நச் பரிகாரம் : ராகு

Posted on

null

அண்ணே வணக்கம்ணே !
கிரக தோசங்களுக்கு லாஜிக்கல் ரெமிடீஸை தொடர் பதிவா (ஹி ஹி மீள் பதிவு) கொடுத்துக்கிட்டிருக்கம். இதுல இன்னைக்கு ராகுவோட டர்ன்.

செவ் சரியில்லினா தோச ஜாதகம்னு தனிய எடுத்து வச்சு – அதுக்கு தோச ஜாதகத்தையே கட்டி வைக்கிறாய்ங்க. அதே போல ராகு /கேது சரியில்லினாலும் அதை தோச ஜாதகம்னு சொல்லிர்ராய்ங்க. ஏன்னா செவ் எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை கசாப்பு போட்டு கண்ட நோய்களுக்கும் இலக்காக்கி -பாடியை காட்பாடியாக்கி -கோபத்தை கொடுத்து தனக்கும் -பிறருக்கும் தீங்கு விளைவிக்க செய்துர்ராரோ .. அதே ரேஞ்சுல ராகுவும் வேலை கொடுத்துர்ராரு.

மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது. இந்த சக்தியை தர்ரது ராகுதான்.

ஒரு வேளை உலகமே திருந்தி இயற்கை விவசாயம்,இயற்கை வழியில் ஜீவனம்னு மாறித்தொலைச்சாலும் மன்ச பாடியில விசத்துக்கு குறைவிருக்காது. எப்டி எப்டினு கேப்பிக சொல்றேன்.

ஹ்யூமன் பாடியில அசிமிலேஷன்,எலிமினேஷன்ங்கற ரெண்டு ப்ராசஸ் கரீட்டா நடக்கனும். அசிமிலேஷன்னா புவ்வா சாப்பிடறது,லாலா குடிக்கிறது, காத்தை இழுக்கிறது -எலிமினேஷனுன்னா கக்கா போறது ,உச்சா போறது ,கார்பண்டை ஆக்சைடை வெளிய தள்றது.

இது பர்ஃபெக்டா நடக்கிறதுல்ல கொஞ்சம் போல மஷ்டு பாடியிலயே தங்கிருது. இது விசமா மாறுது. இந்த விசத்தை மேனேஜ் பண்ற கப்பாசிட்டியை கொடுக்கிறதும் ராகுதான்..

ராகு சரியில்லின்னா வாந்தி,பேதி,சொறி,சிரங்கு,படை வழியா மேற்படி மஷ்டு வெளியதள்ளப்படும். பாடிக்கு கோ ஆப்பரேட் பண்ணாம ஒடனெ அல்லாப்பத்தி மெடிசினை உள்ளாற தள்ளினா மெடிக்கல் ரியாக்சன் கூட நடக்கலாம். அதுவுமில்லாம மேற்படி விசத்தை வெளித்தள்ளும் முயற்சி தள்ளிப்போடப்பட்டுரும். மறுபடி என்னைக்கோ ஒரு நாள் புரட்சி வெடிக்கும்..

சரிங்ணா.. ராகுவே பேசறாரு .. கேளுங்க.

ராகு பேசுகிறேன்

சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன்.

இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன?

கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன்.

நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும்.

சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்!

நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவார்கள்.

இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன.

பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? ‘ஆம்’ என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.

நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.

பரிகாரங்கள் :

1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.

2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற அன்னிய மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.

3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.

4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.

5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்.

6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.

7. பரமபதம் ஆடுங்கள்.

8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.

9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.

10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள்.

11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.

12.வெளியிடத்தில் வாங்கிய உணவை சாப்பிடறதோ -தண்ணி குடிக்கிறதோ வேண்டாம். வீட்லருந்து கொண்டு போயிருங்க.

13.உங்க ஜட்ஜ்மென்டு எப்பயும் தப்பாத்தான் போகும். அதனால பெரியவுக பேச்சை கேட்டு நடந்துக்கங்க.

14.ஒரே நாள்ள பணக்காரராறதுல்லாம் சினிமாலதான் சாத்தியம். ஆனால் ஒரே நாள்ள பிச்சை எடுக்கிற ஸ்டேஜுக்கு வர்ரது வாழ்க்கையிலயும் சாத்தியம் அதனால ஈஸி மணிக்காக அல்லாடறதெல்லாம் வேணா..

ராகு மட்டும் இல்லை கேது மட்டும் சரியில்லின்னாலும் கீழ்காணும் பரிகாரங்களை செய்துக்கங்க:

காதல் , கூட்டு வியாபாரம் கூடாது. இதர மதத்தவர், இதர மொழியினரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. எனவே துர்கை கணபதியை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

Advertisements

10 thoughts on “நச் பரிகாரம் : ராகு

  kandhan said:
  September 5, 2012 at 11:12 am

  Thala,
  Matter oru flow la nalla vandhirukku.

  கார்த்திக்கேயன் said:
  September 5, 2012 at 5:56 pm

  உயர்திரு சித்தூராருக்கு,ராகுவுக்கான பரிகாரங்கள் எளிமையும் அருமையும்,இப்படித்தான் நண்பர் ஒருவருக்கு முதலில் மிக சுமாரான பெண்ணைப்பார்த்து பிடிக்க்காமல் வேறு அழகிய குணவதியை மணம் செய்துவைத்தனர்,குழந்தை பிறந்து 10 மாதம் தான் இருக்கும்,மகராசி தலை வலி என்று வாந்தி எடுத்து விட்டு படுத்தவர் போய் விட்டார்.கோஇன்ஸைட் ஆனாபோலிருந்தது,
  ஆமாம் மஷ்டு என்றால் என்ன?

   S Murugesan said:
   September 5, 2012 at 8:12 pm

   வாங்க கார்த்திகேயன்!
   இது சுஜாதாவின் பிரயோகங்களில் ஒன்று.மஷ்டு என்றால் இந்த இடத்தில் மலினம்,ஃபாரின் மேட்டர்,கலீஜு இப்டி அர்த்தம் பண்ணிக்கலாம்.

  தமிழ்மகன் said:
  September 7, 2012 at 8:16 pm

  //ராகுவை போல் கொடுப்பார் இல்லை .கேதுவை போல் கெடுப்பார் இல்லை// இது நீங்க சொன்ன பழமொழிதான். ஆனா இதுக்கு விளக்கத்தை இதுல குடுத்துருக்கலாமே?

  S.Sivakumar said:
  September 10, 2012 at 2:46 pm

  எனக்கு ராசிக்கு 1 ,7 இலும் லக்கினத்துக்கு 3 , 9 இலும் கேது ரகுவும் இருக்கிறார்கள். ஆனால் ராஹு கேதுக்கான எல்லா கேடு பலன்களும் நடந்துள்ளன. அது எதனால்?

   S Murugesan said:
   September 10, 2012 at 5:54 pm

   ஐயா,
   ஜாதகத்தில் லக்னாதிபதி பலகீனப்பட்டு -ராசியாதிபதி பலம் பெற்றால் இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது.

  விமலாதித்தன் said:
  January 13, 2013 at 10:51 am

  //உங்களுக்கு மொழிவெறி கிடையாதா?//

  ராகுக்கு மொழிவெறி சம்பந்தம் என்ன?

  விமலாதித்தன்

   S Murugesan said:
   January 13, 2013 at 3:05 pm

   வாங்க விமல் !
   ராகு நெல்ல பொசிஷன்ல இருந்தா அன்னிய மொழியினரும் அனுகூலமா இருப்பாய்ங்க. இதான் சோதிடம். அனுகூலமா உள்ளவனை எதுக்கு லொள்ளு பண்ணனுங்கற தாட்ல மொழி வெறி வெளிப்படாம இருக்கலாம்.

   ஆனால் தாய் மொழிங்கறது தாய்ப்பாலோட சேர்த்து ஊட்டப்படுவதாச்சே ..

  விமலாதித்தன் said:
  January 13, 2013 at 4:31 pm

  ஆங்கிலம் ராகுவுக்கு உட்பட்ட மொழியா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s