ஆவது வெள்ளிக்கிழமை 5,7 பரிகாரங்களை ஃபாலோ செய்யவும்.

7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).

8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும்.

9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும். இந்த திசையில் சமையலறை இருந்தால் நல்லது.

10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

முடிவுரை:

எதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

Advertisements

2 thoughts on ““நச்” பரிகாரங்கள் : சுக்கிரன்

  arul said:
  September 12, 2012 at 6:18 am

  nalla pathivu anna

  vpgjothidam said:
  July 29, 2014 at 2:42 am

  சக்ராஸ் பற்றி கேள்விப்பட்டு இருக்கிங்களா அய்யா ஒவ்வொரு கிரகத்தோட அதன் தொடர்புள்ள சக்கரங்கள் இயங்குது நான் அந்த விஷயங்களை பதிவு செய்ய சில நாட்கள் ஆகலாம் பரம தரித்திரம் பிடித்தவனையும் பணக்காரன் ஆக்கும் புதிய வழி முறை புதிய அனுபவம் அதில் யாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s