நச் பரிகாரம்: கேது
அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ஞா கிழமை .சியா சாப்பிடறவுக சியா சாப்டு , வெஜ் பார்ட்டிங்க ஸ்பெஷலா எதுனா ஆக்கச்சொல்லி ஒரு கை பார்த்துட்டு, ஷாப்பிங்/சினிமான்னு போயிட்டு ,சரக்கு பார்ட்டிங்க சரக்கு போட்டுட்டு எட்டுமணிக்கு மேலத்தான் சைட்டு பக்கமே வருவிங்க.
நச் பரிகாரம் தொடரில் இன்னைக்கு கேதுவுக்கான பரிகாரங்களை பார்ப்போம். ஓவர் டு கேது
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் ‘நம்மவர்’ என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது.
இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.
பரிகாரங்கள்:
1. எளிமையான வாழ்வு.
2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.
3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.
4. யோகம் பயிலுதல்.
5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.
6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.
7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.
8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.
(குறிப்பு: ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.)
பொரிகடலை:
பத்தில் கேது:
இங்கே கேது நிற்பது நல்லதே. இது தொழில் உத்யோக துறையில் தோல்விகளை கண்டு அஞ்சாத மன நிலையை காட்டும்.அதே நேரம் செய்யும் வேலைகளில் புதுமையை புகுத்துகிறேன் பேர்வழி ஏகத்துக்கு குழப்பவும் செய்யலாம். மொத்தத்தில் சோம்பல் இருக்காது. நல்லதாவோ /பொல்லாததாவோ ஏதோ ஒன்னை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க.
குரு+சனி /ராகு கேது
தங்கள் தெய்வ, சாஸ்திர நம்பிக்கை முழுக்க ஒழிந்து போகும் வரை சோதனைகள் தொடரும். வயிறு,இதயம், வாரிசுகள், தங்கம்,ரொக்கம் ,அரசியல் வகைகளிலும் பிரச்சினைகள் ஏற்படும்.
கேது சுபபலமானால்:
லைஃப் செட்டில்மென்ட்ல லோகாயதமாக பிரச்சினைகளை தந்தாலும் தங்களுக்கு ராஜ யோகம் இத்யாதியில் ஆர்வம் ,பயிற்சி ஏற்படும்
4ல் ராகு/ கேது
பாம்பு புற்று, சாராயக்கடை,சர்ச் ,மசூதி,தர்கா,துர்கை கோயில் உள்ள தெருவில் அருகாமையில் வீடு கட்ட , நிலம் வாங்க வாய்ப்பிருக்கிறது.
செவ்வாயுடன் கேது இணைந்ததால்:
செவ்வாயுடன் கேது சேருவது பரிகாரம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடை முறையில் பார்க்கும்போது நேரடி தாக்குதல்கள் ,விபத்துக்கள் தவிர்க்கப்பட்டாலும் ரத்தம் கெடுதல் போன்ற உடல் நல பிரச்சினைகளோடு மேலுக்கு சமாதானமாய் போனாலும் ஜாதகரிலாகட்டும் எக்ஸ் பார்ட்டியிலாகட்டும் உள்ளுக்குள் விரோதம் கனன்று கொண்டே இருப்பதை காணமுடிகிறது.. எச்சரிக்கை தேவை. நேரடி எதிரிகள் மட்டுமன்றி ரகசிய எதிரிகளாலும், துரோகிகள் சதிகாரர்களாலும் தொல்லைகள் ஏற்படும். நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து சந்தேக காரராக கூட தயாராகிவிடலாம். சில நேரம் தாங்களும் சதி திட்டம் தீட்ட முனைந்துவிடுவீர்கள் திடீர் என்று விரக்தி ஏற்பட்டு விடும்.
September 11, 2012 at 5:38 am
nice post
September 11, 2012 at 7:46 am
why today no post?