உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

Posted on

அண்ணே ..வணக்கம்ணே !

நானும் மாஞ்சு மாஞ்சு சோசியத்தை பத்தி எழுதிக்கிட்டே இருக்கேன். நீங்களும் படிச்சிக்கிட்டே இருக்கிங்க. இன்றைய தேதிக்கு 8 லட்சம் ஹிட்ஸை தாண்டி மீட்டர் ஓடுது.

நம்ம எழுத்துக்களால் எத்தீனி பேரு பலனடைஞ்சாய்ங்கன்னு தெரியலை. சனங்க சைக்காலஜி என்னன்னா திட்டனும்னா ஒடனே திட்டிருவாய்ங்க. ஒரு நன்றி சொல்லனும்னா கூட தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு மறந்தே உடுவாய்ங்க.

இலவச ஜோதிட ஆலோசனைன்னு ஒரு பக்கம் ஓடுது. இருந்தாலும் அது ரெம்பவே நேரத்தை தின்னுருது. ஜாதகம் போட்டு – அனலைஸ் பண்ணி பதில் எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்துருது.

ரயில் பெட்டியில ,ரேஷன் கடை க்யூவுல கேட்கிற சனத்துக்கு பதில் சொல்லவே ஒரு மெத்தடை டெவலப் பண்ணி வச்சிருக்கம்.

அதாவது கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு -அந்த பிரச்சினைக்கு காரணமான கெரகத்தை ஐடென்டிஃபை பண்ணி அந்த கெரகத்துக்கு பரிகாரம் சொல்லிர்ரது. இதை முற்றிலும் இலவசமா தர முடிவு பண்ணியிருக்கேன்.

ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னுன்னு பிரச்சினைகளை அனுப்பினா ஊத்தி மூடிருவன். அதே போல ஒரே பார்ட்டி கச்சா முச்சான்னு கேட்டாலும் இந்த பகுதி அம்பேலாயிரும்.

இது எந்த அளவுக்கு ஆக்யுரேட்டா இருக்கும்னு ஒரு சந்தேகம் வரலாம்.

எங்க என்.டி.ஆர் சி.எம்மா இருக்காரு.அந்த நேரம் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்துக்
கிட்டிருக்காரு. பொசிஷனுக்கு வந்து தியானத்துல உட்கார்ராப்ல ஃபோஸ் கொடுக்காரு. படக்குன்னு “கட் கட்”ங்கறாரு.ஏம்பா அங்கன ஒரு பேபி லைட் எக்ஸ்ட் ராவா இருக்கு பாரு அதை எடுத்துருங்கறாரு.
இது எப்டி சாத்தியமாகுதுன்னா எக்ஸ்பீரியன்ஸு. இந்த சம்பவத்தை ஒரு தாட்டி குமுதத்துல படிச்சதா ஞா.

நம்ம ஊருல ஒரு அய்யரு ஃபேமிலி. குழந்தைங்க இல்லின்னு ஒரு பெண் குழந்தைய தத்து எடுத்து வளர்க்கிறாய்ங்க. அது ஸ்கூலுக்கு போற வயசு. பில் குல் ஸ்கூலுக்கு போகமாட்டேங்குது. அப்பம் அய்யரம்மா இதுக்கு எதுனா பரிகாரம் சொல்லுங்கோன்னு கேட்டுது.

பாப்பாவுது மேஷ ராசி. அப்பம் மேஷத்துக்கு வாக்குல சனி. ஒரு கருப்பு கவுத்துல எட்டு ஊக்கு பின்னு கோவுத்து போட்டு விட்டுருங்க. ஸ்கூலுக்கு போகும்னேன். ப்ராப்ளம் சால்வ்ட். இது எப்டி ஒர்க் அவுட் ஆச்சுன்னு ஜூரிங்க ஆருனா சொல்லலாம்.

பிரச்சினை எம்மாம் பெருசோ சொல்யூஷன் கூட அம்மாம் பெருசா இருக்கனுங்கற அவசியமில்லை. சூட்சுமத்துல மோட்சம் இருக்குங்ணா..

உங்க பிரச்சினைய எழுதுங்க. உடனடி தீர்வை உடனடியா சொல்றேன். உடுங்க ஜூட்டு..

பின் குறிப்பு:

சென்னை பதிவர் சந்திப்புல அறிமுகத்துக்கே காலை 10 முதல் மதியம் 2 வீணாப் போயிருச்சு. இதைவிட முன் கூட்டியே பதிவர்கள் படத்தோட ஒரு புக்லெட் ஜெராக்ஸ் அடிச்சு கொடுத்திருக்கலாம்னு கடந்த பதிவுல எழுதியிருந்தன்.

இதை படிச்சு டிசைட் பண்ணாய்ங்களோ அவிகளுக்கே ஸ்ட்ரைக் ஆச்சோ தெரியலை .இப்பம் மேற்படி கன்டென்டோட ஒரு புஸ்தவமே போடப்போறாய்ங்களாம். வாழ்க..

Advertisements

17 thoughts on “உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

  Saran said:
  August 29, 2012 at 10:55 am

  வணக்கம் ஐயா.

  எனக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை எங்கும் எதிலும் எப்போதும் காரியத்தடை.

  மற்றவர் 50 ரூபாய்க்கு வாங்கும் பொருளுக்கு நான் 300 ரூபாய் விலை கொடுக்க வேண்டியது இருக்கும். 500 ரூபாய்க்கு ஒரு வேலை செய்து ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் வாங்குவார். நான் 5 ஆயிரம் ரூபாய்க்குரிய வேலை செய்து 50 ரூபாய் கூலியை 5 இன்ஸ்டால்மெண்டில் வாங்குவேன்.

  அப்படி காரியத்தடை ஏற்பட்டு எனக்கு ஆப்பு வைக்கப்பட்ட முக்கியமான தருணங்களை மட்டும் பட்டியலிட்டுள்ளேன்.

  1. பத்தாம் வகுப்பு வரை பெயிலாகாமல் படித்தாலும் நானாகவே மேலே படிக்க வேண்டாம் என்று முடிவு செய்து நிறுத்தினேன். அடுத்து மீண்டும் படிக்கப்போனால், டுடோரியல் உரிமையாளர் ஒரு நாள் தாமதமாக பணம் கட்டியதால் ஹால் டிக்கெட் வராமல் ஒரு வருடம் வீண்.

  2. கல்லூரி தோழியின் திருமணத்திற்கு செல்வோம் என்று முடிவு செய்து டிக்கட் ரிசர்வ் செய்து வைத்தால் திருவாரூரிலிருந்து வடக்கே 300 கிலோமீட்டர் செல்வதற்கு பதில் அம்மா வழிப்பாட்டி சீரியசாகி இறந்துவிட திருவாரூருக்கு தெற்கே 250 கிலோமீட்டர் செல்லவேண்டியதாயிற்று.

  3. பெண்பார்க்கும் படலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஜாதகப்பொருத்தம் இருக்கிறது என்று பெண் வீட்டை நெருங்குவோம். ரொம்ப வருஷமா வரன் அமையாம இருந்தது. இப்போ போனவாரம்தான் அந்த பொண்ணுக்கு நிச்சயம் ஆச்சு என்று சொல்வார்கள்.

  4. சென்னையில் தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனத்தில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தேன். மெரிடியன் ஹோட்டலில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சியில் படம்பிடிக்க சென்றிருந்தோம். உரை நிகழ்ச்சி முடிந்த போது, பஃபே சிஸ்டம் மூலம் சாப்பிட தயாரானோம். எங்கள் வாகன ஓட்டுனரை சாப்பிட அழைத்து வா என்று என்னை வெளியில் அனுப்பினார்கள். அந்த ஓட்டுனர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் வெளியில் சாப்பிடுவதில்லை என்று என்னை திருப்பி அனுப்பினார். மீண்டும் வந்து பார்த்தால் சாப்பாடு இருந்தது. ஆனால் அவர்கள் அன்பளிப்பாக தந்த 500 ரூபாய் மதிப்புள்ள சூப்பரான பர்ஸ் எனக்கு கிடைக்கவில்லை.

  5. இரண்டு மாதமாக BSNL Teracom USB மோடம் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றேன். இப்போது அந்த கம்பெனி சப்ளை இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

  6. வீட்டில் டி.வி. ரிப்பேராகி விட்டது. அதை சரிசெய்வதற்காக மெக்கானிக்கை அனுப்ப சொல்லி மற்றொரு நெருங்கிய நண்பரிடம் இன்று பேசினேன். ஞாயிற்றுக்கிழமை அன்றுதான், அவர்கள் வீட்டில் நெடு நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்த டி.வியை அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த டிரைவர் ஒருவரிடம் கொடுத்தார்களாம்.

  7. விசிட்டிங் கார்டு ஆர்டர் எடுத்து செய்து கொடுக்கிறேன். சோதனையாக நான் அனுப்பும் ஆர்டர்கள் மட்டும் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தால் வழக்கத்தை விட மிக மிக தாமதமாக பல முறை நினைவூட்டல் செய்த பின்பே வந்து சேரும். அதிலும் சோதனையாக, எனக்கு ஒரு பைசா லாபமில்லாத அல்லது பணத்துக்கு இழுத்தடிப்பவர்களின் ஆர்டர்கள் வெகு விரைவில் வந்து விடும். எனக்கு ஒழுங்காக, 10 ரூபாய் அதிகமாக கொடுப்பவர்களின் ஆர்டர்கள் தாமதமாகி என்னை தர்மசங்கடத்திற்குள்ளாக்கும்.

  இப்ப்டி எதை தொட்டாலும் காரியத்தடை. இங்கே நான் பட்டியலிட்டிருப்பது எல்லாம் ஆயிரத்தில் ஒரு பங்குதான். தினம் தினம் இப்படி எனக்கு ஆப்பு விழுந்து கொண்டிருப்பதால் எதையும் நினைவில் நிறுத்த முடியாத அளவுக்கு அக்கப்போர்.

  மற்றவர் 50 ரூபாய்க்கு வாங்கும் பொருளுக்கு நான் 300 ரூபாய் விலை கொடுக்க வேண்டியது இருக்கும். 500 ரூபாய்க்கு ஒரு வேலை செய்து ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் வாங்குவார். நான் 5 ஆயிரம் ரூபாய்க்குரிய வேலை செய்து 50 ரூபாயை 5 இன்ஸ்டால்மெண்டில் வாங்குவேன்.

  என் ஜாதகத்தில் என்னதான் பிரச்சனை?

  தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள் ஐயா.

  பிறந்த தேதி 07.10.1981
  நேரம் : காலை 8.45 மணி.
  பிறந்த இடம் : திருவாரூர், தமிழ் நாடு.

  ராசி : மகரம்
  நட்சத்திரம் : உத்திராடம் 2ஆம் பாதம்.
  லக்னம் : துலாம்.

  2ஆம் இடம் விருச்சிகத்தில் சுக்கிரன்.

  3ஆம் இடம் தனுசுவில் மாந்தி

  4ஆம் இடம் மகரத்தில் சந்திரன் , கேது.

  10ஆம் இடம் கடகத்தில் செவ்வாய், ராகு.

  12ஆம் இடம் கன்னியில் சூரியன், குரு, புதன், சனி.

  காலசர்ப்ப தோஷம்.

  நவாம்ச லக்னம் – மிதுனம்.

  1ஆம் வீடு மிதுனத்தில் புதன், சனி, சூரியன், மாந்தி.

  2ஆம் வீடு கடகத்தில் ராகு, சுக்கிரன்.

  4ஆம் வீடு கன்னியில் குரு

  8ஆம் வீடு மகரத்தில் சந்திரன், கேது.

  9ஆம் வீடு கும்பத்தில் செவ்வாய்.

  —-நன்றி————–

   S Murugesan said:
   August 29, 2012 at 11:47 am

   சரண் சார் !
   நாம திருக்கணிதப்படி போட்டா கிரகஸ்திதியெல்லாம் மாறுதே.. ப்ளீஸ் கன்ஃபர்ம் பர்த் டீட்டெயில்ஸ். நீங்க கையால் எழுதப்பட்ட ஜாதகத்தை வச்சு கிரகஸ்திதிய சொல்றிங்கன்னு நினைக்கிறேன்.

  Saran said:
  August 29, 2012 at 12:52 pm

  ஆமாம் சார்.

  இது கையால் எழுதப்பட்ட ஜாதகத்தின் டீடெய்ல்ஸ்தான்.

  ஆனால்
  பிறந்த தேதி 07.10.1981
  நேரம் : காலை 8.45 மணி.
  பிறந்த இடம் : திருவாரூர், தமிழ் நாடு.

  இந்த விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை.

  திருக்கணிதத்தில் உத்திராடம் 1ஆம் பாதம் தனுசு ராசி என்று காட்டும். அல்லது விருச்சிக லக்னம் என்று காட்டும்.

  இரண்டு குழப்பத்துக்கும் காரணம் உத்திராடம் 1 ஆம் பாதம் வரை தனுசு ராசி மற்றும் விசாகம் 3ஆம் பாதம் வரை துலாம் லக்னம் என்று நீங்கள் அறிந்த விஷயம்தான்.

  லக்னம் மற்றும் ராசி சந்திப்பில் பிறந்ததால் இந்த குழப்பமோ என்னவோ.

  ஆனால் வாக்கிய முறைப்படி கணிணியில் கணித்தாலும் நான் முதலில் சொன்ன விபரங்கள்தான்.

  திருச்சியில் ஒரு ஜோதிடரிடம் திருக்கணிதத்தில் கணித்த போது,

  லக்னம் – துலாம்.
  லக்னத்திலேயே புதன்,

  2ஆம் இடம் விருச்சிகத்தில் சுக்கிரன்,

  3ஆம் இடம் தனுசுவில் சந்திரன்,

  4ஆம் இடம் மகரத்தில் கேது.

  10 ஆம் இடம் கடகத்தில் செவ்வாய்- ராகு,

  12ஆம் இடம் கன்னியில் சூரியன், குரு, சனி ஆகியவை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

  -வேறு விபரங்கள் தேவை என்றால் தருகிறேன் சார்.

  நன்றி,
  சரண்.

   S Murugesan said:
   August 29, 2012 at 4:22 pm

   வாங்க சரண் !
   நாம திருக்கணிதம் , அதன் படி நான் தரும் தீர்வு .நீங்க கணபதியை தியானம் பண்ணுங்க. வீட்ல சின்னதா பிள்ளையாரை வச்சுக்கிட்டு ஜலாபிசேகம் செய்ங்க.வெள்ளி,செவ் கிழமை மவுன விரதம்.
   ( முடியாத பட்சம் ஒன் ஆர் டூ வோர்ட்ஸ்ல முடிச்சுரனும்). நீலம்,பச்சை,ஆரஞ்சு,மஞ்சள் நிற துணிகளை இணைத்து லம்பாடி லுங்கி கணக்கா ஒரு பெட் ஸ்பெரெட் தயாரிச்சு அதை யூஸ் பண்ணுங்க.

   கன்சல்டன்சி மாதிரி எதுனா செய்ங்க.அல்லது கம்யூனிகேஷன், மெடிசின்,ஸ்டேஷ்னரி,அக்கவுண்ட்ஸ் ,ஆடிட்டிங் துறையிலயே சேல்ஸ் லைனை பிடிங்க.

   கூடிய சீக்கிரத்துல எட்டு பேர் வரை வச்சு வேலை வாங்கற நிலைக்கு வருவிங்க. பெஸ்ட் ஆஃப் லக்

  Saran said:
  August 29, 2012 at 5:10 pm

  நீங்கள் சொன்ன தீர்வுக்கு நன்றி ஐயா.

  இப்போது நான் செய்து வரும் தொழில் ஜாப் டைப்பிங். பத்திர எழுத்தர்களுக்கு டிராப்ட் ரெடி செய்வது, வழக்கறிஞர்களுக்கு கேஸ் ஷீட் டைப்பிங் செய்வது, கொஞ்சம் மல்டி கலர் டிசைனிங் மற்றும் திருமண அழைப்பிதழ், நோட்டீஸ் டிசைன், போட்டோ ஆல்பம் டிசைன் ஆகியவையும் செய்து வருகிறேன்.

  நீங்கள் சொன்னபடி என் கிரஹ அமைப்புப்படி செய்ய சொல்லியுள்ள தொழிலுக்கு நெருக்கமாகத்தான் நான் இருந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது புது நம்பிக்கை பிறக்கிறது.

  நான் பேசத் தொடங்கினால் 1950-60களில் வெளிவந்த தமிழ்ப்பட கதாபாத்திரங்கள் மாதிரி சற்று அதிகமாவே பேசும் டைப். மவுன விரதம் என்பது நிச்சயம் மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

  சுமார் 13 ஆண்டுகளாக எங்கள் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் பிள்ளையார் கோவில் ஒன்றில் சங்கடஹர சதுர்த்தி அன்று வயதானவர்கள் எடுத்து வரும் சூறைத்தேங்காயை அவர்களுக்காக உடைப்பதில் தொடங்கி, பிரசாதம் வினியோகம் செய்ய ஆரம்பித்து, அர்ச்சனை தேங்காயை உடைப்பது, அபிஷேக திரவியங்களை ரெடி செய்து கொடுப்பது என்று குருக்களுக்கு ஒத்தாசை செய்வது என்ற அளவில் என்னை அந்த பிள்ளையார் அனுமதித்திருக்கிறார்.

  தோன்றிய காலம் தெரியாத அந்த ஆலயத்தின் மடப்பள்ளியை ஒருவர் ஆக்கிரமித்து கடை வைத்திருந்தார். இது வரை திருப்பணிக்கு சுமார் 8 லட்ச ரூபாய் வரை செலவாகியிருக்கும். திருப்பணிக்காக என்னுடைய செலவு என்றால் 100 ரூபாய் கூட செய்திருக்க மாட்டேன். (என் பொருளாதார சூழ்நிலை அப்படி). திருப்பணிக்கான சுதை வேலைகள், கட்டுமானப்பணிகளை ஒருங்கிணைத்தது, சுமார் 4ஆண்டு போராட்டத்துக்குப் பின் பல எதிர்ப்பையும் மீறி அந்த ஆலயத்தின் ஆக்கிரமிப்பு சட்டப்படி அகற்றப்பட்டுவிட்டது. அதற்கு பின்னால் என்னுடைய முயற்சியும் ஒரு ஓரத்தில் இருக்க பிள்ளையார் அனுமதித்திருக்கிறார். மேலும் அந்த ஆலயத்தில் எலக்ட்ரிக்கல் பொருட்களை என் நண்பர் வாங்கிக்கொடுத்தார். அவற்றை வைத்து வயரிங் வேலைகள் செய்யும் உடலுழைப்புதான் என்னால் செய்ய முடிந்த திருப்பணி.

  நீங்கள் எனக்கு சொன்ன பரிகாரங்களுக்கு லேசாக தொடர்புடைய பணிகள் இயல்பாகவே எனக்கு அமைந்திருப்பது கடவுள் என்னை கைவிட்டுவிடவில்லை என்ற நம்பிக்கையை தருகிறது.

  தங்களின் ஆலோசனைக்கு மீண்டும் நன்றி.

  இப்படிக்கு,
  சரண்.

  Hari said:
  August 30, 2012 at 12:25 pm

  Hari

  லக்னம் : மேஷம்
  ராசி : மிதுனம்
  2 இல்: சனி
  3 இல்: சந்திரன்
  4 இல்: கேது
  8 இல் : குரு, புதன்
  9 இல்: சூரியன், மாந்தி
  10 இல் : சுக்ரன். ராகு
  12 இல் : செவ்வாய்

  சொந்த வீடு இல்லை.
  தொழில் – தனியார் நிறுவனம், மிக மிக மிக கஷ்டமான வேலை.
  Over work load.
  வேலை சம்பந்தமான கஷ்டங்கள் தீர என்ன வழி
  No child. Got married on 7 years back
  என்னுடைய பிறந்த தேதி : 01.01.1972, 2.05pm. coimbatore. Tamilnadu
  what is the solution.?
  How can i overcome the carrier problems and child problem ?
  Please send the solution to my personal email ID..
  [hari.skumars@gmail.com]
  Thank U So Much Sir,
  With Regards
  Hari…

   S Murugesan said:
   August 30, 2012 at 4:09 pm

   வாங்க ஹரி !
   பப்ளிக் சைட்ல கேள்வி கேட்டுட்டு பர்சனலா பதில் தரச்சொன்னா எப்படி? உங்களுக்கு ஓகேன்னா இங்கேயே பரிகாரம் சொல்றேன். இல்லேன்னா ரிப்ளை கவரோட கான்டாக்ட் பண்ணுங்க (இதுவும் ஃப்ரீதான்)

  velayuthanssuresh said:
  August 30, 2012 at 2:57 pm

  Rajju padha rajju.Pariharam sollavum

   S Murugesan said:
   August 30, 2012 at 4:07 pm

   வாங்க சுரேஷ்!
   பெண்ணுக்கும்-பையனுக்கும் பாதரஜ்ஜு ஏகரஜ்ஜுவா வந்தா என்னபலன்னு கேட்கிறிங்க.அப்படித்தானே.. பிரயாணத்தால் தீமைன்னு பஞ்சாங்கம் சொல்லுது. அனுபவத்துல பிரயாணத்துலயே பிரியறது -ஏன் விபத்து கூட நடந்திருக்கிறது

  Hari said:
  August 31, 2012 at 3:21 am

  ok sir,
  இங்கேயே பரிஹாரம் சொல்லுங்க.
  Date of Birth : 01.01.1972. 2.05 PM. Coimbatore.
  நன்றி
  Hari.

   S Murugesan said:
   August 31, 2012 at 11:46 am

   ஹரி சார் !
   லக்னாதிபதி செவ்வாயே 12 ல் இருக்காரு. பவழக்கல் மோதிரம் போடுங்க. செவ் கிழமை மவுன விரதம்+உண்ணாவிரதம் இருங்க. செல்ஸ் லைனை பிடிங்க -முக்கியமா எலக்ட்ரானிக்ஸ் -தோஷமும் குறையும் -தொழிலும் பிக் அப் ஆகும். முருகனை வணங்குங்க. டார்க் ப்ரவுன் நிற பில்லோ கவர் ,பெட் ஸ்ப்ரெட் யூஸ் பண்ணுங்க

  Hari said:
  September 1, 2012 at 3:20 am

  Thank You So Much Sir.

  raji said:
  March 3, 2014 at 5:11 pm

  i am rajeshwari.. i am planning to marry my boy freind. mine is ayilyam 2nd padha kadaga rasi, his is kettati 3rd padha viruschika rasi everyone saying tat u both having padha rajju dosham. nobody can stop our marriage. so pls help me regarding the remedies?? wat can i do for this please suggest the idea

  poornima said:
  July 30, 2014 at 10:05 am

  வணக்கம் ஐயா
  என் பெயர் பூர்ணிமா. எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. ஓரு வருடம் முன்பு கரு தரித்தேன். வளர்ச்சி நன்றாக இருந்தது. ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு துடிப்பு நின்று விட்டதால் அபார்சன் செய்து விட்டோம். மிகவும் மனம் கலங்கி இருக்கிறேன். என் பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா?.
  என் பெயர் : பூர்ணிமா
  பிறந்த தேதி : 2/11/1983
  பிறந்த நேரம் : 5.25pm
  பிறந்த இடம் : கோயம்புத்தூர்

  என் கணவர் பெயர் : கார்த்திகேயன்
  பிறந்த தேதி: 1/7/1981
  பிறந்த நேரம்: 7:45 am
  பிறந்த இடம்: மேட்டுப்பாளையம்

   sambargaadu responded:
   August 6, 2014 at 3:17 pm

   அம்மா !
   உங்கள் கமெண்டை பிரசுரிக்க வில்லை. விரைவில் பதில் தருகிறேன்.

    sambargaadu responded:
    August 12, 2014 at 8:31 pm

    அம்மா !
    தங்கள் பிரச்சினை குறித்த முழு விவரங்களையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். என் மெயிலுக்கு தொடர்பு கொண்டால் உடனே அனுப்புகிறேன். என் மெயில்: swamy7867@gmail.com

  Senthilkumar.M said:
  October 9, 2016 at 7:00 am

  என் பெயர் M.senthilkumar. பிறந்த தேதி 6-7-1978 . காலை 3:30. கோயம்புத்தூர் அருகே சூலூர். நான் ஒரு சில ஆண்டுகளாகவே மனை வாங்க முயற்சிக்கிறேன். இயலவில்லை. எனக்கு எப்போது வீடு அமையும் ஐயா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s