சொல்லாமலே -தெரிந்து கொள்ள ஒரு பிரயோகம்

Posted on

சொல்லாமலே -தெரிந்து கொள்ள கர்ண பிசாசு ப்ரயோகம்னு ஒன்னிருக்கு. இதுக்குண்டான மந்திரத்தை ஜெபிச்சு -மந்திர சித்தி பெற்றால் நம்ம எதிர்க்க வந்து உட்கார்ரவுக மைண்ட் வாய்ஸை நம்மால கேட்க முடியுமாம். இதெல்லாம் மித்?

அப்படி ஒதுக்கி தள்ளிரவும் முடியாது. எவனுக்கோ எப்பவோ முடிஞ்சிருக்கு. அதனாலதான் விடாப்பிடியா இன்னை வரைக்கும் அந்த செயல் முறை -கு.ப தியரியாவாச்சும் செலாவணியில இருக்கு.

லா.ச.ர முடியறவாளுக்கு எப்பவும் முடியும்னுவாரு.அப்படி முடிஞ்சவா ஆருனா இருந்தா சொல்லுங்க.அடுத்த பதிவுல இதுக்குண்டான தியரியை தரேன்.

இட்சிணி,பட்சி, குறளி,சிக்ஸ்த் சென்ஸ், அசரீரி -ஆகாச வாணி -அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் இப்படி எந்த வார்த்தையில சொன்னாலும் மேட்டர் ஒன்னுதான்.

நம்ம ஈகோவை ஓரங்கட்டி – இல்லாஜிக்கலா – நம்ம ப்ரமேயமே இல்லாம தானா கசியறது -வெடிக்கிறது -ஸ்பார்க் ஆறது.நேத்திக்கு ஒரு லைன் ஸ்பார்க் ஆச்சு.

“உலகம் பிறந்தது எனக்காக” ன்னு வாத்தியார் பாடினதை கேட்க -பார்க்க எவ்ளவோ இன்ஸ்பிரேட்டிவா இருந்தது.

ஆனால் இப்பம் உள்ள சொற்ப மெச்சூரிட்டியோட ரோசிச்சா.. கொய்யால .. இந்த உலக வாழ்க்கையே ஒரு பாடாவதி மெகா சீரியல் மாதிரி இருக்கு.

இதோட நாட் என்ன? கதை என்ன? காட்சி என்ன? இதுல நம்ம ரோல் என்ன? நம்மை சுத்தி வந்து போறவுகளோட ரோல்ஸ் என்ன? ஆருக்கு பதிலா ஆரு ஆக்டு கொடுத்துக்கிட்டிருக்காய்ங்க? நாளைக்கு நமக்கு பதில் ஆரு வரப்போறாய்ங்கன்னு தோனிச்சு.

உ.ம் எங்கப்பாவுக்கு பதிலாவோ எங்க தாத்தாவுக்கு பதிலாவோ நான் வந்திருக்கலாம்.

இதை படிக்கிற உங்க ஃபேமிலிக்கு அறிமுகமான பகுத்தறிவு சோசியர் ஒருத்தர் டிக்கெட் போட்டோ /வசதி வந்து வெளி நாட்டுக்கு போயோ விட்டிருந்தால் அவரோட ஸ்தானத்தை ஃபில் அப் பண்ண நான் வந்திருக்கலாம்.

பல தடவை சொல்லியிருக்கேன். இதுல நான் எழுதறேன் நீங்க படிக்கிறிங்கன்னு நான் நினைக்கிறதே இல்லை. ஆரோ -எப்பவோ – எதையோ படிக்க இந்த ப்ளாக் ஆரம்பிச்சு நான் எழுதிக்கிட்டிருக்கேன். அந்த ஆரோ படிக்க வேண்டிய வரி எழுதப்பட்டுட்டா இந்த ப்ளாக் அப்டேஷனே இல்லாம முடங்கிரலாம். அந்த ஆரோ தான் படிக்க வேண்டிய வரியை படிச்சுட்டா ப்ளாகர் டாட் காமையே கூகுல் காரன் ஊத்தி மூடிரலாம்.

இன்னைக்கு சம்பந்தமே இல்லாம ” நான் என்ன சொன்னாலும் நம்பத்தான் போறிங்க”ங்கற வரியும் – ” நான் என்ன சொன்னாலும் நீங்க நம்ப போறதில்லை”ங்கற வரியும் ஈவனா ஸ்பார்க் ஆச்சு.

ரெண்டுக்கும் இடையில முரண்பாடு இருந்தாலும் ரெண்டும் ஒரே விஷயத்தை தான் சொல்லுதோன்னும் தோனுது.

நெட் ஆக்சஸ் பிரச்சினை வேற ஓவராயிருச்சு. நேத்திக்கெல்லாம் பிட்டு படம் பார்க்கிற கணக்கா பயந்து பயந்து வேலை செய்துக்கிட்டிருந்தம்.

இன்னைக்கு சுத்தம். அசரீரின்னு ஒரு வார்த்தைய அடிச்சதும் படக்குன்னு கனெக்ட் ஆச்சு. சரீரம்னா தெரியும் பாடி. அசரீரம் = பாடி இல்லாதவன்

பாடி இல்லாதவன் -பாடியில இல்லாதவன் சொல்ற வார்த்தைய அசரீரிங்கறாய்ங்க. ரேடியோல வர்ர வாய்ஸும் இந்த சாதின்னு ஆகாசவாணியாக்கிட்டாய்ங்க போல. கிடக்கட்டும். நெட் கனெக்ட் ஆனதும் முக்கியமான நண்பர் ஒருத்தர் வந்துட்டாரு. வழக்கமா 12.30 க்கோ,1.30 க்கோ பவர் போயிரனும். ஆனால் மணி 2 ஆகப்போகுது இன்னம் பவர் போகலை.

கடந்த சில நாட்களா – என்ன தான் சனி செவ்வாய் சேர்க்கைக்கு பாய்லா காட்ட ரத்த தானம் பண்ணியிருந்தாலும் கொஞ்சம் தடுமாற்றமாவே இருக்கு.பாதியில விட்ட தொடர் எதையாவது தொடரலாம்னு நினைச்சேன். முடியலை.

வழக்கமா சனம் கடவுள் கிட்டே வேண்டிக்கிறப்ப எனக்கு அதை கொடு இதை கொடுன்னு மட்டும் கேப்பாய்ங்க. நாம டிஃப்ரன்டா ” த பாருப்பா.. இந்த 100 வயசு பிசினஸ் எல்லாம் எனக்கு வேணாம். நான் நினைச்சாப்ல ஒரு லைஃப்.. அது ஜஸ்ட் அஞ்சு வருசமா இருந்தா கூட போதும்.. கடைய கட்டிட்டு கிளம்பறேன்னு தான் வேண்டுவம்.

நாம நினைக்கிற லைஃப் ரெம்ப சிம்பிள். ஒரு புது உலகத்துக்கு ப்ளூ ப்ரிண்ட். இந்த ப்ராஜக்ட் மைக்ரோலருந்து மேக்ரோவா மாறினாலும் ஓகே. மேக்ரோல ஆரம்பிச்சு மைக்ரோ லெவல் வரை ஊறினாலும் பரவால்லை.

நாம கனவு காண்றது ஜஸ்ட் ஒரு பெட்டர் லைஃப். பெஸ்டுக்கு என்னைக்குமே நாம ஆசைப்படறதில்லை.இதான் மிடில் க்ளாஸ் மென்டாலிட்டி போல. பார்ப்போம்..ஏதோ படத்துல ரேவதி பாட் முயற்சி பண்ணி “வெறும் காத்து தான் வருது மாமா”ம்பாய்ங்க இன்னைய பதிவும் அப்படி ஆயிருச்சு.

நாளையிலருந்தாச்சும் ஒழுங்கு மரியாதையா பாதியில விட்ட தொடர்களை எல்லாம் முடிக்க பார்ப்போம்

Advertisements

4 thoughts on “சொல்லாமலே -தெரிந்து கொள்ள ஒரு பிரயோகம்

  Sampath said:
  August 23, 2012 at 12:23 pm

  neraiya solla varianga, oona thadam maari vidaringa.

  Thirumalaisamy said:
  August 24, 2012 at 11:06 am

  Just Practical…Thanks for the post. Visit counter style is nice to see. We request you, please enable the ENGLISH to TAMIL text converter in the COMMENT session.

  Ramasubramanian said:
  August 27, 2012 at 6:11 am

  Dear Sir,
  I think it is Karna Pisasini Manthiram. Please send it to me, i am in search of it. Manthras are not false phenomena, they are true, I successfully practiced some mantras. Please send it to me or publish it.

   S Murugesan said:
   August 27, 2012 at 6:12 am

   வாங்க ரா.சு ,
   பதிவாவே போட்டுரலாம் ..ப்ளீஸ் வெய்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s