கேப்டனும் – அம்மாவும் : மனோ தத்துவ பார்வை

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஆக்சுவலா நாம ரஜினி ரசிகன்.ஆனால் சின்ன வயசுல நம்மை தூக்கி போட்டு விளையாடிய மாமா உண்மையில ஒரு வத்தல் பார்ட்டி -தொத்தல் கேஸுன்னு தெரிஞ்சுக்கிட்ட நிலை நம்முது. மத்தபடி விஜய்காந்த் எல்லாம் ரஜினிக்கு டூப்ளிகேட்டா வந்த கேஸு. (பொன்வண்டு சோப்பு டாப்புல போறச்ச எவனோ பொன் நண்டுன்னு ஒரு சோப்பை விட்டானே அந்த கதை)

ஒரிஜினல் சர்ட்டிஃபிகேட் தொலைஞ்சு போயிட்டா ஜெராக்ஸை வச்சு தானே ஒரிஜினலுக்கு அப்ளை பண்ணனும். இது ஜெராக்ஸோட மதிப்பு. லைஃப்ல சில மேட்டருக்கெல்லாம் லாஜிக்கே இருக்காது. ரஜினி ஒரிஜினல்.வி.கா டூப்ளிகேட்டுன்னு தான் நிலைமை இருந்தது.

ஆனால் விஜய்காந்த் தனக்குன்னு ஒரு ஃபார்முலாவை உருவாக்கிக்கிட்டு தன்னோட ரூட்ல பயணத்தை ஆரம்பிச்சுட்டாரு.

வண்டி லொடக்கானியா இருந்தாலும் பாதை கரீட்டு. திரைப்படகல்லூரி மாணவர்களை ஆதரிச்சதாகட்டும். அரசியல் ஈடுபாடு ,தமிழ் ஈழம் இத்யாதியிலாகட்டும் சரியான ரூட்டை பிடிச்சாரு வி.கா.

ரஜினி ? பல தடவை நான் கிளிச்ச மாதிரி “அவாளோட” பிடியிலருந்து அவரால விலகவே முடியலை. ரஜினி 25 சந்தர்ப்பத்துல என்ன நடந்ததோ அதே தான் கோச்சடையான் மேட்டர்லயும் நடக்கப்போகுது. அதை விடுங்க.

வி.கா மோதினாரு – நின்னாரு – நின்னு காட்டினாரு. ரஜினியோ ஓடினார் ஓடினார் .. அன்பு மணி வீட்டுக்கே ஓடினார். பதிவு ரஜினி -வி.கா பத்தினது இல்லை.

கேப்டன் – அம்மா இடையில உறவை பத்தினது. அம்மாவோட ஃப்ளாஷ் பேக்கை பாத்திங்கனா தனிமை .தனிமையை தவிர வேறில்லை. அம்மாவை வடிவமைச்சது அவிக தனிமை -சந்தித்த ஏமாற்றங்கள் -துரோகங்கள் -அவமானங்கள் தான்.

இதெல்லாம் ஏதோ அம்மாவுக்கு மட்டுமே நடந்ததுன்னு அம்மா நினைச்சிருப்பாய்ங்க. உண்மை என்னடான்னா குப்பன்,சுப்பனுக்கும் தான் நடக்குது. அதே போல அம்மா ஃபேஸ் பண்ண மேற்படி விஷயங்களுக்கெல்லாம் ஆம்பளைங்க தான் காரணம்னு ஒரு தப்பான விதை அவிக மைண்ட்ல விளுந்துச்சு போல.

லாஜிக் என்னடான்னா இது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. இங்கன ஆம்பளைங்க தான் அதிக சதவீதம் ஆக்டிவா இருப்பாய்ங்க. பொம்பளைங்க சதவீதம் குறைவு. ஆப்படிக்கிறதுல ஆம்பளை பொம்பளை வித்யாசம்லாம் கிடையாது.

இது மேல் சேவனிஸ்ட் சொசைட்டிங்கறதால – எந்த ஃபீல்டுலயும் ஆம்பளைங்களோட எண்ணிக்கை தான் சாஸ்திங்கறதால அம்மாவுக்கு தொல்லை கொடுத்த பார்ட்டிங்கள்ள ஆம்பளைங்களோட நெம்பர் அதிகமா இருந்திருக்கும்.

ஒடனே அம்மா “இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் இவிகளை வைக்கிற இடத்துல வைக்கனும்”ங்கற மனோ நிலைக்கு வந்துட்டாய்ங்க போல.

அவிக மட்டும் கொஞ்சம் லாஜிக்கலா ரோசிச்சு தான் டீல் பண்ண ஆம்பளைங்க எத்தீனி பேரு அதுல துரோகி எத்தனை பேரு. தான் டீல் பண்ண பொம்பளைங்க எத்தீனி பேரு அதுல துரோகி எத்தீனி பேருன்னு தனித்தனியா பார்த்துருந்தா தூரோக சதவீதம் பால் வித்யாசம் இல்லாம சமம்மா இருந்திருக்கும்.

இன்னம் சொல்லப்போனா அம்மாவுக்கு துரோகம் பண்ண பெண்களுக்குத்தான் வாய்ப்பு அதிகம். ஏன்னா சேம் செக்ஸ் – ரெம்ப நெருங்கி பழகுனதால கவர்ச்சி குறைஞ்சுர்ரது இப்படி அனேக காரணம்.ஆனால் ஆண்கள் விஷயத்துல பார்க்கும் போது ஆப்பொசிட் செக்ஸ் கவர்ச்சி ஒரு பக்கம் – எட்ட நின்னே பார்க்கிறதால குறையாத கவர்ச்சி ஒரு பக்கம்னு துரோக எண்ணத்தோட உக்ரம் ரெம்ப குறைஞ்சுரும்.

அதுலயும் ஆம்பள சைக்காலஜி என்னன்னா ஒரு பொம்பள ” யாரையும் நம்ப முடியலை – உங்களைத்தான் நம்பறேன்” னு சொல்லிட்டா ரெம்ப ஸ்டெபர்னா நிப்பான். இந்த சூட்சுமங்களை புரிஞ்சுக்காம தன்னை சுத்தி ஒரு இரும்புத்திரைய போட்டுக்கிட்டு சனம் அம்மாவ கண்டு நடுங்க -அம்மா சனங்களை கண்டு நடுங்கன்னு காலம் போயிட்டிருக்கு.

இது அம்மாவோட சைக்காலஜி.

விஜய்காந்த் சாரோட சைக்காலஜி என்னன்னா .. தன்னை பெரிய ஃபயில்வானா நினைச்சுக்கிற குழந்தையோட சைக்காலஜி. குழந்தைக்கு கராத்தே ட்ரஸ் போட்டு விட்டுட்டா அதும்பாட்டுக்கு கட்டில் மேல ஆ ஊ ஆ ஊன்னு இல்லாத மன்சனோட ஃபைட் பண்ணிக்கிட்டிருக்கும். இடையில பைஜாமா நாடா அவுந்துக்கிட்டா கூட அதை போட்டுக்க தெரியாது.

அவர் மதுரையிலருந்து சென்னைக்கு வந்தது – நடிகனா ஜெயிச்சது – தயாரிப்பாளரானது – இன்னைக்கு கட்சி நடத்தறது எல்லாத்தையும் பார்த்தா ஒரு வித சைல்டிஷ்னெஸ் தெரியும். ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொருத்தர் அம்மா ரோல் ப்ளே பண்ணி நாடா அவிழ்ந்துட்டப்பலாம் கட்டி விட்டிருக்காய்ங்க. இன்னைக்கு இதை அவரோட மனைவி செய்துட்டு இருக்காய்ங்கன்னு நினைக்கிறேன்.

அம்மா விஜய்காந்த் சாரை அவரோட உருவத்தை வச்சு வளர்ந்த ஆணா – ஆம்பளையா பார்த்து ஈகோ ஃபீல் பண்றாய்ங்க. விஜய்காந்தும் அம்மாவை ஏதோ டீன் ஏஜ் பெண்ணை பார்த்த மாதிரி பார்த்து ஈகோ ஃபீல் பண்றாரு.

அம்மாவை பொருத்தவரை ஒரு வசதி இருக்கு என்னன்னா பெண் பிறக்கும் போதே தாயாதான் பிறக்கிறாள். அம்மா மட்டும் தன் சப் கான்ஷியஸ்ல இருக்கிற அம்மாத்தனத்தை கொஞ்சம் போல தூசு தட்டி எடுத்து விஜய்காந்தை பார்த்தா -அவரோட பேச்சு – நடவடிக்கையை எல்லாம் பார்த்தா அவர் குழந்தை தாங்கற உண்மை ஸ்பார்க் ஆகும்.

அதே போல விஜய்காந்த் கொஞ்சம் லாஜிக்கலா யோசிக்கனும். தன்னோட உண்மை பலம் என்ன? இதே நிலை தொடர்ந்தா கட்சி என்ன கதி ஆகும்?

அம்மாவோட அஜீஸ் பண்ணிக்கினு போனா .. கட்சிக்கு என்னா மாதிரி பூஸ்ட் கிடைக்கும். கட்சிக்காரவுக எந்த அளவு உற்சாகமாயிருவாய்ங்க. தன்னை நம்பி ஓட்டுப்போட்டவுகளுக்கு தன்னால என்னெல்லாம் செய்ய முடியும்னு ரோசிக்கனும்.

அப்படி ரோச்சு அனுசரிச்சு போகலின்னாலும் பரவால்லை . ஒரு பொறுப்பான எதிர்கட்சி தலைவரா குறைஞ்ச பட்சம் மானில நலன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ளயாவது அம்மாவுக்கு மோரல் சப்போர்ட் கொடுக்கிற அளவுக்கு மெச்சூர்டா மாறினா போதும். அம்மா ரசிக்க ஆரம்பிச்சிருவாய்ங்க. அம்மா ஓபிஎஸ் கிட்டே எதிர்பார்க்கிறதை வி.கா கிட்டே எதிர்பார்க்கிற அளவுக்கு முட்டாள் கிடையாது.

எனவே ரெண்டு பார்ட்டியும் ரோசிக்கனும். இதையெல்லாம் நான் ரோசிச்சு எழுதறது ரெண்டு பார்ட்டியும் கன்சல்ட் ஃபீஸ் கொடுப்பாய்ங்கன்னு இல்லை. சனத்துக்கு நல்லது நடக்கனும். தேமுதிக வை ஜெயிக்க வச்ச தொகுதி மக்களுக்கும் நல்லது நடக்கனும்ங்கறது நம்ம நோக்கம்.

இதெல்லாம் நடக்கிற விஷயமாப்பான்னு கேட்காதிங்க ..சீக்கிரமே நல்லது நடக்கட்டும்..ஆருப்பா அது ” உஸ் அப்பாடா இப்பவே கண்ணை. கட்டுதே.. “ங்கறது?

கலைஞரை விட அம்மா பெட்டர். ரஜினியை விட விஜய்காந்த் பெட்டர். இவிக ரெண்டு பேரும் நெருங்கி வந்தா ரெம்ப பெட்டர் பார்ப்போம்..

3 thoughts on “கேப்டனும் – அம்மாவும் : மனோ தத்துவ பார்வை

  S.Sivakumar said:
  August 26, 2012 at 1:58 am

  amma psychology analysis is 100% correct

  arul said:
  August 27, 2012 at 9:12 am

  no one can expect a combination even in future

  Thirumalaibaabu said:
  August 28, 2012 at 8:57 am

  காரணமில்லாம இந்த பதிவு நிச்சயம் வந்திருக்காதுன்னு நான் நினைக்கறேன் …..
  ஸ்பார்க் ஆச்சு தான நே !!!
  நடந்தால் நிச்சயம் நன்மையே . பதிவுக்கு மிக்க நன்றி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s