சனியின் திருவிளையாடல்கள்

Posted on Updated on

நம்மாளு ஒருத்தரு. அவரோட ஜன்ம ராசி மீனம். இவருக்கு 3 ல சனியிருந்தப்போ தம்பிக்காரனை டம்மியாக்கி கொடி பறக்க விட்டாரு. கடை ஓப்பனுக்கு எஸ்.பி வந்தாருன்னா பார்த்துக்கங்களேன். அந்த காலத்துல சித்தூரு பஜார்ல எல்லாம் பாய்,மெத்தை போட்டு தான் நகை வியாபாரம் நடந்துக்கிட்டிருந்தது. ஆனால் நம்மாளு அப்பா காலத்து கடைய ஷோ ரூம் ஆக்கிப் போட்டாரு

நாலாமிடத்துல சனி வந்தப்போஅம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்தது (இன்னைக்கும் பெட் ரிடன்தான்) இந்த காலகட்டம் வரைக்கும் நமக்கு பார்ட்டியோட டச்சே கடியாது.

அஞ்சுல சனி வந்த கதைய நண்பரே சொல்லியிருக்காரு . சனி ஆறை பார்க்கும்போது ஊர் திரும்பின போது தான் நமக்கு அறிமுகம்.

அஞ்சுங்கறதை புத்தி ,பெயர், புகழை காட்டற இடம், சனி அஞ்சுல வர்ர சமயம் தம்பிக்காரன் எதோ நகை விற்பனைக்கு ப்ரோக்கரேஜ் பண்ணியிருக்கான். விக்க வந்தவனை வாங்கற கடைக்காரனுக்கு அறிமுகம் செய்து கமிஷனா பத்துரூபா வாங்கி தின்னிருப்பான் போல.

விக்க வந்தவன் மொள்ளமாரி. கொண்டு வந்தது திருட்டு நகை. போலீஸ் வந்துருச்சு. வாங்கின பார்ட்டிக்கிட்டருந்து நகைகளை லவுட்டிக்கிட்டு போயிருச்சு. நகைய வாங்கினவுக தம்பிகாரன் தாலிய தானே அறுக்கனும்.ஊஹூம்..அவன் டம்மி பீஸு .அவங்கிட்ட எதுவும் தேறாது.

நம்மாளு மேல அட்டாக் பண்ணாய்ங்க. கடையில ஊட்ல பாக்கெட் ட்ரான்சிஸ்டரை கூட விடாம அள்ளிக்கிட்டு பூட்டானுவ.இந்த பிரச்சினையில கடைய கவனிக்க முடியலை. ரொட்டீன் பேமென்ட்ஸ் எல்லாம் நின்னு போச்சு. கடன் காரவுக ஊட்டுக்கும் கடைக்கும் பூட்டை போட்டுட்டானுவ. பார்ட்டி டர்ராயி ஊரை விட்டு போயிருச்சு. லேசா மென்டல் ஷாக் மாதிரி கூட ஆயிருச்சு போல. ஆறுல சனி வந்தப்போ கதை சொல்ற சமயம் “அப்படி நடிச்சேன்”னாரு.

ஆனைக்கு ரயில்வே தண்டவாளத்துல எப்ப கால் சிக்கும்.கில்மா பண்ணலாம்னு ஒரு எலிக்கூட்டமே காத்திருக்குமில்லியா. அப்படி ஒரு பார்ட்டி நான் கடங்காரவுகளோட பேசி ஏற்பாடு பண்றேன்னுட்டு நண்பரோட சொந்த கடைய நண்பருக்கே லீசுக்கு விட்ட கூத்தெல்லாம் நடந்தது..இதெல்லாம் வேலைக்காகாதுன்னுட்டு நண்பர் மறுபடி எஸ்கேப்பு.

கையில கால் காசு இல்லாம தில்லி மும்பை,சென்னை,பெங்களூருன்னு போவாத இடமில்லை. வித் அவுட்ல போனா ச்சொம்மா விடுவாய்ங்களா? அடி, உதை , செயிலு எல்லாம் பார்த்தாச்சு.சனி ஆறை பார்க்கிற சமயம்.. தான் பார்த்து செலவழிச்சு கண்ணாலம் கட்டிவச்ச கிராமத்து அக்காவோட கடையில பொட்டலம் மடிச்சுக்கிட்டு இருந்தாப்ல. சனி புத்தியிலருந்து மாறினதும் புத்தி மாறி சொந்த ஊரு வந்தாப்ல.

ஒரு நாலணா லாயரை பிடிச்சு ஸ்டேஷன்ல ப்ரியர் கம்ப்ளெயின்ட் எல்லாம் கொடுத்து கடன் காரன் வரலாம் கடன் கேட்கலாம். ஆனால் எக்ஸ்ட்ரா /ஓவர் ஆக்சன்லாம் கூடாதுங்கறாப்ல ஸ்டேஷன் பஞ்சாயத்து.

அந்த சமயம் தான் பார்ட்டி நமக்கு டச்சு. கையில கால் காசு இல்லாம யாவாரம் பண்ணியாகனும். கடை மட்டும் இருக்கு. பார்ட்டிய கடையில உட்கார வச்சுட்டு பின் பக்க வழியா கடை கடையா ஏறி இறங்கி சரக்கு வாங்கியாந்து யாவாரம் செய்து பணத்தை செட்டில் பண்ணனும். அதுக்குள்ற கடைக்காரன் நாலு தாட்டி ஆளை அனுப்பிருவான்.

இப்படி சில காலம் போச்சு.கொஞ்சம் போல கையில காசு வந்த பிறவு செல்ஃபோன் ,பட்டுப்புடவை, கேஸ் ஸ்டவ் உட்பட வர்ஜியா வர்ஜியமில்லாம வச்சுக்கிட்டு வட்டிக்கு கொடுக்க ஆரம்பிச்சாரு.

அந்த சமயம் நம்ம மூளைய -இன்ஃப்ளுயன்ஸை யூஸ் பண்ணி சிட்டி ஃபைனான்ஸ்ல லோன் போட்டு கலர் டிவி,டிவிடி ப்ளேயர் வாங்கி தந்தோம்.

கெட்டு வந்தவங்கிட்ட கன் பார்ட்டிகளா வந்து யாவாரம் பண்ணும் .எல்லா தள்ளு கேஸுக்கும் நம்மாளு தான் கொடுக்கல் வாங்கல்.

அடுப்பூதி,அன்னக்காவடி,அரை டிக்கெட்டு,கால் டிக்கெட்டு ,நத்தம் நாடோடி புறம்போக்கு வேசி, மாமான்னு கண்டவனோடயும் லாவா தேவி.ஆனால் பாருங்க ஆறுல சனி இல்லியா.. சாக்கடையில போட்ட காசு கூட திரும்பி வர ஆரம்பிச்சது. வீட்ல அடாசுல இருந்த சைக்கிளை ரெடி பண்ணி அதுலதேன் வாரா கடன் வசூலுக்கு போறது.

கொஞ்ச காலத்துக்கு ஒரு கெட்டுப்போனவனோட ஹீரோமெஜஸ்டிக் .( அதுவும் அப்பப்போ இரவல் வாங்கறதுதேன்) பிறவு ஒரு குடி நோயாளி அடகு வச்சுட்டு போன ஹீரோ ஹோண்டாவை உபயோகிச்சோம். அவன் அதை மூட்டவே இல்லை.

சில காலத்துக்கு பின் சிட்டி ஃபைனான்ஸ் போலவே ஆட்டோ ஃபைனான்ஸ் போட்டு புது டூவீலர். ஆறுல சனி உள்ளவன் தன் கிட்டே உள்ள நாலணா பொருளுக்கு எட்டணா டிமாண்ட் பண்ணுவான். எதிராளிக்கிட்டே இருக்கிற எட்டணா பொருளை நாலணாவுக்கு வாங்க பார்ப்பான்.

தன் கடனை எல்லாம் ஊரான் கட்டனும்னு பார்ப்பான். ஊர் சொத்தையெல்லாம் தான் அனுபவிக்கனும்னு நினைப்பான். நம்மாளும் பேசிக்கலாவே எகிடு திகிடு பார்ட்டி .இதுல ஆறுல சனி வேற இருந்தா கேட்கனுமா என்ன?

அந்த காலத்துல நாம அன்னாடங்காய்ச்சி. ஆனால் வாழ்ந்து கெட்ட கேஸுங்கறதால அப்பர் மிடில் கிளாஸ், மிடில் கிளாஸ் பார்ட்டியெல்லாம் நம்ம சைடுலருந்து நண்பருக்கு போகும். பெருமைக்கு பன்னி மேய்க்கிற கேஸுங்க தனி.

பாங்குல வாய்தா போகுதுன்னு அதை அப்படியே மூட்டு நண்பர் கிட்டே வைப்பாய்ங்க. அல்லது நண்பர் மூலம் விப்பாய்ங்க. கையில கால் காசு இருக்காது. நண்பர் அமவுண்டு அரேஞ்ச் பண்ணுவாரு.நாம கூட போகனும். மூட்டு கொண்டு வரனும். இதுக்கு நமக்கு சர்வீஸ் சார்ஜு வந்துரும்.

ஒரு ஜாதகருக்கு அவர் ஜாதகப்படி எதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையோ ( நன்மைய சொன்னேங்க) அதெல்லாம் 6 ல சனி உள்ள போது நடந்துரும்.

நம்மாளுக்கு கண்ணாலம் இந்த கேட்டகிரியில வருது. ஒரு பொம்பள வந்து சேர்ந்துக்கிச்சு. கொய்யால ஜாதக பொருத்தம் -ஏழு பொருத்தம்லாம் பார்த்து செய்து வச்சா கூட இப்டி அமையாது. அப்படி ஒரு பொருத்தம்.

இந்த வெற்றி நடையில ஒரு உச்ச கட்டம். ஒரு கெவுர்மென்டு உத்யோகஸ்தரு லட்ச ரூவா சீட்டு ஆரம்பிச்சாரு.கண்டிஷன் என்னான்னா ஷ்யூரிட்டி -கியாரண்டி எதுவும் தேவையில்லை. செக்ஸ் கொடுத்தா போதும்.

நம்மாளு வரிசையா 3 சீட்டு போட்டு 3 ஐயும் எடுத்துட்டாரு. நாலாவதும் எடுத்தாகனும்ங்கறாரு. நாம தான் பஞ்சாயத்து பண்ணி கட்டின கந்து வரை வங்கி வட்டியோட திருப்பி தந்துர்ராப்ல செட்டில் பண்ணோம்.

அடுத்து 7 ல சனி ஆரம்பம். ஒன்னு மன்னா திரிஞ்சுக்கிட்டு இருந்த நமக்கு ஒரு வாழ்வு வந்துருச்சு (தந்தியை சொல்றேன்) நாம கழண்டுக்கிட்டோம். ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் மாதிரி ரெண்டு பார்ட்டிங்க. அப்படியே ஃபெவிக்கால் போட்டாப்ல ஒட்டிக்கிட்டாய்ங்க.ரெண்டு பேருக்கும் கால் ஊனம் (சனி).

ஏழுல சனி இருக்கிறச்ச ஒரு கூத்து. . நம்மாளு சேர்த்துக்கிட்ட பொம்பள கடையில இருக்கிறச்ச – பழைய டிக்கெட்டு ஒன்னு வந்துருக்கு. பேச்சு மேல பேச்சு வளர்ந்து சிண்டு புடி. பஜார்ல மானமே போச்சு.

சனி எட்டை பார்க்க ஆரம்பிச்சாரு. ரெண்டு வேசிகளுக்கு பண்ண கிரெடிட் சேல்ஸ்ல கலெக்சன் நில்.ஸ்டேஷன் செலவு ஃபுல். டூ வீலரோட டேஞ்சர் லைட் டமால். ராத்திரியில டூ வீலர்ல போறச்ச பள்ளமோ தேங்கின மழைத்தண்ணியோ தெரியாம விழுந்து எழுந்து அது ஒரு கூத்து.

ஒரு தாட்டி ஆரோ ரெண்டு பொம்பளைங்க வந்து நகைக்கு அட்வான்ஸ் பண்ணிட்டு போனதா அலப்பறை செய்ய நாமதேன் ஃபையர் இஞ்சின் சர்வீஸு பண்ணோம்.

ஏற்கெனவே பார்ட்டிக்கு ஷுகரு ,பி.பி உண்டு. இதுல மூலம் வேற மாட்டிக்கிச்சு.டாக்டர் கிட்டே போனா ஏறிப்படு – முழங்கால் போடு -கையால விலக்கி காட்டுங்கறாரு. அது ஒரு வழியா கட்டுக்கு வந்தது.(சனி – ஆசனத்துக்கு காரகர்)

கடையில வேலைக்கு சேர்ர கிராக்கிங்க அதை இதை சொல்லி அட்வான்ஸ் வாங்க வேண்டியது. ஒரு அமவுண்டானதுமே நின்னுக்கறதும் தொடருது .(சனி =வேலைக்காரர்கள்)

லேட்டஸ்ட் டெவலப்மென்ட் என்னடான்னா பார்ட்டி செகண்ட் ஹேண்ட்ல ஒரு கார் வாங்கியாச்சு. (செகண்ட் ஹேண்ட் = சனி) முந்தா நேத்து ரிவர்ஸ் எடுக்கிறச்ச ஒரு சைடு மொத்தம் நசுங்கிருச்சு. இன்னைக்குத்தேன் டிங்கரிங் பெயிண்டிங்குக்கு வண்டி அனுப்பியிருக்கு.

சனியோட திருவிளையாடல்களை பார்த்திங்கல்ல. இதெல்லாம் கண்ணு முன்னே நடந்தது..உங்க அனுபவங்களையும் இந்த அனுபவஜோதிடம் தளத்துல பகிர்ந்துக்கலாம்ல.

உடுங்க ஜூட்டு..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s