நச் பரிகாரம்: செவ்வாய்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகங்கள் குவிஞ்சுக்கிட்டிருக்கிறதாலயும் -பவர் கட் பிரச்சினையாலயும் நம்ம மாஸ்டர் பீஸான நவீன பரிகாரங்களை அப்டேட் பண்ணி மீள் பதிவா போட்டுக்கிட்டிருக்கேன். கர்ணன் டிஜிட்டல் காப்பிக்கு கிடைச்ச ஆதரவு கிடைச்சுக்கிட்டிருக்கு. அல்லாருக்கும் நன்றி. இன்னைக்கு செவ்வாய்.

செவ்வாய் பேசுகிறேன்:

இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் “சூரியன் பலமிழந்துட்டாரு”, “கேது கெட்டிருக்காரு” என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!

இது மட்டுமல்ல ஜாதகத்தில் எனக்கு பின்னே உள்ள கிரகங்களை கிரக யுத்தத்தில் தோற்ற கிரகங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே – நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?

சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா?

ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா?

அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா?

“ஆம்” என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? “ஆம்” என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.

நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?

2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (ராணுவம், காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).

3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.

5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.

6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.

7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

பிற்சேர்க்கை:
மேற்படி மேட்டர் எல்லாம் ஓல்டு. இன்னைய தேதிக்கு செவ் நெல்ல இடத்துல உட்கார்ந்தவனுக்கும் – கெட்ட இடத்துல உட்கார்ந்தவனுக்கு என்னா வித்யாசம்னு சூட்சுமத்தை சொல்றேன்.

செவ் நெல்ல இடத்துல உட்கார்ந்திருந்தா மஜ்ஜை ஓகே, வைட் செல்ஸ் ஓகே, நோய் எதிர்ப்பு சக்தி ஓகே. ரத்தம்,ரத்த சுத்தி ஓகே ஃபிசிக்கல் ஃபிட்னஸ் ஓகே. .

ஃபிசிக்கல் ஃபிட்னஸ் உள்ளவனுக்கு பொறுமை இருக்கும். கோபம் வராது .வந்தாலும் அதை ரெம்ப கான்ஃபிடன்டா ஸ்டைலிஷா காட்டுவான்.அது காரியத்தை சாதிச்சு கொடுக்கும். செவ்வாய்னாலே யுத்தம். யுத்தம்னா ஒரு நீதி ,ஒரு வியூகம் இருக்கனும்.அதை இவன் மெயின்டெய்ன் பண்ணுவான்.

செவ் கெட்டிருந்தா என்னாகும்னு அப்டியே உல்ட்டா அடிச்சு சொல்றவங்களுக்கு ஆயிரம் ரூவா பரிசு ( மெயில்லயே அனுப்பிருவம்ல)

அனுபவம்:1

எங்க ஊருல இப்பம் எம்.எல்.ஏவா இருக்கிற பார்ட்டிது மகர ராசி . 3 ஆவது தாட்டி எலீக்சன்ல நின்னப்போ எதிர்த்து நின்ன பார்ட்டிது சிம்ம ராசி செவ் தவிர எல்லா கிரகமும் அனுகூலம். நம்மாளுக்கு செவ் தவிர மத்த கிரகமெல்லாம் பிரதி கூலம் ஜெயிச்சது ஆரு தெரீமா நம்மாளுதேன்.

இதான் செவ்வாய்க்கு உள்ள கெத்து .

அனுபவம்:2
நம்ம ஜாதகத்தை பத்தி இஷ்டாத்துக்கு அளந்து விடறேன்ல.ஆனால் படக் படக்குன்னு சோத்துக்கே லாட்டரி அடிக்கிற நிலை வந்துரும். (கடவுள் புண்ணியத்துல 2007 க்கு அப்பாறம் இல்லை) காரணம் என்ன தெரீமா 4 ல் செவ் .இத்தனைக்கும் கேது இவரோட இருந்து இவரை கண்ட்ரோல் பண்றாரு.

செவ்வாயை பத்தி ஒரு வருசத்துக்கு சொல்லலாம். அம்மாம் மேட்டர் கீதுங்கோ..

Advertisements

8 thoughts on “நச் பரிகாரம்: செவ்வாய்

  S.Sivakumar said:
  September 4, 2012 at 1:11 am

  Mars position 8th from lagna and sixth from rasi and alone. good or unfavorable?

  MINNAL said:
  September 4, 2012 at 7:14 am

  please reduce the size of the top image (lady!)

  arul said:
  September 4, 2012 at 7:15 am

  nice post

  கார்த்திக்கேயன் said:
  September 4, 2012 at 4:40 pm

  உயர்திரு சித்தூராருக்கு,செவ்வாய் பற்றி பல அறியாதவற்றையும் அறிய வைத்தீர்கள்,
  என் கேள்விக்கு உங்கள் பதில் தெளிவாய் இருந்தது,மிக்க நன்றி,நான் பிறந்தது 27,மார்ச் வேறு,செவ்வாய் வேறு,சன் சைன் ஏரீஸ் வேறு,லக்னம் மேஷம்,ஆக எப்படி பார்த்தாலும் செவ்வாய் கருணை இருக்கும் தானே?!!!

   S Murugesan said:
   September 5, 2012 at 4:38 am

   கார்த்திகேயன் !
   அப்டில்லாம் பொத்தாம் பொதுவா “நினைச்சுராதிங்க”. உங்க லக்னத்துக்கு செவ் சுபனா இருந்து சுஸ்தானத்துல இருக்கனும். இல்லாட்டி பாவியாகி துஸ்தானத்துல இருக்கனும். அப்பத்தேன் செவ் கருணை கிடைக்கும்.

  J.Arul Prakash said:
  September 4, 2012 at 7:27 pm

  பிற் சேர்க்கை மிகவும் அருமை….நீங்கள் கூறிய உதாரணங்கள் புதுமை…ஒரு வருடம் அளவிற்க்கு பேச மற்ற கிரகங்களை விட இது அவ்வளவு பெரிய கிரகமா??? 

  T. Chandrasudan said:
  September 5, 2012 at 5:02 am

  Simma lagnathirukku sevvai pathagathipathi . 7 lil ninral nanmai seivara ?

  Thirumalaibaabu said:
  September 5, 2012 at 11:02 am

  Thanks for the post….Useful

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s