பதிவர் சந்திப்பு : கூடி கலைஞ்சாச்சு ,அப்பாறம் என்ன?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு நடந்த சென்னை பதிவர் சந்திப்புல கலந்துக்கிட்டு ஊடு வந்து சேர்ரதுக்குள்ள டர்ருனு கிளிஞ்சிருச்சு. ஆரம்பம் : காட்பாடி டு சென்னை எக்ஸ்பிரஸ்ல நின்ற நிலையில் -கில்மா -இல்லிங்க.. பயணம்.

இப்பம் பாடி வெய்ட்டு வேற சகட்டு மேனிக்கு ஏறிருச்சா ( முன்னம் 48 இப்பம் 71 கிலோ) ..பாதமும் -முட்டியும் தாங்கனும்லா.

சாதாரணமா மெட்ராஸ் காரவுக கிட்டே ஃபோன் டீலிங் மட்டும் வச்சிக்கிறது பெஸ்ட். ஏண்டான்னா தெரியாத்தனமா சென்னை போயிட்டு ஃபோன் போட்டா அப்படியே நழுவுவாய்ங்க.ஆனால் சகோ மதுமதி அப்படியில்லை. பொறுப்பா பதில் எல்லாம் சொல்ல பார்க் ஸ்டேஷன் டு மாம்பலம் .. மாம்பலத்துலருந்து மண்டபம்.

கண்ணால வீட்ல பன்னீர் தெளிச்சு , சந்தனம் கொடுத்து ,தவனம் கொடுக்கிறாப்ல ஐ.டி ஒன்னு கொடுத்தாய்ங்க. சட்டை போடாத பிள்ளைக பாண்ட் பாக்கெட்ல அதும் சைடு பாக்கட்ல க்ளிப்பி வச்சிருந்தது ஒரு மாதிரியா இருந்தது.

போறது வெளியூரு – நம்ம வாயா ரெம்ப ” நெல்ல” வாயி. ஒன்னு கிடக்க ஒன்னாயிட்டா என்னா பண்றதுன்னு மகள் -மாப்பிள்ளையோட கூட்டணி போட்டு வந்திருந்ததால் அஜீஸ் ஆயிருச்சு. மகள் தான் கேஷியர் கம் பி.ஏ. மாப்பிள்ளை ஃபோட்டோ கிராஃபர்.

ஒரு மூலையில நூல் எக்சிபிஷன்+ சேல்ஸ் . சுவாமி காரியம் சுயகாரியம் ஒன்னா நடக்கட்டுமேன்னு நம்ம ஜோதிடம் 360 நூலையும் விற்பனைக்கு வைக்க நம்ம பி.ஏ ஏற்பாடு பண்ணிட்டாய்ங்க.

நம்ம பேருல ஒரு கேரக்டர் வருதுங்கற ஒரே காரணத்துக்காவ அழிக்க பிறந்தவனை வாங்கினேன் . பின்னே 45 வயசுல ஃபிக்சன் படிச்சா அடுக்குமா?

டீயும் ,கிரேப் ஜூசுமா சப்ளை நடந்துக்கிட்டிருந்தது. நம்மை தே டிவந்த தி.ரசத்தை மட்டும் பட்டுன்னு அடிச்சு விட்டம்.

பதிவர் சந்திப்புல மொதல் ப்ரோக்ராம் பதிவர் அறிமுகம்.. சனங்க பாவம் ரெம்ப சுருக்கமாதான் பேசினாய்ங்க.ஆனாலும் சாப்பாட்டு வேளை நெருங்கிருச்சு. கொஞ்ச நாழி மேடையில இருந்த கேபிள் சங்கரை பட்டுக்கோட்டையாரோன்னு கன்ஃபிசன் ஆன கூத்தும் நடந்தது.

பதிவர் அறிமுகங்கறது பேஸிக்கலா ரெம்ப ட்ரை ப்ரோக்ராம். இதை கூட மேடையில இருந்தவுக சில சமயம் மொக்கை போட்டு கூட தூக்கி நிறுத்த பார்த்துக்கிட்டிருந்தாய்ங்க.

ரோசனை:

பதிவர்களையே உங்களை பற்றி பத்து வரிகள் + ஃபோட்டோ அனுப்புங்கன்னுட்டு அதை சின்னதா புக்லெட் மாதிரி போட்டு கையில கொடுத்து தொலைச்சுட்டு நேரடியா ப்ரோக்ராமுக்கு போயிருக்கலாம்.நேரம் வீணாகாம இருந்திருக்கும்.

வேதனை: 1

நிர்வாகிகள் – பதிவர்கள் என்னதான் சுவையா பேச முயற்சி பண்ணாலும் மைக்கும் -சவுண்ட் சிஸ்டமும் செமர்த்தியா சதி பண்ணிக்கிட்டிருந்தது.

வேதனை: 2
பதிவர்கள்ள 90 சதவீதம் கலீஞசரு கணக்கா தூய தமிழ்ல பேசி ட்ராயரை அவுக்க பார்த்தாய்ங்க. கலீஞருல்லாம் தூய தமிழ் பேசி – அதை வித்து -இன்னைக்கு தன்மானம் -இனமானம் எல்லாத்தையும் வித்துட்டதால தூய தமிழ்னாலே கடுப்பாயிருச்சு. . நாம தூ.த ல பேசினா நம்மையும் ஃப்ராடுன்னிருவாய்ங்களோன்னு சம்சயம். அதிலும் தூய தமிழ்ல யதார்த்தங்களை எழுதறச்ச கஸ்டமாயிருது.

சாதனை: 1

பெண்கள் – அதிலும் குடும்ப தலைவிகள் -அதிலும் பாட்டிகள் – அதிலும் முஸ்லீம் பெண்கள் வந்திருந்ததும் – செம தில்லா பேசி -அறிமுகம் செய்துக்கிட்டதும் சூப்பரு.

சாதனை : 2
தாத்தாக்கள் கூட யூனி கோட்ல அடிச்சு ப்ளாக் போடறது. இந்த கேட்டகிரியில நமக்கு தமிழ் பித்தன் கொஞ்சம் தெரியும்.அவரை காணோம்.

செரி அறிமுகம் ஓஞ்சு போச்சு . மதியத்துக்கு அப்பாறமாச்சும் நிகழ்ச்சி சூடு பிடிக்குதானு பார்த்தா உபய லஞ்சுக்கு அப்பாறம் பட்டுக்கோட்டையார் வந்தார். கவியரங்கம் துவங்கிருச்சு. பிரபாகர் எல்லாம் மேடையில் இருக்கும் போது நாம கவிதை சொல்றது வீண் வேலை. அதைவிட அவரை பேசவிட்டிருந்தா பதிவர்களுக்கு எத்தனையோ டிப்ஸ் கிடைச்சிருக்கும்.

ஏதோ புஸ்தவம் வெளியிட்டதா சொன்னாய்ங்க – மக்கள் சந்தை பத்தி பேச்சு நடந்தா சொன்னாய்ங்க. நான் பதிவன்னு போட்டி அறிவிச்சதா சொன்னாய்ங்க.

நாமே ஒரு காலத்துல கவிதை எழுதின பார்ட்டிங்கறதால கவிதைன்னாலே அலர்ஜியாச்சா அதிலயும் நகம் பத்தி ஒரு கவிதை கேட்டு கடுப்பாயிட்டு வெளி நடப்பு பண்ணிட்டமா நிறைய மேட்டரை கோட்டை விட்டுட்டம்.

இந்த சந்திப்பை எதாச்சும் தோட்டத்துல ஒரு சாமியானா போட்டு – இன்னம் நெருக்கமா நடத்தியிருக்கலாம். லஞ்ச் கூட பஃபேயா வச்சிருந்தா பெட்டர். முக்கியமா அந்த சவுன்டு சிஸ்டம். நாப்பத்தஞ்சு வயசுக்கு நாலே வரிகள்ள நம்ம அறிமுகத்தை முடிக்க காரணம் மைக்கு காரரு தான்.

எனி ஹவ்.. விமர்சிக்கவே முடியாத சாதனை 100+ பதிவர்கள் வந்தது. ஆனால் இந்த சந்திப்பின் விளைவுகள் எப்படியிருக்கும்னு இப்பமே சொல்லிருவன். ஆனால் இந்த மாதிரி ஒரு சவாலான நிகழ்ச்சியை ப்ளான் பண்ணி -கைக்காசு – நேரம் செலவழிச்சு நடத்தினவுக நொந்துருவாய்ங்க.

அதனால இந்த சந்திப்பின் விளைவுகள் குறைஞ்ச பட்சம் மக்கள் சந்தை டாட் காமுக்காச்சும் உபயோகமா இருக்கனும்னு ப்ரே பண்றேன்.

ஆறுதல்:
ஆரும் இங்கன தான் தம் போடுவேன்னு அடம் பிடிக்கலை .ஆரும் லாலா போட்டுட்டு வந்து ரவுசு பண்ணல்லை.

லாபம்:
கேபிள் சங்கரை நேரில் சந்திச்சது -அவரோட ஃபோட்டோ எடுத்துக்கிட்டது.

Advertisements

2 thoughts on “பதிவர் சந்திப்பு : கூடி கலைஞ்சாச்சு ,அப்பாறம் என்ன?

  arul said:
  August 28, 2012 at 10:12 am

  please post photo taken there murugesh anna

   S Murugesan said:
   August 29, 2012 at 11:48 am

   அருள் சார் !
   ஸ்லைட் ஷோவே போட்டிருக்கம் பார்த்திங்கல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s