நச் பரிகாரம்: புதன்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
அனுபவஜோதிடம் டாட் காமில் ஜோதிடப்பதிவுகள் மட்டுமல்லாது தொழிற்களம் வலை தளத்தில் உங்க எல்லாரையும் ரிச்சாக்க “பணம் பணம் பணம்” தொடர் பதிவையும் போட்டுக்கிட்டிருக்கேன். படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க.

என்னடா மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிருச்சான்னு பேஜார் ஆவாத நைனா.. நச் பரிகாரம் இன்னைக்கும் தொடருது. இன்னைக்கு புதனை பத்தி விலாவாரியா பார்க்கலாம்.

வழக்கம்போல புதனையே உங்க கிட்டே பேசவிடறேன்.

இன்னைக்கு ஐடி (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) கொடி கட்டி பறக்குது. இந்த துறைக்கு காரகம் வகிப்பது நானே.

புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. ஜோதிடம் என் ஜூரிஸ்டிக்சன்ல தான் வருது. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே.

விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும்.புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.

மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? ‘ஆம்’ என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.

சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும்.

பரிகாரங்கள்:

1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.

2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.பஞ்சாயத்து பண்ற வேலைல்லாம் வேணா.

3. வியாபாரம் வேண்டாம்.

4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.

5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.

6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.

7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகியிருங்கள்.

8. ஆண்கள் ப்ராண்டட் உள்ளாடைகளை மட்டும் அணியவும்.

9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள்.

10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.

Advertisements

4 thoughts on “நச் பரிகாரம்: புதன்

  arul said:
  September 9, 2012 at 5:28 am

  good list

  vinoth said:
  September 9, 2012 at 10:18 am

  தொழிற்களம் வலைதள சுட்டி பிளீஸ்…

  கார்த்திக்கேயன் said:
  September 9, 2012 at 6:12 pm

  அண்ணே,உயர்திரு என்று உண்மையாக தான் விளித்தேன்,உள்குத்து ஏதும் இல்லை,புதன் பயோடேட்டா பிரமாதம்,நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s