” நச் ” பரிகாரம்: சந்திரன்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கும் நவகிரக தோசங்களுக்கு நச் பரிகாரம் தொடருது. இதை கிரகங்களே நேரிடையா உங்களுக்கு சொல்றாப்ல எழுதிக்கிட்டிருக்கேன்.

சந்திரன் பேசுகிறேன்!

வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.

நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? “ஆம்” என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.

இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.

நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

மனம் -நுரையீரல் -சிறு நீரகம் :

இந்த மூன்றுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பீர்கள். அந்த காலத்துல சாவுல கட்டிக்கிட்டு அழற தாய்குலம் அப்பப்போ மூக்கை சிந்தி பக்கத்து பார்ட்டியோட புடவையில துடைக்கிறதை பார்த்திருப்பிங்க.
இதை கமல் கூட ஏதோ படத்துல செய்தாப்ல ஞா. இதான் மனசுக்கும் நுரையீரலுக்கும் உள்ள தொடர்பு.

வடிவேலுவோட காமெடி ட்ராக்ல சனங்க இவரை உதைச்சதும் ஒன் பாத்ரூம் போயிருவாரு..இதான் மனசுக்கும் சிறு நீரகத்துக்கும் உள்ள தொடர்பு. சின்னக்குழந்தைகளை தலைக்கு மேல தூக்கி விளையாடற பார்ட்டிகள் ஜாக்கிரதை பயத்துல அதுக ஒன்னுக்கு விட்டா பாய்ண்ட் டு பாய்ண்டா வாய்க்கு வந்துரும்.

வீசிங் அனுபவம் உள்ளவுக கரீட்டா ரோசிச்சு பார்த்தா அலர்ஜி, சீதள உணவு, தூசு இத்யாதியோட டென்ஷனுக்கு உள்ளாகும் போது வீசிங் வந்துர்ரதை கவனிக்கலாம்.

வீசிங் இருக்கிற வரை மூச்சா போவாது ( ஆக்சுவலா இதை பெரியார் சொன்னதை படிச்சப்பாறம் தான் ஐடென்டிஃபை செய்தேன்) இது மனசு -நுரையீரல் -சிறு நீரகத்துக்கு இடையில் உள்ள தொடர்பு.

ஆக உங்க ஜாதகத்துல சந்திரன் சாதகமா இல்லியான்னு ஒரு ஐடியா வந்திருக்கும். சந்திரன் சாதகமா இல்லின்னா உங்களுக்கான பரிகாரங்கள் கீழே :

பரிகாரங்கள்:

1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).

2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.

4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, பகை உதவாது. மனசுக்கு பிடிக்காத சூழல் உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.

5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.

6. அருகம்புல் சாறை அருந்துங்கள். இது நேச்சுரல் டயாலைசர்.

7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.

8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி “பார்க்கலாம்” “பார்க்கலாம்” என்றே சொல்லிக் கொண்டிருங்கள். ரெண்டே கால் நாளைக்கு மிஞ்சி ப்ளான் பண்ணாதிங்க.

9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், வாரத்துல 4 நாள் தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

11. இருமல்/தும்மல்/ வீசிங் /ப்ராங்கடைஸ் இத்யாதி இருந்தால் வென்னீரும் உதவாது / குளிர் நீரும் உதவாது வெது வெதுப்பான நீரையே குளிக்க உபயோகிங்க.

12. தண்ணி தொட்டியை கழுவறது -தோட்டத்துக்கு நீர் பாய்ச்சறது மாதிரி வேலைகளை எடுத்துப்போட்டு செய்ங்க -பூந்தோட்டமா இருந்தா ஆப்பரேஷன் தியேட்டர்ல டாக்டர் மாதிரி மூக்கை துணியால மூடிக்கங்க.

13.நிலத்துல கால் பாவாத சமாசாரங்களை நம்பி இன்வெஸ்ட் பண்ணாதிங்க

Advertisements

7 thoughts on “” நச் ” பரிகாரம்: சந்திரன்

  கார்த்திக்கேயன் said:
  September 3, 2012 at 3:23 pm

  உயர்திரு சித்தூராருக்கு,சந்திரனின் அறிமுகம் மிக நன்று,ஒரு சந்தேகம் ”நான் அதிகாரம் செய்யும் தொழில் செய்து வந்தால் விட்டு விலகி விட சொல்கிறீர்கள்”.இது வித்தியாசமாக உள்ளது,நவகிரக அதிகாரம் வகிக்கும் தொழில் தானே ஜாதகருக்கு ஒத்துவரும் என்று அனைத்து ஜோதிடரும் சொல்லுவர்.தவறென்றால் திருத்தவும்.

  பரிகாரங்கள் வழக்கம் போல எளிமை,எனக்கு இப்போது புதன் தசையில் சந்திர புக்தி,மேற்சொன்ன பரிகாரங்கள் அவசியம் தான் என நினைகிறேன்.

  தொடர்ந்து நவகிரஹ பரிகாரங்கள் எழுதி வருவதற்கு நன்றி

   S Murugesan said:
   September 3, 2012 at 5:06 pm

   கார்த்திகேயன் !
   பலவீனப்பட்டிருக்கும் கிரகத்தின் காரகத்வத்தில் பலன் பெற்றால் அந்த கிரகம் தரும் தீய பலன் இரட்டிப்பாகும்.பரவால்லியா?

  கார்த்திக்கேயன் said:
  September 3, 2012 at 3:25 pm

  ”வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது” எங்கள் வீட்டில் தென்கிழக்கில் தான் உள்ளது,வாஸ்துப்படி வடமேற்கில் சமையலறையை செகண்ட் ஆப்ஷனாக நிறுவுகின்றனர்.சந்திரன் கெட்டால் அவ்வாறு செய்யக்கூடாதா?

   S Murugesan said:
   September 3, 2012 at 5:03 pm

   கார்த்திகேயன் சார் !
   வடமேற்குங்கறது வாயுமூலை அங்கன அடுப்பிருந்தா நாறிரும்.அது சந்திரனுக்குரிய திசை நுரையீரல் பாதிக்கப்படும் தொடர்ந்து சிறு நீரகம்,மனம்கூட பாதிக்கப்படலாம்.அதுக்குத்தேன் வேணாம்னேன். தென் கிழக்கு பெஸ்ட்.

  S.Sivakumar said:
  September 4, 2012 at 1:06 am

  better if you specifically say which position of chandran in horoscope is favourable and which is unfavaorable. confused as some problems exist and some problems dont.

  கார்த்திக்கேயன் said:
  September 4, 2012 at 4:42 pm

  மிக நன்றாக விளக்கம் தந்தமைக்கு நன்றி

  kandhan said:
  September 5, 2012 at 11:33 am

  “சின்னக்குழந்தைகளை தலைக்கு மேல தூக்கி விளையாடற பார்ட்டிகள் ஜாக்கிரதை பயத்துல அதுக ஒன்னுக்கு விட்டா பாய்ண்ட் டு பாய்ண்டா வாய்க்கு வந்துரும்.” 🙂 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s