பதிவுலகில் என் வெற்றியின் ரகசியம்

Posted on

null

12 வருசமா ஃபீல்டுல இருக்கேன். 3 வருசமா ஆக்டிவா இருக்கேன். விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள் தவிர தினமும் ஏதோ ஒரு விஷயத்தை பத்தி எழுதறேன். இந்த 3 வருசத்துல 8 லட்சம் ஹிட்ஸை தாண்டியிருக்கேன். தமிழ் 10 தரவரிசையில டாப் 10 க்கு கொஞ்சம் வெளியில கன்டின்யூ ஆகறேன்.இதெல்லாம் வெற்றின்னு நீங்களும் ஒத்துக்கிட்டா பதிவுல கன்டின்யூ ஆகுங்க. இல்லாட்டி கழண்டுக்கங்க.

இந்த வெற்றி எப்படி சாத்தியம் ஆச்சு ?

ரெம்ப சிம்பிள். ஆக்சிடென்டலா தமிழ் நம்மை கஷ்டப்படுத்தலை. தமிழை நாம கஷ்டப்படுத்தலை. சுவாசிக்கிறதை போல தமிழ் படிக்கிறதும் எழுதறதும் இயல்பா கை வந்தது. நாலாம் கிளாஸ்லயே தமிழ் சங்கம் – பேச்சுன்னு ஒரு என்விரான்மென்ட் அமைஞ்சது.

லக்கியா ஆரும் நம்மை கண்டுக்கிடலை. ஃப்ரீயா உட்டுட்டாய்ங்க. தமிழ் வாணன் “மலர்கொடி உன்னை மறப்பது எப்படி” தொடர் எழுதிக்கிட்டிருந்த காலத்துலருந்து ஃபிக்சன், நான் ஃபிக்சன் எல்லாமே படிச்சிருக்கேன். கடைசியா நாம வீக்லில படிச்ச தொடர் கதை சுஜாதா எழுதிய அனிதாவின் காதல்கள் தான். நான் ஃபிக்சன்னா ராணியில ஒன்னு ரெண்டு சோசிய தொடர்.

ஆரம்பம்னா அல்லாரையும் போல அம்புலிமாமாலதான் ஆரம்பிச்சேன். சரோஜா தேவியும் படிச்சிருக்கன். எமர்ஜென்சி காலத்துலருந்து நியூஸ் பேப்பர்ஸ் ஃபாலோ ஆகியிருக்கேன். இது மட்டும் இன்னைக்கும் தொடருது.

தீவிரமா படிச்சதெல்லாம் ஒரு காலம் . அதுவும் வெளி மானிலத்துல ஒரு லெண்டிங் லைப்ரரியில என்ன கிடைக்குமோ அதை மட்டும் தான் படிச்சிருக்கன். மத்தபடி இன்னைக்கு படிக்கிற வார இதழ் எல்லாம் படிப்புல சேர்த்தியில்லை. இதுகளை படிக்கிறதெல்லாம் ஒரு வித அப்டேஷனுக்குத்தான்.

வெறுமனே படிச்சா எழுதிரலாமான்னு கேப்பிக. சொல்றேன். எழுதறதுன்னு விபரீதமா முடிவெடுத்துட்டா ஜா.ரா கூட எழுதிரலாம். எங்கருந்தாச்சும் உருவி அலப்பறை பண்ணலாம். மாட்டிக்கிட்டா வம்பாயிரும்.
நாலு புஸ்தவம் படிச்சுட்டு ஒரு புஸ்தவம் எழுதிரலாம். இங்கிலீஷ் புஸ்தவம்னா சேஃப். ஆனால் இந்த மாதிரி எழுத்தெல்லாம் போனியாகனும்னா லாபியிங் தேவை. பதிவுலகத்துல போனியாகாது.

மிஞ்சிப்போனா பத்து பதினைஞ்சு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணிக்கிட்டு நம்ம பதிவுக்கு நாமே ஓட்டுப்போட்டு ஃபிலிம் காட்டலாம் கொஞ்ச நாளைக்கு.இதையே ஜா.ரா நெகட்டிவா யூஸ் பண்றாரு. நெகட்டிவ் ஓட்டு போட்டு நம்ம பதிவை புதைப்பாரு.

இதே பாணியில இன்னொரு வழியிருக்கு ..நமக்குன்னு ஒரு க்ரூப்பை வச்சுக்கிட்டு நீ எனக்கு போடு நான் உனக்கு போடுங்கறதும் ஒரு ஃபார்முலா. இதைத்தான் ஜா.ரா ப்ரப்போஸ் பண்ணாரு.ஆனால் இதுவும் எடுத்து காட்டற ப்ரா மாதிரி .ரெம்ப நாளைக்கு தாங்காது.

ஆக படிச்சா மட்டும் எழுதிர முடியாது.

எழுதாம இருக்க முடியாதுங்கற அளவுக்கு அனுபவங்கள் இருக்கனும். அதும் அக்கம் பக்கம் உள்ளவுக கிட்டே பகிர்ந்துக்க முடியாத அளவுக்கு – நமக்கே செரிக்காத அளவுக்கு அனுபவங்கள் இருக்கனும். அந்த அனுபவங்கள் தந்த காயங்களை ஆற்றி வடுவாக்கி – காஸ்மெட்டிக் சர்ஜரி கணக்கா வடுவை கூட மறைய வச்ச தீர்வு கை வசம் இருக்கனும்.

இதெல்லாம் உள்ளுக்குள்ளருந்து ஒரு ஊற்று போல முட்டனும். ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்ட முடியாம பால் கட்டி அவதிபடறாப்ல ஒரு அவதி உருவாயிரனும். அந்தளவுக்கு உள்ளாற ஸ்டஃப் இருக்கனும். அப்பம் எழுத ஆரம்பிச்சா எவன் படிக்கிறான் எவன் படிக்கலை. எவன் ஓட்டுப்போடறான் எவன் ஓட்டுப்போடலைங்கற சிந்தனைக்கெல்லாம் இடமே இருக்காது.

அப்பத்தேன் உங்க எழுத்து ஈர்க்கும் . வாசிக்க வைக்கும் . ஆக மொத்தத்துல எழுதனும்ங்கற ஒரு உந்துதல் இருக்கனும். அதான் பேசிக் க்வாலிட்டி. நம்ம எழுத்து ஒரு தீர்வை தரும்ங்கற நம்பிக்கை இருக்கனும்.

என்னை எழுத வைக்கிற உந்துதல் எது? என் எழுத்தை சனம் ஏன் படிக்குதுன்னு கேப்பிக.சொல்றேன். நான் என் வாழ்க்கையில கேள்வி கேட்காம – நாலு பேரை போலவே பொய்யா வாழ்ந்திருந்தா அப்பங்காரன் இன்ஸ்பிரேஷன்ல எதாச்சும் கவர்மென்டு வேலை வாங்கி – முப்பது வயசுக்கு மேல எவளாச்சும் முதலியார்ச்சிய கட்டிக்கிட்டு -ஒன்னோ ரெண்டோ பெத்து அதுங்க நண்டும் சிண்டுமா இருக்க ஸ்கூல் அட்மிஷனுக்கும் – சில்ட் ரன் ஸ்பெஷலிஸ்டு கிட்டயும் அலைஞ்சுக்கிட்டிருந்திருப்பேன்.

இப்பம் இருக்கிற ஒரு சில உடல் உபாதைகள்ளாம் விஸ்வரூபம் எடுத்திருக்கலாம். நாம சனங்க சைக்காலஜியை அனலைஸ் பண்றதுக்கு பதிலா – சைக்கியாட் ரிஸ்டு நம்மை அனலைஸ் பண்ற நிலைமை வந்திருக்கலாம். ஏன் ஹார்ட் அட்டாக் கூட வந்திருக்கலாம்.

ஏன் வரலை?

சனங்க போட்டு வச்ச ரெடி மேட் ரூட்ல ட்ராவல் பண்ணாம ஒடைச்சு திருப்பிட்டம். அது ஏண்டான்னு கேட்டா அந்த ரூட்ல போன சனம்லாம் வாழும் பிணம்னு புத்திக்கு உறைச்சுருச்சு.

நம்மோடயே வாழ்க்கை பயணத்தை துவக்கின சனம்லாம் அவிக டெஸ்டினேஷனை ரீச் பண்ண பிற்காடும் நாம பேந்த பேந்த முழிச்சுக்கிட்டிருந்தம்.

ஓஷோ சொல்றாப்ல ஒரு ஆபத்தான் வாழ்க்கைய வாழ்ந்தோம், சனங்க கேள்வியே கேட்காம வாழ்ந்துக்கிட்டிருக்க – நாம மட்டும் கேள்வியே வாழ்க்கையா வாழ்ந்தோம்.

பதிலுக்காக வாழ்க்கைய – உயிரினும் மேலான அந்த வேளை சோத்தை கூட பணயம் வச்சோம். அந்த கால கட்டத்துல எனக்கே கூட தோனும் . ” நாம தப்பு பண்ணிட்டமோ .. நாலு பேரை போல வாழ்ந்திருக்கனுமோ”

இது ஒரு சில பலவீன க்ஷணங்கள்ளதான். மத்தபடி கேள்வி கேள்வியாவே தொடர்ந்தது. நமக்கு கிடைச்ச பதில் ஒன்னுதேன். தனக்காக வாழ்ந்தா வெற்றியும் தோல்விதான். பிறர்க்கென வாழ்ந்தா தோல்வியும் வெற்றிதான்.

பிறருக்காக வாழறேன்னு சொந்த வாழ்க்கைய டீல்ல விடப்படாது. நம்ம வாழ்க்கை வெற்றிகரமா இருந்தாதான் நாலு பேர் நம்மை சீந்துவாய்ங்க. அப்பத்தேன் நாம அவிகளுக்கு உதவ முடியும்.

உதவறேன்னுட்டு மூளைய வச்சு ரோசிச்சு பட்டியல் தயாரிக்க கூடாது. இதயத்தை வச்சு பட்டியல் தயாரிக்கனும். செய்ற உதவியை மூளைய வச்சு ப்ளான் பண்ணனும். இதான்யா வாழ்க்கை.

இந்த ஞானோதயத்தை நோக்கி சின்ன அடி வச்சிருந்தாலும் சரி ஊற்று பொங்கும். எழுத்து பீறிடும். நாலு பேரை கவரும்.

எச்சரிக்கை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவிருக்கும் சென்னை பதிவர்கள் சந்திப்பில் சந்திப்போம். சந்திப்பின் நிகழ்ச்சி நிரலை காண -தரவிறக்க இங்கே அழுத்துங்க.

3 thoughts on “பதிவுலகில் என் வெற்றியின் ரகசியம்

  MARUTHAPPAN said:
  August 26, 2012 at 1:13 am

  nice post

  Thirumalaibaabu said:
  August 27, 2012 at 8:05 am

  அண்ணனுக்கு வணக்கம் !!!
  சிந்திக்க வைக்கும் பதிவு ….//// சனங்க போட்டு வச்ச ரெடி மேட் ரூட்ல ட்ராவல் பண்ணாம ஒடைச்சு திருப்பிட்டம். அது ஏண்டான்னு கேட்டா அந்த ரூட்ல போன சனம்லாம் வாழும் பிணம்னு புத்திக்கு உறைச்சுருச்சு /// உரைப்பதே மிக கடினம் …
  அப்படி உரைத்தும் கூட , உடைத்து ரூட்டை மாத்த மனதில் வல்லுவில்லாமல் (என்னைபோன்றவர்கள் ) காலம் ஓடிக்கொண்டிருக்கிறது !!!
  //// இதயத்தை வச்சு பட்டியல் தயாரிக்கனும். செய்ற உதவியை மூளைய வச்சு ப்ளான் பண்ணனும். இதான்யா வாழ்க்கை. /// என்பதை உங்களது வாழ்கையையே உதாரணமாக காட்டி உரைக்க வைத்துள்ளீர்கள் என்றே நான் கருதுகிறேன் !
  பதிவுக்கு மிக்க நன்றி !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s