எழுத்தாளர் சுஜாதாவின் உருவல்கள் -தழுவல்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
என்னமோ படம் பண்றவங்க தான் அங்கே இங்கே உருவி கதை பண்றாய்ங்கன்னு இல்லை.எழுத்தாளர்கள் நிலைமை கூட இதான்.

கேட்டா உலகத்துல உள்ளதே 23 நாட்டுதான்னு சொல்லிருவாய்ங்க. ப்ரசன்டேஷன்ல ,டேக்கிங்லயாவது வித்யாசம் இருக்கனுமில்லியா? ஊஹூம் பேசப்படாது.

எந்திரன் படம் 201 அக்டோபர்ல ரிலீசாச்சு. இதனோட கதை இதான் -இப்படித்தான் இருக்கும்னு ஜூலை 16, 2010 ஆம் தேதியே நாம ஒரு பதிவு போட்டுட்டம்.

அதை லேசா ரிப்பேர்/அப்டேட் பண்ணி இப்பம் மீள்பதிவா தரேன். டேபிள் க்ளியராயிருச்சுன்னு முக நூல்ல ஸ்டேட்டஸ் அப்டேட் கொடுத்தது தப்பா போச்சு. கொத்து கொத்தா ஜாதகம் வந்து மண்டைய கொத்திக்கிட்டே இருக்கு.அதனாலதேன் இந்த அஜீஸ்மென்ட்.

வெறுமனே மீள்பதிவுன்னு பக்கத்தை மூடிராதிங்க. நம்ம சிற்றறிவுக்கு எட்டின வகையில் எத்தீனி படம் – எந்தெந்த படத்தை பார்த்து காப்பி அடிச்சாய்ங்கன்னு ஒரு டேட்டாவும் – எந்தெந்த எழுத்தாளர் இந்த “புண்ணிய காரியத்தை” எழுத்துலகத்துல செய்தாய்ங்கன்னு ஒரு டேட்டாவும் தரேன்.

இயந்திரன் கதைய எழுதின சுஜாதா எந்திரன் ரிலீசாற சமயம் உசுரோட இல்லை. சுஜாதாவோட நேச்சர் என்னன்னா ஒரு கதைய ஒன்பது விதமா எழுதிப்பார்ப்பாரு. உதாரணமா இருபத்து நாலு ரூபாய் தீவோட விரிவாக்கம் தான் பதவிக்காக தொடர் கதை.

முக்கியமா அவர் சினிமாவுக்குன்னு புதுசா கதை எழுதினதா சரித்திரமில்லை. அதுலயும் ரஜினி மாதிரி சூத்திரங்களுக்கு ஊஹூம் மூச் பேசப்படாது.

ஏற்கெனவே தான் எழுதின கதைகளை பிச்சி பிசிஞ்சு கதை “பண்ணி” கொடுப்பாரு, “அங்கவை,சங்கவை “சிங்கம் சிங்கிளா வரும்” மாதிரி வில்லங்கங்களை சேர்த்துருவாருஅவ்ளதான்.

சிவாஜி படத்தோட கதை கூட அவரே எழுதின அனிதாவின் காதல்கள் கதை தான். அன்னியன் கதை மட்டும் என்னவாம் அவரோட நிர்வாண நகரம் கதை தான்.

சினிமால அய்யராத்து ஃப்ளாஷ் பேக் எல்லாம் வருது. நி. நகரத்துல அந்த இழவெல்லாம் கிடையாது. மேட்டர் இப்படி கீறப்போ இயந்திரனுக்காக புதுசாவா எழுதியிருக்கபோறாரு..ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ரோபோவ வச்சு அவர் எழுதின கதைகளையெல்லாம் கொத்துபரோட்டா போட்டிருப்பாரு அவ்ளதான்.

சிறுகதை நெம் 1:
வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய/மேற்பார்வை செய்ய/ஒருங்கிணைக்க ஒரு இயந்திரத்தை கொண்டுவரான் கணவன். அது பெண்டாட்டி குளிக்கிறப்ப கூட கடலை போடறதை எல்லாம் பார்த்து கடுப்பாகி அதை ஒழிச்சு கட்டறேன்னு இறங்குவான்.

என் இனிய இயந்திரா நாவல்:
இதுல ஜீனோனு நாய் வடிவத்துல இருக்கிற ரோபோதான் ஹீரோ. முதல்ல வில்லனுங்க கையில இருக்கும். படக்குனு சொந்தமா யோசிக்க ஆரம்பிச்சு அலம்பல் பண்ண ஆரம்பிக்கும். வில்லன் கூட்டம் இதை ஒழிச்சு கட்ட மெனக்கெடும்.

இயந்திரன் கதை:
மேற்படி நாவலை அப்படியே உல்ட்டா அடிச்சிருப்பாரு. ரஜினி தயார் பண்ற ரோபோ ( உருவம் டிட்டோ) நாசகாரியா மாறிரும் அதை ரஜினி எப்படி அழிக்கிறாருங்கற லைனை பிடிச்சிருப்பாரு. தட்ஸால்.

அதென்னமோன்னா எழுத்தாளர்ங்க ஒரே கதையை தான் மறுபடி மறுபடி எழுதறாய்ங்களே தவிர புதுசா முயற்சி பண்ண மாட்டேங்கிறாய்ங்க. சில உதாரணங்களை பாருங்க.

இந்த சந்தேகம் சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்தபோது ஏற்பட்டது.

இரண்டு எழுத்தாளர்கள் ஒரே கதையை எழுதறதும் உண்டு. இது பாலகுமாரன் சுஜாதா மேட்டர்ல நடந்தது சுஜாதா எழுதின கமிஷ்னருக்கு ஒரு கடிதம்,பால குமாரன் எழுதின பலாமரம் ரெண்டையும் லேசா ஞா படுத்திக்கங்க.

இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:

ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..

ரெண்டு கதையும் ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? இல்லை ஜஸ்ட் கோ இன்சிடென்ட் தானா இதை அவர்கள்தான் கூற வேண்டும். ( பாவம் சுஜாதா சார் இப்ப இல்லை, கு.ப பாலகுமாரனாவது ஏதாச்சும் சொல்றாரா? அல்லது அவரோ அடிப்பொடிகள் யார்னா வாய விடறாய்ங்களா பார்ப்போம்.

பாலா, தாத்தாவே பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதினாரு இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது. இவர் பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே (பைசா கொடுக்காம) வெளியிட்டவரின் வமிசத்தையே சபிக்கிற பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை எப்படி விட்டார்.அப்போ அந்த கதை உருவலா? தழுவலா?

இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும், தெலுங்கு எழுத்தாளரான எண்டமூரி வீரேந்திர நாத் நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கும் . அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஷன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. யாரு யாரை காப்பியடிக்கிறாய்ங்க? அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாம எங்கனருந்தாவது உருவிட்டாய்ங்களா?

ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதிய லட்சுமி,ராஜம் கிருஷ்ணன்..

மேற்சொன்ன லட்சுமி,ராஜம் கிருஷ்ணனில் லட்சுமியின் மிதிலா விலாஸ் மட்டும் காவிய ரேஞ்சில் என்னை பாதித்ததை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ராஜ‌ம் கிருஷ்ண‌னின் க‌தைக‌ள் எப்போதாவ‌து விதியின்றி ப‌டித்த‌வைதான். இதில் நான் க‌ண்டுபிடித்த உண்மை என்னவென்றால் இருவருமே ஒரேகதையை மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார்கள் என்பதே !

லட்சுமியின் ஒரேகதை:
வேலைக்கு செல்லும் பெண், குடும்பம்,அலுவலகம் இரண்டிலும் பல பிரச்சினைகளை சந்திப்பாள்..இறுதியில் சுபம்.

அல்லது ஒரு பெண் பணக்காரர்களான தூரத்து உறவினர்கள் வீட்டில் மாட்டிக்கொண்டு முழிப்பாள். இதையே தான் அவர் மாற்றி மாற்றி எழுதிவந்திருக்கிறார். வாழ்க !

ராஜம் கிருஷ்ணனின் ஒரே கதை:

கோபக்கார ஆண்,அவன் பெரும் பணக்காரனாக இருப்பான். பெண் ஏழை ஆனாலும் தன்மானம் மிக்கவளாக இருப்பாள். ஏற்கெனவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் அவ‌ர்க‌ளிடையில் காத‌ல் நீறு பூத்த‌ நெருப்பாக‌ இருக்கும். பிற்ப‌குதியில் புரித‌ல் ஏற்ப‌ட்டு ஒன்று சேர்வார்க‌ள்.
அட‌ த‌லையெழுத்தே !

ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் சினிமா சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்தின் உல்ட்டா என்பது தெரியுமா?
“ஹிட்லர் உமாநாத்” ல சிவாஜி கோழை, மனைவி ஹிட்லரோட கதையை சொல்லி ஜும் ஏற்றி வீரனாக்கி,பணக்காரனாக்குவார். இதை தெலுங்குல உல்ட்டா அடிச்சு “தர்மாத்முடு” னு ஒரு படம் எடுத்தானுங்க..

உமா நாத்ல சிவாஜி கோழை .தர்மாத்முடுல கிருஷ்ணம ராஜு ரவுடி. மத்தபடி கதை மொத்தம் அதே தான்.

தர்மாத்முடு படத்தை ரஜினியை போட்டு ஏவிஎம் நல்லவனுக்கு நல்லவன் எடுத்தாங்க .அதாவது தமிழ் கூறு நல்லுலகம் ஹிட்லர் உமா நாத்தோட உருவலை புதுப்படமா நினைச்சு பார்த்து ஹிட் அடிக்க வச்சிருச்சு.

இதே மாதிரி இன்னொரு கதை.. தெலுங்குல “பஹுதூரபு பாட்டசாரி” னு ஒரு படம் . இதுல ஹீரோவுக்கு கால் போயிரும்..குடும்பம் கைவிட்டுரும்.கிழவாடி ஹீரோ நின்னு காட்டுவார். இதை ஹீரோவுக்கு கை போயிர்ரதா தமிழ்ல “வாழ்க்கை” ன்னு ஒரு படம் எடுத்தாங்க. அதை மறுபடி தெலுங்குல ரீமேக் பண்ணி “ஓ தன்ட்ரி தீர்ப்பு”ன்னு எடுத்து விட்டானுங்க அடப்பாவிகளா!

இன்னொரு தமாசு சொல்றேன் கேளுங்க.. தெலுங்குல தாசரி நாராயணராவ் பெரிய்ய டைரக்டர். அவர்கிட்ட மொத்தமா 3 கதை தான் இருக்கு. அதையே மாத்தி மாத்தி எடுத்து ஹிட்டும்,ஃபெயில்யூரும் கொடுத்துக்கிட்டே இருக்கார். அவை வருமாறு:

1. இரண்டு நண்பர்கள் கதை
2. அப்பா,அம்மாவுக்கு பச‌ங்க கை கொடுத்துர்ர கதை
3. ஒருத்த‌னுக்கு/ஒருத்திக்கு அநியாய‌த்துக்கு மேல‌ அநியாய‌ம் ந‌ட‌க்கும் உட‌னே அவன்/அவ‌ள் ஏதோ ஒரு கெட்ட‌ப்ல‌ (பொப்பிலி புலி,மைச‌ம்மா ஐ.பி.எஸ் இப்ப‌டி எத்த‌னையோ ப‌ட‌ம்) வ‌ந்து வில்ல‌னுங்க‌ளை போட்டு த‌ள்ளிருவார்/த‌ள்ளிருவாள்

தங்கப்பதக்கம் பார்த்திருப்பிங்க. அதே கதைய உல்டா அடிச்சு அதாவது அப்பா கெட்டவர் பிள்ளை நல்லவன்னு ஹிஸ்டாரிக்கல் படம் பண்ணாய்ங்க (சிம்ஹ பலுடு) டைரக்டர் ராக்வேந்திரராவ். இவரு ஆரு தெரீமா? வசந்தமாளிகை டைரக்டரோட மகன் . அப்பா கே.எஸ்.பிரகாஷ்ராவ்.

ரா.ராவோட மொத படம் 16 வயதினிலே தெலுங்கு பதிப்பு (?) பயங்கர மசாலா டைரக்டரா பேர் வாங்கின எஸ்.பி முத்துராமனோட மொத படம் கனி முத்துப்பாப்பாங்கற க்ளாஸ் மூவி.
எங்கயோ ஆரம்பிச்சு எப்படியோ போயிர்ராய்ங்க.

தங்கப்பதக்கம் படம் ரா.ராவை ரெம்ப பாதிச்சாப்ல இருக்கு. இதே படத்தை எஸ்.பிக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்கிறதா மாத்தி என்.டி.ஆரை போட்டு எடுத்தாரு.

இந்த பட்டியல் ரெம்ப சின்னதா இருக்குன்னு நினைக்கிறவுக கமெண்ட்ல இதை பெரிதாக்கலாமே

4 thoughts on “எழுத்தாளர் சுஜாதாவின் உருவல்கள் -தழுவல்கள்

  arul said:
  August 18, 2012 at 8:56 am

  nalla list

  antonybosco said:
  August 19, 2012 at 5:20 am

  true.

  தமிழ்மகன் said:
  August 19, 2012 at 4:58 pm

  அடுத்தவங்க படைப்பை குறை சொல்வதை விடுத்து தங்களது படைப்புகளை வெளியிடுவது நலம். உனக்கு என்ன அது பற்றி எனக் கேட்டால் உங்களின் நீண்ட கால பதிவுலக வாசகனக இருந்து நிறைய புது விசயங்களை கண்டு வியந்து உங்களை தொடர்ந்து படிக்க முற்பட்டு அதில் உள்ள சில ஜல்லிகளை கண்டதனால் ஏற்பட்ட அறச்சீற்றமே இது தவறிருந்தால் மண்ணிக்கவும்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s