அம்மாவுக்கு கேப்டன் சொல்லாத மேட்டரு

Posted on

..

கனவுகளே ஆயிரம் கனவுகளே ! இது ஒரு திரைப்பாடல் வரி

காதல்,நட்பு,எழுத்து மாதிரி கவிதையும் கனவும் கூட ஒரு மூங்கில் மாதிரி. சரியான ஆள் அரையடி மூங்கிலை மட்டும் உபயோகிச்சு புல்லாங்குழலாக்கிர்ரான். தப்பான ஆள் அடியோட வெட்டி எடுத்து பாடை கட்டிர்ரான்.

கனவு மேட்டர்ல கலாம் பண்ணதும் இதான். கனவு மெய்ப்படுவது கனவால் அல்ல.அந்த கனவை காணும் உள்ளத்தின் உறுதியால்.

திரைப்பாடல்கள் இலக்கியமா இல்லையான்னு நிறையவே வாதங்கள் இருக்கு. என் அளவுகோல் நினைவில் நிற்பதெல்லாம் இலக்கியமே.. அப்படி நின்ன பாடல் வரிதான் இன்றைய பதிவுக்கான தலைப்பு கனவுகளே ஆயிரம் கனவுகளே !

இதுவரை நேரிடை ஜன நாயகம் அமலாகி ஜனாதிபதியாறாப்ல கனவு கண்டிருக்கமே தவிர (அது கூட தாளி ரெண்டரை வருசத்துல எல்லாத்தையும் பைசல் பண்ணிட்டு ராஜினாமா) அதுக்கு குறைச்சு கனவு கண்டதே இல்லை.

ஆனால் இன்னைக்கு ஒரு நண்பரின் வேண்டு கோளுக்கு இணங்க நான் ஒரு எதிர்கட்சி தலைவரா இருந்து நிதித்துறையை பத்தி பேசினா எப்படி இருக்கும்னு கற்பனை செய்து இந்த பதிவை போடறேன். அங்கன அம்மா திருந்தினதா தெரியலை ( தொடரும் அவதூறு வழக்குகள் ) அவிக நோட்டீஸுக்கு இதெல்லாம் போகுமா போனாலும் சட்டமாகுமா நமுக்கு தெரியாது வெளியூரு.

உங்க நேரம் கெட்டுப்போயி அமலாகி தொலைச்சுட்டா என்ன பண்றதுன்னு பயம் வச்சுக்கிட்டு இந்த பதிவை படிச்சுருங்க.

இனி ஓவர் டு எதிர்கட்சி தலைவர்:

அவைத்தலைவர் அவர்களே !
நிதித்துறையோட ஒரே வேலை பட்ஜெட் போடறது .பட்ஜெட் போடனும்னா பைசா வேணம். . அந்த பைசா வரி,வட்டி,திரை,கிஸ்தின்னு பல வழிகள்ள வருது. ..வந்த பைசாவை மானில முன்னேற்றத்துக்கு,மக்கள் நல்வாழ்வுக்கு செலவழிக்கனும்

ஆனால் அரசாங்கம் ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு ஊழல் நடந்துராம பார்த்துக்கறதுக்கு நி.செலவு ஒரு பத்து காசு – பங்கு சாஸ்தியாகுதுல்ல – அதன் மேட்டரு. ந்லைமை இப்படி இருந்தா மானிலம் . எப்படி உருப்படும்?

லல்லு ப்ரசாத் யாதவ் ரயில்வே மந்திரி ஆனதும் ரயில் கட்டணத்தை சகட்டு மேனிக்கு குறைச்சாரு.ஆனாலும் ரயில்வேக்கு வருமானம் கூடிக்கிட்டே போச்சே தவிர குறையலை. காரணம் என்ன? ரயில்வேஸ் அதிகமான பிரயாணிகளை தன் பால் ஈர்த்தது.

அரசாங்கம் வரி விதிப்பை பாதியாக குறைத்து தொலைத்தால் – யாவாரி படக்குன்னு கட்டிருவான். வரி ஏய்க்க ஆடிட்டருக்கு கொட்டி கொடுக்கிற காசு யாவாரிக்கு மிச்சமாகும்.

மேலும் வரி நிர்ணயம்,வரி வசூல் பொறுப்பை யாவாரிகள் சங்கத்துக்கு தரலாம்.வைரத்தை வைரத்தால அறுக்கிற மாதிரி யாவாரியோட “தாக்கத்” யாவாரிக்கு தான் தெரியும். ஒரு டார்கெட் வச்சு -பொறுப்பை கொடுத்துட்டா – வாலன்டரி டாக்ஸ் பேமெண்டை அதிகரிச்சா -அதையும் ஆன்லைன்ல செலுத்த ஏற்பாடு செய்தா – நிர்வாக செலவு பெருமளவு குறையும் -வரிவிதிப்பு பாதியானாலும் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

அடுத்து இந்த அரசின் முக்கிய நிதி ஆதாரமா இருக்கிறது கடன். டீக்கடையில கூட கடன் அன்பை முறிக்கும்னு போர்டு வைக்கிறான்.ஆனால் அரசாங்கமே கடன் வாங்குது. வாங்கற கடனையாச்சும் ரீ ப்ரொடக்டிவ் விஷயங்கள்ள இன்வெஸ்ட் பண்ணி – அவுட் புட் கொண்டு வந்து கடன் தீர்க்கிற திட்டம் – வேகம் இருந்தா பரவால்லை. பழைய கடனுக்கு வட்டி கொடுக்க கூட கடன் வாங்கியாக வேண்டிய நிலை.

வாங்கின கடன்ல கோழி வாங்கி வளர்த்து முட்டைய வித்தா வருமானம் கிடைக்கும். கால் வயிறு கஞ்சி குடிச்சு -வாயை கட்டி வவுத்தை கட்டி கடனை தீர்க்கலாம். ஆனால் இங்கே என்ன நடக்குது? ஒன்னு கைதிகளுக்கு சிக்கன் சமைச்சு கொடுத்துர்ரம் . அல்லது குழந்தைகளுக்கு சத்துணவுல முட்டை போட்டுர்ரம்.

ஒரு சிறை இருக்குன்னா அது கட்டப்பட்ட நிலம் – அதிலான கட்டிடம் – அதனோட இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் -அதில் உள்ள அதிகாரிகள் – ஊழியர்கள் -கைதிகள் எல்லாமே ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம். ஒவ்வொரு சிறையும் தன் ரிசோர்ஸஸை வச்சு பொருளீட்டனும். ஒவ்வொரு சிறையையும் ஒரு யூனிட்டா வச்சுக்கிட்டா ஒவ்வொரு யூனிட்லயும் அவுட்புட் இருக்கனும். காய்கறி தோட்டம் போடலாம், காற்றாலை வைக்கலாம், சோலார் பவர் யூனிட் வைக்கலாம். இப்படி ஒரு நிலையை உருவாக்கினா கைதிகளுக்கு தினசரி கூட சிக்கன் கொடுக்கலாம் தப்பே இல்லை.

சிறை கைதிகளின் வாழ்வில் நல்ல மாறுதலை கொண்டு வரனும். ஆனால் நம்ம சிறைகள்ள என்ன நடக்குது? பிக்பாக்கெட்டா உள்ளே போறவன் கொலைகாரனா வெளிய வரான்.

குழந்தைகளுக்கு சத்துணவு தரோம் – முட்டை தரோம் – சீருடை தரோம். இதெல்லாம் அந்த குழந்தைகளின் பெற்றோர் செய்யவேண்டிய வேலை. ஆனால் இந்த அரசாங்கம் அந்த பெற்றோருக்கு அப்படி ஒரு நல்ல வாழ்க்கை நிலையை தரலை..

ஒரு தாயோ தந்தையோ அன்போட -அக்கறையோட செய்யவேண்டிய வேலைய துருப்பிடிச்ச கவர்ன்மென்ட் மெஷினரிய வச்சுக்கிட்டு விரயமாக்கிக்கிட்டிருக்கம்.

இப்போ சனத்தொகை கணக்கெடுப்பு நடக்குதே அது முடிய இன்னம் எத்தீனி வருசம் ஆவுமோ தெரியாது. இப்படி வீடு வீடா போய் கணக்கெடுக்கிறதை விட சனங்களே தங்கள் விவரங்களை ஒரு குறிப்பிட்ட ப்ரஃபார்மால மெயில் பண்றாப்ல பண்ணனும்.

அரசாங்கத்துக்கு விவரங்கள் தர்ரதுல நம்ம சனம் அல்ப்பங்க. (அரசாங்கம் அதை விட அல்ப்பம் – கேஸ் ஸ்டவ் இருக்குதுனு சொல்ட்டா கிரோசின் கோட்டாவை கான்சல் பண்ணிரும்) சனங்களோட அல்ப்பத்தனம் ஒழிய அரசு ஒரு உறுதி மொழி வழங்கனும். வீடில்லன்னா வீடு தருவோம். வீடு இருந்தா மராமத்துக்கோ, இன்னொரு போர்ஷன் கட்டவோ பணம் தருவோம்னு டிக்ளேர் பன்னணும்.(இப்படியே எல்லாத்துக்கும்). இந்த ப்ரொஃபார்மாவை ஃபில் அப் பண்ண போதிய பயிற்சி கொடுக்கனும். ( நிருத்யோகர்களுக்கு – இன்டர் நெட் காரவுகளுக்கு, டிகிரி ஃபைனல் இயர்ல கீற மாணவர்களுக்கு)

அரசாங்கம் இந்த டேட்டா பேசை அடிப்படையா வச்சு – உண்மையான தேவை உள்ள குடிமகனுக்கு மைக்ரோ லெவல்ல உடனடியா பயன் தரக்கூடிய திட்டங்களை கொண்டுவரனும். உணவு உடை இருப்பிடத்துக்கு கியாரன்டி கொடுக்கனும். இலவசம் கடியாது.

தொழில்பயிற்சி, தொழில் வாய்ப்பு, தொழில்கடன்,மார்க்கெட்டிங், ஏற்றுமதிக்கான உதவி எல்லாத்தயும் கொடுக்கனும். இதுல படிக்கிற பிள்ளைங்க உள்ளவுகளுக்கு டாப் ப்ரியாரிட்டி கொடுத்தா போதும். சத்துணவு மாதிரி வீண் விரயம்லாம் தேவை இருக்காது.

நான் சொன்ன உதவிகளை ஒவ்வொரு பயனாளிக்கும் அவன் தேவைய/தகுதியை பொருத்து சாதி மதம் பார்க்காம உடனடியா கொடுக்கனும். இந்த ப்ராஜக்டை மானில மனிதவளத்துறை கையில் எடுக்கனும். இந்த ப்ராஜெக்ட் முடியறவரைக்கும் அந்த துறையில் முப்பது வயசுக்கு அதிகமான ஊழியரே இருக்கக்கூடாது.

இதை மட்டும் ஒழுங்கா செய்தா கடன் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது. அதுக்கான வட்டிக்கு பட்ஜெட்ல ஒரு பகுதியை கொட்டி அழவேண்டிய கட்டாயமும் இருக்காது.

பட்ஜெட்ல அடுத்து வர்ர ஐட்டம் செலவு … இதுல ரெண்டு ஜாதியிருக்கு. திட்டசெலவு ஒன்னு. திட்டம் சாரா செலவு இன்னொன்னு.

திட்டச்செலவுன்னா என்ன?

பல காலமாகவோ – சமீப காலமாகவோ தன்னிறைவு அல்லது பொருளாதார முன்னேற்றம் இப்படி ஏதோ ஒரு டார்கெட்டை வச்சுக்கிட்டு பண்ணிக்கிட்டு வர்ர செலவு.

திட்டம் சாரா செலவுன்னா என்ன?
மேலே சொன்ன தன்னிறைவுக்கோ அ பொருளாதார முன்னேற்றத்துக்கோ சம்பந்தமில்லாம செய்யற செலவு.

சரி எல்லாம் நாம நினைச்சாப்லயே நடந்துருமா கொஞ்சம் அப்படி இப்படி சைடு வாங்கத்தான் செய்யும்னு சொல்விங்க கொஞ்சமா . சைடு வாங்கினா பரவால்லை. ஆனால் இங்க என்ன நடக்குது?

திட்டச்செலவு 10 பைசான்னா திட்டம் சாரா செலவுதான் 90 பைசா ஆகுது. இதை மாத்தனும். மாத்தியே ஆகனும்.

டாஸ்மாக்கை தவிர அரசுக்கு எந்த துறையெல்லாம் வருவாய் ஈட்டித்தருதோ அந்த துறைகளோட மேம்பாட்டுக்கு ப்ரியாரிட்டி கொடுக்கனும். அந்தந்த துறையில் உள்ள அறிவு ஜீவிகளை மாக் பட்ஜெட் தயாரிச்சு கொடுக்கச்சொல்லி கேட்கனும். பட்ஜெட் அமலாக்கத்தை மானிட்டர் பண்ணி குவார்ட்டர்லி ஒரு அறிக்கை தர ஏற்பாடு பண்ணனும். அந்த அறிக்கைகள் கிடைத்த 15 நாட்களில் இந்த சட்டமன்றம் கூடி சிறப்பு கூட்டம் நடத்தி விவாதம் நடத்தவேண்டும். குற்றம் குறைகளுக்கு காரணமானவர்களை 24 மணி நேரத்தில் தண்டிக்க வேண்டும்.

__________________

சரி எப்டி எப்டியோ சனத்தை ஏமாத்தி ஓட்டுவாங்கி பதவிக்கு வராய்ங்க பட்ஜெட் போடறாய்ங்க. நாசமாக்கறாய்ங்க – இதான் சன நாயகம்னு மனசை தேத்திக்கலாம்னு பார்த்தா.. பிரணப் முகர்ஜி யாரு? மேற்கு வங்க அரசியல்ல போனியாகாம சோனியா காலடியில சக்தி பூஜை பண்ற பார்ட்டி.

சரி ஒழியட்டும் சோனியா அம்மா என்ன பிரதமரா? சனம் சோனியா பிரதமர் ஆகனும்னா ஓட்டுப்போட்டாய்ங்க ? இல்லை..

அப்படி போட்டிருந்தா காங்கிரஸ் கட்சிக்கு டூ தேர்ட் மெஜாரிட்டி கிடைச்சிருக்கும். கு.பட்சம் யுபிஏ வுக்கு டூ தேர்ட் மெஜாரிட்டி கிடைச்சிருக்கும். கிடைச்சுதா? இல்லே.

அப்ப இதென்னத்த ஜன நாயகம் வெங்காயம்? கூட்டுங்கடா பார்லிமென்டை . சீக்ரெட் பாலட் வச்சு தேர்ந்தெடுங்கடா பிரதமரை .. அந்த பிரதமர் நியமிக்கட்டும் நிதியமைச்சரை. அந்த மந்திரி போடட்டும் பட்ஜெட்டை ..

கு.பட்சம் நாங்க ஓட்டுப்போட்ட எம்.பி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதமரும் -அவர் நியமனம் பண்ண நிதி மந்திரியும் எங்களுக்கு திதி வைக்கட்டும்.

ஆமா அரசியல்வாதிகளை பார்த்தா கவலையா இருக்குன்னு புலம்பறிங்க.. மக்களை பத்தி கவலையில்லியான்னு கேப்பிக ( நமக்கு இந்த கொழுத்த ,கொஞ்சமா கொழுத்த,மேல் தட்டு மத்திய வர்கம், மத்திய வர்கம் ஏன் ஏழைகளை பத்தி கூட பெருசா கவலையில்லை..ஏன்னா இன்னிக்கு இவிக வாழற நாய் பொயப்புக்கு இவிகதான் காரணம் (ஓட்டுப்போட்டாய்ங்கல்ல)

( இடையில ஆளுங்கட்சியின் கோஷங்கள் – சபா நாயகர் உங்க நேரம் முடிஞ்சு போச்சுங்கறதுல்லாம் நீங்களா சேர்த்துக்க வேண்டியதுதான்.. நாளைக்கு இந்த எதிர்கட்சித்தலைவர் மின் துறை குறித்து பேச இருக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் வேளாண்மை , கல்வித்துறை போக்குவரத்து சுற்றுச்சூழல், தகவல் தொடர்பு.. )

Advertisements

4 thoughts on “அம்மாவுக்கு கேப்டன் சொல்லாத மேட்டரு

  Thirumalaisamy said:
  August 24, 2012 at 11:21 am

  Useful post. Thank You.

  S.Sivakumar said:
  August 25, 2012 at 12:29 am

  good thinking…. will it ever become true ?

  MARUTHAPPAN said:
  August 25, 2012 at 1:32 am

  Nice post

  best wishes

  Sooriyan said:
  August 28, 2012 at 9:15 am

  Superb… Kalakkal post…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s