நச் பரிகாரம்: குரு

Posted on

“புனரபிமரணம், புனரபிஜனனம்” “உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள்.

கடந்த பிறவியில் உங்கள் உழைப்பின் பலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.

பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார்.

சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, நான் -அந்தணர்,சான்றோரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.புதன் -கல்வியாளர்கள்,வர்த்தகர்களை ஆள்கிறோம்.

இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு தீங்கு செய்தீர்கள், அவர்களது உழைப்பை பெற்று அவர்களுக்கு உரிய கூலி/சன்மானம் வழங்காது கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம்.

எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே ‘உங்கள் சாய்ஸ்’ படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட சில விசயங்களையாவது விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.

கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? “ஆம்” என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.

பரிகாரங்கள்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.

2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள்.

3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.

4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

5. உங்களுக்கு ஏதேனும் வித்தை கற்று கொடுத்தவர்களுக்கு, பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.

6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.

7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.

8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.

9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.

10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள்.

11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

போனஸ்:
ஜோதிடத்தின் அடிப்படையை அறியாதவர்கள் கூட திருமண பேச்சை எடுத்ததுமே “குருபலம்” இருக்கா பாருங்க என்று யோசனை தெரிவிப்பர்.

குரு பலத்துக்கும் – கல்யாணத்துக்கும் என்ன தொடர்பு?

குரு பலம் இருந்தால் இதயம் முழு வேகத்துடன் வேலை செய்யும். முகத்தில் திருமண களை வரும்.கல்யாணம் முடிந்த பிறகு காஞ்சமாடு கம்பங்கொல்லையில் விழுந்தது போல் “இன்பத்தில்” திளைத்தாலும் உடல் நலகோளாறுகள் வராது.

திருமணம் நடக்கவேண்டுமானால் காசு பணம் தேவை. குருபலம் இருந்தால் தான் இவை புரளும். கல்யாணத்துக்கு தங்கம் முக்கியம். குரு ஸ்வர்ண காரகன் என்பதால் குரு பலம் இருந்தால் தான் கைக்காசு தங்கம் ஆகும். தங்கம் நகையாகும்.

திருமண காரியங்கள் நல்லபடி நடக்க காசுபணம் மட்டும் இருந்து விட்டால் போதாது செல்வாக்கும் தேவை .மேலும் ஒவ்வொரு காரியமும் உரிய சமயத்தில் நடந்தாக வேண்டும். இதற்கெல்லாம் குரு தான் காரகன். இதனால் தான் கல்யாணம் என்றதுமே குரு பலம் வந்திருச்சா என்ற கேள்வி எழுகிறது.

சிலர் மணமகள் அ மணமகன் இருவரில் ஒருவருக்கு குரு பலம் இருந்தால் போதும் என்று சொல்வர். இது சரியல்ல.

குருபலம் இல்லாத தரப்பினர் குரு பலம் உள்ள தரப்பினரிடம் படாத பாடு படவேண்டி வந்துவிடும்.

Advertisements

5 thoughts on “நச் பரிகாரம்: குரு

  கார்த்திக்கேயன் said:
  September 6, 2012 at 4:47 pm

  உயர்திரு சித்தூராருக்கு,குருவுக்கான பரிகாரங்கள் மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் விளக்கினீர்கள்,ஏன் பெரிய மனிதர்களுடன் அளவுடன் பழக வேண்டும் என்று சொல்கிறீர்கள் ?7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.,இதற்கும் விளக்கம் அறிய ஆவல்.வேண்டுகோளுக்கு இணங்க வேறெதுவும் எழுதாமல் தொடர்ந்து நவகிரஹ பரிகாரங்கள் எழுதுவதற்கு நன்றி.சர்ப சாந்தி யார் செய்து கொள்ள வேண்டும்,அதை விளக்க முடியுமா?

   S Murugesan said:
   September 6, 2012 at 6:48 pm

   மறுபடியும் கார்த்திகேயனா?
   வாங்க..
   //உயர்திரு சித்தூராருக்கு//
   இது ரெம்ப நாடகத்தனமா இருக்கு . மரியாதை மனசுல இருந்தா போதுமே.

   //குருவுக்கான பரிகாரங்கள் மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் விளக்கினீர்கள்//

   நன்றி

   //ஏன் பெரிய மனிதர்களுடன் அளவுடன் பழக வேண்டும் என்று சொல்கிறீர்கள் ?7//

   குரு பலம் போதாதவர்களுக்குத்தான் இந்த அறிவுரை.ஏன்னா பெரீமன்சன்னு நாம நினைக்கிற பார்ட்டியெல்லாம் பெரீ கேப்மாரியாத்தான் இருப்பான். ரெம்ப நெருங்கிட்டிங்கன்னா – ஐ மீன் குரு பலம் இல்லாதவுக – ஆஷ் ட்ரே க்ளீன் பண்றது -ஊத்திக்கொடுக்கிறது -கூட்டி கொடுக்கிறது மாதிரி வேலைல்லாம் செய்ய வேண்டி வந்துரும் . மறுத்தா விரோதம் வந்துரும்.

   ஒரு வேளை அந்த பெரீ மன்சன் நெஜமாலுமே பெரீமன்சனா இருந்தா -குரு பலம் இல்லாதவுக நெருங்கி பழகும் போது -உங்களை தக்கைன்னு தள்ளி விட்டுர வாய்ப்புண்டு

   //கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள்.//
   தோஷம் குறையும்

   // ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.,இதற்கும் விளக்கம் அறிய ஆவல்//

   ஏன்னா அங்கே போனா ஒரு கெத்து ,ஒரு பந்தா வந்துரும். உங்க மேற் பார்வையில ஆருனா எதியாச்சும் ஆட்டைய போட்டா அந்த கருமம் உங்களை சுத்திக்கும்.

   //வேண்டுகோளுக்கு இணங்க வேறெதுவும் எழுதாமல் தொடர்ந்து நவகிரஹ பரிகாரங்கள் எழுதுவதற்கு நன்றி.//

   இது நம்ம கையில சமாசாரம் இல்லை. எல்லாம் அவள் செயல்

   //சர்ப சாந்தி யார் செய்து கொள்ள வேண்டும்,அதை விளக்க முடியுமா?//
   சர்ப்ப சாந்தில்லாம் டுபாக்கூரு. சர்ப்பதோசம் உள்ளவர்கள் அதற்குரிய பரிகாரங்களை செய்துக்கனும். இவை கடந்த பதிவில் தரப்பட்டுள்ளன்.

  MARUTHAPPAN said:
  September 7, 2012 at 12:45 am

  vanakam

  anne, last week jaya tv serial kalabairavarnu oru serial poikitu iruku.

  athila all the navagrahas are under control of kalabhairavar inu oru seithi songa, is it true, please explain

  thx

  s.maruthappan

   S Murugesan said:
   September 7, 2012 at 5:48 am

   வாங்க மருதப்பன்!
   இந்த மேட்டர்ல லாஜிக் உதைக்குது.ஆனால் ஆராச்சும் இதை முழுக்க முழுக்க உண்மைன்னு நம்பி ஒர்க் அவுட் பண்ணா ஒர்க் அவுட் ஆகவும் வாய்ப்பிருக்கு. இதெல்லாம் அவிகவிக மனசை பொருத்த விஷயம்.

  MINNAL said:
  September 7, 2012 at 7:33 am

  Thanks for your reply (regarding kalabairavar).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s